thalaivan

thalaivan

வியாழன், 20 பிப்ரவரி, 2014

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 09

தமிழரின் இரத்தத்தில் குளித்த ஹிந்தியா !!!

சிங்களன் கொடியவன் தான் ஆனால் அதை விட கொடியவன் ஹிந்தியன்... 

தமிழர் போராட வேண்டியது சிங்களவனுக்கு எதிராக மட்டும் இல்லை ஹிந்தியனுக்கு எதிராகவும்!!!

புலிகளுடன் சண்டைகள் மூளும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும் அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர்.

ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவு இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த பரசூட் தரையிறக்கத் தாக்குதல் நடவடிக்கை மட்டும் இந்தியப் படையினர் நினைத்தபடி வெற்றிகரமாக நடைபெற்றிருந்தால், அவர்களது எண்ணம் நிச்சயம் ஈடேறியிருக்கும். ஆனால் புலிகளின் எதிர்த்தாக்குதலும் அதில் புலிகள் அடைந்திருந்த வெற்றியும் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. 

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தமது யாழ் முற்றுகையின் இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்கு முற்பட்ட போதிலும், அதுவும் அவர்களுக்கு ஈடேறவில்லை. யாழ் கோட்டையில் இருந்து நகர்வினை மேற்கொண்டு யாழ் நகரைக் கைப்பற்றுவதும் அவர்களுக்கு முடியாது போயிருந்தது. யாழ் கோட்டை வாயில்களை அடுத்து புலிகள் அமைத்திருந்த பலமான கட்அவுட் நிலைகள் இந்தியப் படையினரின் எந்தவொரு நகர்வினைவும் சாத்தியமற்றதாக்கியிருந்தது. 

யாழ் கோடைக்குள்ளிருந்த இந்தியப் படையினர் வெளியே நகரமுடியாது தவித்ததானது அவர்கள் ஒரு முற்றுகைக்குள் உள்ளானது போன்ற ஒரு பீதியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. யாழ் கோட்டைக்குள் அடைபட்ட நிலையில் இருந்த இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் இதுபோன்ற ஒரு அனுபவம் அவர்களுக்கு முன்னெப்போதுமே ஏற்பட்டதில்லை. 

முகாமொன்று பூரண முற்றுகைக்கு உள்ளாகி, அந்த முகாமிற்குள் அடைபட்டிருந்த அனுபவம் இந்தியப் படையினருக்கு முன்னெப்போதும் ஏற்பட்டதேயில்லை. அதுவும் வேற்று நாடொன்றில் இவ்வாறு அநாதரவாக விடப்பட்டது போன்றதொரு நிலை அவர்களைக் கதிகலங்க வைத்தது.

போதாததற்கு கோட்டையில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் புலிகள் பற்றியும் தமிழ் மக்கள் பற்றியும் இந்தியப் படையினரின் பயத்தை அதிகரிப்பது போன்ற கதைகளை அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் இருந்து ஒரு காரியத்தை மட்டும் ஒழுங்காகச் செய்தார்கள். யாழ் நகரிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அங்கிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் அதற்கு உற்சாகம் வழங்கினார்கள். 

விளைவு- பல தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மறுபடியும் ஒரு அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 

படுகொலைகளின் அத்தியாயங்கள்: 



யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கும், யாழ் கோட்டையினுள் அடைபட்ட நிலையில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த இந்தியப் படையினரை மீட்பதற்கும், புலிகளை ஒழிப்பதற்கும் என்று இந்தியப் படையினர் பலாலியில் இருந்து பல முனைகளிலும் நகர்வுகளை ஆரம்பித்திருந்தார்கள். 

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினுடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும் ஜே.எஸ்.டிலானும் அந்தப் படைப்பிரிவை தலைமை தாங்கி வழி நடாத்திக் கொண்டிருந்தார்கள். இந்தப் படைப்பிரிவு உரும்பிராய் பிரதேசத்தை வந்தடைந்தபோது மற்றொரு அனர்த்தம் நிகழ்ந்தது. 

பாதையூடாக நகர்வினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் படுகொலைகளின் அத்தியாயமொன்று தமிழ் மக்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டது. 

கண்ணிவெடிச் சம்பவத்தை அடுத்து இந்திய இராணுவத்தினர் கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றார்கள். பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பலவும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. அச்சத்தின் காரணமாக வீடுகளைப் பூட்டிவிட்டு வீட்டினுள்ளேயே மறைந்திருந்தவர்களை கதவுகளை உடைத்துக்கொண்டு உட்சென்ற இந்தியப்படையினர் சுட்டுக்கொன்றார்கள். 

உரும்பிராய் பிரதேசத்தில் 93 வயது மூதாட்டி உட்பட நான்கு பெண்கள் தங்கியிருந்த ஒரு வீட்டினுள் புகுந்த இந்தியப் படையினர் அங்கிருந்த நான்கு பெண்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொன்றார்கள். நோய் காரணமாக படுக்கையில் இருந்த மூதாட்டி கட்டிலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மற்றயை இளம் பெண்களின் சடலங்கள் வீட்டின் பின்பகுதியில் இருந்து பின்னர் கண்டெடுக்கப்பட்டன. 

உரும்பிராய் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கை திருச்சபைக்கு எதிரே இருந்த பொன்னம்பலம் என்பவருக்குச் சொந்தமான வீடொன்றினுள் அயலில் வசித்த சிலர் அடைக்கலம் தேடிச் சென்றிருந்தார்கள். ஆசிரியரான பஞ்சாட்சரம் என்பவருடைய குடும்பம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான பிரேமா, அவரது தாயான திருமதி சின்னத்துரை போன்றவர்களும் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்திருந்தார்கள். 

பொன்னம்பலத்தின் குடும்பத்தினர். மற்றும் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்று மொத்தம் 11 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். அந்த வீட்டை சூழ்ந்துகொண்ட இந்தியப் படையினர், வீட்டில் தங்கியிருந்த அனைவரும் உடனடியாக வெளியே வரவேண்டும் என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உத்தரவு பிறப்பித்தார்கள். வெளியே வராவிட்டால் வீட்டையே குண்டுவீசித் தகர்த்துவிடப் போவதாகவும் எச்சரித்தார்கள். 

வேஷ்டி ஒன்றைக் கிழித்து வெள்ளைக் கொடி தயார் செய்த பொன்னம்பலம், அந்தக் கொடியை கையில் ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வீட்டிலிருந்த மற்றவர்களும் வெளியே வந்தார்கள். 

“பையா“| என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. திருமதி சின்னத்துரை, பொன்னம்பலம் தவிர மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள். 

திருமதி சின்னத்துரையின் கணவர் தனது மனைவியையும், மகள் பிரேமாவையும் பாதுகாப்பாக பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு உரும்பிராய் சந்தியிலிருந்த தனது வீட்டியேயே தங்கியிருந்தார். “கவலைப்படாதேயும் அவையள் சண்டை பிடிக்கவந்த இராணுவத்தினர் இல்லை. அவையள் அமைதிகாக்கும் இராணுவத்தினர். நான் அவர்களுக்கு விளங்கப்படுத்துவேன்“ என்று மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலேயே தங்கிவிட்டார். அவரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். 

வயது முதிந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமே இப்பிரதேசத்தில் அனேமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள். இளைஞர்கள் ஏற்கனவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்ததால் இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் குறைவு என்றே கூறவேண்டும். 

தொடர்ந்த கொலைகள்: 

அப்பிரதேசத்தில் இருந்த வீடொன்றில், யாழ் பல்கலைக்கழக மாணவியான அம்பிகா என்ற பெண்ணின் தாயாரும், பாட்டியும் மலையகத்தைச் சேர்ந்த வயதான வேலைக்காரர் ஒருவரும், மற்றொரு முதியவரும் வசித்து வந்தார்கள். அப்பிரதேசத்தில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, வீட்டைப் பூட்டிவிட்டு கட்டில்களின் கீழேயும் மேசைகளின் கீழேயும் மறைந்திருந்த அந்த முதியவர்கள் தங்களது வீட்டைக் கடந்து யுத்த தாங்கியும் இந்தியப் படையினரும் செல்வதை இரைச்சலின் மூலமும் பேச்சொலிகள் மூலமும் அறிந்துகொண்டார்கள். இந்த அரவங்கள் ஓய்ந்து சிறிது நேரத்தின் பின்னர், அந்த வீட்டில் இருந்த முதியவர் மெதுவாக எழுந்து வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று நிலமையை அவதானிப்பதற்கு எத்தனித்தார். 

அங்கிருந்த எவருமே இந்தியப் படையினருக்கு கொஞ்சமும் பயப்படவில்லை. சண்டைகளின் இடைநடுவில் சிக்குண்டுவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததே தவிர, ஸ்ரீலங்கா இராணுவம் போன்று இந்தியப் படையினர் அப்பாவி மக்களை கொலைசெய்துவிடுவார்கள் என்ற அச்சம் அங்கிருந்த முதியவர்களுக்குச் சிறிதும் கிடையாது. 

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் எட்டிப் பார்த்த முதியவரை நோக்கி ஒரு துப்பாக்கிச் சன்னம் சீறிக்கொண்டு புறப்பட்டது. இந்திய யுத்த தாங்கியின் பின்னால் மறைந்தபடி வந்திருந்த படை வீரர்களில் சிலர் அப்பிரதேசத்தில் ஏற்கனவே பதுங்கி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒருவனே முதியவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தான். எந்தவித சத்தமும் இடாது அந்த முதியவர் சரிந்து கீழே வீழ்ந்தார். 

அதனைத் தொடர்ந்து மேலும் சில இந்தியப் படை வீரர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக்கொன்றார்கள். முதலாவது வெடிச் சத்தம் கேட்டதுமே நிலமையைப் புரிந்துகொண்டு மறைவிடம் ஒன்றினுள் பதுங்கிக்கொண்ட அந்த மலையக வேலையாள் மட்டும் உயிர் தப்பியிருந்தார். 

இந்தியக் கொலைகாரர்கள்: 

இந்தியப் படையினர் அப்பிரதேசத்தில் அந்த இரண்டு நாட்களிலும் மேற்கொண்ட கொலைகள் எண்ணில் அடங்காதவை. பல படுகொலைச் சம்பவங்கள் அங்கு இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனேகமான சம்பவங்கள் பற்றிய செய்தியை வெளியே தெரிவிப்பதற்குக் கூட எவருமே மிஞ்சாத வகையில் பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அங்கு இடம்பெற்றிருந்தன.  அப்பிரதேச மக்கள் என்றுமே கண்டும், கேட்டும் அறிந்திராத அவலங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது.

அப்பிரதேசத்தில் வசித்து வந்த சிவப்பிரகாசம் என்ற நபர் முறிந்த பனை என்ற நூலின் ஆசிரியர்களிடம் கூறும்போது “எனது வீடு அமைந்திருந்த அரை மைல் சுற்று வட்டாரத்திற்குள் மாத்திரம் 18 பொதுமக்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்கள். இவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள், அவர்களும் 60 வயதைக் கடந்திருந்தவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.

நாற்பத்தேழு வயது வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரம், முப்பது வயதான அவரது மனைவி டொரத்தி, மூன்று வயது மகள் ஷெரின் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அதிர்ச்சியுற்ற அவர்கள் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில் தங்குவது நல்லது என்று நினைத்து வீட்டை விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தார்கள். அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

ஏகாம்பரத்தின் வீட்டுக்கு அடுத்ததாக டொரத்தியின் மைத்துனி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவரது தாயார், அவரது சகோதரன், ஏழு வயதுக் குழந்தை ஒன்று என்று பலர் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்களது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இந்தியப்படையினர் வீட்டில் இருந்த அனைவரையும் சுட்டுக்கொன்றார்கள். அவர்களது உடல்களையும் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்த ஏகாம்பரம் தம்பதிகளின் உடல்களையும் அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் போட்டு கிரவல் கற்களினால் மூடியிருந்தார்கள். 

சிறிது காலத்தின் பின்னர் அந்த குழியைத் தோண்டிய போது, ஏகாம்பரம் தனது குழந்தையை அணைத்தபடி எலும்புக்கூடாக காட்சியளித்ததாக ஊர்மக்கள் தெரிவித்தார்கள். 

இதேபோன்று அப்பிரதேசத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தங்களது இளம் பிள்ளைகளை பாதுகாப்பாக ஏற்கனவே வெளியே அனுப்பிவிட்டு வீடுகளில் தங்கியிருந்த வயது முதிந்தவர்களே அனேகமாக கொல்லப்பட்டிருந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்த இந்தியப்படை வீரர்கள் அங்கு தங்கியிருந்த முதியவர்களை இரக்கம் இன்றிச் சுட்டுக் கொன்றிருந்தார்கள். 

அப்பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ற்கும் அதிகம் என்று உத்தியோகப்பற்றற்ற கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. 

ஸ்ரீலங்காப் படைகளும் களத்தில்? 

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இந்தியப் படையினாரின் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினரும் துணைபோயிருந்தது பற்றிய பல செய்திகள் அந்த காலகட்டத்தில் வெளியாகி இருந்தன. 

இந்தியப் படையினர் யாழ்நகரை நோக்கி ஸ்ரீலங்காப் படையினரின் உதவிகளையும் பெற்றிருந்த விடயம் அப்பொழுது மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டில் எதிர்ப்புக்கள் உருவாகிவிடும் என்பதால் இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் உதவிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன. 

ஆனாலும், இந்தியப் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்காப் படையினர் பல சந்தர்ப்பங்களில் தம்மை மறந்த நிலையில் சிங்களத்தில் பேசிய தம்மை வெளிக்காண்பித்திருந்தார்கள். 

இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்காப் படையினருக்கு ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியாது, தமிழும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது சிங்களம் மட்டுமே. 

மற்றய ஸ்ரீலங்காப்படை வீரர்களுடன் அவர்கள் சிங்களத்தில் பேசியதை வீடுகளில் மறைந்திருந்த பல தமிழ் மக்கள் கேட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியப்படையினர் மேற்கொண்டிருந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் ஜென்ம விரோதிகளான சிங்களப் படையினரையும் துணைக்கழைத்துச் சென்றதானது ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய துரோகங்களுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும்...


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 19 பிப்ரவரி, 2014

வான்கரும்புலிகள் ரூபன் , சிரித்திரன் வீர நினைவுகளில்.

‘காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என வானிலும் எங்கள் வீரம் வரலாறு கண்ட வீரத்தின் அடையாளங்களாக வான்புலிகளில் முதல் வான்கரும்புலியாய் போனான் லெப்.கேணல்.சிரித்திரன்.

சிரித்திரன் பெயரைப் போலவே சிரித்த முகம். வீரத்தை விழிகளில் சுமந்த விசித்திரம் அவன். தமிழீழ வான்புலிகள் சரித்திரத்தில் சிரித்திரனும் ஒரு விடி நட்சத்திரம். விடிவெள்ளிகளின் ஒளிக்கதிர்கள் பார்வையில் சிறுபுள்ளயே. எனினும் அதன் வீரியம் என்பது உலகைவிடவும் ஒளிபொருந்தியது. அப்படியே எங்கள் சிரித்தினும் வீரத்தின் விவேகத்தின் ஆற்றலின் ஆதாரம்.விடுதலையின்றேல் வாழ்வில்லை போராட்டமே வாழ்வென்று ஆகியிருந்த காலத்தின் கட்டளையை ஏற்றுச் சிரித்திரனும் புலி வீரனாகியது 1996ம் ஆண்டு. யாழ்மண்ணிலிருந்து வேரறுக்கப்பட்டு வீழ்ந்த வீரம் வன்னியில் புதுப்பிக்கப்பட்ட தருணமது.



விழவிழ எழும் வீர மரபைக் கொண்ட வீரத்தின் வேர்களின் வழியில் தன்னையும் இணைத்த சிரித்திரன் விசுவமடுவில் அமைந்திருந்த மாறன் 1 பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டான்.

முதல் கள அனுபவம் கிளிநொச்சி ஊடறுப்புச் சமராகும். சமர் முனையில் சிரித்திரன் சிறந்த வீரனாய் தனது திறனை வெளிக்காட்டிய போராளி. போர்க்களத்தையே அதிகம் விரும்பிய தாய்மண் விரைவில் வெல்லப்பட வேண்டுமென்பதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த காரியப்புலியவன்.

முதல் கள அனுபவம் முடிந்து வந்த வீரன் 1998 இல் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் பயிற்சிக்குத் தெரிவாகினான். சிறப்பாய் பயிற்சிகள் முடித்து விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ வீரனாகினான். கவசங்களை உடைத்து எதிரியை நிலத்திலிருந்து விரட்டி விடியலைத் தேடி விழித்திருந்த தென்றல் அவன்.

RPG என்ற ஆயுதத்தை சிறிலங்காப் படையினருக்கு அறிமுகம் செய்தவர்கள் புலிகள். ஏனெனில் புலிகள் இவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கிய பின்னரேயே சிறிலங்கா படை RPGஐ பாவிக்கத் தொடங்கியது.

யாழ் மண் எதிரியிடம் பறிபோன பின்னர் வன்னியில் 1996 நடுப்பகுதியில் RPGகொமாண்டோப் பயிற்சிகள் நடைபெற்று RPG அணியொன்று உருவாக்கப்பட்டது. முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருந்த காலத்தில் அந்த RPG அணியானது கிளிநொச்சியைக் கைப்பற்ற முனைந்த சத்ஜெய நடவடிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக களமிறக்கப்பட்டது.

சிறு அணியாக உருவாக்கம் பெற்றிருந்த RPG அணியானது அப்போது சிறப்பான பெயர் எதுவும் சூட்டப்பட்டிருக்காமல் ஒரு படையணியின் சிறு அணியாகவே செயற்பட்டிருந்தது.

சத்ஜெய சமரில் எதிரி அதிகம் டாங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டே படை முன்னேற்றங்களை மேற்கொண்டான். அந்தக் காலத்தில் எதிரியின் டாங்கிகளை எதிர்பார்த்த அளவு அழித்தொழிக்கும் வலுவை RPG படையணி கொண்டிருக்கவில்லை. அப்போது தான் RPG கொமாண்டோ அணியை புதிதாய் வடிவமைக்கும் நோக்கம் தலைவர் பிரபாகரன் அவர்களால் வித்திடப்பட்டது. எப்போதுமே எதிர்காலத்தேவைகளை முற்கூட்டியே உணர்ந்து செயற்படும் தலைவரின் நேரடியான கவனிப்பில் உருவாகியதே RPG கொமாண்டோ அணி. (விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி)

இம்ரான் பாண்டியன் படையணியின் கீழ் ‘கவசத்தை உடைப்போம் நாட்டினை மீட்போம்’ எனும் சுலோக வாக்கியங்களைக் கொண்டு ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ உருவாக்கம் பெற்றது. 1997 தொடக்கத்தில் முதலாவது ‘விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி’ ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகள் நடைபெற்று ‚விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாறு ஆரம்பமாகியது.

இப்படையணியின் சீருடை நெடுக்கு வரிச்சீருடையாகும். ஏனைய படையணிகளிலிருந்து இப்படையணியானது வித்தியாசமாகவே அறிமுகமானது. இப்படையணியின் முதல் களம் ஜெயசிக்குறு களமாகும். ஜெயசிக்குறு ஆரம்பித்து முடிவதற்கிடையில் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி வீரர்கள் அதிகளவில் வீரச்சாவடைந்தார்கள். எனினும் புதிய புதிய அணிகள் வேகவேகமாகப் பயிற்சிகளை முடித்துக் களத்தில் நின்றார்கள். ஜெயசிக்குறு வெற்றியில் இப்படையணியின் பங்கும் காத்திரமானது.

கிளிநொச்சிச் சமரில் வீரச்சாவடைந்த மேஜர் நவச்சந்திரன், ஓயாத அலைகள் மூன்றில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் மணிவண்ணன், சமாதான காலத்தில் சுகவீனமடைந்து சாவடைந்த லெப்.கேணல் சுட்டா போன்றோர் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளாக இருந்தார்கள்.

வன்னியின் மீட்பில் கவசப்படையணியின் பங்கு உணரப்பட்டு தலைவரால் உருவாக்கப்பட்ட இப்படையணியின் பொறுப்பாளராக நியமனம் பெற்று இறுதிவரை ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வேராக விழுதாக வாழ்ந்து வீரச்சாவடைந்தார் தளபதி லெப்.கேணல்.அக்பர் அவர்கள். ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் வரலாற்றில் அக்பர் அவர்களைத் தவிர்த்து வரலாற்றை எழுத முடியாத அளவு அக்பர் அவர்களின் அயராத உழைப்பும் அர்ப்பணிப்பும் ஆணிவேராகியதை என்றென்றும் வரலாறு சுமந்து கொண்டே செல்லும்.


இவ்வாறு பல தளபதிகள் போராளிகள் மாவீரர்களின் தியாகத்தால் உருவாகிய ‚’விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியில் சிரித்திரனும் இணைந்து கொண்டதும் கவசங்களை உடைத்ததும் இன்னொரு வரலாற்றின் பரிணாமம் தான்.

யுத்தம் சமாதானம் இரண்டிற்கும் இடைப்பட்ட காலமொன்றை சர்வதேசத்தலையீடு உருவாக்கிய காலம். 2001 சிங்கள ஆளஊடுருவும் படையணி ஆதிக்கம் வன்னி நிலத்தை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அது RPGகொமாண்டோக்களின் தேவைகளும் அவசியமும் குறைந்த காலம்.

சிங்கள ஆள ஊடுருவும் படையணியின் ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய சவால் நிறைந்த நேரமது. RPGகொமாண்டோவில் இருந்த போராளிகள் தரைக்கரும்புலியாவதற்கு தங்களை இணைக்குமாறு தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தார்கள். அவர்களில் சிரித்திரனும் தரைக்கரும்புலியாக தலைவருக்கு கடிதம் எழுதிவிட்டுக் காத்திருந்தான்.

கரும்புலிகளுக்கு நிகரான ஆள ஊடுருவும் படையணியின் உருவாக்கத்தை தலைவர் தனது நேரடி நெறிப்படுத்தலில் ஆரம்பிப்பதற்கான தருணமும் வந்தது. அப்போது திடீரென ஒருநாள் கரும்புலிகளுக்காக கடிதம் எழுதிய போராளிகளைச் சந்தித்தார். கரும்புலியாக விரும்பிய அனைவரையும் புதிதாக உருவாக்கம் பெறும் ஆளு ஊடுருவும் அணிக்கான பயிற்சிக்கு தயாராகுமாறு அழைத்தார்.

தலைவன் அருகாமையில் தலைவனின் கண்காணிப்பின் கீழ் அமைந்த அந்த சிறப்பு அணியில் எங்கள் சிரித்திரனும் இணைந்து கொண்டான். குறித்த நேரத்தில் செய்து முடிக்கப்பட்ட வேண்டிய தெரிவுப்பயிற்சிகளில் சிரித்தின் தனது திறனை வெளிப்படுத்தி தெரிவாகி சிறப்புப் பயிற்சியினை முடித்திருந்தான்.

இக்காலத்தில் திறமையாகச் செயற்பட்ட சிரித்திரனின் திறமையை அவதானித்த ரட்ணம் மாஸ்ர் தலைவரின் பாதுகாப்புப் பணியில் சிரித்திரனை இணைத்துக் கொண்டார். அவனது ஆற்றலும் எடுத்த காரியத்தை சாதிக்கும் வல்லமையும் தலைவரின் பிரத்தியேக உதவியாளராகத் தெரிவு செய்யப்பட்டு தலைவரின் நன் மதிப்பையும் அன்பையும் பெற்றான் எங்கள் சிரித்திரன்.

சிரித்திரன் என்றால் அவனை யாரும் மறந்துவிடமாட்டார்கள் அந்தளவு எல்லோருக்கும் பிடித்த போராளி. அவனது சிரித்த முகம் , அவனில் சிறப்பாயமைந்த பண்புகள் , எல்லோரையும் எளிதில் கவர்ந்துவிடும் பன்முக ஆற்றலுமே எல்லோரிடத்திலும் அவனை அடையாளப்படுத்தியது.

சிறந்த சண்டைக்காரன் மிகப்பெரும் ஆற்றலையெல்லாம் அள்ளி வைத்திருந்த பெருமைக்குரியவன் ஆனாலும் தனது கரும்புலிக் கனவை கைவிடாமல் தலைவரின் பிரத்தியேக செயலாளர் பணியின் இடையிலும் தனது கரும்புலியாகும் விருபத்தை தெரிவித்துக் கொண்டேயிருந்தான். குறைந்த இழப்பில் பெரும் இழப்பை எதிரிக்கு வழங்கி பெரிய வெற்றிகளைக் குவிக்கும் சிந்தனையே அவனது செயல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் இருந்தது.

தனது தரைக்கரும்புலியாகும் எண்ணத்தை தலைவருக்கு எழுதிவிட்டு கரும்புலியாகும் கனவோடு தான் தனது பணிகளைச் செய்து கொண்டிருந்தான். வெளியில் தென்றலாய் சிரிப்பவன் உள்ளுக்குள்ளே எரிமலையை வளர்த்துக் கொண்டேயிருந்தான்.இதயத்தில் ஈரமும் விழிகளில் நெருப்பையும் ஒன்றாய் கொண்ட தேசப்புயல் அவன்.

சிரித்திரனின் இனிமையான சுபாவம் , அன்பு , ஆழுமை , ஆற்றலை அவதானித்த தலைவர் சிரித்திரனையும் மேலும் சில போராளிகளையும் வெளிநாட்டுக் கட்டமைப்பிற்குள் பணிக்கு அனுப்புவதற்கு முடிவெடுத்தார். காரணம் சிரித்திரனின் வல்லமையும் ஆற்றலும் தமிழீழ தேசத்திற்கு மேலும் பயனையும் பன்முக ஆற்றலையும் கொண்டவர்களை உருவாக்கும் திறiனையுடையது. அத்தகைய திறமையாக தலைவரின் எண்ணத்திற்கு ஏற்ப சிரித்திரன் தன்னை ஆற்றலாளன் ஆக்கியிருந்தான். தலைவர் அதிகளவில் அவனிடமிருந்து எதிர்பார்த்தார். ஏனெனில் அவனது ஆற்றல் அந்தளவு பெறுமதியானவை.

ஆனால் தனது பணியை தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து செய்ய மறுத்து மண்ணில் நிற்பதையே விரும்பினான். தனது முடிவில் தளம்பாமல் ஒரே முடிவாக தாயகத்தில் இருந்து பணி செய்யப்போகிறேன் என்றே வெளிநாட்டுப் பயணத்தை மறுத்திருந்தான். கடைசியில் அவனது விருப்பமே நிறைவேறியது. அவன் வெளிநாடு சென்றிருந்தால் ஆயிரம் சிரித்திரன்களை அவனால் உருவாக்கியிருக்க முடியும். ஆனால் தான் நேசித்த தலைவனை தளபதிகளை போராளிகளைப் பிரிய விரும்பாமல் அவர்களுடனேயே வாழ விரும்பிய இனியவன்.

