thalaivan

thalaivan

புதன், 24 செப்டம்பர், 2014

மூடன் ராஜீவ் காந்தியால் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் வரிசைப் படுத்தப் பட்டுள்ளன...

(1) நெல்லியடி இராணுவ முகாமை 1987 ஆடி ஐந்தில், கரும்புலி கப்டன் மில்லர் தகர்த்து எறிந்து, நூற்றுக் கணக்கான சிங்கள இராணுவத்தினரை கொன்று குவித்த பின்னர், தமிழ் ஈழப் பகுதிகள் அனைத்திலும் அமைந்திருந்த சிங்கள முகாம்களில் இருந்த ராணுவத்தினர் நடு நடுங்கினர்.படிப்படியாக புலிகள் ஒவ்வொரு முகாமையும் தகர்த்து அழிக்கவிருந்த வேளையில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ராஜீவின் காலில் விழுந்துஒப்பந்தம் செய்து இலங்கைக்கு இந்தியப் படைகளை வரவழைத்தார்.இல்லையேல் 1990 கு முன்னரே தமிழ் ஈழம் நமக்கு கிடைத்திருக்கும் .நமக்கு அப்போது,அதற்கு விரோதியாக வந்தவர்தான் இந்த மூடன் ராஜிவ்காந்தி!


(2)தியாக தீபம்,திலீபன் இந்தியச் செயல்களைக் கண்டித்து உண்ணாநோன்பு இருந்த போது, திலீபனை அநியாயமாக சாகவிட்ட சண்டாளர்தான் மூடன் ராஜீவ் காந்தி.

(3) குமரப்பா, புலேந்திரன் உட்பட 13 புலித் தளபதிகளை யுத்த நிறுத்தக் காலத்தில் சிங்கள ராணுவத்திடம் மூடன் ராஜிவின் படைகள் ஒப்படைக்க இருந்ததால்தான் அவர்கள் சயனைட் உட்கொண்டு மடிந்தனர்.

(4)மூடன் ராஜிவின் இந்திய அமைதிப் படையால் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 10000க்கு மேல் அதற்கு பொறுப்பு மூடன் ராஜீவ்தான்.

(5) மூடன் ராஜிவின் கொலைவெறி,காமப் படையால் ஈழத்தில் மானபங்கப் படுத்தப் பட்ட ஈழத் தமிழ்ப் பெண்களின் எண்ணிக்கை,சுமார் 2000க்கு மேல் அதற்கு காரணம் மூடன் ராஜீவ்.

(6) மானங்கெட்ட இந்திய அமைதிப்படையால் கொள்ளை அடிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் பணம்- சொத்து மதிப்பு சுமார் 1500கோடி ரூபாவுக்கு மேல்.

(7) இந்திய அமைதிப் படையால் அப்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏதிலிகளாக ஆன தமிழர்களின் எண்ணிக்கை சுமார் 20000 பேருக்கு மேல்.

(8) இந்திய அமைதிப் படையால்-அவர்களின் துப்பாக்கி குண்டுகளாலும் ,எறிகணைகளாலும், கை கால்களை,கண்களை,செவித்திறனை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 3000க்கு மேல் அதற்கு காரணமாக இருந்தவர் மூடன்  ராஜீவ்தான்.


காலம் காலமாக இந்தியாவின் பச்சை துரோக்கத்தால் அழிந்த தமிழர்களின் எண்ணிக்கை இலட்சத்திற்கு மேல்...






புதன், 25 ஜூன், 2014

வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல புலிகள்.

மார்ச் மாதம் 1ம் திகதி 1983ம் ஆண்டு சிங்கள தேசத்தின் மேல் நீதிமன்ற குற்றவாளி கூண்டுக்குள் நின்றபடியே தமிழீழ விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் ஆற்றிய நீண்ட உரையின் ஒரு வசனம்தான் “வன்முறை மீது காதல் கொண்டவர்கள் அல்ல” என்பது.


தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப முன்னோடிகளில் ஒருவரான தங்கத்துரை அவர்கள் சிங்கள தேசத்தின் செவிட்டில் அறைந்தது போலவும் பிடரிபிடித்து உலுக்கியது போலவும் சிங்களதேச தலைநகரின் மேல் நீதிமன்றத்தில் ஆற்றிய உரையின் முப்பத்திஓராவது வருடம் இது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை சிங்களதேசத்தின் கடுமையான சட்டங்களால் நசுக்கி எறிந்துவிடலாம் என்ற கனவுடன் தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கான முதலாவது ஆயுள்தண்டனையை சிங்களதேசத்தின் மேல்நீதிமன்றம் 24ம்திகதி பெப்ரவரி 1983ல் விதித்திருந்தபோது அதனை தகர்த்து எழுந்தது தங்கத்துரை அவர்களின் நீதிமன்ற பிரகடனம்.

1960 களின் இறுதியில் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்ட கருவை உருவாக்கியவர்களில் ஒருவரான தங்கத்துரை அந்நேரத்தில் சிங்களபடைகளால் மிகவும் வலைவிரிக்கப்பட்டு மும்முரமாக தேடப்பட்டவர்களில் ஒருவர்.

அவர் கைது செய்யப்பட்டு சிங்களதேசத்தின் தலைநகரில் மேல்நீதிமன்றில் அவருக்கும் தோழர்களுக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்போதே இந்த நீதிமன்ற பிரகடனத்தை அவர் உரையாற்றினார்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழீழ விடுதலை என்பன சம்பந்தமாக இதுவரை வெளிவந்த பிரகடனங்களில் இதுவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று-அந்த நேரத்தில் இந்த உரையானது தமிழீழ விடுதலை எழுச்சியை மேலும் உக்கிரமடைச் செய்தது.

பயங்கரவாதி என்றும் வன்முறையாளன் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு விடுதலைப் போராட்டத்தின் கறை துடைக்கும் உரையாகவே அது இருந்தது.

அவரது அந்த உரையில் அதுநாள்வரைக்கும் சிங்களம் செய்துவந்த அனைத்து பொய்ப் பிரச்சாரங்களுக்கும் பதில் இருந்தது. அத்துடன் சாதாரண சிங்களமக்களின் மனதில் இயல்பாகவே தோன்றும் கேள்விகளுக்கும் சரியான விளக்கம் இருந்தது.

நீதிமன்றம் முடிந்ததும் மீண்டும் சிங்கள ஆயுதபடைகளின் சிறைக்குதான் செல்லவேண்டும் அல்லது மீண்டும் பனாகொட இராணுவ முகாமுக்கும் கொண்டு போவார்கள்.அங்கு சித்திரவதையும் மரணமும் கிடைக்கும் என்று தெரிந்துகொண்டும் மிகவும் உறுதியுடனும் துணிவுடனும் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் சம்பந்தமான நியாயங்களை அழுத்தமாக கூறிய தங்கத்துரை அவர்கள் தனது உரையை ஆரம்பிக்கும் போதே…

கனம் நீதிபதி அவர்களே,

“சிறீலங்காவின் நீதிமன்றம் எதற்கும் தமிழீழ தேசத்தவர்களாகிய எம்மை விசாரிப்பதற்கு அதிகாரம் கிடையாது”

என கூறி சிங்களதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிராகரித்தபடியே தனது உரையை ஆரம்பிக்கிறார்.

சில இடங்களில் மகாவம்ச கனவில் மிதக்கும் சிங்களத்தின் மனச்சாட்சியை உலுப்பியபடியே அவரின் கேள்வி இருந்தது

“பிரிவினை கேட்கிறோம்…நாட்டை துண்டாட முயற்சிக்கிறோம் எனச் சொல்கிறீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்?” என்ற கேள்வியின் மூலம் சிங்களதேசத்துடன் தமது விருப்பத்துக்கு மாறாகவே பலவந்தமாகவே தமிழீழதேசம் இணைக்கப்பட்டுள்ளது என்ற வரலாற்றை ஆணித்தரமாக சொன்னார்.

தமிழீழதேசத்தின இறைமை யாரிடமும் தாரைவார்க்கப்படவோ அடகுவைக்கப்படவோ இல்லை என்பதை தங்கத்துரை அவர்கள் தனது உரையின் தொடர்ச்சியில்,

“ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கடவே இல்லை, அதனை இணைப்பு என்ற பெயரில் நாம் யாரிடமும் தாரை வார்க்கவும் இல்லை” என்று தமிழீழ தேச இறைமையை நிலைநாட்டுகிறார்.

தமிழீழ விடுதலை பெறப்படுதல் எந்தவகையில் சிங்கள இனத்துக்கும் சுபீட்சம் தரும் என்பதை தங்கண்ணா எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்.

“நாம் விடுதலை பெறுவதன்மூலம் எமது இலட்சியம் மட்டுமல்ல நிறைவேறுவது..சிங்களமக்களுக்கும் பெரும் நன்மையை செய்தவர்கள் ஆவோம்.காரணம், அதன் பின் இனப்பிரச்சனையை பூதாகரமாக்கி அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்களமக்கள் மத்தியில் எடுபடாது.இதனால் சிங்களமக்கள் தமக்கு உண்டான பொருளாதார சமூக தளைகளில் இருந்து தம்மை விடுவித்து கொள்ள முன்வருவர்” என்று கூறினார்.

உண்மையில் சேனநாயக்க குடும்பம், ரத்வத்தை குடும்பம் முதல் மகிந்த குடும்பம் வரைக்கும் இனப்பிரச்சினை என்ற பூச்சாண்டியை காட்டியே சிங்களமக்களை கனவுகளுக்குள் வைத்திருக்கிறார்கள்.

இதனை முப்பத்திஒரு வருடத்துக்கு முன்னரே தங்கத்துரை அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லும்போது “அரசியல் பிழைப்பு” என்ற வார்த்தையையும் பாவித்திருப்பதை கவனிக்கலாம்.அற்புதமான வார்த்தை தேர்வு அது.

அமெரிக்காவின் இரட்டைகோபுர தகர்ப்புக்கு பின்னான உலக ஒழுங்கு என்பது நியாயமான போராட்டங்களையும், தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்றே முத்திரை குத்தி ஒடுக்கும் போக்காக இருந்து வருகிறது. இதற்கான ஒரு விடையாக முப்பத்தி ஒரு வருடத்துக்கு முன்னரே தங்கத்துரை அவர்கள் சிங்களநீதி மன்றத்தில் உரக்ககூறியதை பாருங்கள்.

“எந்தவொரு தேசியஇனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதனை மீளப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதையும் தேசத்துரோகம் என்றோ பயங்கரவாதம் என்றோ உலகின் எந்த சாசனமும் கூறவில்லை” என்று கூறுகிறார்.

நீதிமன்றத்தை மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்று சிங்களதேச பிரதி சட்டமா அதிபர் குறுக்கிட்டபோது “உண்மைக்கு மேடையோ அன்றி வெளிச்சமோ போட்டு காட்டவேண்டிய தேவை இல்லை. அது மிகவும் மகத்துவம் மிக்கவை.அது வெளிவருவதை எந்த சக்தியாலும் நிரந்தரமாக தடுத்துவிட முடியாது” என்று சொல்லும்போது நிரந்தரமாக தடுத்துவிடமுடியாது என்று கூறியது இன்றைக்கும் பொருந்தும் ஒரு வார்த்தை பிரயோகம் ஆகும்.

தமிழீழ விடுதலை என்பது மானுட விடுதலையின் ஒரு அங்கமே என்பதை அறைகூவலாக நீதிமன்றத்தில் “எமது நோக்கு மிக விசாலமானது.ஆபிரிக்கண்டம் என்றால் என்ன..லத்தீன் அமெரிக்கநாடு என்றால் என்ன, எங்கெங்கு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களின் விடுதலைக்காகவும் போராடும் நோக்கத்தையும் உள்ளடக்கியது..அப்படி இருக்கையில் எமது அயல் தேசத்தவராகிய சிங்களமக்களின் நலன் அதற்குள் அடங்காது எப்படி போகும்” என்று தங்கத்துரை கூறுகிறார்.

சிங்களதேசம் கொடுமையான சட்டங்களை உருவாக்குவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதற்காகவே என்று சிங்களமக்களுக்கு சொன்னாலும் ஒரு நாள் அதே சட்டங்கள் சிங்கள மக்களுக்கும் எதிராக திரும்பும் என்ற தீர்க்க தரிசனத்தை தங்கத்துரை அவர்கள் “நாம் விடுதலை அடையப்போவது நிதர்சனம்.அதன் பின்னர் உங்கள் நாட்டின் சட்டபுத்தகங்களில் நிரந்தர இடம்பிடித்துவிட்ட எந்த சட்டமும் எம்மை அணுக முடியாது.அப்படியாயின் அச் சட்டங்களையும் பயங்கரவாதத்தையும் எதிர்காலத்தில் நீங்களே சுவீகாரம் எடுக்கும் கையறு நிலையை இப்போதே எய்தி விட்டீர்களா” என்று கேட்கிறார்.

இறுதியாக தனது உரையை முடிப்பதற்கு முன்னர்,

“எனவே நாம் எமது கடமையை முடிந்தவரை செய்த மனநிறைவுடன் எதிர்காலத்தை சிறையில் களிக்கவோ,வேண்டுமாயின் மரணத்தைக்கூட தழுவவோ நாம் தயங்கவில்லை. ஒரு இனத்தின் விடுதலை வரலாற்றில் இவை எல்லாம் மிக சர்வ சாதாரணமான சம்பவங்களே. இதனை நாம் தெரிந்தே ஈடுபட்டோம். எமக்கு ஏமாற்றம் என்பது எதுவும் இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக தனது போராட்ட பாதையின்மீதான தனது உறுதியை காட்டுகிறார்.

முப்பத்தொரு வருடங்களுக்கு முன்னர் சிங்களத்தின் தலைநகரில் விடுக்கப்பட்ட இந்த நீதிமன்ற பிரகடனத்தின் ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கச்சிதமான தெரிவாகவும் ஆழமான ராஜதந்திர பிரயோகமாகவும் இருப்பதை இன்றும் ஆச்சர்யத்துடன் அவதானிக்க முடிகிறது..

மீண்டும் அவரது வார்த்தையிலேயே சொல்வதானால் “நாம் வெறுமனே ஆயுதங்கள் மீது காதல் கொண்டு போராட வந்தவர்களோ, வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகளோ அல்ல.. எமது இறைமையை பெறவே போராடுகின்றோம்”

உண்மையான ஒரு போராளியாக, விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான தங்கத்துரை அவர்களின் நீதிமன்ற உரையானது சிங்களத்தின் கனவை என்றாவது கலைத்தே தீரும்.


தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஊடக சந்திப்பில்.

1956 இல் இருந்தே தொடங்கி 1983 இல் உச்சம்பெற்ற இன அழிப்பு கலகங்களுக்கு ஊடாக வழந்தவர் என்கின்ற அடிப்படையிலும் இன்றைய சர்வதேச அரசியல் போக்கின் அடிப்படையிலும் தங்கள் அவலங்களினை உலகின் கண்முன் நிறுத்தி அனுதாபத்தினை அங்கீகாரத்தினை பெற்று தம்மீதான கொடிய அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியாமல் துயருறும் பாலஸ்தீன மக்கள் போன்றோரினை கருத்தில் கொண்டும் உங்கள் விடையை விளக்குமாறு தேசியத்தலைவரிடம் கேட்டபொழுது.


நாங்கள் எப்பொழுதுமே ஒரு பரிதாபத்துக்குரிய மக்களாய் அலைவதை நான் எப்பொழுதுமே வரவேற்பதில்லை ஏனென்றால் பரிதாபத்துக்குரிய மக்களாய் நாங்கள் அலைவதால் எல்லோருடைய பரிதாபத்தை சம்பாதித்துக்கொள்வோமே எனில் எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் தீர்க்கபோவதில்லை எப்பொழுதும் எங்களுடைய பிரச்சனையை நாங்கள் எங்களுடைய உரிமை போராட்டத்தின் மூலம் தான் நாங்கள் தீர்க்க முடியும்.

 நாங்கள் அடிக்க ஒழும்பி ஓடிக்கொண்டு இருந்தோமே எண்டால் எங்களுக்கு அடிப்பவர்கள் துரத்தி துரத்தி அடித்துக்கொண்டே இருப்பார்கள் திரும்ப நாங்கள் அடிக்கிறதன் மூலம் தான் நாங்கள் எப்பொழுதும் எங்களை பரிதாபத்துக்குரிய நிலையில் இருந்து எங்களை நீக்கி எடுக்கலாமே ஒழிய மற்றவர்களுடைய இரக்கபடுதலில் இல்லை இன்று இந்த உலகத்தை பார்த்தால் தெரியும் ''வலியவர்கள் வாழ்வார்கள்'' என்ற தத்துவம் தான் இந்த உலகத்தில் உள்ளது எனவே இந்த உலகத்தில் இண்டைக்கும் எத்தினையோ மக்கள் இன குளுக்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு வெளியே தெரியவரமுடியாமல் இருக்கிறார்கள்

அதற்க்கு காரணம் அவர்கள் தனியே பரிதாபத்துக்குரிய மக்களாகவே இருக்கிறார்கள் அதேநேரம் அவர்கள் அவர்களுடைய எதிர்ப்பை காட்டுவார்களாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் எதிரிகளால கூட மதிக்கபடுவர் ஏனென்றால் எதிரிகளுக்கு கூட எப்பவுமே ஒரு பலவீனமான பகுதியை பலமானவர்கள் அழித்து தங்களுடைய வளர்ச்சியைத்தான் கொண்டு வருவார்கள் எனவே எப்பவுமே நாங்கள் எங்களுடைய பலவீனமான பகுதியை வைத்துகொண்டு உலகம் எங்களை பார்த்து எங்கள் பக்கம் திரும்ப வேணும் என்பது தவறு நாங்கள் இங்க பலவீனமாக இருந்த காலத்தில எந்த உலகமும் எங்களிட்ட வரேல்ல உங்களுக்கு தெரியும் நாங்கள் இப்ப பலமாக இருக்கிற காரனத்தினால தான் உலகத்தினர கவனம் எங்கள் பக்கம் திரும்பி இருக்கு அதாவது இப்பகூட உலகத்தினர் கவனம் எப்படி திரும்பி இருக்கென்றால் இலங்கையுடைய அதாவது நாங்கள் பலமாக இருக்கின்ற படியால் இலங்கையுடைய ஒருமைப்பாடு எங்க சிதைந்து விடுமோ அல்லது இலங்கையில் இன்னொரு நாடு உருவாகிவிடுமோ என்கின்ற காரணத்தினால் இதை எப்படி தீர்க்கலாம் என வந்திருக்கிறார்களே ஒழிய எங்களுடைய பிரச்சனையில சரி எங்களுடைய கோரிக்கை சரி இவர்கள் பிரிந்துபோவது சரி எனவே இவர்களுக்கு உதவ வேணும் என்று சொல்லி எவரும் இங்க வரவில்லை இப்பவே கூட இலங்கைக்காகதான் அதாவது இலங்கையினுடைய ஒருமை பாட்டுக்காகத்தான் வந்து பேசுகிறார்களே ஒழிய எங்களுடைய பரிதாபத்திற்க்காக ஒருத்தரும் வரவில்லை இங்கு இந்த ஆயுதப் போராட்டத்தினுடைய வலிமை இல்லாமல் இருந்திருந்தால் இங்கு யாருமே திரும்பி பாத்திருக்க மாட்டார்கள் இங்க பிரச்சனைகள் ஒரு அடக்குமுறயாலையே  தீர்க்கபட்டிருக்கும்.

உலகம் போற்றும் ஒரு வீரத்தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்.

சனி, 21 ஜூன், 2014

இந்திய படையினருனான ஏற்பட்ட மோதலில் காயம்பட்ட முதல் போராளி யார். திரு.பொட்டமான் எப்போது காயப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் முதன் முதலாக யாழ் பல்கலைக்கழகத்தின் அருகாமையில்  வைத்தே போர் வெடித்தது. 

விடுதலை புலிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பராசூட் மூலம் வந்திறங்கிய இந்திய படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர் தாக்குதல்களால் பல இந்திய படையினர் கொல்லப்பட்டனர். 


 யாழ் பல்கலைகழகத்தின் அருகாமையில் விமானம் மூலம் தரையிறங்கிய  இந்திய படையினர் மீது விடுதலைப்புலிகள் நடாத்திய மூர்க்கத்தனமான தாக்குதல்களை எதிர் கொள்ள முடியாமல் திணறிய இந்திய படையினர் தங்கள் தரையிறக்கத்தை கைவிட்டு பின் வாங்கிய நிலையில் தங்கள் இருப்பிடங்களிற்கு சென்றார்கள்.

விமானம் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தங்கள் தாக்குதல்களை தொடுத்த இந்திய படையினர் விமானத்தின் வாயிலாகவும் இந்திய இராணுவத்தை தரையிறக்க முற்ப்பட்ட போதும் புலிகளின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் விமானங்கள் எல்லாமே திரும்பி சென்றன.

யாழ்பல்கலைகழகத்தின் அருகாமையில் நடந்த இந்திய படையினருக்கு எதிரான தாக்குதலில் விடுதலைப்புலிகளின் புலனாய்வு துறை பொறுப்பாளர் திருபொட்டமான் அவர்கள் முதன் முதலாக காயப்பட்டார்.

காயப்பட்ட பொட்டமான் அவர்களை யாழ் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருவதை மோப்பம் பிடித்த இந்திய படையினர் யாழ் வைத்தியசாலை நோக்கி தங்கள் தாக்குதல்களை தொடர்ந்தார்கள். ஒரு பக்கம் யாழ் நகரத்தை நோக்கி வந்த இந்திய படையினரை விடுதலைப் புலிகளின் அணி ஒன்று தடுத்தி நிறுத்தி சண்டையிட்டு கொண்டிருந்தார்கள்.

திரு.பொட்டமான் அவர்களை  கைது செய்யும் நோக்கோடு தாக்குதல்களை மேற்கொண்டு வந்த இந்திய படையினரை இன்னொரு புலிகளின் அணி தடுத்து நிறுத்தி சண்டையிட்டு வந்த வேளையில் வேறு சில போராளிகளால் பொட்டமான் அவர்களை தமிழீழ தேசிய தலைவரின் ஊரான வல்வெட்டுத்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
யாழ் வைத்தியசாலை நோக்கி பொட்டமானை தேடி வந்த  இந்திய படையினர் அங்கு பொட்டு அம்மான் கிடைக்காததை நினைத்து மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வெக்கி தலை குனிந்தே சென்றார்கள். ஹிந்திய மிருகங்கள்.

கொஞ்ச நாட்கள் வல்வெட்டிதுறை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த பொட்டமான் அவர்கள் பின்பு இந்திய படைகளால் ஆபத்து வருமென எண்ணி போராளிகளால் வன்னி கொண்டு செல்லப்பட்டார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய படையினருக்கும் நடந்த மோதலில் முதன் முதலாக திரு.பொட்டமான் அவர்களே காயப்பட்டிருந்தார்.

புலிகளின் இடங்களை ஓரிரு நாட்களில் கைப்பற்றி விடுவோம் என எண்ணிய இந்திய கூர்க்கா  படையினர் எல்லோருக்குமே அங்கே அதிர்ச்சி தான் காத்திருந்தது. 

புலி வேகத்தில் நகருவோம் என நினைத்த இந்திய கூர்க்கா படையினர் புலிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் ஆமை வேகத்திலையே பல இழப்புகளுடன் நகர்ந்து சென்றார்கள்.
இதோ,இதோ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை பிடித்து விடுவோம் என சவால் விட்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி உட்பட இந்திய இராணுவ தளபதிகள் எல்லோருமே இறுதியில் ஏமாற்றம் அடைந்தார்கள்.

தலைவனின் நிழலையோ தலைவனின் இருப்பிடத்தை நோக்கியோ அவர்களால் செல்ல முடியவில்லை அவ்வளவுக்கு புலிகளின் எதிர்ப்பு சமர்களை இந்திய கூர்க்கா படையினரால் சமாளிக்க முடியவில்லை.

தலைவன் வளர்த்த புலிகள் நாங்கள்.
தமிழீழ மாணவன்

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 18 ஜூன், 2014

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 10

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் மோத முடியாமல் தோற்றுப்போன இந்திய படைகள் பின்பு உதவிக்கு இலங்கை படைகளை அழைத்தார்கள். 

சிங்களத்தில் பேசிய இந்தியப் படையினர்...

இந்தியப் படையினர் ஈழ மண்ணில் நிலைகொண்டிருந்த காலங்களில் நடைபெற்ற அவலங்கள் பற்றி இந்தத் தொடரில் விரிவாகப் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். 

 அந்தக் காலகட்டங்களில் ஈழத் தமிழர்; மீது இந்தியப் படைகள் மேற்கொண்ட படுகொலைகள் மனித உரிமை மீறல்கள் பாலியல் வல்லுறவுகள் என்பன பற்றியும் இந்திய அமைதி காக்கும் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற சண்டைகள் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் பற்றியும் இந்தியப் படையினருடன் சேர்ந்தியங்கிய தமிழ் ஆயுதக் குழுக்கள் தமது சொந்த மக்களுக்கெதிராகப் புரிந்த அட்டுழியங்கள் பற்றியும் சற்று விரிவாக ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

இனி இந்த வார அத்தியாயத்திற்குள் நுழைவோம்..

அக்டோபர் மாதம் 16ம் திகதி உரும்பிராய் பகுதிக்குள் இந்தியப் படையினர் நுழைந்ததைத் தொடர்ந்து அப்பிரதேசத்தின் இந்தியப் படையினர் மேற்கொண்ட மனித வேட்டைகள் பற்றி கடந்த அத்தியாயத்தில் பார்த்திருந்தோம்;.

உரும்பிராய் பிரதேசத்தில் இந்தியப் படையினர் சகட்டு மேனிக்கு சுட்டுக்கொண்டும் குண்டு வீசிக்கொண்டும் தமது நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால் அங்கிருந்த மக்கள் பயத்தினால் வீடுகளினுள்ளும் வேறு மறைவிடங்களிலும் மறைந்திருக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

அவ்வாறு மறைந்திருந்த பொதுமக்களால் சில விடயங்களை அவதானிக்கவும் முடிந்தது.

உரும்பிராய் பிரதேசத்தைச் சுற்றிவழைத்திருந்த இந்தியப் படையினர் சிங்களப் பாஷையில் பேசிய அதிசயத்தை பல சந்தர்ப்பங்களில் அவர்களால் கேட்கமுடிந்தது.

பொது மக்களுக்கோ ஆச்சாரியம்.  அவர்களால் தங்கள் காதுகளையே நம்பமுடியவில்லை.

இந்திய இராணுவம் சிங்களம் பேசுவதா? ~ஏதாவது கனவு கினவு காண்கின்றோமா| -என்று சந்தேகித்து பலர் தங்களைத் தாங்களே கிள்ளியும் பார்த்துக்கொண்டார்கள்.

பயத்தில் ஹிந்தியை சிங்களம் என்று தவறாகப் புரிந்துகொண்டுவிட்டோமோ என்று கூட அவர்கள் சந்தேகப்பட்டார்கள். படிப்படியாகவே உண்மை நிலையை அவர்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது.

இந்தியப் படையினருடன் ஸ்ரீலங்காப் படையினரும் இணைந்து மனித வேட்டைக்கு வந்திருந்ததை அவர்களால் உணர முடிந்தது.

இந்தியப் படையனருடன் இணைந்து ஸ்ரீலங்காப் படைவீரர்களும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டதை யாழ் குடாவாசிகள் பலர் உறுதிப்படுத்தியிருந்தார்கள். ~முறிந்த பனை| என்ற தொகுப்பு முதற்கொண்டு இந்தியப்படையினரின் இராணு நடவடிக்கைகள் தொடர்பான சம்பவங்கள் பற்றி வெளியிடப்பட்ட பல புத்தகங்களிலும் இந்தியப் படையினருடன் ஸ்ரீலங்காப் படையினரும் இணைந்து செயற்பட்ட உண்மை உறுதிப்படுத்துப்பட்டிருந்தது.

ஸ்ரீலங்காப் படைகளை துணைக்கழைத்த இந்தியா
புலிகளுடனான சண்டைகள் இந்த அளவிற்கு மோசமானதும் கடினமானதுமாக இருக்கும் என்பதை ஈழ மண்ணில் வந்திறங்கிய இந்தியப் படையினர் கனவிலும் நினைத்துப்பார்க்கவில்லை. புலிகள் மிக இலகுவாக தமது வழிக்கு வந்துவிடுவார்கள் அல்லது புலிகள் இந்தியாவை மீறிச் செயற்படமாட்டார்கள் என்றே அவர்கள் ஆரம்பத்தில் நினைத்திருந்தார்கள்.

ஒருவேளை புலிகளுடன் மோதவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் கூட ஓரிரு நாட்களுக்குள் புலிகளை முற்றாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே கணிப்பிட்டும் இருந்தார்கள்.

புலிகள் யுத்த முனையில் மிகவும் பலமான எதிர்ப்புக்களைக் காண்பித்து இந்தியப் படையினருக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி இந்தியப் படையினரை எதுவுமே செய்யமுடியாத ஒரு வகை கையறு நிலைக்குள் கொண்டுவந்திருந்ததைத் தொடர்ந்து யாழ்பாணத்தில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரின் உதவியையும் பெறுவதற்கு இந்தியப்படைத்துறைத் தலைமை தீர்மாணித்தது.

இந்திய இராணுவத் தலைமையின் ஆலோசனையின்படி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி ஜே.ஆர். இடம் ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஒத்துழைப்பை கோரியிருந்தார். சந்தர்ப்பம் பார்த்திருந்த ஸ்ரீலங்கா அரசாங்கம் உடனடியாகவே இதற்குச் சம்மதித்தது. ஸ்ரீலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அத்துலத் முதலி யாழ் குடாவில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினருக்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார். புலிகளுக்கு எதிரான இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று அந்த அவசரச் செய்தியில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி ஸ்ரீலங்காப் படைகளின் ஒத்துழைப்புக்கள் மிகவும் இரகசியமாக இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக ஸ்ரீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்த ~ஒப்பரரேசன் லிபரேசன்| இராணுவ நடவடிக்கைகளுக்கு என்று தயார்படுத்தப்பட்டிருந்த ஸ்ரீலங்காப் படையணிகள் இந்தியப் படையினருடன் இணைந்து களம் இறக்கப்பட்டன.

இந்தியப் படையினரின் யாழ் நகர் நோக்கிய நகர்வுகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் வழிகாட்டிகளாகவும் துனைப் படையினராகவும் பணியாற்றி ஒத்துழைப்பு வழங்கினார்கள். ஒப்பரேஷன் லிபரேசன் படைநகர்வுகளுக்கு என்று தயாரிக்கப்பட்டிருந்த யாழ் வீதிகள் தொடர்பான வரைபடங்களையும் இந்தியப் படையினரின் நகர்வுகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் கொடுத்துதவினார்கள்.

யாழ் கோட்டையில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் யாழ் குடாவிலுள்ள குடியிருப்புக்களை நோக்கி ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டும் ஸ்ரீலங்கா விமானப் படையினரின் ஹெலிக்காப்டர்கள் புலிகளின் இலக்குகள் என்று சந்தேகிக்கப்பட்ட இடங்கள் மீது குண்டு வீச்சுக்கள் நடாத்தியும் இந்தியப் படையினரின் ~ஒப்ரேசன் பவான்| இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்.

சாட்சிகள்:
இலங்கை வானொலியில் மிகவும் பிரபல்யமான ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ரேடியோ நடராஜா. அவர் அப்பொழுது யாழ்பாணத்தில் தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார். மற்றத் தமிழ் மக்கள் போலவே அவரும் இந்தியா மீது மிகுந்த அபிமாணம் கொண்டிருந்த ஒரு நபர். இந்தியப் படையினர் நகர்வினை மேற்கொண்ட போது அவர்களுடன் பேசிச் சமாழித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் தனது வீட்டில் தங்கியிருந்தார். அங்கிருந்த மற்றவர்களிடமும் இதனைக் கூறி அவர்களையும் அசுவாசப்படுத்திக்கொண்டிருந்தார்.

இந்தியப் படையினர் அவரது வீட்டினுள் நுழைந்தபோது இந்தியப் படையினருடன் பேசி விளங்கப்படுத்துவதற்காக வாசலுக்குச் சென்றார். இந்தியப் படையினர் அவரை விசாரித்தார்கள். தனது மகனும் மனைவியும் தன்னுடன் இருப்பதாகத் தெரிவித்த அவர் தனது மகனையும் மனைவியையும் வாசலுக்கு வரும்படி அழைத்தார். வீட்டினுள் இருந்த மகன் வெளியே வருவதற்காக எழுந்து நின்று சட்டை அணிந்துகொள்ள முற்படுவதை ஜன்னல் வழியாகக் கண்ட ஒரு சிப்பாய் தனது துப்பாக்கி முனையை ஜன்னலினுள்ளே செலுத்தி சுடத் தொடங்கினான். நடராஜாவின் மகன் தரையில் விழுந்து படுத்துவிட்டதால் துப்பாக்கிச் சன்னங்கள் எதுவும் அவன் மீது படவில்லை.

அதேவேளை வாசலில் இந்தியப் படையினருடன் பேசிக்கொண்டிருந்த நடராஜா மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அவர் பிணமாக வீழ்ந்தார். வாசலிலும் வீட்டினுள்ளேயும் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டதையும் தனது கணவர் மகன் இருவரும் தரையில் வீழ்ந்ததையும் கண்ட நடராஜாவின் மனைவி இருவருமே கொல்லப்பட்டுவிட்டதாக நினைத்து பயத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓட ஆரம்பித்தார். அவர் பின்பக்கம் வேலி வழியாக தப்பி ஓடவதைக்கண்ட ஒரு சிப்பாய் கத்தினான்: ,பஸ்சங் கியா, (பின்னால் ஓடுகிறார்) என்று அவன் சிங்களத்தில் கத்தியதுதான் இந்தியப் படையினருடன் சிங்களப் படையினரும் இணைந்து வந்திருந்தார்கள் என்பதற்கான முதல் அறிகுறி.

அமெரிக்காவில் இருந்து சாந்தி என்பவர் தனது மகனுடன் விடுமுறைக்கு வந்திருந்தார். இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் யாழ்ப்பாணம் வந்து உரும்பிராயில் தங்கியிருந்தார். 16ம் திகதி அப்பிரதேசத்தில் தொடர்ந்து முழங்கிக்கொண்டிருந்த துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தினால் அச்சமுற்ற அவர்கள் வீட்டினுள் பதுங்கியபடி அந்த இரவைக் கழித்தார்கள். மறு நாள் காலை துப்பாக்கிச் சூட்டு ஒலிகள் சற்று ஓய்ந்ததைத் தொடர்ந்து நிலமையைப் பார்ப்பதற்காக அவர் கதவைத்திறந்து கொண்டு வெளியே செல்ல நினைத்தார்.

கதவை மெதுவாகத் திறந்து வெளியே செல்ல எத்தனித்த போது அவரை முந்திக்கொண்ட அவரது வளர்ப்பு நாய் ஓரளவு திறந்த கதவு வழியாக வெளியே பாய்ந்தது. குரைத்தபடி சென்ற நாயை நோக்கி பல முனைகளில் இருந்தும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. ஓலத்துடன் நாய் சுருண்டு விழுந்தது. அப்பொழுதுதான் அவரது வீட்டின் அருகே ஒரு கவச வாகனம் நின்றுகொண்டிருப்பதை சாந்தி அவதானித்தார். உடனே வீட்டின் கதவை இறுக அடைத்துவிட்டு தனது மகனையும் இழுத்துக்கொண்டு மீண்டும் வீட்டினுள் ஒரு பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக்கொண்டார். அந்தச் சமயத்தில் வெளியில் சில சிப்பாய்கள் சிங்களத்தில் பேசியது அவரது காதில் விழுந்தது: மே பரன கெதர. கடாண்ட ஹறி அமாறு. மோட்டார் எக்க உஸ்ஸாண்ட|| (இது பழைய வீடு. உடைப்பது கஷ்டம். ஒரு மோட்டார் அடி) ஆனால் தெய்வாதீனமாக அந்த வீட்டிற்கு எதுவும் நடைபெறவில்லை.

இதேபோன்று யாழ் குடாவில் இந்தியப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் ஒத்துழைப்பு வழங்கியதுடன் நேரடியாக பங்குகொண்டும் இருந்ததற்காக பல ஆதாரங்கள் பின்னர் வெளியாகி இருந்தன.

தமது இராணுவ நடவடிக்கைகளின் போது ஸ்ரீலங்காப் படையினர் உதவியது பற்றி இந்தியப் படை அதிகாரிகள் எழுதியிருந்த பல புத்தகங்களிலும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு இந்தியப் படையினர் ஸ்ரீலங்காப் இராணுவம் என்ற பேயிடமே உதவி பெற்றிருந்ததானது ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்தியா இழைத்த மிகப் பெரிய துரோகம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் கிடையாது.


வெட்கமடைந்த இந்தியப் படையினர்:
இந்தியப் படையினர் ஈழத்தமிழர் மீது மேற்கொண்ட மனித வேட்டைகள் எல்லை அற்று தொடர்ந்தவண்ணமே இருந்தன.

ஸ்ரீலங்காப் படைகளைச் சேர்ந்த கொலையாளிகளையும் துணைக்கழைத்துக்கொண்டு யாழ்குடாவெங்கும் மனித வேட்டையில் இறங்கியிருந்த இந்தியப் படையினர் பெண்கள் குழந்தைகள் வயோதிபர்கள் என்று பாராமல் தமிழ்கள் என்று இனங்கண்டுகொண்ட அனைவரையும் படுகொலை புரிந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தார்கள்.

இவ்வாறு முன்னேறிக்கொண்டிருந்த இந்தியப் படையினரைத் தடுத்து நிறுத்துவதிலும் போரிட்டுக் அழிப்பதிலும்; துரத்தி அடிப்பதிலும் விடுதலைப் புலிகள் தீரம் காண்பித்துக்கொண்டிருந்தார்கள். பல முனைகளிலும் முன்னேறிய ஆயிரக் கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளைக் கொண்ட புலிகள் அணிகள் தோல்வியடையச் செய்த சந்தர்ப்பங்கள் பல இருந்தன.

ஒரு பனை மரத்தில் பரன் அமைத்து பதுங்கியிருந்த ஒரு விடுதலைப் புலிப் போராளியே இந்தியப் படையின் பாரிய அணி ஒன்றை நாட்கணக்காக தடுத்து நிறுத்தி சாதனை புரிந்த சம்பவங்களும் உள்ளன.

புலிகள் எங்கிருந்து தாக்குதல்கள் நடாத்துகின்றார்கள் என்று இந்தியப் படையினருக்கு தெரியாது. பனைத் தோப்பில் இருந்து இடைக்கிடையே துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முன்னேற முற்பட்ட ஓரிரு ஜவான்களும் சரியாக குறிபார்த்து சுடப்பட்டு; வீழ்த்தப்பட்டுவிடுவதால் மற்றய இந்தியப் படைவீரர்கள் தொடர்ந்து முன்னேறப் பயந்து நிலை எடுத்துப் பதுங்கிவிடுவார்கள்.

பனங்காணியை நோக்கி சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளுவார்கள். ஓரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இவ்வாறு இந்த விளையாட்டு தொடரும். பனை மரத்தின் மீது பரன் அமைத்து தங்கியிருக்கும் புலி வீரரிடம் துப்பாக்கிச் சன்னம் தீர்ந்து அவர் அங்கிருந்து நகர்ந்த பின்னர் அல்லது அவர் வீர மரணம் அடைந்த பின்னர்தான் இந்தியப் படையினருக்கு தாம் ஏமாந்திருந்த விடயம் தெரியவரும். தமது இயலாமையை நினைத்து வெட்கப்படுவார்கள்.

அதேவேளை இதுபோன்ற சம்பவங்களை மனதில் வைத்துக்கொண்டு வியூகங்களை மாற்றி அமைத்து இந்தியப் படையினர் மண் கௌவ்வியதும் உண்டு. சில சந்தர்ப்பங்களில் பனங்காணிகளில் இருந்து புறப்படும் ஓரிரு துப்பாக்கி வேட்டுக்களைப் பார்த்துவிட்டு அங்கு ஒரு புலிப் போராளி மட்டும்தான் இருப்பார் என்று நினைத்து அள்ளி அடித்துக்கொண்டு பனங்காணிக்குள் நுழையும் இந்தியப் படையினர் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகளால் சுற்றிவழைக்கப்பட்டு ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் பலவும் உள்ளன.

புலிகளின் தாக்குதல்கள் எந்த வடிவில் எங்கிருந்து எப்பொழுது மேற்கொள்ளப்படும் என்று இந்தியப் படையினருக்கு புரியாமல் இருந்தது. சந்தர்ப்பவசமாக அவற்றை அவர்கள் எதிர்கொண்ட போது வியப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டிருந்தார்கள்.

தாம் மிகவும் இலகுவாக நினைத்து சண்டையை ஆரம்பித்திருந்த விடுதலைப் புலிகள் ஒன்றும் சாமான்யமானவர்கள் அல்ல. உயர்ந்த இலட்சியத்துடன் பயிற்றப்பட்டு உறுதியுடன் வளர்க்கப்பட்டு உயிரைக் கூட மதிக்காது போராடும் வல்லவர்களை தாம் சமாளிக்கவேண்டும் என்பதை இந்தியப் படையினர் படிப்படியாக உணர ஆரம்பித்தார்கள்.

தாங்கிகளை நம்பிய இந்தியப் படை:
இந்தியப் படைத் தலைமைக்கு ஒரு விடயத்தில் நல்ல தெளிவு இருந்தது.
அதாவது விடுதலைப் புலிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்கள். அதிகளவு போராளிகள் அவர்களிடம் கிடையாது. புலிகள் அமைப்பில் சுமார் 1500 பேர் அளவில்தான் இருப்பார்கள். அதுவும் அவர்கள் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை யாழ்ப்பாணம் மன்னார் என்று பல இடங்களிலும் பரந்துதான்; நிலைகொண்டிருப்;பார்கள். யாழ் குடா முழுவதுமாக பல முனைகளில் முன்னேறிக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இந்தியப் படையினரை ஒரு சில போராளிகளால் சமாளிக்கவே முடியாது என்பதில் இந்தியப் படை உயரதிகாரிகள் மிகவும் உறுதியாக இருந்தார்கள்.

அத்தோடு இந்தியப் படையினர் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்திருந்த யுத்த தாங்கிகளும் புலிகளுக்கு எதிரான சண்டைகளில் பாரிய வெற்றிகளைப் பெற்றுத் தந்துவிடும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள்.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் புலிகள் வகுத்திருந்த வியூகங்கள் அவர்கள் மேற்கொண்ட புதிய போர் உத்திகள் இந்தியப் படை அதிகாரிகளின் எண்ணங்களில் மண்ணை அள்ளிப் போட்டிருந்தன.


பல முனைகளில் முன்னேறிய இந்தியப் படை அணிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடைமறித்து தாக்கப்படுவார்கள். சண்டைகள் மிகவும் உக்கிரமாக நடைபெறும். இந்தியப் படையினர் முன்னேறவே முடியாதபடிக்கு தாக்குதல்கள் மிகவும் தீவிரமாக இருக்கும். ~~சரி புலிகள் இந்த இடத்தில் மிகவும் பலமாக இருக்கின்றார்கள் தொடர்ந்து முன்னேறுவது அவ்வளவு உசிதம் அல்ல. திரும்புவதே புத்திசாலித்தனம்|| என்று நினைத்துக்கொண்டிருக்கையில் புலிகள் தரப்பில் இருந்து காண்பிக்கப்பட்டுக்கொணடிருந்த எதிர்ப்புக்கள் திடீரென்று நின்றுவிடும். புலிகள் பக்கமிருந்து ஒரு வேட்டுத்தானும் தீர்க்கப்படமாட்டாது. புலிகள் முற்றாகவே தமது தாக்குதல்களை நிறுத்திவிடுவார்கள்.

அடுத்து என்ன செய்வது என்று இந்தியப் படையினர் தடுமாறுவார்கள். தொடர்ந்து முன்னேறுவதா? அல்லது திரும்புவதா? தீர்மாணம் எடுக்கமுடியாது படை அதிகாரிகள் தடுமாறுவார்கள்.

புலிகள் பலமுடன் இருக்கும் பிரதேசத்தினுள் தொடர்ந்து முன்னேறினால் தாம் சுற்றிவழைக்கப்பட்டுவிடுவோமோ என்ற பயம் அவர்களை பிடித்துக்கொள்ளும். புலிகள் தரப்பில் இருந்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் திரும்பவும் மனமில்லை. தீர்மாணம் எடுக்கமுடியாமல் நாள் முழுவதும் யோசிப்பார்கள். யுத்த தாங்கிகளை முன்நிறுத்தி படை முன்னேற்றத்திற்கு வியூகம் வகுப்பார்கள். இந்தியப் படையினருக்கு அப்பொழுது உதவி புரிய ஆரம்பித்திருந்த மாற்றுத் தமிழ்க் குழுக்களின் உறுப்பினர்களை கிராமங்களினுள் அனுப்பி தகவல்சேகரித்தபோது அவர்களுக்கு பாரிய ஆச்சரியம் ஏற்படும்.

எதிர்முனையில் ஒரு புலி உறுப்பினர் கூட இல்லை என்று திரும்பிவந்த தமிழ் குழு உறுப்பினர்கள் கூறுவார்கள்.

ஆரம்பத்தில் அந்த தகவலையும் சந்தேகித்து பின்னர் ஒருவாறு உண்மையை உறுதிசெய்துகொண்டு முன்னேற நினைக்கும்போது புலிகள் இந்தியப் படையினருக்கு பின்புறமாக தாக்குதல்களை ஆரம்பித்திருப்பார்கள். தாங்கிகளை முன்நிறுத்தி முன்னேற நினைத்திருக்கையில் புலிகள் திடீரென்று பின்புறம் இருந்து தாக்க ஆரம்பித்ததால் இந்தியப் படையினர் நிலை குலைந்து போய்விடுவார்கள்.

புலிகளுக்கும் இந்தியப் படையினரின் யுத்த தாங்கிகளுக்கும் இடையில் இப்பொழுது இந்தியப் படை ஜவான்கள். யுத்த தாங்கிகளை பயன்படுத்த முடியாது. இந்தியப் படையினர் தமது பழமைவாய்ந்த எஸ்.எல்.ஆர். துப்பாக்கிகளை இயக்கும் முன்பதாகவே அவர்களில் பலர் புலிகளின் நவீன ஏ.கே.47 இயந்திரத் துப்பாக்கிகளுக்குப் பலியாகி வீழ்ந்துவிடுவார்கள்.

இவ்வாறு இந்தியப் படையினரின் அதிக எண்ணிக்கையிலான படைவீரர்கள் மற்றும் அவர்கள் முன்நிலைப்படுத்தி பயன்படுத்திய யுத்த தாங்கிகள் என்பன கூட பல சந்தர்ப்பங்களிலும் செயலற்றவையாகவே மாற்றப்பட்டிருந்தன - புலிகளின் புதிய போர் யுக்திகளினால்.

பின்னடைவை ஏற்படுத்திய கன்னிவெடிகள்:
அடுத்ததாக புலிகளின் கன்னி வெடிகள் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தன. கன்னி வெடிகள் எந்த ரூபத்தில் மறைந்திருக்கும் என்பதை இந்தியப்படையினரால் கற்பனை செய்யவே முடியவில்லை. தெருவோரம் கைவிடப்பட்டிருக்கும் துவிச்சக்கர வண்டிகூட இந்தியப் படையினர் அருகில் செல்லும்போது வெடித்துச் சிதறும்.

வீதிகளில் அமைந்திருக்கும் மதகுகளின் கீழ்தான் கன்னிவெடிகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் என்றில்லை. தாரிட்டு நன்றாகப் பூசி மெழுகிக் காணப்படும் தெருக்கள் கூட திடீரென்று வெடித்து பாரிய அழிவுகளை ஏற்படுத்திவிடும். தெருக்களிலும் வீதியோரங்களிலும் கன்னிவெடி பொருத்தப்பட்டிருக்கும் என்று அவதானித்து மிகவும் கவனத்துடன் நகர்ந்துகொண்டிருக்கும் போது மின் கம்பங்களின் மேலே இருந்து கிளைமோர் வெடித்து பல இந்தியப் படையினர் கொல்லப்பட்டுவிடுவார்கள்.

இந்தியப் படையினரைப் பொறுத்தவரை ஈழ மண்ணில் அவர்களை அதிக அச்சத்திற்குள்ளாக்கிய ஒரு விடயம் என்னவென்றால் புலிகள் மேற்கொண்ட கன்னி வெடித்தாக்குதல்கள் என்றால் மிகையாகாது.


இந்தியாவின் யுத்த அனுபவம்:
இந்தியப் படையினர் 1971ம் ஆண்டே கடைசியாக யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பாக்கிஸ்தானுடன் இந்தியா மேற்கொண்டிருந்த அந்த யுத்தத்திற்கு பின்னர் இந்தியப் படையினருக்கு யுத்த அனுபவம் அவ்வளவாகக் கிடையாது. காலிஸ்தான் சீக்கியத் தீவிரவாதிகளை அடக்குவதற்காகப் பஞ்சாப் பொற்கோவிலில் இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த `புளுஸ்டார்` படை நடவடிக்கை (Operation Blue star) தவிர 16 வருடங்களாக இந்தியப் படை யுத்த நடவடிக்கைகள் எதிலுமே ஈடுபட்டது கிடையாது.

திடீரென்று ஈழத்தில் புலிகளுடன் இந்தியப் படையினர் யுத்தத்தில் குதிக்கவேண்டி ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தடுமாறித்தான் போனார்கள்.

அதுவும் புலிகள் இந்தியப் படையினருக்கு தொடர் இழப்புக்களை வழங்கிவர அவற்றை வெற்றி கொள்ள முடியாத இந்தியப் படையினர் தமது இயலாமையை அப்பாவி மக்கள் மீது காண்பிக்க ஆரம்பித்திருந்தார்கள். புலிகளை வெற்றிகொள்ளமுடியாத இந்தியப் படையினர் தமது கோபத்தை அப்பாவி ஈழத் தமிழர்கள் மீது செலுத்தினார்கள். நூற்றுக்கணக்கான மக்களை கொன்றொழித்தார்கள். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை அழித்தார்கள். அவர்கள் ஈழ மண்ணில் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தம் இப்படித்தான் அமைந்திருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கையில் இந்தியப் படையினர் தமது கைகளில் ஒன்றைப் பின்னால் கட்டிக்கொண்டு யுத்தம் புரிந்து வருவதாக இந்தியா கூறியதுதான்.

அந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவையான இந்தக் கூற்றை இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஊடகங்களுக்கு கூறிக்கொண்டிருக்கும் போது இந்தியப் படையின் ஒரு அணி யாழ் வைத்தியசாலைக்குள் பாரிய மனித வேட்டை ஒன்றை நடாத்தப் புறப்பட்டிருந்தது. 
பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 10 ஜூன், 2014

தலைவருடன் சில மணிப் பொழுதுகள்...

நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன்.

கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம் இருக்க, பண்பட்ட மனிதம் அங்கு ஓங்கி வளர்ந்திருப்பதையும் பார்த்த பின், இதையெல்லாம் இத்தனை கவனத்தோடு கண்காணிக்கும் அந்த தூய சிந்தனை கொண்ட நிர்வாகத் திறன்மிக்க அண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது.


´அண்ணன்` அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நாங்கள் வெளிநாடுகளி இருந்து கொண்டு மேதகு என்றும், மதிப்புக்குரிய என்றும், தலைவர் என்றும் எட்ட வைத்துப் பார்த்த அந்தத் தூய தாயகனை அவர்கள் கிட்ட நின்று அப்படித்தான் சொல்கிறார்கள்.

வாய்க்கு வாய் அண்ணை என்றும் அண்ணன் என்றும் அவர்கள் அப்படி உரிமையோடும் பாசத்தோடும் பேசும் போதெல்லாம், ஏற்கெனவே எனக்குள் முளைவிட்டிருந்த அந்த ஆசை துளிர்த்து, தளிர்த்து, சடைத்து பெருவிருட்சமாக விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியது. !நானும் அண்ணனைப் பார்க்க வேண்டும். வன்னியைத் தன் கண்களுக்குள் வைத்து இத்தனை நேர்த்தியாக நிர்வகிக்கும் அந்த அண்ணனை ஒரு தரம் சந்திக்க வேண்டும். வன்னி மக்களின் மனதில் இத்தனை பிரியத்துக்குரியவராக இடம் பிடித்திருக்கும் அவரோடு ஒரு தரம் மனம் திறந்து பேச வேண்டும்.` எனக்குள்ளிருந்த ஆசை அவாவாக மாறத் தொடங்கியது.

என் தாய் வயிற்றில் பிறந்து, விடுதலை வேட்கையில் எம் மண்ணுக்காகத் தம் இன்னுயிரை ஈந்த என் தம்பிகளில் ஒருவனான மயூரன் கூட ஒரு காலத்தில் அவரோடு அவர் அருகில் இருந்தவன். அவன் பற்றியும் எனக்குக் கிடைக்காத சில விடயங்களை அவரோடு அளவளாவ வேண்டும். அந்த ஆசை கூட என் மனதின் ஆழத்தில் வேரூன்றி இருந்தது.

என் ஆசைக்கு அணை போட முடியாத கட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அண்ணனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பி வைத்தேன்.

நேற்று முன் தினம் மாலை நான்கு மணியளவில் வெயிலில் மூழ்கியிருந்த கிளிநொச்சி வெண்புறா நிறுவனத்தில் நிழலும் தண்மையும் தேடி வரவேற்பறையின் ஓர் மூலையில் நான் அமர்ந்திருந்த போதுதான் தமிழ்ச்செல்வன் ஆளனுப்பியிருந்தார். `எம்மைச்சந்திக்க விரும்புவதாகவும் ஏழு மணிக்கு வாகனம் அனுப்புவதாகவும்` சொல்லி விட்டிருந்தார்.

ஏழு மணிக்குச் சில நிமிடங்கள் முன்னரே வாகனம் வந்தது. போனோம். நட்பு நிறைந்த பார்வைகள் எம்மை வரவேற்க அரசியல்துறை அலுவலகம் தனக்கே உரிய பாணியில் உள்ளேயும் வெளியேயும் அழகாகக் காட்சி அளித்தது.

அதே சிரிப்பு..! எப்போதும் நாம் பத்திரிகைகளிலும், ஒளி நாடாக்களிலும் பார்த்த அதே சிரிப்புடன் தமிழ்ச்செல்வன் எம்மை வரவேற்றார். அக்கா..! அக்கா..! என்று உரிமையோடு அழைத்து அன்போடு பேசினார். களத்தில் காவியமான எனது தம்பிமாரைப் பற்றிக் கதைத்தார். முன்னர் பருத்தித்துறையில் புத்தக வெளியீடு செய்த தங்கை பற்றி விசாரித்தார். கதைகள் பல திசைகளிலும் விரிந்திருந்தன.

அவருடனான இரவு உணவு நளபாகம்தான். இறால், இறைச்சி, மரக்கறி... என்று சுவையாக இருந்தது. அங்கிருந்த உறவுகள் அதை நட்போடு பரிமாறிய விதம் மிகவும் இதமாக இருந்தது. அந்த இனிய உபசரிப்பில் மனசும் வயிறும் நிறைந்திருக்க நாம் விடை பெற எழுந்து கொண்டோம்.

அப்போதுதான் தமிழ்ச்செல்வன் என்னைத் தனியாகக் கூப்பிட்டு அந்த இனிய செய்தியைச் சொன்னார். "வியாழக்கிழமை (அண்ணன்) உங்களைச் சந்திக்க விரும்புறார்" என்றார். எனக்கு ஒரு தரம் மனம் சிலிர்த்தது.

அண்ணையைச் சந்திப்பது பற்றி தமிழ்ச்செல்வன் சொன்ன அந்தக் கணத்திலிருந்து நான் பதட்டமாகி விட்டேன்.

வெளியில் வந்து அவருடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுத்த போதோ, சமையல் செய்தவர்களிடமும், உணவு பரிமாறியவர்களிடமும் நன்றி கூறி விடைபெற்ற போதோ நான் ஒன்றிலும் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியாமல் பதட்டமாகவே இருந்தேன்.

உண்மைதானா..? மதிப்புக்குரிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நான் சந்திக்கப் போகிறேனா..? சந்தோசம்..! சந்தேகம்..! பதட்டம்..! பரபரப்பு..! எல்லாம் என்னுள். இன்று காலை தமிழச்செல்வன் அவர்கள் வெண்புறா வரை வந்து "மாலை நாலுமணிக்கு வாகனம் வரும்" என்று சொன்ன போதும், எனது படபடப்புகள் குறைய வில்லை.

நான்கு மணிக்கு வருவதாகச் சொன்ன வாகனம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது. போரின் அனர்த்தங்களால் குழி விழுந்து போயிருந்த வீதியில் வாகனம் ஏறி இறங்கிச் சென்ற போது நாங்கள் குலுங்கினோம். கூட வந்தவரின் சற்றலைற் தொலைபேசி சிணுங்கினாலே ´எங்கே.. இன்று எம்மால் அண்ணையைச் சந்திக்க முடியாது` என்று தகவல் சொல்லி விடுவார்களோ என்று மனசு பயப்பட்டது.

அண்ணனைச் சந்திக்கும் வரை எதையும் நம்ப மனசு மறுத்தது. வாகனம் எம்மை ஒரு இடத்தில் இறக்கிய போது அங்குதான் அண்ணன் நிற்பார் என நினைத்தேன். பின் அரை மணி நேரமாகக் காத்திருந்த போது அண்ணன் அங்கு வருவார் என்ற நினைப்பில் காத்திருந்தேன்.

ஆனால் வந்தது இன்னுமொரு வாகனம். போராளிகளின் மருத்துவரான, ரேகா ஓட்டி வந்தார். முதற் சந்திப்பிலேயே காலாகாலத்துக்கும் பரிச்சயமான ஒரு உறவு போல அக்கா.. அக்கா.. என்று உரிமையோடு இனிமையாகப் பேசினார்.

சில நிமிடங்களில் வாகனம் மரங்கள் குடை விரித்திருந்த ஒரு இடத்துக்குள் நுழைந்தது. முற்றத்தில் கதிரை போட்டுத் தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்தார். அதே சிரிப்புடன் எம்மை வரவேற்றார். உள்ளே வீடா, அலுவலகமா தெரிய வில்லை. மின் விளக்கில் பல முகங்கள் தெரிந்தன.

சில நிமிட உரையாடல்களின் பின் இன்னொரு வாகனம் வந்தது. கேற்றடியில் சற்று இருள் சூழ்ந்திருந்தது. ஆனாலும் இறங்கியவர்களில் தலைவர் பிரபாகரன் அவர்களும் இருக்கிறார் என்பதை அவர் நடையிலேயே கண்டு கொண்டேன். இப்போதுதான் மனசு முழுதாக நம்பிக்கை கொண்டது.

சந்திப்புக்கான பிரத்தியேகமான, தனியாக இருந்த ஒரு கட்டிடத்துள் அவர்கள் நுழைய நாங்களும் அழைக்கப் பட்டோம்.

மதிப்புக்குரிய தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை நேரே கண்டதும் எப்போதும் என் வாயில் சரளமாக வரும் வணக்கம் கூட வரமறுத்தது. நா பேச மறந்து பின்னிக் கொண்டு பின் நின்றது. நம்ப முடியாதிருந்தது. சிரிப்பை மட்டும் உதிர்த்தேன்.

எல்லோரும் உள்ளே நுழைந்ததும் இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். அங்கும் தமிழ்ச்செல்வன் அவர்களுடனான சந்திப்பின் போது போலவே அழகாகவும் பண்பாகவும் உபசரித்தார்கள். சில நிமிடங்களில் தயக்கமும் தவிப்பும் தளர்ந்து இயல்பு நிலைக்கு வந்தேன். அண்ணன் பிரபாகரன் மிகவும் இயல்பாகப் பேசினார். உரிமையோடு எம்மோடு அருகிருந்து பேசினார். நான் சிரிக்கும் போது "மயூரனின் சிரிப்புப் போலவே இருக்கிறது" என்றார். "இதே சுருள் தலைமயிர்தான் மயூரனுக்கும்" என்றார். 

பூநகிரித் தவளைப் பாய்ச்சலில் உடலம் கூடக் கிடைக்காமற் சிதறிப் போன மயூரனின் குறும்புகள் பற்றி நிறையச் சொன்னார். தகடை மாற்றிக் கட்டிக் கொண்டு திரியும் அவனது விளையாட்டுத் தனங்களைப் பற்றிச் சொன்னார். மொறிஸ் பற்றிச் சொன்னார். "ஆனால் மொறிஸை கடைசியில் சந்திக்க முடியாமற் போய் விட்டது." என்றார். மொறிஸ் ஒரு கிழமையில் அவரிடம் வருவதாக இருந்தானாம். அதற்கிடையில் பருத்தித்துறையில் விதையாகி விட்டான். மயூரன்ரை அந்த எழுதுற அக்கான்ரை கடிதங்களை எனக்கு நல்லாப் பிடிக்கும். எல்லாரும் விட்டிட்டு வா எண்டுதான் கடிதங்கள் போடுவினம். ஆனால் அவ மட்டும் அப்பிடி எழுத மாட்டா. நம்பிக்கையும் உறுதியும் கூறி எழுதுவா" என்றார். அவர் குறிப்பிட்டது சந்திரா ரவீந்திரனை. புலம் பெயர்ந்து விட்ட எனது தங்கையைக் கூட அவர் இத்தனை ஞாபகம் வைத்திருப்பது எனக்குள் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் தந்தது. மறைந்த கவிஞர் தீட்சண்யன் பொட்டம்மானின் மகன் பார்த்திபனுக்கு ஆங்கில வகுப்புகள் எடுத்தது பற்றிச் சொன்னார்.

பலதரப்பட்ட உரையாடல்களின் மத்தியில் "சாப்பிடுவோம் வாங்கோ" என அவர் அழைத்த போது ஆச்சரியப் பட்டுத்தான் போனேன். அரைமணி நேரம்தான் எமக்காக ஒதுக்குவார் என நினைத்தேன். ஏற்கெனவே கூடிய நேரம் கதைத்து விட்டோம். விருந்து வேறையா..! மனசு புளகாங்கிதமடைந்தது.

சாப்பாடு அந்த மாதிரி இருந்தது. டுபாய் பிட்டு மிகவும் மென்மையாகச் சுவையாக இருந்தது. சாப்பிடும் போது நிறையக் கதைத்தோம். மனம் விட்டுச் சிரித்தோம். பெண்ணியத்திலிருந்த அரசியல் வரை அலசினோம்.

பெண்ணியம் பேசும் போதுதான் அண்ணன் பிரபாகரன் வன்னியில் வாழ்ந்தாலும் எத்தகையதொரு முற்போக்குச் சிந்தனையுடன் இருக்கிறார் என்பதும் செயற்படுகிறார் என்பதும் தெரிந்தது. அவர் பெண்களுக்கான எல்லா உரிமைகளையும் கொடுக்கிறார். பெண்கள் தாழ்ந்து போவதில் எந்தவிதமான இஷ்டமும் அவருக்கு இல்லை.

அங்கெல்லாம் அனேகமாக ஆண்கள்தான் சமைக்கிறார்கள். பெண்கள் சமையலில் முடங்கிப் போய்விடக் கூடாதென்பதில் அவர் மிகுந்த கவனம் கொண்டிருந்தார். பெண்களால் சமையல் தவிர்ந்த வேறு ஆக்க பூர்வமான பல வேலைகளைச் செய்ய முடியும் என்பதில் அவர் நிறைந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.

சில பெண்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் சாப்பாட்டைக் குறைத்து விட்டு களத்தில் விரைவில் களைத்துப் போய் விடுகிறார்கள் என்று அக்கறையோடு கவலைப்பட்டார். நீச்சல் தெரிந்த பெண்நீச்சல்ஆசிரியர் இல்லாத ஆரம்ப கால கட்டத்தில் பெண்களுக்கு நீச்சல் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நடைமுறைப் படுத்த முயன்ற போது எழுந்த கஷ்டங்களை விளக்கினார்.

"சில போராளிகள் ´ஆங்கிலத்தைப் படியுங்கோ படியுங்கோ` என்று சொன்னாலும் அக்கறைப் படுகிறார்கள் இல்லை" என்று வருந்தினார்.

அவரோடு பேசும் போது ஆரோக்கியமான எதிர்காலத் தமிழ்சமூகத்தின் மீதான அவரது அக்கறை புரிந்தது.

பேச்சுத் திசைமாறித் திசைமாறி எனது கணவரின் நகைச்சுவைப் பேச்சுக்களினால் எழுந்த சிரிப்பலைகளோடு மீண்டும் சாப்பாட்டில் வந்து நின்றது. டுபாய் பிட்டும், கோழிக்கறியும் உண்மையில் சுவையாக இருந்தது. அண்ணனிடம் சொன்னேன். "டுபாய்புட்டு நல்லாயிருக்கு. எனக்கு நல்லாப் பிடிச்சிருக்கு" என்று. அதை எப்படிச் சமைப்பதெனவும் கேட்டேன். "சமைக்கிறவையளைக் கூப்பிட்டுத்தான் சொல்லோணும்" என்றார்.

இப்படியே ஒரு விடயமென்றில்லாமல் குடும்பம், அரசியல், போராட்டம்... என்று பல் வேறுபட்ட கதைகளுடன் சில மணித்தியாலங்கள் களிப்போடு கழிந்தன. சேர்ந்து புகைப் படங்கள் எடுத்துக் கொண்டோம்.

விடைபெறும் போது என்னால் நம்பவே முடியவில்லை. நான் அண்ணையைத்தான் சந்தித்திருக்கிறேன் என்பதை. அதற்கு மேல் என்னால் தலைவர் என்று சொல்ல முடியவில்லை. அவருடனான பொழுதுகள் அவ்வளவு நெருக்கமாக இருந்தன.

"எனது வேண்டுக்கோளுக்கமைய என்னை இவ்வளவு விரைவாகச் சந்தித்து மகிழ்ச்சிப் படுத்தியதற்கும் உங்கள் இனிய உபசரிப்புக்கும் மிகவும் நன்றி" என்று அண்ணையிடம் சொன்னேன்.

உடனே அண்ணன் "இல்லை, இல்லை, இதற்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டாம். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும். உங்கடை குடும்பத்திலை மூன்று பேரை நாட்டுக்காகக் குடுத்திருக்கிறீங்கள். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சந்திச்சிருக்கோணும்" என்றார்.

அவரது அந்தப் பெருமிதமற்ற பேச்சில் உண்மையிலேயே நான் நெகிழ்ந்து போனேன். அந்த நெகிழ்ச்சியோடே, எனது பயணத்துக்கு அர்த்தம் சொன்ன அந்த இனிமையான பொழுதுகளை மனதுக்குள் நிறைத்த படி புறப்பட்டோம். வெண்புறா வந்த பின்னும் இனிய நினைவுகள் என்னுள் நிறைந்திருந்தன.

அடுத்தநாள், எனக்கு அந்த டுபாய்பிட்டை அவித்துக் காட்ட என நிமலனையும், புகழோவியனையும் அண்ணை அனுப்பியிருந்தார். எனக்கு நம்பவே இயலாமல் இருந்தது. எனக்கு அந்த டுபாய்பிட்டுப் பிடித்திருக்கிறது. அதை எப்படிச் சமைப்பது என்று ஒரு வார்த்தை கேட்டதற்காக அவர் இத்தனை அன்பாக நடந்து கொள்வார் என்று நான் துளியும் எதிர் பார்க்கவில்லை.

அண்ணை என்னோடும், என்னுடைய குடும்பத்தோடும் மட்டும் அப்படிப் பழகவில்லை. நாட்டுக்காக உயிரைக் கொடுத்த அத்தனை உறவுகளின் குடும்பங்களுக்கும் அவர் மதிப்புக் கொடுத்து, அவர்களை எந்தளவு தூரம் தனக்குள் பூஜித்து வைத்திருக்கிறார் என்பதை அவரோடு பழகிய அந்த சிலமணி நேரங்களில் புரிந்து கொண்டேன்.

அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போதுதான் அவர் வெறுமனே ஒரு இராணுவத் தளபதியல்ல என்பதை உணர்ந்து கொண்டேன். அவரோடு கதைக்கின்ற ஒவ்வொரு கணத்திலும் அவர் ஒவ்வொரு போராளிக்கும் எப்படியெப்படி தனது இதயத்துள் இடம் வைத்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டேன். எல்லோரும் நினைப்பார்கள் ´ஆயுதந் தூக்கிப் போராடுபவர்கள் தானே` என்று. அவர்களுக்குள்ளும் ஈரம் இருப்பது அவரோடு நேரே பேசும் போதுதான் தெரிந்தது. போராளிகளின் மீது அவர் கொண்டிருந்த பாசமும் நெருக்கமும் என்னை வியக்க வைத்தன.

மாவீரர்கள் எல்லோரையும் அவர் மனதில் நிறுத்தி வைத்திருப்பதை, எந்த மாவீரன் பற்றிப் பேசினாலும் அந்த மாவீரனைத் தன் நினைவில் கொண்டு வந்து அந்த மாவீரன் பற்றி அவன் இப்படி அவன் அப்படி என்று அவர் சொன்ன போது அறிந்து நான் வியந்து போனேன். தலைவர் என்பதன் அர்த்தத்தை அங்குதான் புரிந்து கொண்டேன்.

வன்னியின் நேர்த்தி மட்டுமா..! எது விடயத்திலும் அவர் காட்டும் ஒழுங்கு. தானே அந்த ஒழுங்கைக் கடைப் பிடிக்கும் கண்ணியமான அழகு. உண்மையான அர்த்தமுள்ள கட்டுப்பாடுகள். என்னுள் எல்லாமே ஆழ்ந்த அதிசயமான வியப்பைத்தான் ஏற்படுத்தின.

எல்லோரும் நினைப்பது போல போராட்டம் மட்டுந்தான் அவரது குறியல்ல. ஒரு சுதந்திர தமிழீழத்தையும் அங்கு ஒரு சுதந்திர சமுதாயத்தையும் உருவாக்குவதிலேயே அவர் கவனமும் செயற்பாடும் இருக்கிறது. பெண்களுக்கு அவர் கொடுக்கும் மதிப்பு. போராட்டக் களங்களுக்குள் எந்த தவறுகளும் ஏற்பட்டு களம் களங்கப் பட்டு விடாதபடி அவர் ஏற்படுத்தி வைத்திருக்கும் நடைமுறைகள்... சொல்லி முடியாத பிரமிப்பு என்னுள்.


அண்ணையுடனான அந்தப் பொழுதுகள் எதையுமே என்னால் மறக்க முடியவில்லை. இப்போது கூட அண்ணையைச் சந்தித்த அந்தப் பொழுதுகளும் அண்ணை எம்மோடு பழகியவிதமும் மிகவும் இனிமையாக பசுமையாக என்னுள்ளே பதிந்திருக்கின்றன.

சந்திரவதனா
ஜெர்மனி

30.5.2002 அன்று வன்னியில் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்த அந்த இனிய பொழுதுகளில் சில...


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 7 ஜூன், 2014

பாலச்சந்திரன்-அவன் ஒரு குழந்தைப் பிள்ளை அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான்!

அவன் ஒரு குழந்தைப் பிள்ளை அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும்போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான்.

எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது.

பாலச்சந்திரனோடு பழகிய பொழுதுகள் - வாய் திறக்கிறார் மெய்ப்பாதுகாவலர்

நாம் பார்த்துப் பழகியவைதான். அவற்றை நேரடியாகவும், நிழற்படமாகவும், காணொலியாகவும், பார்த்திருக்கின்றோம். கேட்டிருக்கின்றோம். மரணத்தைக் கட்டிப்பிடித்தபடியே வாழ்வதைத் தான் வாழ்வென்கின்றோம்.

அதுவும், துப்பாக்கி மரணங்கள் மூவேளைக்கும் பொதுவானவை. அதனால் தான் மரணங்கள் பற்றிய செய்திகள் உப்பற்றவைகளாக மாறிவிட்டன. உலக நாடுகளுக்கும், தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும்தான் அது தற்போதைக்கு ஆச்சரியத்தைத் தந்து கொண்டிருக்கின்றன. இந்தவகையான மனப்போக்கு நிலைகளுக்குள்ளும் அவனின் படம் விளம்பரப் பொருளாகியிருக்கின்றது. 

அந்தப் படத்துக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் என்பது தலையாய அம்சம். பாலச்சந்திரன் எனப்பட்ட 12 வயதே ஆன அந்த சிறுவனின் படம் மீதான அதிர்வுகள் ஐ.நா. வரை கேட்டிருக்கின்றது. உள்ளூரளவிலும் கடந்த இரு வாரங்களாக பல கோணங்களில் எழுதித் தீர்த்தாயிற்று.

ஆயினும் இப்போது தான் சிறுவனுடன் நெருக்கமானவர்கள் வாய்திறக்கத் தயாராகியிருக்கின்றனர். இலங்கையில் இல்லாத அவர்கள் மறைவாயிருந்து பாலச்சந்திரனுடன் பழகிய பொழுதுகளை சமூக வலைத்தளங்கள் ஊடாக உரையாடல் வடிவில் பகிர்ந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர்.

அவ்வாறு சமூக வலைத்தளம் ஒன்றில் பகிரப்பட்ட ஓர் உரையாடல் இங்கு கட்டுரை வடிவம் பெறுகின்றது. "அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும்போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான்.

3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான். எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான்.

காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது. ''அவர் பாலாவின் மெய்ப்பாதுகாவலர். இப்போதிருக்கும் இடம், அவரின் பெயர் என அனைத்து சுய அடையாளங்களையும் மறைத்துக் கொண்ட இனந்தெரியாத நபராகவே தனது அனுபவத்தை பதிவிடுகின்றார்.

"தலைவர்' வீட்டுக்கு 1987 ஆம் ஆண்டுகளில் மெய்ப்பாதுகாவலுக்காக போகின்றார். மட்டக்களப்பு, மலையகம் பகுதிகளைச் சேர்ந்த அதிக இளைஞர்கள் அப்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த நேரமது. இவரும் மட்டக்களப்புக்காரர்.

"தலைவர்' அதிகம் நேசித்த ஊர்க்காரர் தான் என்றபடியால் தன்னையும் மெய்ப்பாதுகாப்புப் பணியில் இணைத்துக் கொண்டதாகக் குறிப்பிடுகின்றார். இன்னும் சில காலத்தில் "தலைவரின்' குடும்பத்துக் கான பாதுகாவலராக்கப்படுகின்றார். 

தலைவரின் வீட்டுக்கு மெய்ப்பாதுகாவலராக போனதுபற்றி....?

ஆரம்பத்தில் எனக்கும் "தலைவர்' என்றால் பயமாகத்தான் இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல அந்த நிலைமாறி தலைவரின் மென்மையான பக்கங்களை உணரத் தொடங்கினேன். பயம் போய் அவரை பார்க்கும் நாளுக்காக ஏங்கத் தொடங்கினோம்.

குடும்பத்துடன் இருப்பதற்காக "தலைவர்' வீடு வரும் நாளுக்காகவும், "தலைவரின் கையால் சமைத்துப் போடும் கோழிக் கறிக்கும் இடியப்பத்துக்காகவும்' காத்திருக்கத் தொடங்கினோம். (அந்தக் கால நினைவில் நனைகின்றார்) "அக்கா' (பிரபாகரனின் மனைவி) அன்று சமைக்கமாட்டா. அல்லது தலைவர் சமைக்க விடமாட்டார்.

எல்லோருக்கும் தன்கையால் சமைத்து தானே பகிர்வார். சில வேளைகளில் அவருக்கே இடியப்பம் இல்லாமல் போய்விடும். அந்த அதிசய மனிதருக்குள் இவ்வளவு அபரிமிதமான சமையல் கலையை கற்பித்தது யார் என்ற வினாக்களுக்கான விடை தேடுதலில் பல நாள் இரவுக் காவலரண் பொழுதுகள் முடிந்தன.


தலைவரின் பிள்ளைகளுக்கும் போராளிகளுக்குமான உறவு நிலை பற்றிச் சொல்லுங்கள்...?

தலைவரின் ஒவ்வொரு பிள்ளைகளும் ஒவ் வொரு மாதிரி. நாங்கள் முதலில் கண்டது தம்பியைத் தான் (சார்ள்ஸை சொல்கின்றார்) தம்பி சின்னனில கொஞ்சம் சோம்பேறி. நல்ல குண்டா இருப்பார்.

அவ்வளவு குழப்படி இல்ல. பாண்டியன் ஸ்பெசல் ஐஸ் கிறீம்ல ஒரே நேரத்தில 2 சாப்பிடுவார். கராட்டி, விளையாட்டு, ஓடுறது, பாடுறது எண்ட விஷயங்களில பெரிய வல்லமையானவர் இல்லை. வளர வளர கொம்பியூட்டரோடதான் அதிகமா இருப்பார்.

அதுக்குப் பிறகு தங்கச்சி. படிப்பைத் தவிர அவாவுக்கு வேற எதுவும் தெரியாது. புத்தகங்களுக்குள்ள நாள்களை முடிச்சிருவா. அதுக்குப் பிறகுதான் பாலா. யாருமே எதிர்பாக்காத நேரத்தில பிறந்ததாக சொல்லு வாங்க. அவனும் ஆச்சரியம்தான்.

சரி தலைவரின் கடைக்குட்டி பாலாவோடு பழகிய பொழுதுகள் எப்படியிருந்தன...?

1996 ஆம் ஆண்டு தான் பாலா பூமிக்கு வந்தான். சண்டை கிளை கொண்டிருந்த நேரம். வன்னியில் பல இடங்களிலிலும் தாக்குதல் களங்கள் திறக்கப்பட்டிருந்தன. முள்ளியவளையில் பாலா பிறந்தான். அப்பா அதிக நாள் பாலாவை பார்க்க வரவில்லை.

ஆனாலும் அப்பம்மா, அப்பப்பா (பிரபாகரனின் பெற்றோர்) பாலாவின் வளர்ச்சியில் பெரும் பங்கு கொண்டிருந்தனர். மற்றைய பிள்ளைகளை விட இவன் மீது மூத்தவர்களின் கவனிப்பு அதிகம் இருந்தது. பாலா அங்கிள், அன்ரி (பாலசிங்கம் அடேல் தம்பதி) கூட சில காலம் இருந்தார்கள்.

இவர்கள் யாரையும் பாலா அதிகம் விரும்பாமல் வளர்ந்ததுதான் ஆச்சரியம். தீத்தி விடும் உணவை அதிகம் நிராகரிப்பவன் பாலா. (கொஞ்ச நேரம் பாலாவின் குழந்தை பிராயம் நினைவில் தவழ்ந்தவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உரையாடலுக்கு வந்தார்..)

பாலா அம்மாவின் சாப்பாட்டை அதிகம் விரும்பமாட்டான். முட்டை பிடிக்காது. நடக்கத் தொடங்கும் போதே சாப்பாட்டுக் கோப்பையில் தனியே சாப்பிடத் தொடங்கினான். 3 வயதிருக்கும் போது சாப்பாட்டு நேரம் எங்களின் காவலரணுக்கு ஓடி வந்து விடுவான்.

எத்தனை கோப்பையில் சாப்பாடு கொடுத்தாலும் மாமாக்களாகிய எங்கள் கோப்பைச் சாப்பாட்டையே அதிகம் விரும்புவான். காலப்போக்கில் எங்கள் ஒவ்வொருவரினதும் சாப்பாடுதான் அவனாலும் விரும்பி உண்ணப்படும் சாப்பாடாகியது.

அதற்குப் பின்னர் அவன் தகர அடைப்பு வேலிக்குள்ளும், பனையோலை வேலி அடைப்பு வீட்டுக்குள்ளும் வாழ விரும்பவில்லை. காவலரண்களுக்கு ஓடி வருவதையே பெரும்பாலும் செய்யத் தொடங்கினான்.

பாலச்சந்திரனும் தலைவரும் சந்திக்கும் தருணங்கள் எப்படி இருந்தன..?

(எந்தக் கேள்விக்கும் நின்று நிதானித்து பதில் தந்தவர் இதற்கு மட்டும் சிரிப்பை தந்தார்). பாலா பிறந்து சில காலங்களின் பின்னரே "தலைவர்' வந்து பார்த்தார். வீட்டுக்கு வந்ததும் இடுப்புக்கு மேலாக சாரத்தைத் தூக்கிக் கட்டிக் கொண்டு கதிரையில் அமர்ந்தார்.

மடியில் தூக்கி வைத்து பாலாவைக் கொஞ்சத் தொடங்கினார். பாலா சொல்லி வைத்தால் போல அப்பாவின் மடியை "நாசம்' செய்தான். அதுவே அவன் வெளிப்படுத்திய அப்பா மீதான முதல் கோபம் என்றார் அக்கா (தலைவரின் மனைவி). அப்பா கோபிக்கவில்லை. தானே அதனை சுத்தப்படுத்தினார். 

எல்லோரும் ஓடிவந்து பாலாவையும், அப்பாவையும் சுத்தப்படுத்த முனைந்தார்கள். தலைவர் சொன்னார், "என்ர பிள்ளை நானே செய்யிறன்''. அன்று முதல் பல தடவைகள் பாலாவை தலைவர் சுத்தம் செய்த பல சந்தர்ப்பங்களை நான் பார்த்திருக்கின்றேன். ஆக தலைவர், நல்ல அப்பாவும் கூட!

அப்பா ஒரு முறை வீடு வந்திருந்தார். தனது பிஸ்டலை மேசை லாச்சிக்குள் வைத்து விட்டு "பாத் ரூம்' போய்விட்டார். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த பாலா யாரும் கவனிக்காத நேரத்தில் பிஸ்டலை விளையாட்டுப் பொருளாக்கினான். வீட்டிலிருந்த அனைவரும் அலறினார்கள். அப்பா அப்போதும் எந்தப் பயமும் காட்டாது இலகுவாக அதனை எடுத்துக் கொண்டார்.

அது சரி, பாலா யாரோடு விளையாடப் போவான்?

பாலாவுடன் விளையாட சொர்ணம் அண்ணை, சங்கர் அண்ணை வீட்டுப் பிள்ளைகள் எப்போதாவது வருவார்கள். அவனுக்கு அவர்களுடனான விளையாட்டு போதுமானதாக இருக்காது. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு தன்னுடன் விளையாட வரச்சொல்லி எங்களை அழைப்பான். வராவிட்டால் வேலிக்கு வெளியே போகப் போவதாக வெருட்டுவான். வெருட்டியதை செய்தும் இருக்கின்றான். நாங்கள் வீட்டு சமையலுக்காக விறகு வெட்டப் போவோம்.

"சும்மா நானும் உங்களோட வரட்டோ?'' என்ற கெஞ்சலை அள்ளி வீசுவான். அனைவரும் பொறுப்பெடுத்து கூட்டிப் போவோம். மரக்குற்றியில் அமர்ந்து காலாட்டிய படி எதையாவது கொறித்தபடி வேலியற்ற வெளியை ரசித்துக் கொண்டிருப்பான் பாலா. அவன் வெளியில் போய் எல்லாப் பிள்ளைகளையும் போல வாழவே அதிகம் விரும்பினான்.

பள்ளிக்கூடத்தில் பாலா எப்படி...?

ஆரம்பக் கற்றலை புதுக்குடியிருப்பில் உள்ள ஒரு பாடசாலையில் தான் பாலா படிக்கத் தொடங்கினான். எல்லாப் பிள்ளைகளையும் போல அதிகம் படிக்க ஆசைப்பட்டான் பாலா.

வகுப்பறை மேசைகளிலும், கரும்பலகையிலும் அ, ஆ வை கிறுக்கி விளையாட அவன் ஆசைபட்டான். அங்கு சில நண்பர்கள் பாடசாலைப் படலை வரை மட்டும் கிடைத்தார்கள். பிறகு கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையில் சேர்க்கப்பட்டான். 

முன்பிருந்ததை விட பாலாவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வகுப்பறையில் அதிகம் அமைதி காத்தான். அதற்கான காரணத்தை அவன் சொல்லவேயில்லை. பாலா அதிகம் கேள்விகள் கேட்டான். வகுப்பறையில் சேமிக்கப்பட்ட முழுச் சந்தேகங்களுக்குமான விடைகளை எம்மிடம் தேடினான்.

அந்தக் காலத்தில் பாலாவுக்கு காலைச் சாப்பாட்டைக் "பொக்ஸில்' கொடுத்து விடுவது வழக்கம். பெரும்பாலும் தானியச் சாப்பாடுதான் இருக்கும். அங்கு சாப்பிடுவதற்கு அவனுக்கு பெரும் வெட்கம். எல்லாப் பிள்ளைகளும் சர்வ சாதாரணமாகச் சாப்பிடுவார்கள்.

ஆனால் பாலா அசாதாரணமாக சாப்பிடுவான். புத்தக பையினுள்ளும், புத்தகங்களுக்குள்ளும் மறைத்து வைத்துச் சாப்பிடுவதில் மகா கெட்டிக்காரன். பொது இடங்களில் அதிகம் வெட்கம், பயம் கொண்டவனாக பாலா வளர்ந்தான்.

ஒரு முறை அவனுக்கு பிறந்த நாள் வந்தது. நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ரொபி கொடுக்க விரும்பினான். நாமும் வாங்கிக் கொடுத்தோம். அதைக் கொடுக்கும்போது சில ஆசிரியர்கள் இரண்டு, மூன்று ரொபிகள் எடுத்தனர். "எல்லாருக்கும் குடுக்க வேணும், ஒன்டு மட்டும் எடுங்கோ'' என்று சொல்லி ஏனையவற்றை திரும்ப வாங்கிக் கொண்டான் பாலா.

பாலா ஏதாவது அபாயங்களில் சிக்கியதுண்டா?

பெரிதாக அப்படியொன்றும் நடக்கவில்லை. கிளிநொச்சியில் ஒருமுறை பாலா வசித்த வீட்டுக்கு அருகில் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதலில் அங்கிருந்த ஆசிரியை ஒருவரும் அவரது இரண்டு மகன்மாரும் கொல்லப்பட்டார்கள்.

அதற்குப் பக்கத்து வீட்டில் பாலாவும், அக்காவும், தங்கச்சியும் இருந்தார்கள். அந்த சம்பவத்தோடு வட்டக்கச்சி, விசுவமடு, புதுக்குடியிருப்பு என்று பாலாவின் இருப்பிடம் மாறிக் கொண்டிருந்தது.

இறுதியாக முள்ளிவாய்க்கால் வந்து சேர்ந்தான் பாலா. (அதற்குப் பின்னர் அவரால் தொடர்ந்து உரையாட முடியாமல் இருந்தது. என்ன கேட்பதென்று எங்களுக்கும் தெரியவில்லை. நீண்ட அமைதிக்குப் பின்னர் கடைசிக் கேள்வியை தயங்கித் தயங்கித் தொடுத்தோம்.)






இறுதியில் பாலாவுக்கு ஏன் இப்படி நடந்தது? (அதற்கும் நீண்ட மௌனம். பின்னர் இரண்டு வரிகளில் பதில் வந்தது.)

அது எனக்குத் தெரியாது. நான் கடைசி நேரத்தில பாலாவுடன் இல்லை. (அவரைப் போலவே எங்களுக்கும் துக்கம் தொண்டையை அடைத்தது. பாலாவைக் காக்க முடியாத குற்ற உணர்ச்சியில் அவர் மட்டுமல்ல நாங்களும் கூனிக்குறுகிப் போனோம். பிறகு எப்படி உரையாடலைத் தொடர முடியும்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget