thalaivan

thalaivan

புதன், 20 ஏப்ரல், 2011

பிரபாகரனின் தம்பி சீமான் தலைமையை ஏற்போம்.

தமிழ்க்கொடி வழி இதழில் “சீமான் தலைமை ஏற்போம்” என்ற பெயரில் வெளிவந்துள்ள கட்டுரை:

சீமான்! இவரை, பலருக்கு வெறும் இயக்குனராக மட்டும்தான் தெரியும். தமிழின் மீது அளவில்லாதப்பற்றும், தமிழர்கள் மீது உண்மையான அக்கறையும் கொண்ட ஒரு தமிழ் உணர்வாளர் தான் சீமான், தமிழுணர்வின் காரணமாக இனிய தமிழிலேயே உரையாடும் இவர்: தமிழர்களின் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மீது கொண்ட அன்பினாலும் தமிழின் மீது கொண்ட பற்றினாலும் ‘தம்பி” ‘வாழ்த்துக்கள்’ போன்ற தரமான படங்களை வழங்கினார்.

‘காவிரிநீர் பிரச்சனை’ ‘பாலாறுபிரச்சனை” என தமிழர்களுக்கென எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் சரி திரைப்படத்துறையில் இருந்து ஓங்கி ஒலிக்கும் குரல் இவர் குரலாகத்தான் இருக்கும், இலங்கையில் போர் உச்சகட்டத்திலிருந்தபோது  தனது உயிரைப் பற்றி எண்ணாமல், தேசிய தலைவர் பிரபாகரனை சந்தித்து விட்டு வந்தார். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை மேடை மேடையாய் சென்று முழங்கினார். விளைவு:? பல முறை வெளியில் வரமுடியாத சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார்.

கனடாவில் சென்று முழங்கிய போது அந்நாட்டு அரசால் ‘விசா’ ரத்து செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இவர், தனது தொழிலான திரைப்படத்துறையை விட்டுவிட்டு, தமிழர்கள் படும் இனல்களை ஊர் ஊராய் சென்று முழங்கினார். தந்தை பெரியாரின் வழியில், சாதி, மதங்களை கடந்த இவர், “தமிழினத்து துரோகிகளை” வெளிச்சம் போட்டு காட்டினார். தன் இனம் ‘நாதியற்று போய்விடக்கூடாது’ என எண்ணி தொடர்ந்து குரல் கொடுத்தார். ” இலங்கையில் தமிழினப்படுகொலையை தடுக்க, தமிழகத்தில் ஒரு கட்சி இருந்திருந்தால், தமிழினப்படுகொலையையும்,தடுத்திருக்கலாம்! தமிழீழமும் மலர்ந்திருக்கும்! என்றெண்ணி, தன் ‘அண்ணன்’ பிரபாகரன் வழியில், புலிக்கொடியேந்தி, “நாம் தமிழர்” கட்சியை துவங்கினார்.

“இருப்பாய் தமிழா! நெருப்பாய்!!”  என தமிழர்களை தட்டி எழுப்பினார். தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது, அவர்களை நிர்வாணப்படுத்தி, உடைமைகளை சேதப்படுத்தி, அடித்து உதைத்து,சித்திரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களன். சில மாதங்களுக்கு முன்பு கூட, வேதாரணியத்தில் செல்லப்பன் என்ற மீனவர் படுகொலை செய்யப்பட்டார். “என் சகோதரனை எப்படிடா அடிப்பாய்….? என் தமிழ்ச் சொந்தங்களின் மீது கை வைக்க நீ யாரடா சிங்கள நாயே…? இனிமேல் தமிழர்கள் மேல் கை வைத்தால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமாட்டோம். தமிழன் மேல் அடி விழுந்தால் =, சிங்களன் மீதும் அடி விழும்” என தமிழர்களுக்காக குரல் கொடுத்தார்….? ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ தவறாக பயன்படுத்தப்பட்டு, 5 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு, பல போராட்டங்களுக்கு பிறகு. இந்த சட்டத்தை ரத்து செய்து வெளியே வந்தார்.

