thalaivan

thalaivan

சனி, 30 நவம்பர், 2013

லெப்.கேணல் அப்பையா அண்ணா அவர்களின் வரலாற்று நினைவுகள்.

எமது இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதித்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.


அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் தொடக்க காலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று உழைத்தவர்.

அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட தொடக்க காலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைககளிற்குத் தேவையான ஊர்திகளை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்வது எவரும் ஐயம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஏற்படுத்திக் கொடுப்பதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982ம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் ஊர்தி ஒன்றின் மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது. ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி ஊர்தி மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கும் பெரிதாக தேடப்பட்ட ஒருவரானார்.

1983ம் ஆண்டு வரலாற்று முதன்மை வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறி முறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான்.

அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் ‘களத்தில்’ என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

”1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட ஊர்தி ஒன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் ஊர்தியை விட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமுரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்ளூர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்” என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்காக சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு படையப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில் கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு படையப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. தொடக்க காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார்.

அப்பையா அண்ணனின் கண்டுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை. அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது.

பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ்பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.




தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த  லெப்.கேணல் அப்பையா அண்ணா அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 20 நவம்பர், 2013

அகவை 59 காணும் தமிழீழ தேசிய தலைவருக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

தமிழீழ தேசிய தலைவர் அவர்களுக்கு புலிகளின்குரல் வானொலியினூடாக உங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமா...








தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!

தமிழர் நாம் இத்தரணியில் 
தலை நிமிர்ந்து வாழ 
தன் உயிரை துச்சமென எண்ணி
தாய் மண்ணைக் காக்க வந்த 
தலைமகனே வீரத்தமிழனே !..

 சோதனைகளை சாதனையாக்கி
காவிய நாயகனாய்
சரித்திரம் படைக்க 
மறவர் வழியில் வந்த 
மாபெரும் மாவீரனே.....

நாம் இழந்த பொருள்களும் 
சிந்திய இரத்தங்களையும் 
பிரிந்த உயிர்களையும் 
நாளைய விடியலுக்கு 
அர்ப்பணம் செய்து
சுட்டெரிக்கும் சூரியனைபோல் 
கயவர்களை சுட்டெரித்து
சுடர் கொழுந்தாய்
தமிழன் தமிழனாய் வாழ 
வீறு கொண்ட வேங்கையாக எழுந்து 
புது அவதாரத்தோடு 
எழுந்து வா வீரனே ......

உலகம் வியந்து பார்க்கும்
வரலாறு கண்ட 
வரலாற்று நாயகனே 
அகவை ஐம்பத்தொன்பதனில்
புத்தம் புதுபொலிவோடு 
புறப்படு தலைவா......
உன் வருகைக்காய் 
காத்திருக்கும் தமிழினம்...


http://pulikalinkural.com/





புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்!
தமிழரின் தாகம் பிரபாகரனின் தாயகம்!

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 2 நவம்பர், 2013

பிரிகேடியர் சு.ப தமிழ் செல்வன் அண்ணா பற்றிய சில அரிய தகவல்கள்...

தினேஸ் என்ற இயக்கப் பெயரைக் கொண்டிருந்த இவர் புலிகள் இயக்கத்தில் கீழ் மட்டங்களில் இருந்து வளர்ந்த ஒரு தலைவர் ஆவார்.

தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4 ஆவது பயிற்சி முகாமில் அவர் பயிற்சியைப்பெற்று தமிழகத்தில் வே. பிரபாகரனின் தனிப்பட்ட இணைப்பாளராக பணியாற்றினார்.


1986 இல் வே.பிரபாகரன் தமிழகத்திலிருந்து ஈழம் வருவதற்கு முன் ஈழத்துக்கு வந்து களநிலைமைகள் பற்றிய தகவல்களை திரட்டி மீளவும் தமிழகம் சென்று திரும்பவும் வே. பிரபாகரனுடன் தாயகம் திரும்பினார். அப்போது அவரின் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் தினேஸ் என்பதாகும்.

தமிழ்ச்செல்வன் அண்ணாவினை ஒரு சிறந்த அரசியல் ஆற்றல் மிக்க தலைவராகவே பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் ஈழ வரலாற்றில் தமிழ்செல்வன் அண்ணாவின் வீச்சானது வெறும் அரசியல் களத்தோடு முடிந்து போய்விடவில்லை. அரசியலையும் தாண்டி சமர்க்களங்களில் தமிழ்செல்வன் அண்ணாவின் பங்களிப்பு என்பது அளப்பெரியது.

1987 - 1989 வரை யாழ் தென்மராட்சி பகுதியில் இந்திய இராணுவத்துக்கு எதிரான நேரடித் தாக்குதல்.

1991 இல் ஆகாய கடல்வெளி நடவடிக்கை (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) இந்த நடவடிக்கையின் பொது நெஞ்சில் காயமடைந்தார்

1992 இல் இலங்கைப் படையினரின் "பலவேகய - 02" எதிர்ச்சமரிலும்

தச்சன்காடு இலங்கைப் படைமுகாம் மீதான தாக்குதல்

காரைநகரில் இலங்கைப் படையினர் மீதான தாக்குதல்

1991 இல் மன்னார் சிலாபத்துறை இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அவர் தளபதியாக செயற்பட்டார்.

பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை, 1993 நடவடிக்கையில் பங்காற்றிய அவர் தன்னுடைய காலில் காயமடைந்தார்.

ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையில் தென்மராட்சி தனங்கிளப்பு சிறிலங்கா படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப்பகுதி மீட்புத்தாக்குதலில் கட்டளைத் தளபதியாக அவர் பங்காற்றினார்.போன்ற சமர்களங்கள் தமிழ்செல்வன் அண்ணாவின் வீரத்துக்கு சான்றாக என்றைக்கும் வரலாற்றில் நிலைக்கும்.

1993 இல் கிளிநொச்சி மாவட்டம் பூநகரியில் இலங்கை இராணுவத் தளம் மீதமான தவளைப் பாய்ச்சல் என்கிற விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கையில் போரில் காலில் காயமடைந்ததைத் தொடர்ந்து தலைவர் அவர்களால்அரசியற் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்

புலிகளின் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்கேற்று வந்த இவர் அன்ரன் பாலசிங்கத்தின் மறைவுக்குப் பின்னர் புலிகளின் அதிஉச்ச அரசியல் தலைவர் ஆனார்.

தமிழ்ச்செல்வன் அண்ணா அவர்களுக்கு , அவரது மனைவி, எட்டு வயது மகள், மற்றும் நான்கு வயது மகன் ஆகியோர் இருக்கின்றனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் முதன் முதலில்
பிரிகேடியர் என்ற தரநிலையைப் பெற்றவர் தமிழ் செல்வன் அண்ணா அவர்களே

2007, நவம்பர் 2 காலை ஆறு மணயளவில் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஐந்து விடுதலைப் புலிகளுடன் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவு அடைந்தார்.


23 ஆண்டுக் கால இயக்க வாழ்வைக் கொண்ட இவரின் இறப்பு புலிகளால் ஈடு செய்யப்பட முடியாது என பிபிசி கருத்து வெளியிட்டுள்ளது.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget