Most Popular

Ad Code

கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

வாகரை படைமுகாமின் இரண்டாம் கட்டளை மேலாளர் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலி மேஜர் ரட்ணாதரனின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.


1990களில் மட்டக்களப்பில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படுகொலைகளுடன் நேரடியாகத் தொடர்பு பட்ட வாகரை படை முகாமின் இரண்டாவது கட்டளை மேலாளரான மேஜர் கருணாநாயக்க மீது வாகரைப் படை முகாமில் வைத்து 09.08.1999 அன்று கரும்புலித் தாக்குதலை நடாத்தி கரும்புலி மேஜர் ரட்ணாதரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்

Ad Code