Most Popular

Ad Code

!!!!!!! தமிழுணர்வு !!!!!!!!!!


வலிக்குக் கூட 
தமிழ் வார்த்தை 
உச்சரிக்கப்படுவதில்லை 
ஆங்கிலம்
ஆக்கிரமித்து விட்டதால் !!!!!

தமிழ் வாழ்வது 
தமிழ்ப்பள்ளிகளில் மட்டும்தான் 
அதுவும் 
காலணிதத்துவமாகும் தூரத்தில் !!!!

உணர்வு என்பது 
உணரப்படாமலே 
உலாவரும் தமிழர்கள்
தமிழை அடக்கம் செய்ய 
வெள்ளை சவபெட்டிகளோடு !!!!

தமிழையும் உணர்வையும் 
உள்ளத்தில் பயிரிடாமல் 
வேரறுந்து போன
கதைகள் பல !!!

கல் தோன்றி மண் தோன்றா 
காலத்திற்கு முன் தோன்றிய 
மொழி
கண்மூடி திறக்கும் முன்னே 
காணாமல் போகும் அபாயத்தில் !!!!!

தமிழா மொழியை இழந்தவன்
அனைத்தையும் இழந்தவன் ஆகிறான் !!
நம் மொழியைக் காக்க நாம் வீறு கொண்டு எழ வேண்டும்,
நம் இனத்தைக் காக்க நாம் ஒன்றுபட்டு வாழ வேண்டும் !!! 

எங்கும் தமிழ் ;
எதிலும் தமிழ் !!!!

நன்றி :சாலினி 

Image Hosted by ImageShack.us




கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code