இன்று, ‘ தமிழின துரோகி’ காங்கிரசை ஒழிக்க போராடிக் கொண்டிருக்கிறார். இவரை கொள்ள சதி திட்டம் தீட்டுவதாகவும் செய்திகள், பத்திரிக்கைகளில் வெளிவந்து கொடிருக்கிறது.பலரும் இவரை பற்றி விமர்சனம் செய்கிறார்கள். அன்று,இந்திய தேசிய விடுதலைக்காக சுபாஷ் சந்திர போஸ் ,ஹிட்லரிடம் உதவி கேட்டாரே ஏன்….? வழி முரண்பாடாக இருந்தாலும், நோக்கம் புனிதமானது. அது போல தான், காங்கிரசை ஒழிக்க, தற்போது அ.தி.மு.க.வை ஆதரிக்க வேண்டிய இக்கட்டான, இழிவான நிலையில் உள்ளோம் என்பதால் இவர், அ.தி.மு.க வை ஆதரிக்கிறார்.மற்றபடி, பணம், பதவி, புகழ்,இவற்றிற்கு எல்லாம் மயங்குகிற வீரத்தமிழன், இவர் இல்லை. பணத்தை எதிர்பார்த்து சம்பாதித்து இருக்கலாம்.” வருமானத்தை விட இனமானமே” பெரிது என அதனை விடுத்து இனத்திற்காக போராட வந்துள்ளார் .ஏன் என்றால்………….?  இவர்……! பிரபாகரனின் தம்பி………..!!!!!   


நன்றி தமிழ்க்கொடி 


Image Hosted by ImageShack.us

செவ்வாய், 19 ஏப்ரல், 2011

ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு வீரத்தியாகி.

நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை.
ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன.

தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. கடந்த 20 தினங்களுக்கு முன்னர் தனது கிராமத்துக்கு திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி. தன்னுடைய தாய் தந்தை உட்ப்பட யாரிடமும் தனது உணர்ச்சிகளை காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்திருக்கிறார்.

இதற்கிடையில் 18.04.2011 அன்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி பத்த வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்று விட்டது. இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.

மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது.

கிருஷ்ணமூர்த்தி எழுதிய கடிதம்.

இலங்கை

ராமன் - ராவணன்,

ராமன் - ராஜபக்சே,


அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.

அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.

இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சிநேயரை அழைக்கிறேன்.

அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான். இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.



வைகோவின் வருகையும் உரையும்.

இந்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்த வைகோ கண்கலங்கினார்.


உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது பேசிய வைகோ, தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர்தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்படவேண்டும். ஐநா சபையால் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன் என்றார்.

மேலும் பேசிய வைகோ, இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியை நம்பி இருந்த ஏழை குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் எம் மக்களின் விடிவுக்காகவும் தீக்குளித்து வீரச்சாவை தழுவிக்கொண்ட தியாகி 
கிருஷ்ணமூர்த்தி என்ற மாவீரனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.


தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

என் மண்ணோடு...


என் மண்ணோடு 
ஒட்டி உறவாடியதை...
வெட்டி விட்டவர்களை 
வேரோடு சாய்க்க வேண்டும்...
என் மண் விடுதலை 
வெல்லும் வரை...

விபுலன்

Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 10 ஏப்ரல், 2011

தமிழீழ தெய்வீகப் பிறவிகள் கரும்புலி மறவர்களின் வீரம்.

கரும்புலிகள் என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர்.

இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும். இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.

ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அரிதாக, மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பார்கள்.

 ஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப்போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.

வடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் ‘லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் உருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத்தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

நெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். 


சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.

கப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில் நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல்த் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது சனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.

இந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சனையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.


இந்த மாவீரர்களை எவ்வாறு நெஞ்சம் மறக்கும். இதுவரை 379கரும்புலிகள் வீரகாவியமாகியுள்ளனர். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் புதிய திருப்பு முனையாக அமைந்தது கடற்புலிகளின் பிரவேசமாகும். அதிலும் கடற்கரும்புலிகளின் வரவு மேலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தி நிற்கிறது. 1990ஆண்டு யூலை 10ஆம் திகதி தமிழீழக் கடற்பரப்பில் நன்கூரம் இட்டு நின்ற ‘எடித்தரர்” என்ற ஆயுதக் கப்பல் கடற்கரும்புலிகளான காந்தரூபன், வினோத், கொலின்ஸ் ஆகிய வீரர்களால் தகர்க்கப்பட்டது. இதில் எதிரிகளுக்கு பெரும் உயிரிழப்பும், ஆயுத தளபாட இழப்பும் ஏற்பட்டது.

இதுபோன்று 1991வைகாசி 4ஆம் நாள் எஸ்.ஐ.என்.எஸ் அபிதா என்ற கப்பல் கடற்கரும்புலிகளான சிதம்பரம், ஜெயந்தன், ஆகிய வீரர்களால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இது சிறிலங்காக் கடற்படைக்கு மட்டுமல்லாது அரசிற்கும் ஒருபெரும் நெருக்கடியைக் கொடுத்தது. இது அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ரஞ்சன் விஐயரத்தினவிற்கு விழுந்த அடியாகக் கொள்ளலாம் 1988, 1989ஆண்டுகளில் ரோஹணவிஐய வீர , உபதிஸ்ஸ திஸாநாயக்கா போன்ற ஜே.வி.பி தலைவர்களை அழித்தது போல விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் கைது செய்து அழித்திடுவேன் என ரஞ்சன்விஐயரத்தினா கூறியிருந்தார்.

இந்தக் கடற்புலிகளின் தாக்குதலுக்குப்பின் ரஞ்சன்விஐயரத்தினா பத்திரிக்கையாளர்களிடம் சாவுக்கஞ்சாத விடுதலைப்புலிகளின் தொடர்தாக்குதல்களால் சிறிலங்காப் படைகளுக்கு பெரும் தாக்குதலை ஏற்படுத்துகிறது என்றார்.


தேசிய விடுதலைப் போராட்டத்தில் மகளிர் பங்கு இன்று முக்கியத்துவம் பெறுகிறது. 1984ஆம் ஆண்டு தொட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண் போராளிகளை பின் களப்பணிக்கு உள்வாங்கிக் கொள்ளப்பட்டது அதற்கான கட்டமைப்பு இருந்தது. முதல் பொறுப்பாளராக மேஐர் சோதியா விளங்கினார். 1987அக் 10 அன்று இந்திய இராணுவத்துடனான தற்காப்புச் சமரில் 2ஆம் லெப் மாலதி வீரச்சாவடைந்தார்.


இவர் மன்னாரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் இவரது நினைவு நாளையே பெண்கள் எழுச்சி நாளாக தமிழீழத் தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் பெண் கடற் கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி கடலில் எதிரிகளை அழித்து வீர காவியமான கடற் கரும்புலி.


இந்த வீர மகளை  தமிழினம் மறக்குமா? இதுவரை 4894 மகளிர் மாவீரர்களையும் நெஞ்சங்களில் நிறைந்துள்ளனர். 3ஆம் கட்ட ஈழப்போர் 19ஏப்பிரல் 1995 அன்னை பூபதி நினைவு நாளன்று தொடங்கியது. சமாதானத்தை கூறி ஆட்சியைப் பிடித்தவர் ஆனால் பதவிக்கு வந்தவுடன் இராணுவத் தீர்வே ஒரே வழிஎன போர் தெடுத்தவர்கள் இவர்களின் காலத்தில் புலிகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் பெற்றார்கள்.

18.07.1996 அன்று ஓயாத அலைகள் 1 எனப்பெயரிட்டு முல்லைத்தீவு கூட்டுப் படைத்தளம் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டது. 1100 படையினர் கொல்லப்பட்டதாக வெளிவுவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். இத்தொகையை விட இன்னும் கூடுதலான படையினர் கொல்லப்பட்டனர் என்ற கருத்தும் உள்ளது. இத்தாக்குதலை முறியடிக்க அளம்பிலில் சிங்களப் படை இறக்கப்பட்ட போதும் அது அழிவையே சந்தித்தது. விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச அரங்கில் பெரும் மதிப்பை ஏற்படுத்தி இருந்தது.



ஓயாத அலைகள் 1 இல் 315வேங்கைகள் வீரச்சாவை எய்தினர். இந்த வீரர்களை எப்படி மறப்போம்.



எதிரியின் போர் வெறி அடங்காத நிலையில் ஜெயசிக்குறு தொடங்கியது. 1997.05.13 அன்று தொடங்கி 18மாதங்கள் நடந்தன. ஏ 9 வழியில் வேலி அமைப்பதே இராணுவத் திட்டம் இத்திட்டத்தை விடுதலைப் புலிகள் 6 நாட்களில் முறியடித்தனர். இராணுவத்திற்கு பேரிழப்பு ஏற்பட்டிருந்தது. இந்த முறியடிப்புத் தாக்குதலில் 2146 விடுதலைப் புலிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள்.

இம் மாவீரர்களின் அற்பணிப்பு காலத்தால் அழிக்க முடியாதவை. சத்ஜெய 1, 2 இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் -கிளிநொச்சியை வன்பறிப்புச் செய்த இராணுவத்தை ஓயாத அலைகள் இரண்டின் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்தனர். 403 போராளிகள் உயிரை ஈகம் செய்துள்ளனர். மாங்குளத்தைக் கைப்பற்றி கிளிநொச்சியை வந்தடைய முற்பட்ட வேளை ஓயாத அலைகள் 2நடந்து முடிந்தது. இராணுவத்திற்கு உளரீதியான பின்னடைவை ஏற்படுத்தின. இதன் காரணமானவர்கள் இந்த மாவீரர்களே.

ஓயாத அலைகள் 3 ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையால் 30,000 இராணுவம் ஈடுபட்டிருந்தது. அது 18 மாதங்கள் விழுங்கியிருந்தது.


ஆனால் ஓயாத அலைகள் 3 இல் விடுதலைப் புலிகள் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு 6 நாளில் முடிவுக்குக் கொண்டு வந்தார். 1999 நவம்பர் 1 தொடங்கியது. 1336வேங்கைகள் வீரச்சாவடைந்தனர். விடுதலைப் போராட்ட களநிலைகளில் ஓயாத அலைகள் 3 இன் வெற்றி என்பது தமிழ் மக்களிற்கு மிகுந்த உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி நின்றது. இம்மாவீரர்கள் என்றும் நினைவில் கொள்ளத் தக்கவர்கள். இலங்கைத் தீவில் இரு இராணுவக் கட்டமைப்பின் இராணுவ சமநிலையிலும் இது மாற்றத்தை உண்டாக்கியது.

விடுதலைப் புலிகள் சார்பான இராணுவ வலு அவர்களுக்கு சாதகமானதாகவே எழுந்து நிற்பதாகவே உலகம் கருதியது. இராணுவ ஆய்வாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தாக்குதல் தரையிறக்கத் தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் 3 இன் தொடர்ச்சியாக டிசம்பர் 12 வெற்றிலைக்கேணி, புல்வெளி போன்ற பகுதிகளில் இராணுவ முகாம்கள் புலிகளிடம் வீழ்ந்தன. 1999 டிசம்பர் 17அன்று பரந்தனும், தெற்கு ஆனையிறவும் வீழ்ந்தன. இதனைத் தொடர்ந்து சில இராணுவத் தந்திரோபாயங்களைக் கையாண்டு ஆனையிறவு வடக்கே இயக்கச்சியை 2000 ஆம் ஆண்டு ஏப்பிரல் 22அன்று கைப்பற்றினர் 2000.04.23 அன்று ஆனையிறவு புலிகளிடம் வீழ்ச்சியடைந்தது.

இந்த ஆனையிறவைக் கைப்பற்ற புலிகள் அதிக விலை கொடுத்துள்ளனர். இதற்கு அரிய தியாகம் செய்த மாவீரர்களை மறப்போமா? 25.04.2001இதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீச்சுவாலை இராணுவ நடவடிக்கை முறியடிப்புச் சமரில் புலிகள் வெற்றிவாகை சூடினர். அப்போது இராணுவத்திற்கு ஏற்பட்ட இழப்பே அவர்களை அமைதிவழிக்கு திரும்ப வேண்டி ஏற்பட்டது. அதற்குக் காரணமாக 141 வேங்கைகள் தங்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இதற்குப் பின் சந்திரிக்கா அரசின் இராணுவத் தோல்விகளால் தென்னிலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அந்த அரசியல் மாற்றங்கள் கூட தமிழர்களிற்கு எதுவும் தந்துவிடவில்லை. சர்வதேச அனுசரணையோடு நோர்வேயின் சமரசத்துடன் அரசு- புலிகளிடையே போர்நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.


அதனைக்கூட நிராகரித்துவிட்டு மஹிந்தராஐபக்ச போர் புரிகிறார். இதன்நடுவே இந்தப் போரை தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் இராணுவத்தின் முன்னேற்ற முயற்ச்சியை முறியடிக்க தற்காப்புச் சமரில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இன்னுயிரை போராளிகள் வழங்கி வருகின்றனர். 

இந்த வீரர்களின் இலட்சியக்கனவு ஒருநாள் நிறைவேறும்.



இந்நேரத்தில் கடந்த ஆண்டில் அனுராதபுர கூட்டுப்படைத்தள தாக்குதலில் 23கரும்புலிகள் செப்டெம்பரில் வவுனியா படைமுகாம் தாக்குதலின் 10கரும்புலிகளும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்திருக்கிறார்கள். இவர்கள் இப்போதும் எம்மனதில் நிற்கிறார்கள். 
இந்த வேளையில் போரின் அனைத்து வழிகளிலும் நம்முடன் நின்ற தளபதிகளும்  இந்தப் போரில் வீரகாவியமான அனைத்துப் போராளிகளுக்கும் இந்த மாவீரர்கள் நாளில் எங்கள் வீரவணக்கத்தை வழங்கி நிற்போம். இந்தத் தேசம் விடியும் என்ற கனவுடன் சென்ற அந்த மாவீரர்களின் இலட்சியத்தைப் பின் தொடர்வோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

சனி, 9 ஏப்ரல், 2011

தமிழீழ தேசியத்தலைவரின் சிந்தனைத்துளி.

எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.


எமது மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்.

Image Hosted by ImageShack.us

திங்கள், 4 ஏப்ரல், 2011

ஆனந்தபுர சமரில் வீரச்சாவடைந்த தளபதிகள், போராளிகளின் நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காக 04.04.2009 அன்று ஆனந்தபுரத்திலே எதிரியுடன் களமாடி வீழ்ந்த தமிழின தளபதிகள் ஆன பிரிகேடியர்​ தீபன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர்​ விதுசா, பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர்​ மணிவண்ணன் மற்றும் அந்த சமரில் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

பிரிகேடியர்​ தீபன்
பிரிகேடியர்​ மணிவண்ணன்
பிரிகேடியர்​ விதுசா
 பிரிகேடியர் துர்க்கா
லெப் கேணல் கில்மன்

பிரிகேடியர் ஆதவன்/கடாபி


இந்த வீரமறவர்களின் வரலாறு எம் இனத்தின் ஒவ்வொரு தலைமுறையும் படிக்க தவறோம் தேசத்தின் விடியலுக்காக தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த எங்கள் மாவீர செல்வங்களுக்கும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் மீண்டும் ஒரு முறை எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

தாய் தமிழக மக்களே விழித்தெழுங்கள் உலக தமிழின எதிரி காங்கிரஸ் கட்சியை கருவறுக்க............

உலக தமிழின மக்களே எல்லோரும் பார்க்க வேண்டிய காணொளி பார்த்து விட்டு உங்கள் மனசாட்சி சொல்லுறதை இங்கே கருத்தாக பதிவு செய்யுங்கள் உறவுகளே.............

தாய் தமிழகமே நம் ஆறரைக்கொடி தமிழர்கள் இருந்தும் தட்டிக்கேக்க நாதியற்றவர்களால் ஈழத்தமிழினம் பூண்டோடு சிதைவதை பார்த்தாயா அந்த வேதனை குரல்களை காது கொடுத்து கேட்டாயா
உன் போராட்டங்கள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காய் சிங்கள பேரினவாதத்திற்கு ஆசி வழங்கி அனைத்து உதவிகளையும் செய்து கொண்டு இருக்கும் காங்கிரஸ் தலைமையில் இயங்கும் மத்திய அரசு முற்று முழுதாக உதாசீனப்படுத்தி விட்ட நிலையில் இனி நாம் என்ன செய்யப்போகின்றோம் என்ன செய்யப்போகின்றோம் என்ன செய்யப்போகின்றோம்.


தொடர்ந்து நம் வெற்றி கைகளால் அடி வயிற்றில் அடித்து அரட்டி கொண்டே இருக்க போகின்றோமா.

வேறு என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும் இருக்கு அது வாக்குச் சீட்டு என்னும் வரலாற்றையே திருப்பும் ஒற்றை பேராயுதம் அவ் ஆயுதம் கொண்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நம் மண்ணில் காங்கிரஸ் எனும் கட்சியை இல்லாமல் ஒழித்துக்கட்டுவோம் அவர்களின் தோள் மீது கை போட்டு வரும் துரோகிகளையும் எம் இனத்தின் விடுதலையையும் எதிர்க்கும் விரோதிகளையும் நம் மண்ணில் இருந்து தூர தூர தூர துரத்தியடிப்போம். 

தமிழ் வாழ நம் இனம் வாழ மை தொடும் உன் விரல்களில்த்தான் இருக்கிறது எல்லாம்.
காணொளி 


இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"


Image Hosted by ImageShack.us

நாம் தமிழர் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து பறக்குது புலிக்கொடி !


நாம் தமிழர் நாம் தமிழர் என்று தலை நிமிர்ந்து பறக்குது புலிக்கொடி !
நாற்றிசை உலகும் போற்றி மெய் சிலிர்க்க தழைக்குது தமிழ்குடி!

மானம் உயிர் மூச்சாய் வீரம் புயல் வீச்சாய் வாழும் தமிழ் மாந்தர் குடி!
தேனின் இனிய தமிழ்மொழியும் தமிழினமும் காக்கும் மாவீரர் புலிக்கொடி!

சோழன் கடல் படை கப்பல்கொடி!
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி!

(சோழன் கடல் படை கப்பல்கொடி!
ஈழம் காக்கும் எங்கள் தொப்புள்கொடி!)

கொடுமை ஆயிரம் குமுறல் ஆயிரம்!
அடிமை நிலை வாழ்வில் இனியுமா!

படைகள் ஆயிரம் தடைகள் ஆயிரம்!
எனினும் எங்கள் மண் படியுமா!

பறக்குது பறக்குது புலிக்கொடி !
சிறக்குது சிறக்குது தமிழ்குடி!

(பறக்குது பறக்குது புலிக்கொடி !
சிறக்குது சிறக்குது தமிழ்குடி!)

புலிக்கொடி வணங்கி நாம் துடிதெழுவோம்!
புயலாய் நெருப்பாய் நாம் வெடிதெழுவோம்!

பாடல் காணொளி



இருப்பாய் தமிழா நெருப்பாய். 


நாம் இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய். 

இணையம் ஊடாக நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக இணைந்து கொள்ள இங்கே அழுத்தவும்.
"நாம் தமிழர்"


Image Hosted by ImageShack.us

Get this widget