thalaivan

thalaivan

செவ்வாய், 31 ஜனவரி, 2012

விதி மாற்றி எழுவான் பிரபாகரன் நாளை.

அழகினிற்கு ஓவிய நிலவு,
வையகம் முற்றாள வல்லான்!
உளத்தினிற் பரிவு, வான
உச்சியை உரசும் நெடியோன்
பழகிடத் தோன்றும், தலைவன்
தாயகம் நோக்கும் எழுவான்!
நிழலினில் நிற்கும் தமிழர்
நினைத்தவாறு அடைவான் வெற்றி!

விழிகள் இரண்டிலு மாயிரம்
ஆற்றல்கள் குவியும், அண்ணன்
மொழியும் போதினில் உள்ளம்
காதலால் உருகும், எம்மைப்
புலிகளாய் ஆக்கிய தலைவனால்
பூமியே விடியும், அடடா,
எலிகளாய் எம்மில் ஏறிட
இங்கினி எவரால் முடியும்?

அமைதியை ஆக்கி உலகின்
ஆசிகள் பெற்றாய் கோடி
சமாதானக் காற்றெம் மேனி
தழுவிடச் செய்தாய் வாழி.
இமையுள் ஒளியே, தமிழர்
இருள்களைந் திட்டாய் சோதி
அமைகதாய் நாடே, தர்மம்
ஆசையோடு அளிக்கும் நீதி!

வெண்புறா காலம் தன்னை
விரும்பியே அழைத்தான், யாரும்
புண்படா வாறே களத்திலும்
பொறுமைகள் காத்தான் இன்றோ
எண்டிசை உலகும் மெச்சும்
பண்பாளன் தலைவன் ஈழ
மண்விதி மாற்றி நாளை
மணிமுடி தரிப்பான் வாழி.

வேலணையூர் சுரேஷ்
கவிஞர்.
தமிழீழம்.
Image Hosted by ImageShack.us


சனி, 28 ஜனவரி, 2012

இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!

'இப்போது போரைச் சந்தித்த தலைமுறை வேண்டுமானால் இப்படியே வாழ்ந்து மடிந்துவிடலாம். ஆனால், எங்களுடைய அடுத்த சந்ததி, தன்னுடைய தாத்தனுக்கும், பாட்டிக்கும், தந்தைக்கும், தாய்க்கும் இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எங்களைவிட இன்னும் வேகமாகப் போராடும்!'
என்று ஈழ மண்ணின் குரல் ஒன்று தமிழகத்தில் ஒரு பேரலையை உருவாக்கியுள்ளது. இத்தனைக்கும் அவர் ஆயுதம் ஏந்தி, தேச விடுதலைக்காகப் போராடிய விடுதலைப் புலி அல்ல. எழுத்துக்களால் ஏவுகணைகளை வடிக்கும் ஒரு பேனாப் போராளி. அதுவும், அறுபதுகளையும் தாண்டிய ஒரு பெண் படைப்பாளி. தமிழ்க் கவி என்ற பெயருடன் தமிழர்களுக்கெல்லாம் அறிமுகமான அவர் ஒன்றும் சிங்கள அடக்குமுறைக்கும், ஆயுதங்களுக்கும் பயந்து, அகதியாகத் தமிழகம் நோக்கிக் கடல் கடந்தவரல்ல.

தமிழீழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறுதிவரை புலிகளுடன் இருந்து, போர் முடிவுக்கு வந்த நாளில் தன் பணியைத் தொடர்வதற்காக ஈழ மண்ணிலேயே சிங்களம் அமைத்த முள்வேலி முகாம் சித்திரவதைகளையும் அனுபவித்து, ஈழத்து மக்களின் அத்தனை துயரங்களின் சாட்சியாக அண்மையில் தமிழகம் வந்து சேர்ந்தவர். அண்மைக் காலமாக தமிழீழ மண்ணில் அத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி ஒலிக்க ஆரம்பித்திருக்கும் விடுதலைக் குரல்களின் மொத்த வடிவமாக தமிழ்க் கவி தமிழகத்தில் தன் உச்சக் குமுறலைக் கொட்டித் தீர்த்துள்ளார். இதுதான் ஈழத் தமிழர்களது உண்மையான குரல். அவர்களது விடுதலை வேட்கையின் வெடி மருந்து. பாரதப் போர் முடிந்து, அதில் கௌரவர்களும், பின்னர் பாண்டவர்களும் மண்ணை விட்டு அகன்றபோதும், அந்தப் போர்க் களத்தில் கண்ணன் உபதேசித்த கீதை மட்டும் காலங்கள் கடந்தும் வாழ்வது போலவே, தமிழ்க் கவி அவர்களது வார்த்தைகளும் இன்னொரு கீதையாக, எங்கள் தேசத்தினதும், இனத்தினதும் விடுதலைக்கு உரமூட்டும் என்பது உறுதி. ஆயுத பலம் மட்டுமே மக்களது முடிவுகளைத் தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அந்த நம்பிக்கை கோழைகளுக்கு மட்டுமே சொந்தமானது. தமிழீழ வீர மறவர்களுக்கு அது இன்னொரு விளையாட்டுக் களமாகவே இருக்கும்.

இப்போது உருப் பெருத்துள்ள சிங்களத்துப் படைகளும், பெருக்கி வைத்துள்ள படைக் கருவிகளும் எப்போதும் அவர்களைக் காப்பாற்றும் என்றால், உலகில் ஒருபோதும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்க முடியாது. பிரித்தானியாவின் ஆயுத பலம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நீடித்து நிலைக்கவில்லை. சோவியத் யூனியனின் அசுர பலம் அதிலிருந்து பல தேசங்கள் உதிர்ந்து போவதைத் தடை செய்ய முடியவில்லை. ஆயுத பலத்தால் உலகை ஆள விரும்பிய ரோம ராஜ்ஜியம் இத்தாலிக்குள் சுருங்கிக்கொண்டதும் வரலாறு கற்றுத் தரும் பாடம். எனவே, ஆயுதங்கள் கோழைகளின் தற்காப்புக் கவசம் மட்டுமே. வீரர்கள் கோபம் கொள்ளும்வரையே அது அவர்களைக் காப்பாற்றும். அதன் பின்னர் காட்சிகள் மாறிவிடும்.

தேசியத் தலைவர் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த காலத்தில் அவரிடம் இருந்தது துருப்பிடித்த பழைய 'பிஸ்டல்' எனப்படும் துப்பாக்கி ஒன்று மட்டுமே. ஏற்கனவே, நடைபெற்று முடிந்த ஜே.வி.பி. கிளர்ச்சியின் அனுபவங்களுடன் சிங்கள இராணுவம் ஏ.கே.47, கவச வாகனங்கள் என்ற பருத்த பலத்துடனேயே பவனி வந்துகொண்டிருந்தது. தலைவர் அவர்களது விடுதலை இலட்சியத்திற்கும், உறுதிக்கும் முன் அவை எல்லாமே அவருக்கு வேட்டைப் பொருட்களாகவே தெரிந்தன. விடுதலைப் புலிகளது ஆயுத பலத்திற்கு, சிங்களப் படைகளிடமிருந்து அடித்துப் பறித்த ஆயுதங்களே பெரும் பங்கை வகித்தன. இப்போதும் நிலமை அதுவே. பருத்துக் கொழுத்த படைகளின் பலவீனங்களை அறிந்துகொண்டால், சிங்களப் படைகளின் ஆயுதங்கள் தமிழர் படைகளின் கைகளில் வந்து சேர்ந்துவிடும். எனவே, சிங்களப் படைகளின் பிரமாண்டத்தைக் கண்டு யாரும் திகைப்படைந்து போக வேண்டிய அவசியம் கிடையாது. சிங்கள தேசம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்த காலங்களில், அவற்றில் பாதியாவது விடுதலைப் புலிகளிற்கானதாகவே இருந்த காலத்தை நாம் மறந்துவிட முடியாது. எங்களுக்கான எங்களது போர்க் கருவிகளை இப்போது அவர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவ்வளவேதான்.

இதற்காகத் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடுவதே இலட்சியம் என்பதல்ல. எதிரியின் நோக்கம் எங்களை அச்சத்துள் வாழ விடுவது என்பதே. எதிரியின் அந்த நம்பிக்கையை நாம் சிதறடிக்க வேண்டும். எங்கள் தேசமும், எங்கள் தேசத்து மக்களும் சுதந்திரமாக வாழ வேண்டுமானால், நாம் எதிரியின் சதிக்குள் சிக்கிவிடக் கூடாது. அச்சப்படுதலிலிருந்து நாம் எம்மை விடுவித்துக்கொண்டால், ஆயுதம் ஏந்தியவன் சலித்துவிடுவான். இப்போது சில தமிழர்களும் எதிரியின் அச்சப்படுத்தல்களுக்குள் தமிழர்களைப் புதைத்துவிட முயல்கிறார்கள். சிங்களத்தைத் தோற்றடிக்கப்பட முடியாத பிரமிப்பாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். அதற்காகவே, தமிழ் மக்கள் மத்தியில் பிளவுகளையும், ஆரோக்கியமற்ற கருத்துக்களையும் விதைக்கின்றார்கள். அது புலம்பெயர் தேசங்கள் வரை வியாபிக்கப்படுகின்றது.

உலகத் தமிழர்களது மக்கள் தொகையில், சிங்களம் மடுவளவு. உலகத் தமிழர்களது பொருளாதார பலத்தில் சிங்களம் சிறு கல்லளவு. உலகத் தமிழர்களது கற்றறிவில் சிங்களம் கடுகளவு. இத்தனை பிரமாண்டங்களையும் கொண்ட தமிழர்களால் சிங்களத்திடமிருந்து தமிழீழத்தை மீட்க முடியாதா? ஆம், முடியும்! நம்மால் முடியும் என்ற நம்பிக்கை நமக்கு வரவேண்டும். அதற்கு எங்கள் பொது எதிரியை நோக்கி, நாங்கள் ஒன்றுபட வேண்டும். தமிழீழத்திற்கு வெளியே தமிழர்கள் ஒன்றுபட்டுவிடுவார்களோ? என்ற பயத்துடன் சிங்களத்து ஒற்றர்கள் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விதைக்கப்பட்டுள்ளார்கள். நல்லவர்கள் போலவும், வல்லவர்கள் போலவும் எங்கள் மத்தியில், எங்கள் அருகே, எங்களுடன் இருந்துகொண்டே குழிபறித்து வருகின்றார்கள். இதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் தேசத்தை மீட்கும் போராட்டத்தில் எங்களில் யாரும் பிளவுபட்டு நிற்க முடியாது. எங்களுக்குள் இரண்டு துருவங்கள் எப்போதும் சாத்தியமாகாது. இரண்டு மாவீரர் தினம் எதனைச் சாதித்தது? தமிழீழ போர்க் களத்தில் எத்தனையே படைகள் இருந்தது போல், எத்தனை அணிகளும் உருவாகலாம். ஆனால், தமிழீழ விடுதலைப் போர்க் களம் ஒன்றேதான். அதற்கான போர்ப் படைகளாகவே அத்தனை அணிகளும் இயங்க வேண்டும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. மக்களை இருதுருவப்படுத்தும் சிந்தனைகள் இனியும் வேண்டாம். பெப்ரவரி 04, சிங்கள தேசத்தின் சுதந்திர நாளைக் கரிநாளாக ஒன்றாக இணைந்து புறக்கணிப்புப் முற்றுகையை நடாத்துவோம்! மார்ச் 05, சிங்கள ஆட்சியாளர்கள் மீதான போர்க் குற்ற விசாரணையை வலியுறுத்தி ஜெனிவா முருகதாசன் திடலில் போராட்டம் நடாத்துவோம்! தமிழீழத்தின் விடுதலையையும், தமிழினத்தின் விடுதலையையும் மட்டுமே மனதில் கொண்ட தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக இணைவோம்!


இது எங்கள் மாவீரர்களது கனவு! எங்கள் தேசியத் தலைவரது கட்டளை!!

- இசைப்பிரியா

Image Hosted by ImageShack.us


புதன், 18 ஜனவரி, 2012

உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்.

இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத - புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ கோட்பாட்டாளர்கள் பலரின் போரியல் சமன்பாடுகளுக்குள் புலிகளை அடக்க முடியவில்லை.
 அவர்களின் கணிப்பீடுகள், மதிப்பீடுகள் இன்று தமிழீழத்தில் கலைத்துப் போடப்பட்டுள்ளன.

உலக இராணுவ மேதைகளினதும் படைவரலாற்றாளர்களினதும் சமன்பாடுகளுக்குள் அடங்க முடியாமல் திமிறிக்கொண்டு நிற்கிறது புலிகள் சேனை. புலிகளின் வீரத்தை உணரமுடிகிறதேயழிய உற்றுப்பார்க்க முடியவில்லை. காற்றைப்போல் அலையும் மையமாகியிருக்கிறது அவர்கள் போர்த்திறனும் வீரமும். ‘இப்படித்தான்  இருப்பார்கள்’ என்று எல்லோராலும் கணிக்கப்படுகிறபோது புலிகள் அந்த கட்டத்திலிருந்து வேறொரு கட்டத்திற்கு சத்தமின்றி பாய்ந்து விடுகிறார்கள். முடிவில் மீண்டும் அறுபடமுடியாத புதிராய் புலிகள்.

புலிகளின் இந்த வீரம் எதிரிகளை கிலி கொள்ளச்செய்கிறது. தமிழனை தலை நிமிரச் செய்கிறது. தொடரும் இராணுவ வெற்றிகளின் வரிசையில் குடாரப்பு தரையிறக்கம் உலக இராணுவ பயிற்சிக் கல்லூரிகளில் பாடத்திட்டமாகியது. தீச்சுவாலை எதிர் நடவடிக்கை அடுத்த அத்தியாயமாகியது.  உலகம் பயந்தது. தமது இராணுவக் கல்லூரிகளின் பாடத்திட்டங்களை தமிழர் சேனையின் இராணுவ நகர்வுகள் நிரப்பப்போகும் அபாயத்தை உணர்ந்தன. முடிவு இலங்கை அரசை சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பணித்தது.


தமிழர் சேனை தனது அசுர பலத்தின்மூலம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்தது. எல்லாம் பலத்தில் தீர்மானிக்கப்பட்டது. எல்லாமுமே… தமிழர் சேனையின் படை பலம் குறித்த முக்கிய பகுதிகளை நாம் விவாதிக்கும் முன்பு இன்றைய சூழலில் புலிகள் பற்றி பொத்தாம் பொதுவாக உள்ள புரிதலை நாம் உணர்ந்தாக வேண்டும்.

இன்று உலகம் புலிகள் மீதான தமது முன்னைய பார்வையைப் புறந்தள்ளிவிட்டு புதிய கோணத்துடன் புலிகளை அணுகுகின்றது. இதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் (தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக புலிகளை ஏகப் பிரதிநிதித்துவப்படுத்தியமை, புலிகளின் அமைதிப் பேச்சுவார்த்தை - இன்னும் பிற) உண்மை அதுவல்ல. புலிகளின் படைத்துறை வளர்ச்சியும் இராணுவச் சமநிலையுமேயாகும். தமிழ்ச்சேனை தனது அசுர பலத்தின் மூலம் இந்த நிலையை வந்தடைந்திருக்கிறது. இதைத் தக்கவைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

போரில்லாத ஒரு சமுதாயம் சாத்தியமா! எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும் பதில் இல்லை என்பதாகவே இருக்கிறது. இது ஒரு கசப்பான எதார்த்தம். உலகெங்கும் உற்று நோக்கினால் அமைதி சமாதானம் என்ற சொல்லாடல்கள் பேச்சளவிலேயே தங்கிவிடுகின்றன. செயலளவில் தனிமனிதன் தொடங்கி நிறுவனங்கள்வரை எந்தக் கணமும் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் நிலையிலேயே இருக்கின்றன. இது ஒரு விசித்திரமான எதார்த்தம்.

சாணக்கியரின் சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும், டார்வினின் தகுதியுள்ளவை உயிர்வாழும் என்ற கதையாடல்களை நேரொத்தவை. இதையே சற்று நாகரீகமான மொழியில் சிக்மன்ட் ப்ராய்ட் சொல்கிறார் `தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த வாழ்க்கைக்கு அது அவசியமுமாகும்’. இந்தக் கோட்பாடுகளை தமிழர்கள் புறக்கணிப்பார்களானால் அவர்களை செப்பேடுகளிலும் நாணயங்களிலும்தான் தேடவேண்டிவரும்.

தமிழர்களின் சுதந்திரமான வாழ்விற்கு தமது படைக் கட்டமைப்பையும் வீரத்தையும் தொடர்ந்து பேணுவது அவசியம். போரைத் துறந்த சமுதாயத்தை வரலாறு கண்டதில்லை என்பதும், வாள்கள் மோதும் ஓசையும், போர் முரசுகளின் ஒலியுமே வரலாற்றின் போக்கில் திருப்பு முனைகளாக இருந்திருக்கின்றன என்பதும் போர் அறிவியல் வரலாறு நமக்குச் சொல்லும் செய்தியாகிறது. இதற்குத் தமிழன் மட்டும் விதிவிலக்காக முடியுமா! தமிழர் மீது போர் கட்டவிழ்ந்ததும் தமிழர் சேனை அதை வெற்றிகரமாக எதிர்கொண்டதும் வரலாற்றின் பக்கங்களில் செறிந்து கிடக்கிறது.

உண்மையான வரலாற்று நிகழ்வுகளுடன் பல கட்டுக்கதைகளும் புனைவுகளும் கலந்திருப்பதாலும் சங்ககால வரலாற்றின் காலவரிசையை அறுதியிட்டுக் கூறமுடியாததாலும் -  சில சிறிய சமர்களை புறந்தள்ளிவிட்டுப் பார்த்தால் -  தமிழர் சேனை எதிர்கொண்ட முதல் முக்கிய போராக அதியன் மரபினனான எழினியை கோசர்களின் உதவியுடன் தோற்கடித்து துளுநாட்டைக் கைப்பற்றிய மௌரியர்கள் மீது சோழ மன்னன் இளஞ்சேற்சென்னி தொடுத்த போரே முதற்போர் எனலாம். (தனக்குக் கீழிருந்த சேரர், பாண்டியரையும் பிற சிற்றரசர்களையும் சேர்த்து ஒரு கூட்டணியாக போர்தொடுத்தான்.)  இப்போரை வரலாற்றறிஞர்கள் செருப்பாழிப்போர் என்று குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறாக நீண்டு தொடரும் தமிழர் போரியல் வரலாறு கட்டப்பொம்மன் தூக்கிலிடப்பட்டதுடன் முடிவுக்கு வருகிறது.  இது தமிழகப் போரியல் வரலாறு. ஈழத்தில் போரின் ஆரம்பம் சரியாகக் கணிக்கப்படமுடியாவிட்டாலும் எல்லாளன்,  சங்கிலியன் என்று நீண்டு பண்டாரவன்னியனுடன் ஒரு தற்காலிக முடிவுக்கு வருகிறது. பல புதிய சாத்தியங்களைத் திறப்பதற்காக போரியல் சமன்பாடுகளைக் கலைத்துப் போடுவதற்காக பிரபாகரன் என்ற மனிதனுக்காக வரலாறு வழிவிடுகிறது.


போர் அச்சுறுத்தல் இல்லாத நாடுகள் கூட தமது இராணுவக் கட்டமைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் பெருமளவு நிதியை ஒதுக்குவதை கண்கூடே காண்கின்றோம். ஒருகாலத்தில் உலக அதிகார அரசுகள் தமது இருப்பை உறுதி செய்வதற்காக சிறிய நாடுகள் மீது போர் தொடுத்து காலனித்துவ நாடுகளாக்கின. காலனிய நாடுகளின் வளங்கள் சுரண்டப்பட்டதுடன், அங்கிருந்த வேறுபட்ட சமூகங்களுக்குள் முரண்பாடுகளைத் தோற்றுவித்து இனச்சிக்கலையும் தோற்றுவித்தன. காலனிய நாடுகளில் இருந்து வெளியேறும்போது பெரும்பான்மை இனங்களுக்குள் சிறுபான்மை இனங்கள் அடங்கியிருக்கக்கூடியவாறு சட்டங்களை உருவாக்கிவிட்டுப் போயின.

இதன் பின்னுள்ள அரசியல் ஆழமானது. இலங்கைத் தீவிலும் ஆங்கிலேய அதிகார வர்க்கத்தால் இத்தகைய ஒரு சூழல் உருவாக்கப்பட்டது வரலாறு. கீழை நாடுகளில் கட்டங்கட்டமாக பரவும் இன மொழி சமய முரண்பாடுகளை மேலைத்தேயம் உருவாக்குகிறது - ஊக்குவிக்கின்றது என்ற கதையாடல் மிகைப் படுத்தப்பட்டதல்ல. அறம் நீதியைப் பேசும் மனித சமுதாயத்தின் குரூரமான முகங்களில் இதுவும் ஒன்று. மனித விழுமியங்கள் உடைந்து சிதறுகின்றன நம் கண்முன்னே.

மற்றவர்களை பலவீனர்களாக வைத்திருப்பதன் மூலம் தம்மை பலமானவர்களாக்கி தமது இருப்பை உறுதிசெய்யும் உத்தி இது. சமகாலத்தில் நம்முன்னே விரியும் உலக அரசியல் நகர்வுகள் இவை.  தமது பின்கொல்லையில் அணுஆயுதங்களை அழகாக அடுக்கி வைத்துவிட்டு அணுஆயுத ஒழிப்புப் பற்றி ஒற்றை அறம்பேசும் முரணான மேற்கத்தேய உலகத்திற்கு ஈடுகொடுத்து எமது போராட்டம் முன்னெடுக்கப்படுவது அவ்வளவு இலகுவான விடயமல்ல.

இந்த முரண்பட்ட உலகத்தோடு போட்டிபோட்டு எமது விடுதலைக்கான எத்தனங்களைச் சாத்தியப் படுத்தக்கூடிய ஒரு தலைமை பிரபாகரன் மூலம் எமக்குக் கிடைத்திருக்கிறது. அவரது இராணுவ நகர்வுகளும், அரசியல் தந்திரங்களும் அசாதாரணமானவை. வளையவேண்டிய இடத்தில் வளைந்து நிமிரவேண்டிய இடத்தில் நிமிர்கிறார்.

பிரபாகரன் காலத்தில் அவர் தலைமையின் கீழ் எமது விடுதலை கிடைக்காவிடின் இனி ஒருபோதும் அது எமக்குக் கிடைக்கப்போவதில்லை. இது பிரபாகரன் என்ற மனிதன் மீதுள்ள பிரேமையினால் மொழியப்படுகின்ற உணர்ச்சி மிகுந்த கதையாடல் கிடையாது. உண்மை சார்ந்த உரையாடல் இது. தமிழர் வரலாற்றை மட்டுமின்றி இந்த பூமிப் பந்தெங்கும் அதிகார வர்க்கங்களுக் கெதிராகப் போராடும் ஒவ்வொரு இனத்தினதும் தலைவர்களது தோற்றத்தையும், வளர்ச்சியையும் தர்க்கரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் ஆய்வுக்குட்படுத்தும்போது பிரபாகரன் என்ற மனிதனின் தனித்துவம் எமக்கு வெளித்தெரியும்.

தமிழின விடுதலைவேட்கையின் ஒரு குறியீடாகத் திகழ்கிறார் பிரபாகரன். பிரபாகரன் காலத்தின் கட்டாயம். அவரை ஒரு சட்டகத்துக்குள் அடக்கிவைத்து மதிப்பிடுவது எமது விடுதலையை பின்னடையச் செய்யும். தமிழின விடுதலைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார். எதையுமே! உலகத்தின் முத்திரை குத்தலுக்கு அஞ்சவில்லை. தமிழர் படைக் கட்டமைப்பினை ஒரு சீரான முறையில் வளர்த்தெடுத்திருக்கிறார் பிரபாகரன்.

நீண்ட காலத்திற்குப் பிறகு இது தற்போது சாத்தியமாகி இருக்கிறது. இதையொருபோதும் நாம் சிதையவிட அனுமதிக்க முடியாது- கூடாது.   நாம் தற்போது வந்தடைந்துள்ள நிலை எமது பலத்தால் வந்து சேர்ந்து என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடல் ஆகாது.

தொடரும் அமைதிச்சூழலிலும் புலிகளின் படைத்துறை கட்டமைப்பு குறித்து சரியாக கணிக்கமுடியவில்லை. ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு எவ்வளவு காலத்திற்கு போரில் ஈடுபடாமல்  தமது படைக்கட்டமைப்பைப் பேணமுடியும் என்று கேள்வி எழுப்புகிறார்கள் படைத்துறை ஆய்வாளர்கள். அமைதிச்சூழலில் புலிகளின் போர்முனைப்பும் போர்த்தயார் நிலையும் சிதறடிக்கப்படும் என்றே கணிக்கப்பட்டது. கடந்த வருடம் அதுவும் கருணா விவகாரம்மூலம் பொய்யாகிப்போனது.

பிரபாகரன், சமாதான காலத்திலும் தமிழர் சேனையை மிக இறுக்கமாக கட்டமைத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையிலிருந்துதான் ஈழவிடுதலைப்போராட்டம் மீதான சிறந்ததொரு வாசிப்பை நிகழ்த்த முடியும். ஈழவிடுதலையின் தரிசனமாய் ஒரு சீரான அலைவரிசையில் தலைவர் பிரபாகரன் கடந்து செல்வதை காணமுடிகிறது.

தமிழர் சேனையிடமிருந்து எத்தனையோ போரியல் பாடங்களை கற்று பித்தம் தெளிந்த பின்னரும், சிங்களமும் சில அந்நியசக்திகளும் சமாதான காலத்தைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சிதைக்க முனைப்புக் காட்டுகின்றன. ‘கெடுகிறேன் பிடி பந்தயம்’ என்ற கணக்காய் தமது அழிவுக்கு வழி கோலுகின்றன. அமைதிவழியில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வை தேடுவது அனைவருக்கும் நல்லது. இல்லையேல் தமிழர் சேனையால் போரியல் வரலாற்றில் புதிதாய் சில சமன்பாடுகளும் கோட்பாடுகளும் இலங்கைத்தீவில் எழுதப்படும்.

இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட ஒரு வீரஞ்செறிந்த உரிமைப்போரை எந்த காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது. இன்று ஈழவிடுதலைப்போராட்டம் என்றுமில்லாத ஒரு புதிய நெருக்கடிக்கு முகம் கொடுத்து நிற்கிறது. எதிரிகள் துரோகிகள் அந்நியசக்திகள் இணைந்த ஒரு புதிய வலைப்பின்னல் தமிழர்களுக் கெதிராக இறுக்கமாகப் பின்னப்பட்டுள்ளது. சமாதான காலத்தை தமக்கு சாதகமாக திசை திருப்பியுள்ளது இக் கூட்டணி.

கையறுநிலையில் தமிழினம், தலைவனை மட்டும் நம்பியபடி… பிரெஞ்சு தத்துவமேதை ழான் போத்ரியா  நியூயோர்க்கில் நடைபெற்ற செப்டெம்பர் 11  தாக்குதலை முன்னிறுத்தி பின்வருமாறு கூறினார். ‘அனைத்து சீட்டுக்களையும் தன்னிடம் வைத்துக்கொண்டு அதிகார அரசு நடத்திய விளையாட்டில் மறுதரப்பு விளையாட்டின் விதிகளை மாற்றவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அவ் விதிகள் கொடுரமானவை. ஏனெனில் அவை இறுதி யானவை என்பதால்’ இலங்கைத்தீவிலும் சிங்களம் அனைத்து சீட்டுக்களையும் தன்னகத்தே வைத்துக்கொண்டு எம்மை விளையாட்டுக்கு அழைக்கிறது.

சீட்டுக்களை சரியான விகிதத்தில் பகிர்ந்தளித்து விளையாட்டை தொடர்வது சிங்களத்துக்கு நல்லது. தொடர்ந்து மறுத்தால் தமிழர் தரப்பும் ழான் போத்ரியா குறிப்பிட்டது போல் விளையாட்டின் விதிகளை மாற்றவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும்.  அவ் விதிகள் கொடூரமானவை. ஏனெனில் அவை இறுதியானவை என்பதால்.  ‘அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடு’ – இது தலைவனின் வரிகள்.

பரணி 
ஊடகவியலாளர், 
ஆய்வாளர், 
விமர்சகர். 
பிரான்ஸ்.


Image Hosted by ImageShack.us

செவ்வாய், 17 ஜனவரி, 2012

நாம் தமிழராய் புரட்சி செய்வோம்!!


காக்கைக்கு உணவிட்டு உணவுண்ட நம்மினம்
இன்று ஒருவேளை சோற்றுப் பருக்கைக்கு
வழியில்லாமல் கிடக்கிறதடா..! பசிக்கு உணவிட்டு
உணவுண்ட நம்மினம் இன்று மண்ணின்
கோரப்பசிக்கு உணவாகிப்போகிறதடா.!
பாலுக்கு அழுகிறதடா குழந்தை..! தாய்க்கே
பால் ஊற்றுகிறதடா இலங்கை..!! கற்புக்கு
இலக்கணமாய் கண்ணகியை குறிபபிட்டாயடா
தமிழா.! இன்று கண்ணிமைக்கும் நேரத்தில்
கற்பழிக்கப்படுகிறார்களடா நம் ஈழக் கண்மணிகள்.!!
புத்தகம் சுமக்க வேண்டிய வயதினிலே
சிங்களவனின் கருவை சுமக்கிறார்களடா.!!
ஆடைகாட்டி வாழ்ந்த நம்மினம் -இன்று
அம்மணமாய் நிற்கிறதடா-அரைவயிறு
கஞ்சியும் இல்லாமல் நித்தம் நித்தம் துடிக்கிறதடா.!!
கூடிவாழ்ந்த நம்மினம் இன்று கூண்டோடு
அழிந்துபோகிறதடா.!! ஆளப் பிறந்த
நம்மினம் இன்று அடிமையாய் கிடக்கிறதடா..!!
தமிழா..! உன்இனம் மொத்தமும் ஈழத்திலே
கொன்று புதைக்கப்பட்டதடா.!! இத்தனை
துயரும் ‘தமிழர்’ என்பதனாலடா -தாயகத்தமிழா.!!
அது உன்மீது விழுந்த அடி தானடா..!
‘ஈழம்’- உன் சொந்தநாடு தானடா..!
ஈழமென்றால் ஏனடா வேற்றுக்கிரகவாசிகளாய் பார்க்கிறாய்.!
உனக்கும் சேர்த்துதானடா தலைவர் நாடு
கேட்டார்.! தமிழகமும்-தமிழீழமும் இடம்தானடா
வேறு.! நம்மினம் ஒன்றுதானடா.!!!
ஆறரைகோடி பேர் இருந்தும் -அங்கு
அனாதையாக செத்தார்களடா நம்உறவுகள்.!
அழுதபோதும் துடித்தலறியபோதும் கூக்குரலிட்டது
நம்மைத்தானடா.! கைவிட்டது நாம்தானடா..!!
தமிழா..! இன்னும் ‘கை’யை நம்பியிருக்க போகிறோமா..???
வெறும் கையை மட்டும் பிசைந்து நிற்க போகிறோமா..???
அழுதது போதும்.! அடிபட்டது போதும்.! நம் உரிமைகளை
பறிகொடுத்தது போதும்.! நம் உறவுகளை
பலிகொடுத்தது போதும்..! தமிழா..!
வெகுண்டெழுந்து வா.! தலைவரின் மொழியே
நம்மை வழிநடத்தட்டும்.! மாவீர்களின் ஆவியே
நமக்கு வழிகாட்டட்டும்.!! எழுந்து வா.!
தமிழராய்..! சாதி மறந்து மதம் துறந்து..!!
ஒன்றுகூடு நாம் தமிழராய்..!!
இனியொரு விதி செய்வோம்.!
நாம் தமிழராய் புரட்சி செய்வோம்..!!


எழுச்சியோடு,
நாம் தமிழர் கட்சி,
முத்துப்பேட்டை ஒன்றியம்,
திருவாரூர் (மாவட்டம்)
            +91 9865550270      


ஞாயிறு, 15 ஜனவரி, 2012

வடபோர் முனையில் வித்தாகிய 70 மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.

விடுதலைப் புலிகளால் ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் 16.01.2001 அன்று வடபோர்முனையில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய படை நடவடிக்கைக்கு எதிரான தற்காப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

நோர்வேயினால் முன்னெடுக்கப்பட்ட அமைதி நடவடிக்கைகளிற்காக நல்லெண்ண நடவடிக்கையாக ஒரு தலைப்பட்சமாக விடுதலைப் புலிகளால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப் புலிகளின் நல்லெண்ண நடவடிக்கையை புறம் தள்ளி 16.01.2001 அன்று சிறிலங்கா படையினரால் வட போர்முனையில் கிளாலி - எழுதுமட்டுவாள் ஊடாக பாரிய படை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இப்படை நடவடிக்கைக்கு எதிராக சனவரி 16 - 17 வரை விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் போரிட்டு படைநடவடிக்கையைத் தடுத்து நிறுத்தினர்.

இத்தற்காப்புச் சமரில் லெப்.கேணல்கள் மதி(சுஜித்திரா) மற்றும் காவியா(ஜெசிமா) உட்பட 70 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம்.


இந்த வீரவேங்கைகளுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய வீர மறவர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us



சனி, 14 ஜனவரி, 2012

கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

இந்தியாவின் துரோகத்தால் படுகொலை செய்யப்பட்ட கேணல் கிட்டு உட்பட 10 வேங்கைகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

‘கிட்டு பயணம் செய்து எம்.வி. யகதா என்னும் கப்பல் ஹோண்டுராஸ் நாட்டிலுள்ள சான் – லோரன்சோ என்னும் துறைமுகத்தில் பதிவு செய்யப்பட்டதாகும்.
இந்தக் கப்பலின் மேற்புறத்தில் அதன் பெயரும் அது எந்த நாட்டிற்கு உரியது என்பது தெளிவாக எழுதப்பட்டிருந்தன. இந்தியக் கடற்படைக் கப்பல்கள் 14.1.93 அன்று இரவு 10.30 மணிக்கு அதன் அருகில் நெருங்கிய பொழுது ”இக்கப்பலின் பெயரைப் பார்க்க முடியவில்லை அதன் மீது எந்த நாட்டுக் கொடியும் பறக்கவில்லை”" என்று குற்றம் சாட்டுவது அர்த்தமற்றது. ஏனென்றால் எந்த நாட்டுக்கொடியும் கதிரவன் மறைந்த பின்பு பறக்கவிடுவது வழக்கமல்ல. ஏன் இந்தியாவின் கொடி பறக்கவில்லை.

7.1.93 அன்று இந்தோனேசியாவின் மலாக்கா – சந்தியிலுள்ள பியுபர் – கலா தீவில் தளபதி கிட்டுவும் மற்றும் 9 விடுதலைப் புலிகளும் இந்தக் கப்பலில் ஏறினார்கள். இந்தக் கப்பலில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை. தமிழீழப் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காகப் பெட்ரோல், டீசல், மருந்துகள் போன்றவை மட்டுமே இருந்தன. இவற்றுடன் ஆயுதங்களோ, வெடி மருந்துகளோ எடுத்து வருவது அபாயகரமானது. எனவே அவற்றைக் கொண்டு வரவில்லை.

13.1.93 அன்று இந்தியாவில் இருந்து 440 மைல்களுக்கு அப்பாலும், இலங்கையின் தென் முனையிலிருந்து 290 மைல்களுக்கு அப்பாலும், நிலநேர்கோட்டிற்கு வடக்கில் 6 பாகையிலும் நிலக்கோட்டிற்கு கிழக்கே 8 பாகையிலும் இந்தக் கப்பல் சென்று கொண்டிருந்த பொழுது கப்பல் நிறுத்தப்பட்டு கடலைகளின் இயற்கையோட்டத்தில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. சனவரி 16-ஆம் நாள் அவர்கள் யாழ்ப்பாணத்தை அடையவேண்டியிருந்ததால் அங்கிருந்து வரும் சமிஞ்கைக்காகக் காத்திருந்தார்கள். அதே இரவு 10.30 மணியளவில் இந்தியக் கடற்படை கப்பல் ஒன்று விடுதலைப் புலிகளின் கப்பலை அணுகியது. இரவு நேரம் ஆதலால் இந்தியக் கப்பலை விடுதலைப் புலிகளால் அடையாளம் காண முடியவில்லை. இந்திய கடற்படைக் கப்பலிலிருந்து வானொலி மூலமாக் கப்பலின் காப்டன் ஜெயச்சந்திரனுடன் தொடர்பு கொள்ளப்பட்டது.

‘திரிகோணமலையை நோக்கி இந்தக் கப்பல் செல்கிறதா” என்று கேட்டபொழுது ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. பொதுவாக ஒரு கப்பலை நோக்கி இது போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. அடுத்த கேள்வியாக ‘நீங்கள் இலங்கைத் தமிழர்களா”? என்று கேட்கப்பட்டது. அதற்கும் ‘ஆம்” என்று பதில் கொடுக்கப்பட்டது. மேலும் ‘யகர்தா” கப்பலில் பயணிகள் யாரும் இருக்கின்றார்களா என்பதை பார்த்து அறிய இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் விரும்புவதாகவும் கூறப்பட்டது. இதற்கு பின்னர் ஜெயச்சந்திரன் ”கேள்விகளுக்கு மேல் கேள்விகள் கேட்கும் நீங்கள் யார்?”" என்று வினாவினார். தாங்கள் ‘சர்வதேசக் காவல் பணிபுரிவதாக” இந்தியக் கடற்படைக் கப்பலின் காப்டன் பதில் கூறினார். ‘யகதா கப்பலின் பயணிகள் யாரும் இருக்கிறார்களா”? என்பதை அறிந்து கொள்வதில் மாத்திரமே அவர்கள் தீவிரம் காட்டினார்கள். அதன் பின்பு தங்கள் கப்பலை நெருங்கக்கூடாது என்று ஜெயச்சந்திரன் இந்தியக் கடற்படைக் கப்பலை எச்சரித்தார்.

சிங்களக் கடற்படைக் கப்பல்தான் தங்களை வழிமறிக்கிறது என்று ஜெயச்சந்திரனும் மற்றவர்களும் நினைத்தார்கள். எனவே அதை தாக்குவதற்கு ஆயத்தம் ஆனார்கள். இதற்குப் பின்னர்தான் இந்திய கடற்படைக் கப்பலின் காப்டன் தாங்கள் யார் என்ற உண்மையைத் தெரிவித்தார்.
ஜ.என்.எஸ்.38 விவேகா என்னும் இந்தியக் கடற்படைக் கப்பல்தான் தங்களை மறிக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இந்த உண்மை தெரியவந்ததும் அந்தக் கப்பலை தாக்கவேண்டாம் என்று தளபதி கிட்டு ஜெயச்சந்திரனுக்கு ஆணையிட்டார். ஏற்கனவே இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் உள்ள உறவு சீராக இல்லாததாலும் விடுதலைப் புலிகள் இந்தியாவுடன் பகையுணர்ச்சி கொண்டிருக்கின்றார்கள் என்ற பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டு வரும் சூழ்நிலையிலும் இந்தியக் கடற்படைக் கப்பலை நாம் தாக்கினால் அது மேலும் வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தும் எனவே, நமது உயிரை இழக்க நேர்ந்தாலும் பரவாயில்லை இந்தியக் கப்பலைத் தாக்க வேண்டாம் என்று தளபதி கிட்டு திட்டவட்டமாகச் கூறினார்.

அதன் பின்பு இந்தியக் கடற்படைக்கப்பலின் காப்டனுடன் வானொலி மூலம் பேசுவதற்கு கிட்டு விரும்பினார்.
இந்திய காப்டன் கிட்டுவை யார் என் விசாரித்தார். அதற்கு கிட்டு பதில் அளிக்கும்போது ‘தன்னை இப்பொழுது மாறன் என்று அழைக்கலாம்” பின்பு தன்னுடைய உண்மையான அடையாளத்தை தெரிவிக்கிறேன்” என்று பதில் கூறினார். எங்களுடைய கப்பலை எதற்காக மறிக்கிறீர்கள் என்று கேட்ட பொழுது அதற்குப் பதில் அளித்த இந்தியக் கப்பலின் காப்டன் ‘அது பற்றி எனக்குத் தெரியாது, உங்களுடைய கப்பலை கடற்கரைக்குக் கொண்டுவரும்படி ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் கப்பலைத் தாக்க நேரிடும்” என்று எச்சரித்தார்.

தங்களுடைய கப்பலில் பெட்ரோல், டீசல் ஆகியவை சேமித்து வைக்கப்பட்டு இருப்பதால் சண்டை மூண்டால் பெரும் சேதம் ஏற்படும் என்பதால் இந்தியக் கடற்படைக் கப்பலைத் தொடர்ந்து செல்லக் கிட்டு முடிவு செய்தார்.

சனவரி 14-ஆம் நாள் காலை 6 மணிக்கு மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பல் கிட்டுவின் கப்பலுக்கு அருகே வந்தது. ஜ.என்.எஸ். பாப்பா 44 கிருபாணி என்னும் கப்பல் ஒருபுறமும், ஜ.என்.எஸ் 38 விவேகா மறுபுறமும் கிட்டுவின் கப்பலுக்குத் காவலாக இந்தியக் கடற்கரையை நோக்கி வழிநடத்திச் சென்றன. எம்.வி.யகதா கப்பலில் தளபதி கிட்டு பயணம் செய்கிறார் என்பதை நன்கு தெரிந்துகொண்டு, அவரை யாழ்ப்பாணம் செல்லவிடாமல் தடுத்து உயிரோடு சிறைபிடித்துச் செல்லவே இந்தியக் கடற்படைக்கப்பல்கள் வந்திருக்கின்றன என்ற உண்மை தெளிவாகியது. இருந்தாலும்; கிட்டு இந்தியக் கடற்படைக் காப்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைச் சந்தித்து சமாதான திட்டம் ஒன்றைப் பற்றி விவாதிக்கவே தான் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டு இருப்பதாகச் கிட்டு கூறினார். ஆனால் இந்தியக் காப்டனோ அவர்களைச் சென்னையை நோக்கி வருமாறு வற்புறுத்தினார். சென்னை அழைத்து வரவேண்டிய அவசியம் என்ன? என்று கேட்டபொழுது அவர் அதற்கு மழுப்பலான பதில் கூறினார். அது பற்றி தனக்கு எதுவும் தெரியாதென்றும், கிட்டு சென்னை வந்த பின்பு உயர் அதிகாரிகள் அவரைச் சந்தித்து மேலும் பேசுவார்கள் என்றும் கூறினார்.

இந்தப் பேச்சுக்களிடையே பயணம் தொடர்ந்தது. சென்னை அருகேயுள்ள எண்ணுரிலிருந்து கிழக்கே 16ஆவது மைலுக்கு யகாதா கப்பல் வந்த பொழுது அதை நிறுத்தி நங்கூரம் பாய்ச்சும்படி கிட்டு ஆணையிட்டார். அதற்குமேலும் பயணம் செய்தால் இந்தியாவின் கடல் எல்லைக்குள் நுழைவதற்கு கிட்டு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலைமையில் மற்றொரு இந்தியக் கடற்படைக் கப்பலான ஜ.என்.எஸ் சாவித்திரி விரைந்து வந்து கிட்டுவின் கப்பலை முற்றுகையிட்ட கப்பல்களுடன் சேர்ந்துகொண்டது. உடனடியாகச் சரண் அடையும்படி கிட்டுவுக்கு ஆணையிடப்பட்டது. அதற்குக் கிட்டு மறுத்துவிட்டார். தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் இந்திய உளவுத்துறை தலைவர்களையோ சென்னையில் உள்ள அரசியல் தலைவர்களையோ அழைத்து வரும்படி கிட்டு கேட்டுக்கொண்டார். அதை ஏற்பதற்கு இந்திய கடற்படை தளபதி மறுத்துவிட்டார்.

16-ஆம் நாள் காலை 6 மணி வரை அவகாசம் தருவதாகவும் அதற்குள் கிட்டுவும் மற்றவர்களும் சரணடைய வேண்டும் என்றும் இல்லையென்னறால் அதிரடிப்படை அவர்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் என்றும் எச்சரித்தார். சரியாக காலை 6 மணிக்கு இரண்டு உலங்குவானுர்திகளும் மூன்று போர் விமானங்களும் கிட்டுவின் கப்பலைச் சுற்றி வட்டமிட்டன. கப்பலின் மேல் தளத்தில் தளபதி கிட்டு நின்ற வண்ணம் எதையும் சந்திக்கத் தயாரானார்.

சிறிது நேரத்தில் கிட்டுவின் கப்பலை நோக்கி இந்திய கடற்படைக் கப்பல்கள் பீரங்கிகளால் சுட்டன. கப்பலின் கேப்டன் ஜெயசந்திரனையும் மற்றும் மாலுமிகளையும் கடலில் குதித்துத் தப்புமாறு கிட்டு ஆணையிட்டார். தன்னுடனிருந்த விடுதலைப் புலிகளை நச்சுக்குப்பிகளைத் தயாராக வைத்துக் கொள்ளும்படியும் உத்தரவிட்டார். ஆனால் மாலுமிகள் கிட்டுவை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டுத் தாங்கள் மட்டும் தப்பிச்செல்ல விரும்பவில்லை. ‘தேவையில்லாமல் அவர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்ய வேண்டியதில்லை” என்று கூறிய கிட்டு அவர்களை ஒவ்வொருவராக பிடித்துக் கடலில் தள்ளினார். கடலில் அவர்கள் குதிக்கும்பொழுது தங்கள் கப்பல் பற்றி எரிவதையும் எரிந்து கொண்டிருக்கும் தீச்சுவாலைக்கு நடுவே தளபதி கிட்டுவும் மற்ற விடுதலைப் புலிகளும் கம்பீரமாக நிற்பதையும் பார்த்தனர்.

16.1.93 அன்று அதிகாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்தியக் கடற்படை கப்பல்கள் பீரங்கி குண்டுகளால் தாக்கியதால் கிட்டுவின் கப்பல் தீப் பிடித்து எரிந்தது. கடலில் குதித்த கப்பலின் மாலுமிகளை இந்தியக் கடற்படைக் கப்பல் காப்பாற்றிச் சிறைபிடித்தது. அவர்களில் சிவலிங்க கேசவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவருக்கும் படுகாயம் எற்பட்டது. கைது செய்யப்பட்டவர்களை நியாயமாக சென்னைக்கு கொண்டு வந்திருக்கவேண்டும். ஏனென்றால் சென்னைக்கு அருகே கிட்டுவின் கப்பலைச் சுற்றி வளைத்தாக இந்தியக் கடற்படை குற்றம் சாட்டி இருந்தது. அதற்கு மாறாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் கைது செய்யப்பட்டவர்களை விசாகப்பட்டினத்திற்குக் கொண்டு சென்றார்கள். சென்னைக்கு கொண்டு வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்புணர்வும் கிளர்ச்சியும் வெடிக்கலாம் என்று அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

கிட்டு தன்னுடைய கப்பலில் ஏறிய பொழுது ”தலைவர் பிரபாகரன் அவர்களிடம் கொடுப்பதற்காக பல முக்கியமான ஆவணங்களை ஒரு கைப்பெட்டியில் கிட்டு வைத்திருந்தார்.மேலும் இரண்டு அல்லது மூன்று பெட்டிகளில் 15 இலட்சம் அமெரிக்க டாலர்களையும் வைத்து இருப்பதாகக் கிட்டு என்னிடம் கூறியிருந்தார்”" எனக் கப்பலின் கேப்டன் ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.

மேற்கு ஜரோப்பிய நாடுகள் தயாரித்து அளித்த சமாதானத் திட்டத்துடன் தமது தலைவரைச் சந்தித்துப் பேசுவதற்காகவே யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தளபதி கிட்டுவை இந்தியக் கடற்படை வழிமறித்துப் படுகொலை செய்தது.

“கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்
நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும்
எமது விடுதலை வரலாற்றின்
ஒரு காலத்தின் பதிவு”


இந்த வீரத் தளபதிகளுக்கு  எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய வீர மறவர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us



வெள்ளி, 13 ஜனவரி, 2012

எட்டிப் பார்க்க முடியாத அளவுக்கு புகழ் ஈட்டியவர் கேணல் கிட்டு.

“என் ஆன்மாவை பிழிந்த ஓர் சோக நிகழ்வு அதை சொற்களால் வர்ணிக்க முடியாதென்பது” தலைவர் மொழிந்தவை.
“மனதின் ஆழத்து உள்ளுணர்வுகளை வார்த்தையில் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பி விடும் ஒரு உணர்வுப் பூகம்பத்தை மனித மொழிகளில் விபரிக்க முடியாது.எனது அன்புத்தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனை சொற்களால் வார்த்து விடமுடியாது.”

“நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக தளபதியாக எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்கு அப்பாலானது. ஒரே இலடசியப் பற்றுணர்வில் ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம்பகிர்ந்து கொண்ட அனுபவத்தில், ஒருவரை ஒருவர் ஆழமாக இனம் கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த நேயமிது.”

“அவனில் ஓர் அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டுகொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன. அதனால் அவன் ஓர் அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான் போராடினான். அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க் களத்தில் வீரனாகவும் பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும், அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது.”

“கிட்டு ஒரு தனி மனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிழந்தது. அதன் அதிர்வலையால் எமது தேசமே விழித்துக்கொண்டது. கிட்டு நீசாகவில்லை. புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.”

என்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன், கேணல் கிட்டு மறைந்த போது விடுத்த இரங்கல் செய்தி, எமது இதயத்தை அப்படியே ஆட்கொண்டுள்ளது. தலைவரின் விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக விளங்கிய ஒவ்வொரு தளபதிகளின் மறைவை ஒட்டியும் அவர் கூறிய கூற்றுக்கள் எம் உள்ளத்தைத் தொடுபவையாகும்.

கிட்டு அவர்கள் 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி தோன்றினார். அவர் மறைந்தது 1993 ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி. எனவே அவர் இவ்வுலகில் வாழ்ந்தது மிகக் குறுகிய காலமென்பதை நினைவு கொள்ள வேண்டும். தேன்கலந்த வாசகம் தந்த வான்கலந்த மாணிக்கவாசகரின் வாழ்வு முப்பத்தி இரண்டுதான். தன்னை தமிழ் ஞானசம்பந்தரென்று ஐம்பது இடங்களில் கூறி நாளும் தமிழ் பரப்பிய தமிழ் ஞானசம்பந்தரின் வாழ்வு பதினாறுதான். ஆர்மூண்டு பதினெட்டில் நம்பியாரூரன் வாழ்வு முற்றுப் பெற்றது. இரக்கத்தில் உருவான யேசுகிறிஸ்து வாழ்ந்தது 33 ஆண்டுகள் தான். அவரின் முதல் 30 ஆண்டுகள் எவ்விதம் அமைந்திருந்ததென்பது உலகம் அறியாது. ஆனால் இறுதி 3 ஆண்டுகள் உலக வரலாற்றை மாற்றியது. அத்வைத வேதாந்தத்தை தந்த சங்கராச்சாரியார் வாழ்வு 33 ஐத் தாண்டவில்லை. மாவீரர் அலெக்சாண்டரின் வாழ்வு 33 ஆண்டுகளுடன் முடிவுற்றது. இப்படி குறுகிய காலம் வாழ்ந்தும் உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் உண்டு. அந்த வரிசையில் 33 ஆண்டுவாழ்ந்த கிட்டுவின் வாழ்வும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தனியிடம் பெறுகிறது. நாம் எவ்வளவு காலம் வாழ்கிறோம் என்பதல்ல முக்கியம் எப்படி வாழ்கிறோம் என்பது தான் முக்கியம். வாழ்வகத்தைக் காத்து வண்டதமிழை வாழ்வித் வன்னியசிங்கம் அவர்களின் வாழ்வு 48ஐத் தாண்ட மறுத்து முற்றுப்பெற்றது. ஆனால் அவர் மறைந்து ஆண்டுகள் பல உருண்டு ஓடிய நிலையிலும் அவர் நம் நெஞ்சை விட்டு அகலமறுக்கிறார். தமிழுக்கும் தமிழனுக்கும் தொண்டு செய்வோன் சாவதில்லை என்பதற்கமைய மறைந்த வன்னியரையும் மறைந்த தளபதி கேணல் கிட்டுவையும் நினைவு கொள்கிறோம்.


தலைவரைப் போற்றும் தளபதி.

தலைவர் வேலுப்பிள்ளை பிராபகரன் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்ந்து கிட்டுக்கு மதிப்பு வழங்ககினாரோ அவ்வளவு தூரம் தலைவர் பிராபகரன் பெருமையை உணர்ந்தவர் கேணல் கிட்டு அவர்கள். இதோ தலைவர் பற்றி அவர் மொழிந்தவை. “எமது தலைவர் பிரபாகரன் விடுதலைப்வ்புலிகளின் இயகத்தின் தலைவர் மட்டுமல்ல அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஒரு தேசிய இனத்தின் தலைவர். இன்று விடுதலைக்காக தம்மை தியாகம் செய்யத்தயாராக நிற்கும் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் எமது ஆதரவாளர்களுக்கு மட்டும் தலைவரல்ல. எம்மீது அதிருப்த்தி கொண்டவர்களுக்கு எம்மை எதிர்ப்பவர்களுக்கும் அவர் தலைவர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தப்புச் செய்தவன் செய்யாதவன் என அனைவருக்கும் அவர்தான் தந்தை. பாதிக்கப்பட்டவனும் படோடாபமாக வாழ்பவனுக்கும் அவர்தான் தந்தை. போராட்டப்பணி குறித்து அவரது அபிப்பிராயம் அவரது முழுமையான அர்பணிப்புக்கு வெளிச்சமிடுகிறது. போராளிகள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பணி பெரிது. சுமையும் பெரிதுதான். ஆனால் நாம் அதை விருப்பத்துடன் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

எதிரிக்கு எதிராக போராட வேண்டிய நிலையில் நாட்டை நிர்வகிக்கும் பணிகளும் எம்மீதே சுமத்தப்பட்டிருக்கிறது. இதுமிகப்பெரும் சுமைதான் ஆனால் இதை விருப்பத்துடன் சுமக்கிறோம்” என்று போராட்டம் பற்றி ஏற்றமுடன் எடுத்துரைத்த கிட்டு அவர்கள் போராட்டம் வெற்றிபெற அறிவாளிகளையும் புத்தி ஜீவிகளையும் எவ்விதம் உள்வாங்க வேண்டுமென்பதை அவர் கூறும் கூற்றுக்கள் அவரின் பரந்த உள்ளத்திற்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு.

அறிவாளிகளை உள்வாங்க விரும்பியவர் கிட்டு.

இதோ அவர் மொழிந்தவை. “புத்தி ஜீவிகளை ஒன்று சேர்த்து சிந்தனைத் தடாகமொன்றை உருவாக்க வேண்டும். போராட்டத்தில் அரசியல் ராஜதந்திர நகர்வுகள் போன்ற விடயங்களில் நல்ல கருத்துகள் தேவையாக உள்ளது. இக்கருத்துக்கள் சரியான தகைமையும் கல்வியும் உள்ளவரிடமிருந்து வழங்கப்பட வேண்டும். தேவை படும் நேரத்தில் மாத்திரம் அவர்களை அணுகும் போது அவர்கள் எமது நிலைமைகளை சரியாக புரிந்து கொள்ளாதவர்களாக இருப்பார்கள். எனவே எமது போராட்டப் பாதையில் அவர்களை இணைத்துக்கொண்டு செல்வதன் மூலமே புத்தி ஜீவிகளை சரியான பாதைக்கு கொண்டு செல்லமுடியும்.”

சுருங்க கூறின் போராடுகின்ற போது துணிவை பெரிதும் போற்றிய கிட்டு அவர்கள் போராட்டத்தில் நாம் வெற்றிபெற அறிஞர்களின் அறிவுரைகளை அவர் என்றும் புறக்கணித்ததில்லை. பின் புலத்தில் அவர்களின் துணையை அவர் நாடி நின்றார். இயக்கம் செய்யும் ஒவ்வொரு விடயமும் திட்டமிட்டு செயற்பட வேண்டும். திறந்த மனத்துடன் அமைந்த கருத்துப் பரிமாற்றத்தின் மூலமே சிறந்த திட்டங்களைப் பெற முடியும் என்று கூறியவர் கிட்டு அவர்கள். புகைப்படத்துறையிலும் அவர் புகழ்பெற்று விளங்கியவர். புகைப்படங்கள் ஊடாக எங்கள் போராட்டத்தை ஆவணப்படுத்த வேண்டுமென அவருக்கிருந்த ஆர்வத்தை எளிதில் எடுத்தியம்பிட முடியாது.

நரசிம்மராவின் நயவஞ்சகம்.

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்திரா காந்தியின் ஆட்சியில் வெளியுறவு அமைச்சராக விளங்கியவர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள். நான் இந்திரா காந்தியைச் சந்தித்ததையடுத்து நரசிம்மராவைச் சந்தித்த போது (1983 ஓகஸ்ட் 19) அவர் கூறியவை என் நினைவலையில் இன்றும் மோதுகிறது. “ இந்திய விடுதலை வரலாற்றில் காந்தி அடிகளின் பங்கை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் ஆயுதம் தாங்கி போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், லாய் பட்ராய், பகவத்சிங், வ.உ.சிதம்பரம்பிள்ளை, போன்றோர் ஆயுதம்தாங்கி போரிட்டதை நாம் மறுக்கவில்லை. இந்தியவிடுதலை வரலாற்றில் அவர்கள் ஆற்றிய பங்கு மிகப்பெரிது. அதுபோன்றே உங்கள் விடுதலைப் போராட்டத்தில் ஆயுதம் தாங்கிப் போராடும் போராளிகளை பெரிதும் மதிக்கிறேன் எனக் கூறியவர்தான் நரசிம்மராவ். ஆனால் நரசிம்மராவ் இந்திய துணைக்கண்டத்தில் தலைமையமைச்சராக பதவியேற்ற காலகட்டத்தில்தான் 1993ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் திகதி இந்திய நீரலையிலோ அல்லது இலங்கை நீரலையிலோ நிற்காது அனைத்துலக நீரலையில் கிட்டுவின் கப்பல் நின்ற போது இந்தக்கப்பலை இந்தியத் துணைக்கணடத்துக்கு இழுத்துச் செல்ல இந்திய அரசு முனைந்த போது கேண்ல் கிட்டுவும் அவரது தோழர்கள் மேஜர் வேலையன் (சந்திரலிங்கம் சந்திரவேல்), கப்டன் குணசீலன், கப்டன் ரோசன்(ரட்ணசிங்கம் அருணராசா), கப்டன் நாயகம் (சிவலிங்கம் கேசவன்), கப்டன் ஜீவா( நடராஜா ஜீவராஜ்), லெப்டினன் நல்லவன் (சிவஞானசுந்தரம் ரமேஷ்) லெப்டினன் அமுதன் ( அலோஷன்; ஜோன்சன்) தூயவன் (மாகாலிங்கம் ஜெயலிங்கம்) ஆகியோரும் கிட்டுவுடன் சேரந்து எம் இயக்கத்தின் இரகசியங்களை இந்திய உளவுப்படைக்கு வெளியிட விரும்பாத நிலையில் தம்மை மாய்த்துக்கொண்டனர்.

அவர்கள் செய்தது தற்கொலையல்ல. அது தற்கொடையாகும். இது கிட்டுவின் தியாகத்தைமட்டுமல்ல அவரின் தோழர்களின் தியாகத்தையும் உலகுக்கு பறைசாற்றுகிறது. இந்திராகாந்தியின் ஆட்சியில் போராளிகளை போற்றிய நரசிம்மராவ் தலைமை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் இப்போராளிகளின் சாவுக்கு காரணமாக அமைந்தார். இது இந்தியாவின் வஞ்சனைக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. நமது போராளிகள் அனைத்துலக நீரலையில்தான் இருந்தார்கள் என்று காலம் தாழ்த்திய நிலையில் விசாகப்பட்டினம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இங்கு நினைவு கொள்ளத்தக்கது. மறைந்தும் மறையாத எம் கிட்டுவையும் தோழர்களையும் நாம் நினைவு கொள்வோமாக. இவர்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டிய தியாகிகள். தமிழ்நாட்டில் தளபதி கிட்டு அவர்களுக்கும் எமக்கும் இடையே நிலவிய நெருக்கமான உறவையும் பரிமாறப்பட்ட கருத்துக்களையும் ராஜதந்திர நோக்குடன் இங்கு பரிமாறவில்லை. பின்பு அவை தேவையொட்டி கூறப்படும்.

மா.க.ஈழவேந்தன்

Image Hosted by ImageShack.us


வியாழன், 12 ஜனவரி, 2012

தலைவர் பிரபாகரனின் "போரியல் திட்டங்களும் தலைமைத்துவ ஆளுமையும்"

இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.
இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில் வெற்றி, தோல்வி என்ற பிரச்சனை பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர்கொள்ளும் உறுதியும், துணிவும் எம்மிடம் உண்டா என்பது பற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைகளையும் விட்டுக் கொடுக்க முடியாது.
-தமிழீழ தேசியத் தலைவர்
மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்.
இந்திய – புலிகள் போர்
‘தமிழீழ விடுதலை’ என்று சொல்லிக் கொண்டு ஆயுதம் தூக்கிப் போராடப் புறப்பட்ட தமிழ்க்குழுக்கள் எல்லாம் தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்து. ‘தமிழீழவிடுதலை’ என்ற இலட்சியத்தைக் கைவிட்டு இந்திய, சிறீலங்கா அரசுகளின் கைக்கூலிகளாக மாறிச் செயற்படத் தொடங்கினர்.

ஆனால் தலைவர் பிரபாகரனோ சாதி, சமய, பிரதேச வேறுபாடு இன்றி, தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழீழ விடுதலைப் போரை முன்னெடுத்தார். உலகம் பார்த்து வியந்து நிற்க சின்னஞ் சிறிய தமிழீழ தேசம் வீராவேசத்துடன் போரிட்டது.

இலங்கைத் தீவில் அந்நிய ஆக்கிரமிப்புக்கு எதிராக நடைபெறும் போரை தலைமை தாங்கி நடத்தும் ஒப்பாரும் மிக்காரும் அற்ற முதல் தலைவன் பிரபாகரன் தான் என்று சிறீலங்கா நாட்டு சிங்கள மக்களும் புகழந்தனர். இப்போர் உக்கிரமாக நடைபெற்ற காலப் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் என்ற நிலை ‘தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்’ என தமிழ் மக்கள் தமிழீழத்திலும் உலகெங்கிலும் அழைக்கத் தொடங்கினர்.

இந்திய தமிழீழப் போர்

1987ஐப்பசி 10ம் நாள் இந்திய – தமிழீழப் போர் எவ்வாறு ஆரம்பித்தது என்பதை அப்போதைய தமிழக முதல்வர் M.G. இராமச்சந்திரனுக்கு 1987 ஐப்பசி 11ம் நாள் தலைவர் பிரபாகரன் எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.


‘எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்திய பாதுகாப்பு மந்திரி திரு. பரத், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா சனாதிபதி ஜெயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர். விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்கு பொது மன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்திய சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகைக் (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர்.


அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம். போர் மூண்டது. இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை, விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம். நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காக போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிட போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.

யுத்தம் தீவிரமாக நடைபெற்றது. யாழ் குடாநாட்டை கைப்பற்ற இந்தியப்படை ஒரு மாதகாலம் போரிட்டது. இப்போரைத் தலைவர் பிரபாகரன் தலைமையேற்று விடுதலைப் புலிகளை வழிநடத்தினார். தொடர்ச்சியான கெரில்லாப் போர்முறைதான் இனிமேல் இந்தியப் படையை எதிர்கொள்ளத் தகுந்த போர்முறை எனத் தீர்மானித்து, தலைவர் பிரபாகரன் தனது போராளிகளுடன் தமிழீழக் காடுகளுக்குச் சென்றார்.

கெரில்லா போர் தொடர்ந்தது. இந்தியப் படையினர் தரப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளை எதிர் கொள்ளத் திராணியற்ற இந்தியப் படை பொதுமக்கள் மீது தனது வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டுப் பொது மக்கள் பலரைக் கொன்று குவித்தது. பெண்கள் பலரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தது

இந்தப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தலைவர் பிரபாகரன் 12.10.1987 இலும் 14.10.1987 இலும் 13.01.1988 இலும் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்திக்குப் போர் நிறுத்தத்தை மேற்கொண்டு தமக்கு அளித்த உறுதி மொழிகளின் படி இடைக்கால அரசைத் தமிழ்ப்பகுதிகளில் நிறுவினால் தாம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துக் கடிதம் அனுப்பினார். ஆனால் ராஜீவ் காந்தி தலைவர் பிரபாகரனைக் கொன்று, தமிழீழ விடுதலை அரசியல் இலட்சியத்தை அறவே ஒழித்துவிட வேண்டும் என்ற வெறியுடன் தன்னுடைய ஆயுதப் படைகளை இலட்சக்கணக்கில் தமிழீழத்தில் இறக்கிவிட்டார். போர் தொடர்ந்தது.

சுதுமலைப் பிரகடனம்

இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள், இந்திய இராணுவத் தளபதிகள், பத்திரிகையாளர்கள், முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் ‘எம்மக்களது விடுதலைக்காக, எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது. ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது.

நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன்.

தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்” என்றார்.

இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது.

ஆனால் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு, தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.




*ஒரு இந்திய இராணுவத் தளபதியின் அரசியல் வாக்குமூலம்*

*’இலங்கையில் தலையீடு”*

மீளச் சொல்லப்பட்டுள்ள இந்திய சமாதானப் படையின் அனுபவங்கள் என்ற இந்த நூல் இந்தியப் படையின் தளபதி மேஜர்- ஜெனரல் கர்கிரத்சிங் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய சமாதானப் படையின் முதற் கட்டளைத் தளபதியாக இவரே நியமிக்கப்பட்டிருந்தார். 79 வயதில் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்;கின் இந்த நூல் டிசம்பர் 2006 இல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் – இந்தியத் தூதர் ஜே.என்.டிக்சிற்- மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்; ஆகியோர் பலாலிப் படைத்தளத்தில் – ஒரு சந்திப்பின் பின் – ஒன்றாக நின்று எடுத்த நிழல்படம் நூலின் முன் அட்டையை அலங்கரித்துள்ளது. இந்த நூல் 188 பக்கங்களைக் கொண்டிருக்கின்றது. எனினும் முதல் 137 பக்கங்களுடன் நூல் நிறைவடைகின்றது. ஏனைய பக்கங்கள் இலஸ்ரேட்டட் வீக்லி என்ற இந்தியச் சஞ்சிகைக்கு நூலாசிரியர் 1991 இல் வழங்கிய செவ்வி மற்றும் இந்தியத் தளபதிகளின் கடிதங்கள் – கட்டளைகள்-தகவல்; அட்டவணைகளுடன் நிறைக்கப்பட்டுள்ளது.

*நூலாசிரியர் கூறும் தகவல்கள்*

ராஜீவ் காந்தியின் அரசாங்கத்தினால் ஆரம்பம் முதலே இந்திய சமாதானப்படை குழப்பகரமான நோக்கங்களுடன்- பிழையாக வழிநடத்தப்பட்டன என்று நூலாசிரியர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குழப்பங்களை, பிழைகளைச் சரிசெய்யத் தான் முயன்று தோற்றதாக நூலாசிரியர் சம்பவங்களுடன் கூறுகின்றார்.

தனி ஈழம் என்ற தமிழரின் அரசியல் அபிலாசையை ஈடேற்றக்கூடிய ஒரே இயக்கம் புலிகள் இயக்கம் தான் என்பது தமிழ் மக்களின் ஏகோபித்த கருத்தாக இருந்ததைத் தான் கண்டுணர்ந்ததாக நூலாசிரியர் பிரகடனப்படுத்துகின்றார். ஆனால் தமிழ் மக்களிடமிருந்து புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்துவதுதான் இந்திய சமாதானப்படையின் பிரதான குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று டிக்சிற் கருதினார். இது நடைபெறாதென்று தனக்கு நன்றாகத் தெரிந்திருந்தது என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

புலிகளின் ஆயுதக் கையளிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த அதேநேரத்தில் பிரதம மந்திரியின் (ராஜீவ்காந்தி) அலுவலகத்தின் அறிவுறுத்தலின் பேரில் செயலிழந்து போன மற்றைய இயக்கங்களுக்கு ~றோ| அமைப்பினர் புதிய ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருந்தனர் என்று நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்த ஆயுத வழங்கலைப்பற்றி டிக்சிற் உட்பட தேவையான அனைவருக்கும் தான் அறிவித்ததாக அவர் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் வீடியோச் சுருள் ஆதாரத்தையும் தான் டிக்சிற்றிற்குக் கையளித்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோச் சுருள் புலிகளால் தனக்குத் தரப்பட்டது என்றும் கூறியுள்ளார் சமாதான காலத்தில் பேச்சிற்கு அழைத்துவிட்டு அங்கே தலைவர் பிரபாகரனைக் கொல்ல டிக்சிற் தீட்டிய சதித் திட்டமொன்றையும் நூலாசிரியர் அம்பலப்படுத்தியுள்ளார்.

செப்ரெம்பர் 14 ஆம் திகதி (1987) தொலைபேசியூடாக டிக்சிற் தன்னை அழைத்து ‘பலாலி படைத்தளத்திற்குச் சந்திப்பிற்காகப் பிரபாகரன் வரும்போது அவரைக் கைது செய்யவும் அல்லது சுட்டுக்கொல்லவும்” என்றார். இந்தச் செய்தியைத் தனது மேலதிகாரியான லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கிடம் நூலாசிரியர் கூறினார்.

இதற்கு திபேந்தர்சிங் கூறினார் ‘வெள்ளைக் கொடியின் கீழ் ஒரு சந்திப்பிற்காக பிரபாகரன் வரும் போது அவரைச் சுட்டுக்கொல்ல முடியாது” என்று டிக்சிற்றுக்கு அறிவிக்கச் சொன்னார். அதை டிக்சிற்றுக்கு அறிவித்தேன். அதற்கு டிக்சிற் சொன்னார் ‘ராஜீவ் காந்திதான் இந்த அறிவுறுத்தலை எனக்குச் சொன்னார். ஆனால் அதை நிறைவேற்ற இந்தியப்படை தயங்குகின்றது. இதற்கு இந்திய சமாதானப்படையின் கட்டளை அதிகாரி என்ற வகையில் நீர்தான் பொறுப்பு” என்று தன்னைக் குற்றம் சாட்டியதாக நூலாசிரியர் தகவல் தெரிவிக்கின்றார்.

டிக்சிற்றுடன் தான் நடந்துகொண்ட விதம் தொடர்பாக அடுத்தநாள் ஜெனரல் சுந்தர்ஜி தனது கோபத்தை என்னிடம் காட்டினார் என்று நூலாசிரியர் கூறியுள்ளார்.

*திலீபனின் ஈகச்சாவு*

திலீபனைச் சாகவிடக் கூடாது என்று திபேந்தர்சிங்கிற்கும் – டிக்சிற்றுக்கும் வலியுறுத்திச் சொன்னதாக நூலாசிரியர் எழுதியுள்ளார். அப்படி நடந்தால் அது இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் தமிழ் மக்களை மாற்றிவிடும் என்று எச்சரித்ததாகவும் கூறுகின்றார்.

செப்ரெம்பர் 25, திலீபனின் உயிர்பிரிவதற்கு முதல்நாள், திபேந்தர்சிங் ஒரு அறிவித்தலைத் தந்தார். தலைவர் பிரபாகரனைச் சந்திக்க டிக்சிற் விரும்புகின்றார் என்பதே செய்தி. அதைப் புலிகளிடம் சேர்ப்பிக்கச் செல்லும் போது வழியில் ஒரு மாபெரும் மக்கள் ஊர்வலம் எதிர்ப்பட்டது என்று நூலாசிரியர் விபரிக்கின்றார்.

‘தீப்பந்தங்கள்- மாலைகளுடன் பெண்களும் ஆண்களும் இணைந்து நல்லூர் ஆலயம் நோக்கிச் சென்றனர். சாவின் வாசலில் நின்ற திலீபனைச் சந்திக்க அந்த மக்கள் கூட்டம் சென்றது. இந்திய எதிர்ப்பு சிங்கள எதிர்ப்புக் கோசங்களைக் கூவியவாறு கூட்டம் நகர்ந்தது” என்று நூலாசிரியர் விபரித்துள்ளார்.

பிரபாகரன் – டிக்சிற் சந்திப்பிற்கு இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது திலீபன் உயிர்நீத்தார். பலாலியில் இருந்த தனது தலைமைப்பணிமனையை நோக்கி தலைவர் பிரபாகரன் வந்துகொண்டிருந்த போது திலீபன் மரணித்திருந்தார்” என்று நூலாசிரியர் தனது நினைவுகளை மீட்டுள்ளார்.

‘திலீபனின் சாவுடன் ஐ.பி.கே.எவ். மீதான நம்பிக்கையைப் புலிகள் இயக்கம் இழந்துவிட்டது” என்று நூலாசிரியர் கூறுகின்றார்.

இந்தச் சம்பவத்திற்கு முன் இந்திய அமைதிப்படையையும் றோ|வையும் புலிகள் சரியாகவே இனம் பிரித்து அறிந்து வைத்திருந்தனர். ~றோ|வின் சதிவேலைகளைப் புலிகள் ஆதாரங்களுடன் தம்மிடம் சமர்ப்பித்தனர் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

*படகுத் துயரம்*


தளபதிகள் புலேந்திரன் – குமரப்பா உட்பட 12 புலிகளின் இழப்பை நூலாசிரியர் ~படகுத்துயரம் என்ற மகுடத்தில் எழுதியுள்ளார். கடலில் 17 புலிகள் சிங்களப் படையால் கைது செய்யப்பட்டார்கள் என்ற செய்தி புலிகளிடமிருந்து கிடைத்த உடனேயே அவர்கள் கொழும்பிற்கு எடுத்துச் செல்வதைத் தடுப்பதற்காக பிரிகேடியர் பெர்னாண்டசை அனுப்பினேன் என்று நூலாசிரியர்
தெரிவித்துள்ளார்.

தலைவர் பிரபாகரனைப் பல தடவைகள் தான் சந்தித்திருந்ததால் தலைவரின் மனவோட்டத்தைத் தான் நன்றாக விளங்கிக் கொண்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். அந்தப் 17 புலிகளையும் இந்திய அமைதிப் படை பாதுகாக்கத் தவறினால் பிரபாகரனின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று தான் நன்றாக அறிந்து வைத்திருந்ததாகவும் அவர் எழுதியுள்ளார். அந்தப் 17 புலிவீரர்களும் பலாலி வான் தளத்தின் அறையொன்றில் வைக்கப்பட்டிருந்தனர். அது இந்திய அமைதிப்படையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த இடத்தைச் சூழ 60 சிங்களப் படையினர் சிங்களத் தள பதிகளால், நிலைகொள்ள வைக்கப்பட்டனர். அந்த 60 சிங்களச் சிப்பாய்களையும் சுற்றி ஒரு பலமான பாதுகாப்பு வேலியைப் போடுமாறு ஒரு இயந்திரப் படைக்கொம்பனிக்கும் – பரசூட் படையணிக்கும் உத்தரவிட்டேன் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

17 புலிகளையும் கொழும்புக்குக் கொண்டுசெல்ல சிங்களப்படை முயற்சித்தால் சயனைட் உண்டு புலிகள் சாகத்தயாராக இருப்பதாகத் தனது மேலதிகாரியான லெப்.ஜெனரல் திபேந்தர்சிங்கிற்கு அறிவித்ததாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 05 ஆம் திகதி (1987) பிற்பகல் 2.15 மணியளவில் தனக்கு ஒரு அவசரச் செய்தி அனுப்பப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். (இந்திய) ‘இராணுவத் தளபதியிடமிருந்து கர்கிரத்சிங்கிற்கு” என்று அந்தச் செய்தி இருந்தது.
அந்தச் செய்தியில்………..

பலாலிப் படைத்தளத்தின் சிங்களத் தளபதி பிரிகேடியர் ஜெயரட்ணா தான் விரும்பியதைச் செய்யட்டும். நீர் ஏன் சிறிலங்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் தலையிடுகின்றீர்….

சிறிலங்காவின் விமானங்களை நீர் தடுக்க வேண்டாம்… என்றிருந்தது. என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

இந்தச் செய்தியைத் தொடர்ந்து ஐ.பி.கே.எவ். இன் பாதுகாப்பை நீக்கும்படி நான் உத்தரவிட்டேன். இந்திய அமைதிப் படையினர் விலகிக்கொண்ட உடனேயே சிங்களப் படைகள் புலி வீரர்கள் வைக்கப்பட்டிருந்த அறையினுள் பாய்ந்தனர்.

*புலிகள் சயனைட்டுக்களை உண்டனர்.*

புலேந்திரனும் – குமரப்பாவும் ஆளுக்கு இரண்டு சயனைட்டுக்களை உண்டு உயிர் நீத்ததாகத் தனது மருத்துவர்கள் அறிக்கை தந்ததாக நூலாசிரியர் தெரிவித்துள்ளார்.

‘(சிங்கள) எதிரிக்கு அச்சமூட்டும் ஒரு தளபதியாக புலேந்திரன் இருந்துள்ளார்” என்று கூறும் நூலாசிரியர், அவரை உயிருடன் தம்மிடம் ஒப்படைக்கும்படி சிங்கள இராணுவத் தளபதி ஜெனரல் ரணதுங்கா தன்னிடம் கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திருமலை நகரில் இன மோதல் நடந்த இடங்களைத் தான் நடந்து சுற்றிப் பார்த்த போது தன்னுடன் புலேந்திரனும் வந்தார் என்று நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

தளபதி குமரப்பா பற்றி நூலாசிரியர் குறிப்பிடும்போது ‘யாழ்ப்பாணத்தில் தான் சந்தித்த முதல் புலித்தளபதி குமரப்பாதான்” என்று எழுதியுள்ளார். தளபதிகள் புலேந்திரன், குமரப்பா ஆட்களைப் பாதுகாக்க தான் முயன்றதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்களைக் கைவிட்டது டிக்சிற்தான் என்றும்
கூறியுள்ளார்.

ஒக்டோபர் 08 ஆம் திகதி 1987 ஜெனரல் சுந்தர்ஜி பலாலி வந்து புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கும்படி தனக்கு பணிப்புரை வழங்கினார். அத்துடன் டிக்சிற்றுடன் நீர் ஒத்துழைக்கின்றீர் இல்லை என்பது தெரியும். அவர் தனது வேலைகளைத்தான் செய்கின்றார். அவருடைய அறிவுறுத்தல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தனக்கு அறிவுரை வழங்கினார் என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்.

அத்துடன் சில பிங் கலர் தாள்களைத் தன்னிடம் தந்து வாசிக்கும்படி கட்டளையிட்டார். புலிகளுக்கு எதிரான போர் தொடர்பான ஜெனரல் சுந்தர்ஜியின் சிபார்சுகளைப் பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்றுக்கொண்டுவிட்டார் என்பது அந்தப் பிங்கலர் தாள்களைக் கண்டதும் தனக்குப் புரிந்து விட்டதாக நூலாசிரியர் எழுதியுள்ளார்.

‘இன்றிரவே (08 ஆம் திகதி) தாக்கு” என்று லெப். ஜெனரல் திபேந்தர்சிங்கின் முன்னிலையில் ஜெனரல் சுந்தர்ஜி தனக்கு உத்தரவிட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

உத்தரவை நடைமுறைப்படுத்த கிளிநொச்சி – வெள்ளாங்குளம் – முழங்காவில் போன்ற இடங்களில் புலிகளின் முகாம்களைத் தாக்குமாறு தான் படையினரைப் பணித்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்தத் தாக்குதல்கள் 08 ஆம், 09 ஆம் திகதிகளில் நடந்தது.

*ஒக்டோபர் 10 ஆம் திகதி இந்திய புலிகள் போர் தொடங்கியது.*



பல முனைகளைத் திறந்து யாழ். நகரைக் கைப்பற்ற நான் படைநகர்த்தினேன்” என்கின்றார். தான் நடாத்திய சண்டைகளை நூலாசிரியர் வரைபடங்களின் உதவியுடன் விளக்க முயன்றுள்ளார்.

I. ஆனைக்கோட்டை சமர்
II. யாழ் – பழைய பூங்காவைக் கைப்பற்றும் சண்டை
III. சுதுமலை நடவடிக்கை
IV. உரும்பிராய் சந்தியைக் கைப்பற்றும் சண்டை
V. கோப்பாய் சமர்
VI. கந்தரோடைச் சமர்
VII. மருதனார்மடம் சமர்

இவ்வாறாகச் சண்டைகளை இனங் காட்டி அந்தச் சண்டைகளின் தன்மைகள் பற்றிச் சுருக்கமாக விபரம் தந்துள்ளார்.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திட்ட பின்னர் சிறிலங்கா சனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுக்கு எதிராக ஒரு இராணுவச் சதிமுயற்சி நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் கொழும்பிலுள்ள தாஜ் தங்கு விடுதியில் 100 சிறப்புக் கொமாண்டோப் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும் நூலாசிரியர்
தகவல் வெளியிட்டுள்ளார். சண்டை தொடங்கியதும் இந்தக் கொமாண்டோப் படையினர் பலாலிக்கு அழைக்கப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

(பெப்ரவரி 1988) இந்திய – புலிகள் போர் தொடங்கி 4 மாதங்களின் பின்னர் லெப். ஜெனரல் திபேந்தர் சிங்கின் இடத்திற்கு லெப். ஜெனரல் கல்கட் நியமிக்கப்பட்டார் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

லெப். ஜெனரல் திபேந்தர் சிங் ஓய்வுபெற்றுச் செல்ல சில வாரங்களுக்கு முன்னர் (சனவரி 1988) நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங்கும் பணி மாற்றம் செய்யப்பட்டு இந்தியா சென்றார். பணிமாற்றத்திற்கான காரணம் தனக்குத் தெரியாதென்று கூறும் நூலாசிரியர் டிக்சிற்றுடனான முரண்பாடு காரணமாக இருக்கலாம். பிரபாகரனைக் கைது செய் அல்லது சுட்டுக்கொல் என்ற டிக்சிற்றின் உத்தரவைத் தான் மறுத்ததாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

1155 இந்தியப்படையினர் புலிகளுடனான போரில் கொல்லப்பட்டனர் என்று நூலாசிரியர் விபரம் தந்துள்ளார்.

03 தொடக்கம் 07 நாட்களுக்கிடையில் படை நடவடிக்கையை முடித்து – புலிகளை அழிக்க முடியும் என்று தான் சொன்னதாக வெளியாகியிருந்த செய்திகளை நூலாசிரியர் மறுத்துள்ளார்.

இந்தக் காலக்கெடுவை ராஜிவ் காந்தியிடம் சொன்னவர் ஜெனரல் சுந்தர்ஜிதான் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டள்ளார். புலிகளுடன் சண்டை தொடங்கினால் அந்தப் போர் பத்து வருடங்களுக்கும் கூடுதலான காலம் நடக்கும் என்று மிசோராம் – நாகலாந்து உதாரணங்களைக் குறிப்பிட்டு லெப். ஜெனரல் றொட்டிற்கோவிற்கு தான் சொன்னதாக நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

றொட்றிற்கோ அதை நம்பவில்லை ‘நகர்ப்புற போர்முறையில்தான் புலிகள் பயிற்றப்பட்டிருக்கின்றார்கள்” என்றும் காரணம் சொன்னார் என எழுதியுள்ளார். சமாதானக் காலத்தில் தலைவர் பிரபாகரனைக் குறிவைத்தது போல போர்க் காலத்திலும் தலைவரைக் குறிவைத்து இந்தியப்படை நடாத்திய மூன்று சம்பவங்களை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

*முதலாவது சம்பவம்*

போர் தொடங்கிய மறுநாள் நிகழ்ந்தது அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்…..

பலாலியில் இருந்த சிங்கள இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து நான் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஒன்றைப் பெற்றேன். அதாவது, கொக்குவில் பகுதியில் இருந்து தலைவர் பிரபாகரன் அவர்கள் போரை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார் என்பதே அந்தத் தகவல்.

இந்தத் தகவலை லெப். ஜெனரல் திபேந்தர் சிங்குடன் விரிவாகக் கலந்தாலோசித்தேன். தலைவரின் இருப்பிடத்தைத் தாக்கி அழிப்பதற்கான அனுமதியையும்-அதற்குத் தேவையான மேலதிக உதவிகளையும் திபேந்தர்சிங் வழங்கினார். எனது கட்டளைப்பீடத்திலிருந்த திபேந்தர்சிங் அங்கிருந்து மேஜர். ஜெனரல் கல்கட்டிடம் ஒரு அறிவுறுத்தலை விடுத்தார். அந்தத் தாக்குதலுக்கான மேலதிக துருப்புக்களை (இந்திய) இராணுவத் தலைமைப் பீடத்திலிருந்து கேட்டுப்பெறுமாறு அறிவுறுத்தினார். இந்தத் தாக்குதல் தமது படையினரின் ஒருங்கிணைப்பின்மையாலும் புலிகளின் நேர்த்தியான எதிர்த் தாக்குதல்களாலும் தோல்வியடைந்தது, என்று நூலாசிரியர் எழுதியுள்ளார்

*இரண்டாவது சம்பவம்*

டிசம்பர் 1987 இல் நடந்தது.

வடமராட்சியிலுள்ள ஒரு வைத்தியசாலை வளாகத்தில் நின்றபடி தலைவர் பிரபாகரன் அவர்கள் கடலை நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்ததாக ‘றோ’ அமைப்பினர் ஒரு தகவலை வழங்கியிருந்தனர். தாக்குதலுக்காகப் படையினர் அனுப்பப்பட்டனர்.
இந்த நடவடிக்கையைக் கட்டளை அறையிலிருந்து தான் மேற்பார்வை செய்து கொண்டிருந்ததாக நூலாசிரியர் எழுதியுள்ளார். ஆனால் நடு இரவு தாண்டியும் கடல்வழி தரையிறக்கத்திற்கான கடற்கலம் வந்து சேரவில்லை. விடியத் தொடங்கியதால் துருப்புக்களைப் பின்வாங்கச் சொல்லிக் கட்டளையிட்டேன். அப்போது நாங்கள் எங்கே தரையிறங்க இருந்தோமோ! அங்கிருந்து புலிகள் கடுமையாகத் தாக்கினர் என்று நூலசிரியர் விபரித்துள்ளார்.

கடலிலிருந்து பீரங்கிச் சூட்டாதரவு செறிவாகக் கிடைத்துக்கொண்டிருந்தாலும் எங்களால் அந்த இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை என்று களத்தில் தலைமை வகித்துக்கொண்டிருந்த கேணல் சொன்னதாக நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.

*அடுத்த சம்பவம் வித்தியாசமானது*

தமது உளவுத்துறையினரின் தகவல் சேகரிப்புக்களையும்- தமது படைத்தளபதிகளையும் கேலி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
அந்தச் சம்பவத்தை நூலாசிரியர் இவ்வாறு எழுதியுள்ளார்.

மட்டக்களப்பில் ஒரு புலி பிடிபட்டிருக்குது. அவரை விசாரித்த கொமாண்டர் தான் பிரபாகரனின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிட்டேன், அவரைப் பிடித்த மாதிரித்தான் என்பது போல லெப். ஜெனரல் றொட்றிக்கோவுக்கு (மட்டு. ஐ.பி.கே.எவ். தளபதி) அறிவிக்க, இவரும் நம்பிவிட்டார். பிரபாகரனைப் பிடித்து விட்டதாகத் தான் அறிவிக்கலாம் என்று லெப். ஜெனரல் நம்பிவிட்டார். அதனால் என்னையும் கூட்டிக்கொண்டு மட்டக்களப்புக்குப் பறந்தார். அங்கே சென்று பார்த்த பிறகுதான் உண்மை தெரிந்தது பிரபாகரனைப் பற்றி எதுவுமே தெரியாத ஒரு அப்பாவித் தமிழன்தான் பிடிபட்டிருந்தான் என்று தெரிந்தது” என்று நகைச்சுவையாக எழுதியிருந்தார்.

*முடிவுரை *

முறுக்கு மீசை – வெங்கல ஓசைச்சிரிப்புடன் நூலாசிரியரான மேஜர் ஜெனரல் கர்கிரத்சிங் புலிகளுக்கு அறிமுகமாகியிருந்தார். இந்திய சமாதானப் படைத் தளபதிகள் சிலர் எழுதி வெளியிட்ட நூல்களுடன் ஒப்பிடுகையில் கர்கிரத் சிங்கின் இந்த நூல் சற்று வேறுபடுகின்றது.

மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங்கின் கருத்துக்களில் ளிப்படைத்தன்மை காணப்படுகின்றது. அவரின் கணிப்பீடுகளில் ஒரு நேர்மை வெளிப்படுத்தப்படுகின்றது. பல உண்மைகளையும் அவர் அம்பலமாக்கியுள்ளார். புலிகளுக்கும் மக்களுக்குமான பிணைப்பை அவர் சரியாக இனங்கண்டு நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய சமாதானப் படைத் தளபதியாக இங்கே அவர் பணியாற்றிய காலம் குறுகியது. சமாதான காலத்தில் மூன்று மாதமும் – போர்க்களத்தில் மூன்று மாதமும் என மொத்தம் ஆறு மாத காலம் மட்டுமே இங்கே பணியாற்றியிருந்தார். 1988 ஜனவரியில் பணிமாற்றம் செய்யப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.

டிக்சிற்றுடனான முரண்பாடும் – அவரது அறிவுறுத்தல்களை ஏற்க மறுத்ததும்தான் தனது பணிமாற்றத்திற்குப் பிரதான காரணம் என்றும் நூலாசிரியர் கூறியுள்ளார்.

டிக்சிற்றுடன் உடன்பட்டு வேலை செய்யத் தவறுவது பற்றி ஜெனரல் சுந்தர்ஜி தன்னைக் கடிந்து கொண்டதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார். பிரதமர் ராஜிவ் காந்தியின் குரலாகத் தான் ஒலிப்பதாக டிக்சிற் தன்னிடம் கூறியதாகவும் நூலாசிரியர் எழுதியுள்ளார்.

இந்திய சமாதானப்படைக்கு ஒரு உத்தரவு – இந்திய புலனாய்வுத்துறை றோ வுக்கு இன்னொரு உத்தரவு என்று குழம்பி எழுதும் நூலாசிரியர், அரசியலில் – இராணுவ ரீதியில் பெரும் குழப்பம் இந்தியத் தரப்பில் இருந்ததாகவும் எழுதியுள்ளார். நூலாசிரியரின் குழப்பம் பற்றி இங்கே அதிகம் ஆய்வு செய்வதற்கு எதுவுமில்லை. நூலாசிரியர் கூறுவதுபோல அவை ஒரு ~குழப்பமான செயற்பாடு அல்ல. அவை ஒரு நாடகத்தின் பல்வேறு காட்சிகள். இந்திய அரசிற்குப் பெருந் தோல்வியாக முடிந்த அந்த நாடகம் பற்றிய விளக்கங்கள் இங்கே தேவையில்லை.

அரசியல் கணிப்பீடுகளில் நேர்மையும் – வெளிப்படைத்தன்மையும் காட்டிய நூலாசிரியர் தான் நடாத்திய போரில் தமிழ்மக்கள் அடைந்த கொடுமைகள் – அழிவுகள் பற்றிய விடயங்களில் நேர்மையையும் கடைப்பிடிக்கவில்லை. வெளிப்படைத் தன்மையையும் கைக்கொள்ளவில்லை. அவற்றை ஒட்டுமொத்தமாகவே இருட்டடிப்புச் செய்துள்ளார். அந்த வகையில் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக நடந்துள்ளார். நூலாசிரியர் நடாத்திய மூன்று மாதப் போர் என்பது யாழ் நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் மும்முனையில் நடாத்தப்பட்ட ஒரு பாரிய மரபுச்சமர். இந்த மூன்று மாதப் போர்க்காலத்தில் யாழ் குடாநாட்டில் மட்டும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை மூவாயிரத்திற்கும் மேல்.
பிரம்படிப் படுகொலை – கொக்குவில் பாடசாலைப் படுகொலை – யாழ் வைத்தியசாலைப் படுகொலை…. என்பன அவற்றில் முக்கியமானவை. மக்களின் வாழிடங்கள் மீது ஆட்டிலறிகள் – டாங்கிகளால் சுட்டு – மக்களைக் கொன்றும் – அகதிகளாக்கியும் – பாலியல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டும் யாழ் நகரை ஆக்கிரமித்த சாதனையை அவர் எழுதவில்லை. மாறாக, மிக உயர்ந்த கட்டுப்பாடு – ஒழுக்கத்தை இந்தியப் படையினர் கடைப்பிடித்தனர். தமிழ் மக்களிடமிருந்து நன்மதிப்பைப் பெற்றனர் என்று மனச்சாட்சியில்லாமல் நூலாசிரியர் பொய் கூறியுள்ளார்.
அதேபோன்று, யாழ்ப்பாண ஊடகங்களான ஈழமுரசு, முரசொலி மற்றும் புலிகளின் ஒளி – ஒலிபரப்பு நிலையங்களை அழித்த செயலைக் கர்கிரத் வெட்கமின்றி நியாயப்படுத்தியுள்ளார். அந்த ஊடகங்கள் நாள்தோறும் செய்திகளை – தகவல்களை மக்களுக்கு நேர்த்தியாக வழங்கி வந்தன. புலிகளின் இராணுவ சாதனைகளை மெச்சிப்பேசி மக்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தன என்று தாக்குதலுக்கான காரணங்களை அவர் விளக்கியுள்ளார்.
இந்திய – புலிகள் போர் சுமார் இரண்டு வருடங்களுக்கும், இரண்டு மாதங்களுக்கும் நடந்திருந்தன. இதில் முதல் மூன்று மாதங்கள் மட்டும் நடந்த போரின் கதையைத்தான் தனது பார்வையில் நூலாசிரியர் எழுதியுள்ளார். இந்த மூன்று மாதகாலப் போருக்குள்ளேயே தலைவர் பிரபாகரன் மீது மூன்று – நான்கு தடவைகள் இந்தியப்படைகள் கொலைத் தாக்குதலுக்கு முயன்றன. ஆனால், போர் தீவிரமடைந்து வன்னி நிலப்பரப்பு முக்கிய போர்க்களமாகிய பின்னர், தலைவர் பிரபாகரனைக் கொலை செய்ய இந்தியப் படைகள் பல சமர்களையே நடாத்தியிருந்தன. எல்லாவற்றிலும் இந்தியப்படை தோற்கடிக்கப்பட்டிருந்தது.
இந்தியப்படையின் தோல்விக்கு இந்திய அரசின் குழப்பகரமான கொள்கை – பலரின் தலையீடு என்பன பிரதான காரணம் என்று நூலாசிரியர் கூறியுள்ளார். தனது இதே கருத்தையே தனக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட தளபதியான மேஜர் – ஜெனரல் சர்தேஸ் பாண்டேயும் சொல்லியுள்ளார். என்று நூலாசிரியர் நியாயம் சொல்லி – அதற்கு மற்றைய தளபதிகளையும் துணைக்கு அழைத்துள்ளார்.
ஆனால், தோல்விக்கான காரணம் புலிகள் இயக்கத்திடம் இருந்தது என்பதே உண்மையாகும். *தலைவர் பிரபாகரனின் போரியல் திட்டங்களும் – அவரது* *தலைமைத்துவ ஆளுமையும்தான்*முக்கிய காரணங்களாகும். அத்துடன், *போராளிகளினதும் – மக்களினதும் வீரத்திலும் – ஓர்மத்திலும் – சுதந்திர உணர்விலும்* இருந்தது.*

Get this widget