இக்காலத்தில் தான் சிரித்திரனின் ஆற்றல் அவதானிக்கப்பட்டு வான்புலிகள் அணியில் இணைவதற்கான அழைப்பு வந்தது. வான்புலிகளின் தேவையை உணர்ந்த சிரித்திரன் மகிழ்ச்சியோடு வான்புலிகள் பயிற்சிக்குச் சென்றான். பின்னால் உலகையே வியக்க வைக்கும் வான்கரும்புலியாகப் போவானென்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவன் கரும்புலியாகவே தன்னை வளர்த்துக் கொண்டான்.

வான்புலிகளின் வரலாறு 1985 – 1986களில் உருவாக்கம் பெற்று விமானம் கட்டும் பணிகளும் ஆரம்பித்த காலமது. மெல்ல மெல்ல கால ஓட்டத்தோடு புலிகளின் வான்புலிகள் அணியானது உயிர் பெற்று உருவாக்கப்பட்டது. முதல் முதலாக 1998 மாவீரர் நாள் மாவீரர் உரையில் தலைவர் பிரபாகரன் அவர்களால் வான்புலிகள் படையணி தொடர்பான அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. 2000ம் ஆண்டு வான்புலிகள் ஆண்டாக விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டு வான்புலிகள் வரலாறு எழுதப்படத் தொடங்கியது.

வான்புலிகளின் வேராகவும் அந்தப் படையணியின் உருவாக்கத்திலும் முக்கிய பங்காக இருந்து இயங்கியவர் தளபதி கேணல் சங்கரண்ணா அவர்கள். சென்னையில் பொறியியல் கல்லூரியில் ஏறோனோட்டிக்ஸ் பிரிவில் BA படித்து முடித்த தளபதி சங்கரண்ணா அவர்கள் கனடா நாட்டிற்குச் சென்று கனடா விமான நிறுவனத்தில் பொறியியலாளராகப் பணி புரிந்தார்.

வெளிநாட்டு வாழ்வை விட்டு தாயகம் திரும்பியவர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து புலியாகிப் பல போராளிகளை வளர்த்தெடுத்ததோடு நின்று விடாமல் வான்புலிகளின் தோற்றமும் அவராகினார். வான்புலிகள் உருவாக்கத்தில் உறக்கம் மறந்து இறுதிவரை உழைத்த வீரன் தளபதி சங்கரண்ணா. 2001 செப்ரெம்பர் தியாகி திலீபனின் நினைவுநாளில் சங்கரென்ற இமயம் இலங்கையரசின் ஆழ ஊடுருவும் படையணியால் நடாத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். எனினும் வானுயர்ந்த புலிவீரம் வான்புலிகள் வளர்சியில் வெகுவேகமாக முன்னேற்றமடைந்து வளர்ந்தது.

விமானப்பயிற்சியை முடிப்பதற்கு சாதாரணமாக 2வருடங்கள் வரை செல்லும். ஆனால் சிரித்திரனும் அவனுடனான போராளிகளும் இரவு பகல் ஓய்வு ஒளிவின்றி இயங்கி 3மாதத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டார்கள். அதுவும் வன்னி நிலத்திலேயே வான்புலிகள் பயிற்சியினையும் பயின்று பயிற்சியை நிறைவு செய்தார்கள்.

பின்னாளில் வான்புலிகளின் வரலாறும் பயிற்சிகள் எங்கே பெற்றிருக்கலாம் என்ற இராணுவ ஆய்வாளர்களின் புனைவுகளும் கற்பனைகளும் ஊடகங்களை நிறைத்தது. எனினும் எவராலும் கண்டறிய முடியாது வான்புலிகளின் வீரம் நிமிர்ந்தது தான் உண்மை வரலாறு.

உலகில் எங்குமே நிகழ்ந்திராத மாற்றத்தை புலிகளின் வான்புலி வீரர்கள் நிகழ்த்திக்காட்டினர். வானோடிக்கான பயிற்சியில் சிரித்திரனின் ஆற்றலை நேரிலிருந்து பார்த்த சாட்சியங்கள் இன்றும் அவனை அதிசயிக்கும் அதிசயமாய் அவன் நிமிர்ந்து நிற்கிறான்.

சிங்கள தேசத்தினால் வன்னி வான்பரப்பில் பறக்க அனுப்பப்படும் ஆளில்லாத வேவு விமானங்களின் தொல்லைகள் அதிகரித்திருந்த காலமது. இவ் ஆளில்லா விமானங்களை சிங்கள தேசம் மிகப்பெரும் செலவில் கொள்வனவு செய்திருந்தது. இவ் ஆளில்லா வேவு விமானத்தை அழிக்க சிரித்திரனும் சக வான்புலி ஒருவரும் மேற்கொண்ட தாக்குதல் பற்றி சிங்கள தேசம் கூட செய்தியை வெளியில் விடாமல் இயந்திரக்கோளாறென்று கதையை முடித்த சம்பவம் ஒன்று வன்னி வான்பரப்பில் நிகழ்ந்திருந்தது.

தனது நவீன தொழில்நுட்பத்தினை எவராலும் அழிக்க முடியாதென்று இறுமாந்திருந்த சிங்கள தேசத்திற்கு எங்களால் எதுவும் முடியும் என்று செய்து நிரூபித்துக்காட்டிய சம்பவம் :-

அன்றொருநாள் வன்னி வானில் திமிரோடு பறந்த ஆளில்லா வேவுவிமானத்தை சிரித்திரனும் அவனது தோழனும் சுட்டு வீழ்த்தியிருந்தார்கள். அந்த ஆளில்லா விமானத்தை புலிகளின் விமானத்திலிருந்தே சுட்டு வீழ்த்தியிருந்தார்கள் என்பதனை இன்று வரை சிங்கள தேசம் கூட அறிந்திருக்காத உண்மை.

இத்தாக்குதலானது மிகவும் ஆபத்தும் சவாலும் நிறைந்தது. புலிகளின் விமானப்பறப்பு அடையாளம் காணப்பட்டால் அவர்களின் தரையிறக்கும் இடம் அடையாளம் காணப்படும். அடையாளம் காணப்படும் போது கிபிர் விமானங்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலைமையும் உருவாகும்.

வான்புலிகளின் விமானமும் பாதுகாப்பாக தரையிறங்க வேண்டும் அதேநேரம் தரையிறங்கும் இடமானது எதிரி அறியாமல் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லா பாதுகாப்பையும் கருத்தில் கொண்டே தாக்குதலை நிகழ்த்த வேண்டும்.

ஆளில்லா வேவு விமானங்கள் வீதியில் வேகமாக செல்கின்ற இரு சக்கர ஊர்தியின் இலக்கத்தைக் கூட துல்லியமாகக் கணிக்கக் கூடிய தொழில்நுட்பத் திறனைக் கொண்டது. இத்தனை சிறப்புகளைக் கொண்ட ஆளில்லா வேவு விமானம் வன்னியின் வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தது.

ஒரு விமானம் பறத்தலில் ஈடுபடும் பகுதியில் அந்த விமானத்தின் உயரத்திற்கு மேல் பறந்து தாக்குவது என்பது இலகுவானது அல்ல. ஆனால் வான்புலிகளால் எங்கும் செல்லவும் வெல்லவும் முடியும் என்பதனை சிரித்திரனும் அவனது தோழனும் நிரூபித்துக் காட்டினர்.

எதிரி விமானம் பறந்து கொண்டிருந்த சமநேரம் சிரித்திரனும் , அவனது தோழனும் தங்கள் விமானத்தை எதிரி விமானத்திற்கு மேலாக உயரப்பறந்து மேலிருந்து ஆளில்லா வேவுவிமானத்தைச் சுட்டுவீழ்த்தித் தரையிறங்கினார்கள்.

சிங்கள தேசம் இயந்திரக்கோளாற்றினால் வீழ்ந்ததாகச் சொல்லி தனது இழப்பை வெளியில் தெரியாமல் மறைத்துக் கொண்டது. இந்த மர்மம் பற்றி ஆய்வுகளும் அறிக்கைகளும் பல வடிவங்களின் அப்போது ஆராயப்பட்டது வேறுகதை.

வார்த்தைகளை விடவும் வரலாற்றைப் படைத்தவர்கள் புலிகள். அவ்வரலாற்றின் சுவடுகளில் சத்தமின்றிச் சாதித்துவிட்டு தரையிறங்கிய சிரித்திரனும் அவன்கூட அத்தாக்குதலில் இணைந்திருந்த தோழனும் அன்றைய ஆய்வுகளின் கதாநாயகர்கள். ஆனால் அந்த வேர்கள் வெளியில் வராமல் வெற்றியைத் தந்துவிட்டு அமைதியானார்கள்.

1998 மாவீரர் நாளன்று வான்புலிகள் பயிற்சியை முடித்த வான்புலி மறவர்கள் விமானத்திலிருந்து முதல் முதலாய் முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் பூத்தூவி தங்கள் முதல் பயணத்தை ஆரம்பித்திருந்தார்கள். அன்றைய நாள் தலைவரினால் அதிகாரபூர்வமாக வான்புலிகள் படையணியின் உருவாக்கம் பற்றிய அறிவிப்பு நிகழ்ந்தது.

வான்புலிகள் உருவாக்கப்பட்டு முதல் முதலாக எரித்திரியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட 2 விமானங்கள் முதல் முதலாக வான்படையை உருவாக்கிய எங்கள் தலைவனும் தளபதிகளும் நேரில் பார்வையிட்டு வான் புலிவீரத்தின் அடையாள முகங்களை வாழ்த்தி வரவேற்றார்கள். அவ்விமானங்கள் பின்னர் வரிநிறம் பூசப்பட்டு தாக்குதலுக்கு தயார் செய்யப்பட்டது.




சிறிய ரக விமானம் நெடுந்தூரம் சென்று வருவதற்குப் போதியளவு எரிபொருள் போததது. ஆனால் தாக்குதலுக்குச் சென்று திரும்புவதற்குத் போதியளவு எரிபொருளை மீதப்படுத்த அவர்கள் மேற்கொண்ட உத்திகளை உலகம் அறிந்ததில்லை.

விமானத்தை வழங்கிய நிறுவனத்தால் கூட நெடுந்தூரத்துக்கான பயணத்தினைச் செய்ய முடியாதெனத் தெரிவிக்கப்பட்டும் வான்புலிகள் எரிபொருளை சேமிக்கும் வகையில் விமானத்தை மேலேற்றிப் பறந்து வெற்றியுடன் தாக்குதல்களை நடாத்திவிட்டுத் திரும்பும் வீரத்தையும் வித்தியாசமான உத்தியையும் எவரும் அறிந்திருக்கவே இல்லை. வான்புலிகளின் தோற்றமும் தாக்குதல் வியூகங்கள் வெற்றிகள் உலகிற்குப் புரியாத புதிர்களாகவே அமைந்தது.

தமிழர் நிலத்தைத் தேடி வந்து தாக்கி உயிர்களைப் பலியெடுத்துக் கொண்டிருந்த அரசின் தலைமை மையத்தினுள் „’காற்றிலேறியே விண்ணையும் சாடுவோம்’ என விடுதலைப்புலிகளின் வான்புலிகள் 26.03.2007அன்று கட்டுநாயக்கா இராணுவ விமானப்படைத்தளத்தின் மீது தாக்குதலை நடாத்தி வான்புலிகளின் இருப்பை உலகிற்கும் அதேவேளை இலங்கையரசிற்கும் அறிவித்தனர்.

இதுவே முதல் முதல் புலிகள் உரிமையேற்ற முதல் வான்தாக்குதல் ஆகும். அந்தத் தாக்குதலில் சிரித்திரனும் விண்ணிலேறி வீரனாய் நீலப்புலியுடையில் வானோடியாய் போனான். எங்கள் நிலத்தில் வந்து எங்கள் குடிமனைகளையும் குழந்தைகளையும் அழித்தவர்களின் வானில் நின்று தாக்குதல் மேற்கொண்டு திரும்பிய வான்புலிகளில் எங்கள் சிரித்திரனும் ஒருவன்.

22.10.2007 அன்று அனுராதபுரத்தில் மேற்கொள்ளப்பட்ட எல்லாளன் நடவடிக்கையில் வான்புலிகளின் பங்கும் அளப்பரியது. திங்கள் அதிகாலை அனுராதபுரத்தினுள் ஊடுருவிய 21 சிறப்பு ஆண் பெண் கரும்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் அனுராதபுரம் வான்படைத்தளம் புலிகளின் கட்டுப்பாட்டினுள் வீழ்ந்தது. புலிகளின் வான்படையினர் துணையாக அனுராதபுர வான்படை மையத்தினுள் குண்டுகளை வீசி சேதத்தை விளைவித்தனர்.

திங்கள் பகல் 11மணிவரையும் கரும்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனுராதபுரத்தளத்திற்கு ஆதரவு வழங்க வவுனியாவிலிருந்து அனுப்பப்பட்ட பெல் 212 உலங்குவானூர்தி மிகிந்தலைப்பகுதியில் வைத்து விமான எதிர்ப்பு அணியினரின் தாக்குதலுக்கு உள்ளாகி இலங்கையரச வானோடிகளும் உலங்குவானூர்தியும் அழிந்து போனது. இலங்கையரசின் வான்படைபலமானது பெரும் வீழ்ச்சி கண்டது இப்பெரும் அழிவில்தான்.

22.10.2007 அன்று 21 விசேட கரும்புலிகள் அணிக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுபட்டு எல்லாளன் வாழ்ந்த மண்ணில் புலிவீரத்தை அறியச்செய்த மாவீரர்களின் தியாகத்தில் உலகமே திகைத்தது. அந்த வரலாற்று வெற்றியில் சிரித்திரனும் பங்கேற்றுத் தளம் திரும்பியிருந்தான்.

சிங்களத் திமிருக்கு பேரிடி கொடுத்த கரும்புலி வீரர்கள்...

வான்புலிகள் ஐரோப்பிய நாடுகளில் பயிற்சி பெற்றிருக்கலாம் என தனது இராணுவ ஆய்வில் இராணுவ ஆய்வாளரெனப்படும் இக்பால் அத்தாஸ் கட்டுரையெழுதியிருந்தார். அதேபோல மேலும் சில ஊடகங்கள் மலேசியாவில் பயிற்சிகள் பெற்றிருக்கலாம் எனவும் ஆளாளுக்கு ஆய்வுகள் செய்து கொண்டிருந்தார்கள்.

எல்லா ஆய்வுகளையும் விஞ்(மி)சிய வான்புலிவீரத்தை இதுவரையில் எந்த ஆய்வுகளும் ஆராட்சிகளும் அதன் அடி முடியைக் கண்டறியவில்லை. தென்னிலங்கையை கலங்கடித்து தென்னிலங்கையில் மட்டும் 7தடவைகள் சென்று தாக்குதலை நடாத்திவிட்டுத் திரும்பினர் வான்புலிகள்.

அனைத்து நவீன வளங்களையும் அறிகருவிகைளயும் பொருத்தி வானிலேறும் வான்புலிக்கலங்களைத் தேடிக்கொண்டிருந்தது சிங்கள தேசத்தின் தொழில்நுட்பம். அவற்றையெல்லாம் தாண்டி கட்டுநாயக்கா , அனுராதபுரம் ,கொலன்னாவை என வான்புலிகளின் வீரம் உலகை வென்றிருந்தது.

ஓரிடத்திலிருந்து மேலெழும் விமானம் திரும்பி வருகிற போது போதிய எரிபொருளைக் கொண்டிராது. எனினும் பிறிதொரு இடத்தில் தரையிறங்கி பாதுகாப்பாக வான்கலங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் திறன் வான்புலிகளுக்கானது. சாவல்களைத் துணிச்சலோடு ஏற்று சாதிக்கவும் , முடியாதென்ற எல்லாவற்றையுமே மனபலத்தால் செய்து முடித்துக் காட்டிய புலிவீரத்தின் வரலாற்றில் வான்புலிகள் வீரமும் வித்தியாசமானது.

வவுனியா கூட்டுப்படைத்தளம் மீதான வான்புலிகளின் தீரமிகு தாக்குதலை நடாத்தியதற்காக „நீலப்புலி மறவர்’ விருதினை வான்புலிவீரர்களுக்கு வழங்கி மதிப்பளித்துக் கௌரவித்தார் தேசியத்தலைவர்.

அதேபோல களனிதிச அனல்மின் நிலையத்தின் மீதான தாக்குதல் உட்பட 5தடைவைக்கு மேல் வான்தாக்குதல்களை நடாத்தி சிங்களத்திற்கு பெரும் பொருளாதார அழிவையும் இழப்பையும் ஏற்படுத்திய வான்புலிகளுக்கு ‚’நீலப்புலி’ விருதினையும் , இத்தாக்குதல்களுக்கு துணையாக செயற்பட்டு தாக்குதல் நடாத்திய துணை வானோடிகளுக்கு ‚’மறவர்’ விருதினையும் வழங்கினார் தலைவர். இப்படித்தான் வான்புலிகளின் வரலாறு எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. தரை கடல் பலத்துக்கு நிகராக எங்கள் தலைவன் படைத்த வான்புலிகளின் சாதனைகளை வெற்றிகளை என்றென்றும் பெருமையுடன் நினைவு கொள்கிறோம்.

ஈழத்தமிழர் வரலாற்றில் கண்ணீரையும் துயரையும் அவலத்தையும் தந்த மறக்க முடியாத ஆண்டு 2009. தமிழனத்தின் அரசியல் வெளியில் பெரும் வெற்றிடத்தையும் இட்டு நிரப்ப முடியாத இழப்புகளையும் தந்த 2009ம் ஆண்டில் வீரமும் எங்கள் விடுதலையின் அடையாளங்களும் ஒன்றாய் அழிக்கப்பட்டு ஏதிலிகளாக நாங்கள் ஆகிப்போன விதியை எழுதியதும் இதே வருடம் தான்.

அவலங்கள் நிறைந்த 2009இல் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மெல்ல மெல்ல எதிரியின் கையில் இழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஒரு விடுதலையமைப்பிற்கு எதிராக உலகம் கூட்டுச்சேர்ந்து 30ஆண்டுகால விடுதலைப் பயிரை அதன் வீரியத்தை வீரத்தை பலியெடுத்துக் கொண்டிருந்தது.

எதிரியின் கொலை வலயத்தினுள் வன்னி நிலம் முழுமையாகி இழக்கப்பட்டு எஞ்சிய முல்லைத்தீவும் இதோ அதோ என்ற நிலமையில் இருந்த போது மாற்று வழி ஏதோவொன்றைத் திறக்க வேண்டுமென்று திட்டமிடலில் இறங்கியது வான்புலிகள் அணி.

புதுக்குடியிருப்பு எதிரியிடம் பறிபோனால் மீள்வதற்கான வழிகள் யாவும் போய்விடும் என்பதனை உணர்ந்த வான்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல்.சிரித்திரன் இருவரும் ஏதாவது செய்ய வேண்டுமென்று முன்வந்து வான்கரும்புலிகளாகினார்கள்.

கேணல் ரூபன் தனது கடைசிப் பயணத்திற்கு தயாராகிய நேரம் தான்நேசித்த மக்களுக்கு தனது இறுதி மடலை எழுதிவிட்டு தோழன் சிரித்திரனோடு புறப்பட ஆயத்தமானான். 2002களிலிருந்து ஒருநாள் வானேறி பகைவன் பலத்தையழிப்பேனென்று சொல்லிக் கொண்டிருந்த ரூபன் கனவும் அன்று கைகூடும் நாளாக….!

விமானத்தை வானேற்றக்கூட பொருத்தமான வான்தளமோ வசதியோ எதுவுமில்லாத சுற்றிவர எதிரியின் கொலைவளையத்தினுள் இருந்து கொலைஞர்களின் கோட்டையில் பேரிடியை இறக்கும் கனவோடு நந்திக்கடல் வெட்டையிலிருந்து புறப்பட்டார்கள் சிரித்தின்,ரூபன். 3லட்சத்துக்கும் மேலான மக்கள் , போராளிகள் சாட்சியாக கேணல் ரூபன், லெப்.கேணல். சிரித்திரன் வானேறினார்கள்.

அந்த நேரத்து மனவுணர்வுகளையும் அவர்களது தூய்மையான தேசத்தின் மீதான அன்பையும் விடுதலைக் கனவையும் இன்றுவரை உலகம் புரிந்ததில்லை. அவர்கள் புரியாத புதிர்களாகவே என்றும்….! ஆனால் எங்களால் புரிந்து கொள்ளப்பட்ட புனிதங்களாக நெஞ்சம் முழுதும் அவர்கள் நினைவுகள்…..!

கொழும்பு நகரம் வான்புலிகள் வரவில் விழித்துக் கொண்டது. சிங்களத்தின் வான்படைத் தலைமையகம் மற்றும் கட்டுநாயக்கா வானூர்த்தித் தளத்தை அழிக்கும் கனவோடு ரூபன், சிரித்திரன் எதிரியின் மையத்தை நெருங்கியிருந்தனர்.

கொழும்பு மாநகரம் பயத்தில் உறைந்தது. வெளிச்சம் நிறைந்த தெருக்கள் இருளில் நிறைந்தது. சிரித்திரன் , ரூபன் வரவில் சிங்களம் திகைத்தது. மரண வாசனையைக் கொழும்பு உணர்ந்தது. சாவின் பயத்தைக் சிங்கள தேசம் நுகர்ந்தது. தமிழனித்தின் வரலாற்றை அதன் வீரத்தை 30ஆண்டு விடுதலைப் போராட்டத்தை அழித்துவிடும் முனைப்போடு ஆயிரக்கணக்கில் வன்னியைத் தின்று கொண்டிருந்த படைகளின் நெஞ்சிலும் ரூபன், சிரித்திரன் பூகம்பச்சுழியாய் பயமுறுத்திக் கொண்டிருக்க வான்புலிவீரர்கள் இருவரும் வானிலே வரலாறு படைத்திட சிங்கள வான்பரப்பில்….!

வெற்றிச் செய்திக்காகக் காத்திருந்தது வன்னிமண். வான்கரும்புலிகள் இருவரும் எதிரியின் இலக்கை மிகவும் அண்மித்திருந்தார்கள். இலக்கை எட்டும் தொலைவில் புலிகளின் வானுர்தி சிங்களதேசத்து வானில்….! சிரித்திரன், ரூபன் கனவு நனவாகும் கணங்கள் இலக்கு மிக அண்மையாகியிருந்தது.

எல்லாம் சரியாக அமைந்து இறுதிக்கட்டத்தில் தாயகக்கனவோடு தமிழரின் சேனையின் வீரத்தைச் சுமந்து புறப்பட்ட வான்கலம் எதிரியின் வானெதிர்ப்பு ஆயுதங்களால் அழிக்கப்பட்டு எங்கள் ரூபனும், சிரித்திரனும் தாயகத்திற்கான பயணத்தில் தங்கள் உயிர்களைத் தந்து எதிரி தேசத்தில் உயிரை விதைத்து காற்றிலேறி விண்ணையும் சாடும் வீரத்தை எழுதிவிட்டு அமைதியாகிப் போனார்கள்.

அவர்களது தாக்குதல் நினைத்தபடி வெற்றியில்லாது போனாலும் சிங்கள தேசத்தை சேதப்படுத்தி அச்சமூட்டி எங்கள் வீரத்தை அடையாளப்படுத்திவிட்டு இருவரின் மூச்சும் சிங்கள தேசத்தில் நிறைந்தது.

தலைவனின் நிழலில் வளர்ந்து வென்றுவரப்போன சிரித்திரனையும் ரூபனையும் எங்கள் தேசம் இழந்தது. ஒருகணம் சுவாசத்துடிப்பெல்லாம் நின்றுவிட்டாற்போலவே அவர்களது தியாகம் அவர்களை நேசித்த எல்லோரின் நெஞ்சிலும் துயரிடி.

வானில் பறந்தவர்கள் வானிலே தங்கள் வீரத்தையெழுதிய விலாசம் மறந்த விடிவெள்ளிகள். தங்களின் தாக்குதலில் போர்க்கள நிலைமையில் மாற்றம் வருமென்று நம்பிப்போன இரு வீரர்களின் நம்பிக்கையும் கானலாகிப் போனதையும் அறியாமல் ஒருநாள் ஈழம் விடியும் எனும் கனவோடு போன ரூபன் , சிரித்திரன் கனவுகள் உலகெங்கும் வியாபித்துக் கிடக்கிறது.

இறுதியாய் சிரித்திரன் ,ரூபன் சொல்லிவிட்டுப் போன வார்த்தைகளும் , எங்கள் முன்னால் விதைத்துச் சென்ற கனவுகளும் இன்னும் ஆறாத , மாறாத காயத்தைத் தந்த போதும் அவர்கள் கனவை நனவாக்கும் வேகத்தோடும் விடுதலையின் மீதான தாகத்தோடும் நகர்கிறது.
ஒவ்வொரு மாவீரரின் நெஞ்சிலும் மூண்ட நெருப்பு ஒருநாள் பிரளமாய் எங்களை ஏமாற்றி எங்கள் தேசத்தை அழித்தவர்கள் வீடுகளில் நிச்சயம் இடியாகும். அழிவைத் தந்த ஒவ்வொரு வீட்டிலும் எங்களது விடுதலைக்காய் இழக்கப்பட்ட லட்சக்கணக்கான உயிர்களின் பேரோசை ஒலித்தபடியே இருக்கும்….அது விடுதலையடையும் வரையும் விழித்தபடியே….! உயிர்த்தபடியே….!

சாந்தி ரமேஷ் வவுனியன்.






பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 17 பிப்ரவரி, 2014

களங்கள் -1. ஓயாத அலைகள் மூன்று.

இத்தொடரின் முதற்தொகுதி ஓயாத அலைகள் -3 நடவடிக்கையை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும்.

எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது.


‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரிவிழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான்.

‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள்.‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.

இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார். வேவுப்பிரிவு, வரைபடப் பிரிவு போன்றவற்றுக்கு வெவ்வேறு காலப்பகுதிகளில் பொறுப்பாயிருந்த மற்ற சசிக்குமார் மாஸ்டரோடு இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.

முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர்.

இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் சந்தேகமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.


தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டுள் அமைந்திருக்கும் ‘பராக்கிரமபுர’ என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.

பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவை நடந்தது. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது.

இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான்.

நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள்.

இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்துகொண்டிருந்தன. ‘பராக்கிரமபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

பராக்கிரமபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இம்முகாம் மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த இத்தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் பராக்கிரமபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.

தொடரும்…

இளந்தீரன்

ஈழநேசன்



பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

தமிழீழ கடற்புலிகள்.

தமிழீழக் கடல்...

தமிழீழத்தைப் பொறுத்தளவில் , இது மிக மிகப் பிரதானமானது.

எங்கள் தாய்த்திருநாட்டில் நிலத்திற்கு நிகராகக் கடலும் இணைந்திருக்கிறது.

தமிழீழ நிலப்பகுதிய எங்கள் கடல் மூன்று பக்கங்களில் அரவணைத்தபடி உள்ளது.

பலர் நினைப்பது போல எமது பாரம்பரிய வாழிடமான மையப்பகுதி , மட்டும்தான் , தமிழீழத் தாயகம் அல்ல.

பெருமையும் , பழமையும் , செழுமையும் கொண்ட இந்தக் கடலும் நிலமும் இணைந்தது தான் , எமது தமிழீழத் தாயகம் ஆகும்.

இது எங்கள் கடல்...


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எமது முன்னோர்களின் சமூக , பொருளாதார வாழ்வோடு இது பின்னிப்பிணைந்து நிற்கிறது.

எமது முன்னோர்களின் கட்டுமரங்களும் , வாணிபக் கப்பல்களும் , போர்ப் படகுகளும் இக்கடலன்னையின் மடியில் தான் தவழ்ந்து திரிந்தன.

தமிழீழக் கடல் , பொருளாதார ரீதியாகவும் , அரசியல் ரீதியாகவும் , வெளி உலகவர்த்தகத் தொடர்புகளுக்காகவும் முக்கியம் பெறுகின்றது.

ஆனால் அதைவிட முக்கியமாக , தமிழீழத்தின் பாதுகாப்புக்கு இக்கடல்  மிகமிகப் பிரதானமானது.

இக்கடல் எமது கட்டுப்பாட்டில் உள்ளவரை மட்டும்தான் அதனால் வரும் பொருளாதார நன்மைகளையும் , அரசியல் நன்மைகளையும் எமது மக்கள் அனுபவிக்கமுடியும்.

ஆகவே எமது கடல் , எமது தேசத்தின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றது.

ஆசியாவிலேயே மிகச் சிறந்த இயற்கைத் துறைமுகமான திருகோணமலையைக் கொண்டிருப்பது , எமது கடலின் சிறப்பியல்புகளில் ஒன்றாகும். இது தவிர , கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பல துறைமுகங்களையும் , பொருளாதார மையங்களையும் எமது கடல் கொண்டிருக்கிறது.

தமிழீழத் தாயக மீட்பிற்கான ஆயுதப் போராட்டம் கருக்கொண்டு ஆரம்பமாகிய முனைய காலத்திலும் சரி , அது முனைப்புற்று வளர்ந்து செல்லப்படும் நிகழ்காலத்திலும் சரி , விடுதலைக்குப் பின் நிறுவப்படப்போகின்ற தனியரசு ஆட்சியில் நாட்டின் பாதுகாப்பு , பொருளாதாரம் , அரசியல் ஆகிய விடயங்களைத் தீர்மானிக்கும் எதிர்காலத்திலும் சரி , எமது கடல் மிகப் பிரதான பங்கு வகித்தது – வகிக்கப்போகின்றது.

இப்படியாகப் பல பரிமாணங்களில் முக்கியத்துவம் பெற்ற பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ள – எங்கள் கடலை , நாம் சிறீலங்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டுமெனில் , தமிழீழக் கடற்பரப்பில் நாம் எதிரியை விடப் பலம் பொருந்தியவர்களாக மிளிர வேண்டும். இந்த யதார்த்த உண்மையை அன்றே புரிந்துகொண்ட எமது ” தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் ” அவர்கள் , பல வருடங்களுக்கு முன்னரையே அதற்க்கு வேண்டிய திட்டங்களைத் தயாரித்து , படிப்படியாக அதற்க்கு நடைமுறை உருவமும் கொடுத்துள்ளார்.

சிங்களப் பேரினவாத அரசிடம் இருந்து எமது தாயகத்தை மீட்டேடுப்பதற்க்கான போராட்டம் என்னும் போது , தமிழீழத் தாயகத்தின் தரை எல்லைகளையும் – கடல் எல்லைகளையும் விடுவிப்பது என்பதையே , அது குறித்து நிற்கிறது.

எனவே , தமிழீழத் தாயகத்தின் ஒரு பகுதியாகிய தரையில் பிரமாண்டமான வளர்ச்சியுடன் இருக்கும் எமது தரைப்படையைப் போன்று தமிழீழம் தனக்கென்று ஒரு கடற்படையையும் கட்டி எழுப்ப வேண்டியது அவசியம்.

எமது மக்களின் சுதந்திர எழுட்சியை உற்று நோக்குவோமானால் , அது புரட்சிகர ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்தபின் , எந்த அளவுக்குக் கடலோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றது , என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

தமிழீழம் , தரைத் தொடரில் தனது எல்லையாக சிறீலங்காவை மட்டுமே கொண்டிருக்கிறது. ஏனைய திசைகளில் கடலிலேயே எமது எல்லைகள்  இருக்கின்றன. எமது ஆயுதப் போராட்டம் கடந்து வந்த ஒவ்வொரு வளர்ச்சிக்கட்டத்திலும் , தமிழீழக் கடல் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்துள்ளது.

இச்சூழ்நிலையிலேயே 1984 ஆம் ஆண்டு , தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் , விடுதலைப்புலிகள்  இயக்கத்தின் கடற்புலிகள் படைப் பிரிவுக்கு அதன் வரலாற்றுரீதியான பிறப்பைக் கொடுத்து , ஆரம்பத்தில் அதற்க்கு ” கடற்புலிகள் ” எனப் பெயரும் சூட்டினார்.

ஆரம்பத்தில் கடற்புலி அணியினருக்கு கடல் சம்பந்தமான அறிவு ஊட்டப்பட்டதுடன் , கடற் சண்டைகளுக்குத் தேவையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.

ஆனால் கடற்புலி அணியினர் எதிரியிடம் வலிந்து சென்று கடற் சண்டைகளில் ஈடுபடுவதைத் தவித்தார்கள்.

விடுதலைப் போராட்டத்தில் அந்தந்தக் காலங்களோடு ஒட்டிய தேவைகளை நிறைவு செய்யும் பல பணிகளை , அவர்கள் ஆற்றவேண்டியிருந்தது. கடற்பயணங்கள் போவதற்கும் அவற்றிற்குப் பாதுகாப்பு அளிப்பதற்க்குமான வேலைகளையே ஆரம்பத்தில் கடற்புலி அணியினர் செய்து வந்தனர்.

எனினும் சிறீலங்கா கடற்படையினரின் போர்ப் படகுகள் மீது , ஆங்காங்கே ஒருசில கடற்கண்ணித் தாக்குதல்களையும் நிகழ்த்தியுள்ளனர்.

1984 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதிலிருந்து  6 வருடங்களாகப் பெரிய அளவிலான கடற் சண்டைகள் எதிலுமே ஈடுபடாதிருந்த கடற்புலி அணியினர் , 1990 ஆம் ஆண்டு திரும்பவும் சிறீலங்கா இராணுவத்துடன் போர்  ஆரம்பமாகிய போது , கடற் சண்டைகளில் ஈடுபடத் தொடங்கினர்.

இக் கடற்போரிலும் கரும்புலித் தாக்குதல் வடிவம் புகுத்தப்பட்டு , கடற்போர் ஓர் புதிய பரிமாணத்திற்குள் சென்றது.

இந்த வகையில் சிறீலங்காக் கடற்படை மீதான தனது முதலாவது பாரிய தாக்குதலை , 10.07.1990 அன்று வல்வைக்கடலில் வைத்துக் கடற் கரும்புலிகள் மேற்கொண்டனர்.

வெடி மருந்து நிரப்பிய படகொன்றுடன் சென்ற கடற்கரும்புலிகளான மேஜர் காந்தரூபன் , கப்டன் கொலின்ஸ் , கப்டன் வினோத் ஆகியோர் சிறீலங்கா கடற்படியின் ஒரு போர்க் கப்பலைச் தேதமாக்கி , இந்த வீரசாதனையைப் படைத்தார்கள்.

இதே போன்று 04.05.1991 அன்றும் வல்வைக் கடலில் வைத்துக் கட்டளைக் கப்பலொன்று கடற்கரும்புலிகளால் தகர்க்கப்பட்டது. இதுவும் ஒரு கரும்புலி நடவடிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதில்  கப்டன் சிதம்பரம் , கப்டன் ஜெயந்தன் ஆகியோர் வீரச்சாவை அனைத்துக்கொண்டனர்.

தமிழீழக் கடற்பரப்பில் சுதந்திரமாக உலாவந்த சிங்களக் கடற்படையினருக்கு இவ்விரண்டு கரும்புலி நடவடிக்கைகளும் பீதியைக் கொடுத்திருந்தன. அத்துடன் தமிழீழக் கடற்பரப்பில் சிங்களக் கடற்படை வைத்திருந்த கடல் ஏகபோகம் உடைந்து சிதறியது.

தமிழ் மக்களாகிய நாம் ஒரு யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைக்கான போராட்டம் நிலங்களை விடுவிக்கும் அளவிற்கு முன்னேறியபோது , சிறீலங்கா அரசானது கடல் மூலமே தனது படைபலத்தைப் பிரயோகித்து , எமது முன்னேற்றத்தைத்  தடுக்க முயன்று வருவதை , நாம் கண்டு வருகின்றோம். அதாவது , தரையுத்தத்தை வெல்ல எதிரி கடலையே பயன்படுத்தி வருகின்றான்.

1987 ஆம் ஆண்டு வடமராட்சியைக் கைப்பற்ற ” ஒப்பரேஷன் லிபரேஷன் ” என்ற இராணுவ நடவடிக்கையைச் ச்ங்க்கலப் படைகள் நடாத்திய போதும் , 1990 ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாமை நாம் வெற்றிகொள்ள முயன்ற சமயத்திலும் , 1991  ஆம் ஆண்டு சிலாவத்துறை முகாமை நாம் கைப்பற்ற முயன்ற சமயத்திலும் , 1991 ஆம் ஆண்டு ஆனையிறவுச் சமரின்போது எம்மிடம் வீழ்ச்சியடையும் நிலையில் இருந்த ஆனையிறவுத் தளத்தைப் பாதுகாக்கும் போதும். சிறீலங்கா அரசு கடல்வழி மூலமே தனது பலத்தைப் பிரயோகித்து எமது முயற்சிகளுக்குக் குறுக்கே நின்றது.

இதற்குப் பிரதான காரணம் எமது கடலில் எதிரி வைத்திருந்த கடல் ஏகபோகம்தான்.

தேசியத்தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்கள் அடிக்கடி கூறுவார் :

” புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் பாதுகாப்பு கடலோடு ஒன்றிப்போயுள்ளது. எனவே , கடற்பரப்பிலும் நாம் பலம் பொருந்தியவர்களாகி , எமது கடலில் எதிரி வைத்திருக்கும் கடல் ஆதிக்கத்தைத் தகர்த்து , எமது கடலில் நாம் பலம் பெறும் போதுதான் , விடுவிக்கப்படும் நிலப்பகுதியை நிரந்தரமாக நிலைநிறுத்திக் கொள்வதுடன் , தமிழீழத்தின் நிலப்பகுதிகளில் இருக்கும் எதிரிப் படியையும் விரட்டியடிக்க முடியும். ”

ஒரு கடற்படையை நாம் கட்டியெழுப்ப வேண்டுமாயின் , ஏராளமான பொருட் செலவைச் சந்திக்க நாம் தயாராக இருக்கவேண்டும். தரைச் சண்டைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் , உபகரணங்களின் பெறுமதியைவிடக் கடற் சண்டைகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுத் உபகரணங்களின் பெறுமதி மிக மிக அதிகமாகும். எனவே ஒரு கடற்படையைக் கட்டி வளர்க்கப் பொருளாதார பலமும் தேவை.

தமிழீழத்தைப் பொருத்தவரை வெளியுலகத் தொடர்புகளுக்கும் , போராட்டத்திற்குத் தேவையான விநியோகங்களுக்கும் , அதற்குரிய செயற்பாடுகளுக்கும் கடலே பிரதான வழியாக இருக்கிறது.

எமது தரை எல்லையை (சிறீலங்காவுடனானது ) இதற்க்கு நாம் பயன்படுத்த முடியாது.

எனவே போக்குவரத்து , விநியோகங்கள் , உலகத் தொடர்புகள் யாவுமே கடல்மூலமே உள்ளன.

எனவேதான் எதிரி வைத்திருக்கும் கடலாதிக்கத்தைத் தகர்த்து , கடற்பரப்பில் அவனது நடமாட்டத்தைத் தடுக்க வேண்டியது , மிகமிக அத்தியாவசியமானது. அப்போதுதான் எமது தாயகப் போர் வெற்றிபெற முடியும்.

1984 ஆம் ஆண்டிலிருந்து கடற்புலிகள் என்ற பெயரால் அழைக்கப்பட்ட எமது கடல் அணி , 1991 ஆம் ஆண்டு பிற்பகுதியில் , ” விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் ” என்ற புதிய பெயருடன் பெரியளவில் விரிவாக்கம் செய்யப்பட்டது.

இக்காலத்தில் இதன் சிறப்புத் தளபதியாக சூசை அவர்களும் , தளபதியாக கங்கை அமரன் அவர்களும் நியமிக்கப் பட்டிருந்தனர்.

இக்காலத்திலேயே சிறீலங்காக் கடற்படையினர் மீது கடலில் வைத்தும் , கடற்கரையோரங்களில் உள்ள காவலரண்கள் மீது , பல வெற்றிகரமான தாக்குதல்களை கடற்புலிகள் நிகழ்த்தினார்.

இத்தொடரான தாக்குதல்களின்போது , கனரக ஆயுதங்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் சில , பல்வேறு முனைகளிலும் தாக்கி அழிக்கப்பட்டன.

ஆனையிறவுக் கடல்நீரேரியில் வைத்து 41 அடி நீளமான அதிவேகச் சண்டைப் படகொன்று , கடற்புலிகளால்  மூழ்கடிக்கப்பட்டது. அத்துடன் , நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படையுடன் வெற்றிகரமான படகுச் சந்தைகளிலும் கடற்புலிகள் ஈடுபட்டுள்ளனர்.

இக் கடற் தாக்குதல்களிலும் – கடற் சண்டைகளிலும் கணிசமான சிங்களக் கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் , அவர்களிடம் இருந்த ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

கடற் கண்ணித் தாக்குதல்களை நிகழ்த்துவதில் இருந்து , நவீன மயப்படுத்தப்பட்ட சிங்களக் கடற்படைக்கெதிராக நேரடித் தாக்குதல்களையும் , கடற் சண்டைகளையும் நடத்தக்கூடிய அளவிற்கு விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியினர் பெற்ற வளர்ச்சி , சிறீலங்காவின் படைத்துறைத் தலைமையைத் திணறடித்துள்ளது. இதன் காரணமாக , கடற்படையின் பலத்தை நம்பிப் போராட்டத்தை நசுக்க அவர்கள் உருவாக்கிய நீண்டகால நோக்கிலான போர்முறைத் திட்டமும் கேள்விக் குறியாகிவிட்டது.

அத்துடன் அண்மைக் காலத்திலிருந்து , தமிழீழக் கடற்பரப்பில் சிறீலங்காக் கடற்படையின் மேலாதிக்கம் படிப்படியாகச் சரிந்துகொண்டிருப்பதையும் காணலாம். அதனால் தமிழீழம் மீதான் தனது ஆக்கிரமிப்புப் போர் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்குவதையும் , சிங்கள ஆளும் வர்க்கம் உணரத் தொடங்கியிருக்கும்.

தமிழீழக் கடலன்னை தியாகத்தாலும் , சோகத்தாலும் உருவான ஒரு மகத்தான காவியத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறாள்.

எத்தனை இனிய தோழர்கள் …

எவ்வளவு திறமையான கடலோடிகள் ….

மீனுக்கு இணையான நீச்சல்காரர்கள் ..

தியாகத்தின் உயர் வடிவமான கடற் கரும்புலிகள் !



சாவு வரும் என்பதைத் தெரிந்தும் இவர்கள் பயணம் போனார்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் பயணம் போனபோது , கரையிலே நின்று கைவீசி அனுப்பிவைத்தோம்.  ஆனால் நாம் பார்த்துக்கொண்டிருந்த போதே , அந்தப் பரந்த கடலோடு கரைந்து போனவர்கள் பலர்.

தமிழீழக் கடலைன்னியின் மடியிலேயே இரவும் பகலும் கிடந்தது , பணியையும் குளிரையும் , தம்முயிரையும் பாராது கடலோடிய தமிழீழத் தாயின் புதல்வர்களில் எத்தனையோ பேர் , அந்த உப்பு நீருடனேயே சங்கமமானவர்கள்.

இது எங்கள் கடல் ; இது தமிழீழத் தாயகத்தின் இணைபிரியாத ஒரு அங்கம். அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து இது மீட்க்கப்பட வேண்டும். அதற்காகவே கடற்புலிகள் உயிரையும் மதியாது பயணம் பொய் , உன்னதமான தியாகங்களைப் புரிந்து , வீர காவியங்களைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு நாள் , நிச்சயமாக எங்களின் கடற்படைக் கப்பல்கள் எங்களின் கடலில் பவனிவரும் ; அப்போது எங்களின் இளைய பரம்பரையினர் பயமின்றி , சுதந்திரமாக எங்களின் கடலில் உலாவருவார்கள்.


Image Hosted by ImageShack.us


- விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை,1992)
 இணைய தட்டச்சு முதல் முதல்ப்பதிப்பு உரிமம் தேசக்காற்று.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget