thalaivan

thalaivan

வெள்ளி, 14 மார்ச், 2014

புலிகளின் உள்நாட்டு ஆயுத தயாரிப்பின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி.

நமது விடுதலைப்போராட்டத்தின் ஆரம்ப கால கட்டத்திலேயே புலிகள் ஆயுதங்களை சொந்தமாக தயாரிக்க தொடங்கி விட்டனர். 

இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி எடுத்து வைத்த போது, இந்திய இராணுவம் புலிகளுக்கு எதிராக பயன்படுத்திய ஆயுதங்கள் எல்லாம் அதிநவீன ரகத்தை சேர்ந்தவை. அப்போதைய காலகட்டத்தில் காட்டுக்குள் கெரில்லா போராட்ட அமைப்பாக இருந்த புலிகளிடம் இதுபோன்ற நவீன ரக ஆயுதங்கள் இருக்கவில்லை. எனவே ஆயுத பலத்தின் முன் புலிகள் சற்று பின்தள்ளியே இருந்தனர்.


இதன் காரணமாக , இந்திய இராணுவம் ஈழத்தில் வந்த ஆரம்ப காலகட்டத்தில் போரில் இந்திய இலங்கை கூட்டு படையின் பலமே மேலோங்கி இருந்தது. ஆனால் இந்த நிலைமை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. 

"எந்த ஒருபலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும் அதை கண்டறிந்து தாக்குவதுதான் எமது போராட்டத்தின் வெற்றியின் ரகசியம்" என்ற தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக புலிகள் அப்போது உள்நாட்டு தயாரிப்பான கண்ணிவெடிகளை தயாரிக்க தொடங்கினர். உள்நாட்டில் கிடைக்கும் மூலப்பொருள்களைக் கொண்டு புலிகள் தயாரித்த :ஜொனி வெடி" எனும் கன்னி வெடிதான் அன்று இந்திய & இலங்கை இராணுவத்தினருக்கு எமனாக இருந்தது. 

காடுகளில் புலிகளை தேடி வரும் இராணுவத்தினரின் கால்களையும், உயிர்களையும் புலிகளின் துல்லியமான கண்ணிவெடி தாக்குதல்கள் காவு வாங்கின. 

என்னதான் நவீனரக ஆயுதங்களை பகைவன் வைத்து இருந்தாலும் நிலத்தில் மண்ணோடு மண்ணாக இருக்கும் புலிகளின் கண்ணிவெடிகள் முன் அவற்றால் எதுவுமே செய்யமுடியவில்லை என்பதே நிதர்சனமாகும்.

அன்று ஜொனி வெடி தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய பொன்னம்மான் அவர்கள் நினைவாக தலைவர் அவர்கள் பின்னாளில் தோற்றுவித்த பொன்னமான் கண்ணிவெடிப் பிரிவு போர்களங்களில் கண்ணிவெடி தாக்குதல்கள் மூலம் எதிரிக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தி சமர்களங்களை புலிகளுக்கு சாதகமாக மாற்றியது. 

ஜொனி 95, 
ஜொனி 99 (ரங்கன்), 
ஜொனி மின்சார மிதிவெடி
மேஜர் இளவழுதி
விஎஸ் 50
ரைப் 72
எம் 969
கிளைமோர்
குயிலன் எறிகணைகள், போன்றன ஈழத்தில் புலிகளால் தயாரிக்கபட்ட சிலவகை ஆயுதங்களாகும்

அன்று தொடங்கிய புலிகளின் ஆயுத தயாரிப்பானது அடுத்து வந்த காலகட்டங்களில் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து தனது அடுத்த அடுத்த கட்டங்களை அடைந்து புலிகளின் உள்நாட்டு தயாரிப்பான விமானம், புலிகளின் உள்நாட்டு தயாரிப்பான நீர்மூழ்கி கப்பல்கள், இலகு ரக விமான எதிர்ப்பு பீரங்கிகள் என மேலும் மேலும் வளர்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 









"வெல்வது உறுதி"

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 9 மார்ச், 2014

கப்டன் தாரகனின் வீர வரலாற்று நினைவுகள்.

கப்டன் தாரகன் 
தம்பு பார்த்தீபன் 
தமிழீழம் முல்லைத்தீவு மாவட்டம் 
தாய் மடியில் : 03-04-1974
தாயக மடியில் : 01-02-2000

வன்னியின் வளங்களையெல்லாம் தன்னகத்தேயும் கொண்டு அமைந்ததே முள்ளிவளைக் கிராமம். அடங்காப்பற்றின் வீரமும் வரலாறும் முள்ளியவளை நிலமெங்கும் பரவியிருப்பதை வன்னியர்களின் வரலாறு சொல்கிறது. வீரமிகு வரலாற்றையும் வீரத்தையும் கொண்ட முள்ளியவளைக் கிராமம் தமிழீழ மீட்பிற்காக தனத புதல்வர்களையும் புதல்விகளையும் ஈந்த பெருமைக்குரிய கிராமங்களில் ஒன்றாகும். 03.04.1974 தம்பு தம்பதிகளின் பிள்ளையாகப் பிறந்தான் பார்த்தீபன். அக்கா , அண்ணா , தங்கையின் அன்பிற்கு அவன் ஆதாரம். சிறுவயதுக்கேயுரிய இயல்புகள் அவனையும் ஆட்கொண்டிருந்தது.

வயல்களும் வரப்புகளும் இயற்கையின் பசுமையை ஏந்தி வைத்திருக்கும் முல்லைமண்ணின் ரம்மியங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டிருந்த பார்த்தீபனின் மழலைக்காலம் மகிழ்ச்சியானது.

யுத்தத்தின் சத்தங்கள் முல்லைமண்ணையும் அள்ளிக் கொண்டிருந்த காலங்களில் வெடியோசைகளும் உயிரிழப்புகளும் பார்த்தீபனின் நெஞ்சிலும் நெருப்பை விதைத்த நாட்களவை.

முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியின் மாணவனாக கல்வியைக் கற்றுக் கொண்டிருந்தான் பார்த்தீபன். க.பொ.த.சாதாரண தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்தரத்தில் கணிதத்தை தேர்வு செய்து கல்வியைத் தொடர்ந்து உயர்தரம் பரீட்சையை எழுதிவிட்டு பெறுபேறு வரும் நாளுக்காகக் காத்துக் கொண்டிருந்தவனின் வாழ்வை மாற்றியது ஈழவிடுதலைப் போராட்டம்.

1994ம் ஆண்டு வீட்டைவிட்டுக் காணாமல் போனான் பார்த்தீபன். அமைதியும் இனிமையும் நிறைந்த வீட்டையும் சுற்றத்தையும் நண்பர்களையும் பிரிந்து காடுகள் நோக்கிப் போயிருந்தான். ஆம் அவன் விடுதலைப்புலியாக மாறினான்.

மணலாற்றில் 24வது பயிற்சி முகாமில் ஆரம்பப்பயிற்சியைத் தொடங்கிய பார்த்தீபன் தாரகன் எனப்பெயர் சூட்டப்பட்டு பயிற்சியில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சி முடிந்த போது இம்ரான் பாண்டியன் படையணிக்கு தளபதி சொர்ணம் அவர்களால் தெரிவு செய்யப்பட்டான்.

தலைவரின் வெளிப்பாதுகாப்புப் பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் தாரகனும் தெரிவு செய்யப்பட்டு வெளிப்பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டான். தனக்கு வழங்கப்பட்ட பணிகளில் என்றுமே நேர்மையும் நிதானமும் கூடிய கவனத்தையுடைய போராளி. ஒரு காரியத்தை எடுத்தால் அதை முடிக்கும் வரை ஓய்வு உறக்கம் பசி களைப்பு எதையும் பார்க்காமல் ஓயாது இயங்கி காரியம் முடித்த பின்னரேயே ஓயும் களப்பணியாளன்.

1996இல் விசேட இராணுவப்பயிற்சிக்குச் சென்று திறமையோடு விசேட பயிற்சியை முடித்துத் திரும்பிய தாரகன் கப்டன் கௌதமன் அடிப்படை இராணுவப் பயிற்சி முகாமின் பயிற்சி ஆசிரியராக நியமனம் பெற்று புதிய போராளிகளை வளர்த்தெடுப்பதில் கவனமாகினான்.

களமாடச் செல்லும் கனவோடு காத்திருந்த தாரகனுக்கு முதல் கள அனுபவம் 09.01.1997 ஆனையிறவு ஊடறுப்புச்சமரில் தான் ஆரம்பமாகியது.

1996 நடுப்பகுதியில் முல்லைத்தீவு முகாம் புலிகளால் வெற்றி கொள்ளப்பட்ட போது இலங்கையரச படைகளுக்கு பெருத்த இழப்பையும் கொடுத்ததோடு இலங்கை இராணுவத்தின் உளவுரணும் புலிகளால் சிதைக்கப்பட்டிருந்த காலமது.

முல்லைத்தீவை இழந்த படையினர் சத்ஜெய 1 எனும் பெயரில் பரந்தனையும் , சத்ஜெய 2,3 நடவடிக்கையை மேற்கொண்டு கிளிநொச்சியையும் கைப்பற்றியிருந்தனர்.

எனினும் புலிகள் ஓய்ந்து விடாமல் தொடர்ந்த அடுத்த நடவடிக்கைக்குத் தயாராகினர். வன்னிக்கு அச்சுறுத்தலாக அமைந்த ஆனையிறவுப் படைத்தளமும் சத்ஜெய மூலம் கைப்பற்றப்பட்ட பரந்தன், கிளிநொச்சி வெற்றியும் அரசபடைகளுக்கு வெற்றிகளாக அமைந்தது.

ஓயாத அலைகள் ஒன்று தொடக்கம் தொடர் சமர்களில் புலிகளின் அணிகள் சண்டையிட்டுக் கொணண்டிருந்த சம நேரத்தில் அடுத்ததொரு ஊடறுப்புச் சமருக்கான ஏற்பாடுகள் , பயிற்சிகளிலும் போராளிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையும் சிறீலங்காப்படைகளின் ஆதிக்கம் நிலையாகியிருந்த சமயம் அது. கிளிநொச்சி முகாம் மீது எவ்வித தாக்குதலையும் நிகழ்த்தாமல் பரந்தன் , ஆனையிறவு ஊடறுப்பினை மேற்கொள்ளும் நடவடிக்கையில் தயாராகிக் கொண்டிருந்தனர். இத்தாக்குதல் வெற்றி பெறுகிற போது கிளிநொச்சித் தளம் தனிமைப்படுத்தப்பட்டு இலகுவாக கிளிநொச்சியை மீட்கலாம் என்பது முடிவாகியது.

ஆனையிறவு பரந்தன் பகுதிகளை ஊடறுத்துச் செல்ல 1996வருட இறுதிப்பகுதியின் காலநிலை இடமளிக்காமல் போனது. நீரேரிகளையும் சதுப்பு நிலங்களையும் தாண்டிச் செல்ல வேண்டிய இப்பகுதிகளின் நீரின் மட்டம் அதிகரித்திருந்ததோடு சமருக்கான அகபுற காரணிகளும் தடையாகியது. இதனால் அணிகள் நகர முடியாது போனது.

கிளிநொச்சி வெற்றியோடு படைகள் சற்று அதிக எதிர்பார்ப்பைக் கொண்டு அடுத்த நகர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

ஆனையிறவு பிரதான மையத்தைத் தகர்த்துக் கைப்பற்றுவதோடு பரந்தன் சந்தி உள்ளடங்கலாக பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனம் உட்பட படையினர் வசமிருந்த படைத்தளத்தையும் கைப்பற்றி கிளிநொச்சிக்கான தொடர்பை துண்டிக்கும் திட்டத்தில் அணிகளை தயார் செய்தார்கள். தாக்குதல் வெற்றியளிக்காது விட்டால் தாக்குதலை நிறுத்திக் கொள்வதெனவும் திட்டமிடப்பட்டது.

எதிரியா புலிகளா என்ற சவாலில் புலிகள் குறித்தபடி தாக்குதலிற்கு அணிகளை நகர்த்தி 09.01.1997 அன்று பரந்தன் ,ஆனையிறவு ஊடறுப்புச் சமருக்குத் தயாராகினார்.

08.01.1997 அன்று இருள் கவ்விய பொழுதில் நீரேரிகள் , சதுப்புகள் , வெட்டைகள் தாண்டி நீண்டதூரம் நகர்ந்து அணிகள் நிலைகளைச் சென்றடைந்து தயாராகியது. ஆனையிறவு மையத்தினுள் நுளைந்து ஆட்லறிகளை அழிக்கும் நடவடிக்கைக்குத் தயாராகி திட்டமிட்டபடி 09ம் திகதி தாக்குதல் ஆரம்பித்தது.

எதிரியின் முன்னேற்றத்துக்கு அவகாசம் கொடுக்காமல் விரைவான தாக்குதலை புலிகள் மேற்கொண்டனர். சாள்ஸ் அன்ரனி படையணி ஆட்லறித்தளத்தினுள் புகுந்து ஆட்லறித்தளத்தைக் கைப்பற்றியதோடு ஒன்பது ஆட்லறிகளையும் கைப்பற்றியது. எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆட்லறிகளாலேயே எதிரி மீது தாக்குதல் நிகழ்த்தினர் போராளிகள்.

இதர பகுதிகளில் திட்டமிடப்பட்டது போல தாக்குதல் வெற்றியைத் தராது போனது. பரந்தன் கூட்டுப்படைத்தளம் மீதான தாக்குதல் எதிர்பார்க்கப்பட்டது போல அமையவில்லை. கைப்பற்றிய ஆட்லறித்தளத்தை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதானால் பரந்தன் படைத்தளம் போராளிகளிடம் விழ வேண்டும். ஆனால் நிலமை எதிரிக்கே சாதகமாகியது.

எதிரியும் புலிகளிடம் ஆட்லறித்தளத்தையோ பரந்தன் தளத்தையோ விடுவதில்லையென்ற முடிவில் சகல வளங்களையும் பயன்படுத்தி எதிர்த் தாக்குதலில் மூர்க்கமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அதேபோல விடிவதற்கிடையில் வெற்றியை அடைய வேண்டுமென்ற வேகத்தோடு புலிகளும் சமரிட்டுக் கொண்டிருந்தனர்.

விடிந்தால் எதிரிக்கு ஆதரவாக விமானப்படை வந்துவிடும். அப்போது மிகவும் அச்சுறுத்தலாகவும் இடைஞ்சலாகவும் இருந்தது MI-24  உலங்குவானூர்தியின் தாக்குதல் ஆகும். அதேநேரம் வெட்டை வெளிகளில் சமரிடும் புலிகளின் அணிகளை MI-24 உலங்குவானூர்த்தியின் தாக்குதல் முன்னேற்றத்தை தடுத்துவிடும். அத்தோடு ஆட்லறிகளைக் கைப்பற்றி வைத்திருக்கும் புலிகளின் அணிகள் கடும் ஆபத்தைச் சந்திக்க நேரிடும். ஆகவே பரந்தனை வென்றால் மட்டுமே அடுத்த வெற்றியென்பது நிச்சயமாகியது.

புலிகளின் வரலாற்று வெற்றிகளைத் தந்த சமர்களில் பெரும்பாலும் ஒரு வழி சாதகமாகாது போனால் மாற்று வழியின் மூலம் வெல்லும் வழிகளைத் தயாராகக் கொண்டிருப்பர். இம்முறை ஓரிரவிலேயே வெற்றியை பெற்றால் மட்டுமே இழப்புகளையும் தவிர்க்கிற நேரம் எதிரியைத் தோற்கடிக்கவும் முடியும் என்பது முடிவானது.

பரந்தன் முகாம் மீதான தாக்குதல் எதிர்பார்த்தபடி வெல்ல முடியாது என்பது உறுதியானது. இனி இறுதி முடிவு கைப்பற்றிய ஆட்லறிகளை அழித்துவிட்டு அணிகள் பத்திரமாக பின்வாங்குவதே முடிவானது. தாக்குதல் தளபதிகளின் கட்டளைப்படி ஆட்லறிகளும் பெரும் ஆயுதக் களஞ்சியமும் அழிக்கப்பட்டு அணிகள் பின்வாங்கியது.

எதிரிக்கு பெரும் இழப்பையும் கொடுத்து எதிரியின் உளவுரணைத் தகர்த்த அச்சமரில் தான் தாரகனும் தனது முதல் கள அனுபவத்தைப் பெற்று சிறந்த சண்டைக்காரன் என்பதனையும் அடையாளப்படுத்தினான்.

வித்தியானந்தா கல்லூரியின் ஒருகாலத்தின் சிறந்த விளையாட்டு வீரனான விளங்கியவன் தாரகன். கப்டன் கௌதமன் (ஊரான்) உதைபந்தாட்ட அணியில் சிறந்த விரனாக மிளிர்ந்தது மட்டுமன்றி பத்திரிகைகளில் வரும் கணிதப் போட்டிகளில் கூட தனது கணிதத்திறமையை வெளிப்படுத்திய வீரன்.

சண்டையனுபவத்தைத் தொடர்ந்து கப்டன் கௌதமன் (ஊரான்) பயிற்சி பயிற்சிப்பாசறை ஒன்று முதல் மூன்று வரையான பாசறையின் பயிற்சியாசிரியனாகி சண்டைக்கள வீரர்களை வளர்த்தனுப்பினான்.

பின்னர் வெளிப்பாதுகாப்பணியின் பாதுகாப்பு பணியில் தனது பணிகளைத் தொடர்ந்த போது ஓயாத அலைகள் 3 நடவடிக்கை ஆரம்பமாகியது.

சண்டைக்களங்களில் சாதிக்க வேண்டும். இழந்து போன மண்ணை மீட்க வேண்டுமென்ற கனவோடு தானாகவே சண்டைக்குப் போக விரும்பி ஓயாத அலைகள் மூன்றில் இம்ராம் பாண்டியன் படையணியின் தாக்குதல் அணியோடு சென்றான்.

தனங்கிழப்பில் நிலையமைத்திருந்த அணியில் தாரகனும் ஒருவனாகினான். 01.02.2000 அன்று அதிகாலை 4.30மணி. எதிரி இவர்களது பகுதியை உடைத்து முன்னேற முயன்று கொண்டிருந்தான். போராளிகளின் பகுதியைக் கைப்பற்றிவிடும் மூர்க்கத்தில் எதிரி தனது தாக்குதலை மேற்கொண்டிருந்தான்.

எதிரியின் மூர்க்கத்தை எதிர்கொண்டு போராளிகள் எதிர்த்தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். தாரகன் சண்டையில் எதிரியை எதிர்த்து வீரத்துடனும் ஓர்மத்துடனும் சமரிட்டுக் கொண்டிருந்தான்.

ஒருகட்டத்தில் பதுங்குகுளியை விட்டு வெளியில் நின்று எதிரியுடன் நேரடிச்சமரில் ஈடுபட்டான். தொடைப்பகுதியில் காயமுற்ற போதும் தனது காயத்திற்கான மருத்துவத்தை பெறாமல் பீல்ட் கொம்பிறேசரைக் கட்டிவிட்டு தொடர்ந்து எதிரியுடன் மோதிக்கொண்டிருந்தான்.

எதிரியின் எறிகணைகள் எங்கும் வெடித்துக் கொண்டிருந்தது. அந்த எறிகணைகள் தாரகனின் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துக் கொண்டிருந்தது. அங்கே தான் தாரகன் தலையில் காயமடைந்தான். ஏற்கனவே காயமடைந்த தொடைப்பகுதியால் அதிக குருதி இழக்கப்பட்டிருந்தான். அடுத்த காயத்தை தலையில் ஏற்றுக் கொண்டவன் தனது இறுதிக் கணத்தை அடைந்து கொண்டிருந்தான்.

தனங்கிழப்பு மண்ணில் கப்டன் தாரகன் தனது கடைசிக்கனவை விதைத்து விட்டு வீரச்சாவடைந்தான். தனது இறுதிக்கணத்தில் கூட எவ்வித சலனத்துக்கோ இடறலுக்கோ உட்படாமல் இறுதி வரையும் வீரத்தோடு போராடினான். மரணத்தின் கடைசி நொடியிலும் என்றும் போல புன்னகை நிறைந்த அவன் முகத்தில் எந்தச் சோர்வுமின்றி வீழ்ந்தான் வித்தாக….!

தாரகன் ஒளிரும் நட்சத்திரப் பொட்டுகளில் மின்னும் தாரகையாக தமிழீழக்கனவில் தனது வரலாற்றுத் தடங்களையும் பதித்துக் கொண்டு அமைதியாய் உறங்கினான்.

தாரகன் படித்த வித்தியானந்தா கல்லூரியும் அவனை நேசித்த அவனது ஊரும் மாணவர்களும் அவன் தோழோடு தோழ் நின்று களமாடிய தோழர்கள் அனைவரின் மனங்களும் துயரத்தில் தோய்ந்தது. அவன் நேசித்த அவனது பிறந்த ஊரான முள்ளியவளை மண்ணில் உறங்கிய மாவீரர்களோடு அவனும் முள்ளியவளை துயிலுமில்லத்தில் விதைக்கப்பட்டான் மாவீரனாக….! எல்லோர் மனங்களிலும் நிறைந்து போனான் கப்டன் தாரகனாக…!

நினைவுப்பகிர்வு :- 
சாந்தி ரமேஷ் வவுனியன் (01.02.2014)




தமிழீழ தாயக விடுதலைக்காவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த கப்டன்  தாரகன் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 7 மார்ச், 2014

மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் வீரவணக்க நினைவு நாள்.

மாமனிதர் 
கிட்டினன் சிவநேசன் 
தமிழீழம் யாழ் மாவட்டம் 
தாய் மண்ணில் : 21-01-1957
தாயக மண்ணில் : 06-03-2008

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள், மார்ச் 6, 2008ம் ஆண்டு பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் இலங்கை அரசால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.


இத்தாக்குதலில் சிவனேசனின் வாகன ஓட்டுனர் பெரியண்ணன் மகேஸ்வரராஜா என்பவரும் கொல்லப்பட்டார்.

இது தொடர்பில் தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் அன்று விடுத்த அறிக்கை:

தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம். 
07.03.2008.

தமிழீழ மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த மகத்தான மனிதர் ஒருவரை இன்று சிங்களம் அழித்துவிட்டது. தமிழினக்கொலைப் பரிமாணத்தின் உச்சமாக திட்டமிட்ட இந்தக் கோரக்கொலை நிகழ்ந்திருக்கிறது. சிங்கள அரச பயங்கரவாதத்தின் அசிங்கமான வடிவமாக வன்னி மண்ணிலே இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது.

திரு. கிட்டினன் சிவநேசன் அவர்கள் சுயநலம் கருதாது, நேர்மையுடனும் நெஞ்சுரத்துடனும் செயற்பட்ட தனித்துவமான மனிதர். உயர்ந்த உள்ளம் கொண்ட எளிமையான மனிதர். புனிதமான அரசியலாளர். தொழிலாளர்களின் நலன்களுக்காகவும் மேம்பாட்டிற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்தவர். அனைவருடனும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொள்ளும் ஒரு உயரிய பண்பாளர்.

இவர் தமிழீழ மண்ணின் விடிவையும் தமிழீழ மக்களின் விடுதலையையும் தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துக் கொண்டவர். தமிழ் மக்கள் தமது சொந்தத் தாயக மண்ணில் இன்னல்கள் நீங்கி, இடர்கள் அகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாக வாழவேண்டும் என ஆவல் கொண்டவர்.

தமிழீழ மண்ணை ஆழமாக நேசித்தவர். அந்த மண் ஒரு சுதந்திர தேசமாக மலர்வதைக் காணத் துடித்தவர். இந்தத் துடிப்பில் உயிர்ப்புப்பெற்று, எமது விடுதலை இயக்கத்தையும் அதன் அரசியல் இலட்சியத்தையும் அதனை அடைவதற்கு நாம் நெறித்துள்ள போராட்டப் பாதையையும் முழுமையாக ஏற்றுப் பெரும் விடுதலைப் பணியாற்றியவர்.

யாழ். மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றப் பெரும் பொறுப்பைச் சுமந்தவாறு உலகெங்கும் அலைந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நியாயம் தேடினார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, எமது போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்டினார்.

சிங்கள அரசும் அதன் ஆக்கிரமிப்புப் படைகளும் எமது மண்ணில் நிகழ்த்தும் அநியாயங்களையும் அட்டூழியங்களையும் உலகத்திற்கும் ஊடகங்களுக்கும் தெளிவாக எடுத்துக்கூறினார். சிங்களப் படைகளின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அஞ்சா நெஞ்சுடன் அநீதியை எதிர்த்துப் போராடினார். கடும் உழைப்பாலும் செயற்றிறனாலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அன்னார் ஆற்றிய அரும்பணி அளப்பரியது.

திரு. கிட்டினன் சிவநேசன் அவர்களின் இனப்பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது விடுதலைப் பணியைக் கௌரவிக்கும் முகமாக "மாமனிதர்" என்ற அதியுயர் தேசிய விருதை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். சத்திய இலட்சியத்திற்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களைச் சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திர நாயகர்களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள்.



"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர் சிவநேசன்.

தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசன் அண்ணை, அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதி.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவர்கள் இன்று வியாழக்கிழமை(06.03.2008) பிற்பகல் 1.10 மணியளவில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் படையணியினர் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலும், புதன் கிழமை பாராளுமன்றத்தில் இடம் பெற்ற அவசரகாலச் சட்ட விவாதத்திலும் கலந்து கொண்டு இறுதியில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அதற்கெதிராக வாக்கழித்துவிட்டு இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பில் மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் இருந்து புறப்பட்டு முல்லைத்தீவின் மல்லாவியிலுள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் ஏ9 வீதி வழியாக பயணம் செய்து கொண்டிருந்தபோது கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையிலான பகுதியில் வைத்து மேற்படி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசன் அவர்கள் 21.01.1957ம் ஆண்டு யாழ்ப்பாணம் கரவெட்டியில் பிறந்தவர். தனது ஆரம்பக் கல்வியை கரவெட்டி கிழக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயின்ற இவர் தனது க.பொ.த உயர் தரக் கல்வியை யாழ் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானப் பிரிவில் கற்றார்.

பின்னர் கூட்டுறவுத்துறையில் தனது உயர் கல்வியை பூர்தி செய்ததுடன். யாழ் மாவட்ட பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தின் கணக்காளராக 1988-1990 வரை பதவி வகித்ததுடன் 1991- 1995ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் அச் சங்கத்தினுடய பொது முகாமையாளராக பதவி வகித்தார்.

அதனைத் தொடர்ந்து வட பிராந்திய பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் பேரிணையத்தின் பொது முகாமையாளராக 1996-2004 வரை பணி புரிந்தார். 2004 ம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ் மாவட்டத்தில் உடுப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பெருமளவு வாக்குகளுடன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் கரவெட்டியில் வசித்து வந்த இவரும் இவரது குடும்பமும் படையினரின் கெடுபிடி காரணமாக அங்கு வாழ முடியாத நிலையில் ஏ9 பாதை மூடப்படுவதற்கு சற்று முன்னதாக வன்னிக்கு இடம் பெயர்ந்து மல்லாவியில் வசித்து வந்தனர். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முழுமையாக ஏற்றுக் கொண்ட சிவனேசன் அவர்கள் தலைவரையும் போராளிகளையும் மக்களையும் தன் உயிருக்கு நிகராக நேசித்ததுடன் தமிழீம் என்னும் இலட்சியத்தினை தலைவர் பிரபாகரனது காலத்தில் பெற்றெடுத்து விட வேண்டும் என்ற அவாவுடனும் தளராத நம்பிக்கையுடனும் இறுதி மூச்சு வரை ஓடி ஓடி உழைத்த உத்தமராவார்.

தமிழ் மக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தின் பின்னால் அணிதிரட்டும் புனிதப்பணியில் தாயகத்திலும் புலம் பெயர்ந்த மண்ணிலும் ஈடுபட்டவர். ஐரோப்பாவின் பல நாடுகளுக்கும் பல தடைவ பயணம் செய்த இவர் ஐரோப்பிய நாட்டின் பல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பல இராஐதந்திரிகளையும் அந்தந்த நாடுகளில் சந்தித்து தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தின் நியாயப்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதம் மேற்கொண்டு வரும் இன அழிப்பு தொடர்பாகவும் எடுத்துரைத்து சர்வதேச சமூகத்தின் ஆதரவை திரட்டுவதில் பெரும் பங்காற்றியவர். நீண்டகாலமாக ஸ்ரீலங்க படைகளினதும் துணை இராணுவக் குழுக்களினதும் அச்சுறுத்தல்கள் தனக்கெதிராக தொடாந்து கொண்டிருந்த பொழுதும் கூட மிரட்டல்களுக்கு பணியாது தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசண்ண அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதியாவார்.

தமிழ் மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த மாமனிதனை சிங்கள பௌத்த பேரினவாதம் பலி கொண்டுள்ளது. இப்படுகொலையை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சர்வதேச சமூகமும் இப்படுகொலையை கண்டிக்க வேண்டும்.

- செ.கஜேந்திரன். (06.03.2008)
 (பாராளுமன்ற உறுப்பினர்)

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 6 மார்ச், 2014

லெப்டினன் கேணல் ஈழவனின் வீரவணக்க நினைவு நாள்.

லெப்டினன் கேணல் ஈழவன்
தமிழீழம் (கிளிநொச்சி மாவட்டம்)
தாய் மடியில் : 20.12.1983
தாயக மடியில் : 06.03.2009

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப்டினன் கேணல் ஈழவனின் நினைவு நாள் இன்றாகும்.

கிளிநொச்சி கணேசபுரத்தை பிறப்பிடமாக கொண்ட ஈழவன் தனது ஆரம்ப கல்வியை கிளிநொச்சி இந்து கல்லூரியில் தனது கல்வி பயணத்தை தொடர்ந்தான். கல்வியில் பெரும் ஆர்வத்தோடும் விளையாட்டில் திறமையோடும் சக மாணவர்களோடு அன்பாக இருந்தவனின் வாழ்கையில் ஓர் சிறு திருப்பம் உண்டாகியது.

போர் காரணமாக மக்கள் இடம் பெயர்வதும் சிங்கள வான் படையின் குண்டு வீச்சினால் மக்கள் துன்பப்படுவதை நாள் தோறும் கண்டு வந்த ஈழவன் காடையரின் கொடுமை பொறுக்க முடியாமல்  பொங்கி எழுந்தான்.

1999 விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்ததை அடுத்து ராத வான்காப்பு படையணியில் சிறந்து விளங்கினான்.

போராட்ட காலத்தில் தன்னுடைய திறமையினால் போராளிகளையும் பொறுப்பாளர்களின் பாரட்டையும் புகழையும் பெற்று. இறுதி கட்டத்தில் நடந்த கடும் மோதலில் கண்ணில் விழுப்புண் அடைந்து மாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்.

மாலை நேரம் எதிரி வீசிய எறிகணைக்கு இரையானான் நம் ஈழவன் .
ஈழவன் எம்மை விட்டு பிரிந்தாலும் அவனின் கனவும் இலட்சியமும் எம்மோடுதான் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.



ஈழவன் கனவு நிறைவேறும் வரை ஓயோம் என்று சத்தியம் எடுத்து கொள்கின்றோம் .


தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த லெப்டினன் கேணல் ஈழவனிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 4 மார்ச், 2014

கரும்புலி லெப் கேணல் சுபேசனின் வீர வரலாற்று நினைவுகள்.


கரும்புலி 
லெப்.கேணல் சுபேசன்
மருசலின் அல்வின்
தமிழீழம் மன்னார் மாவட்டம் 
தாய் மடியில் :02-07-1971
தாயக மடியில் :01-02-1998 

விழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள் …

இவனின் குடும்ப விருட்சம் – ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் .

நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது.


எதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்தும் கரும்புலி மேஜர் குமுதனிடம் இருந்து பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது.

நாங்கள் பின்வாங்குவதற்க்கான வியூகங்களை ஏற்படுத்தி வேகமாகப் பின்வாங்கத் தயாரானோம். ஆனால் எங்கள் அணியினைப் பொறுப்பேற்று வந்திருந்த சுபேசனிற்க்கு காலிலும் , நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருந்தது. எங்களுடன் சேர்ந்து சுபேசனால் பின்வாங்க முடியவில்லை. தூக்கிக்கொண்டு வந்தாவது அவனைக் காப்பாற்றுவோம் என முயற்சித்தோம். அந்த நிலையில் அது சாத்தியப்படாத காரியம்.

” என்னைப் பார்த்து நிற்காதீர்கள். என்னைத் தூக்கிக்கொண்டு பின் வாங்க இயலாது. நீங்கள் போங்கோ ”

சுபேசன் எங்கள் எல்லோரையும் , பார்த்து எதுவித கலக்கமும் இல்லாது உறுதியாக இறுதி விடை தந்தான்.

எப்படி அவனைப் பிரிந்து போவது , எங்களுக்கு அது கஸ்ரமாக இருந்தது.

” நீங்கள் நிறையச் சாதிக்க வேண்டியனீங்கள். என்னைப் பார்த்து நின்று வீணாய் காயப்படாதீர்கள் தயவுசெய்து போங்கோ ….. நான் சாஜ்சரை இழுக்கப்போறேன்….. ”

இப்பொழுது நாங்கள் அவனைப் பிரிந்து போனால் இன்னும் ஒருசில வினாடிகளுக்குள் அங்கே சம்பவிக்கப்போகும் அந்த நிகழ்வு நினைத்துப்பார்க்கவே உயிரைப் பிளிந்தது.  இனி என்றுமே , எப்பவுமே அவனைப் பார்க்கவோ அவனோடு பேசவோ முடியாது.

அப்படி ஒரு நிகழ்வு இங்கே நடக்குமானால்…..   எண்ணிக்கொள்ளவே நெஞ்சு கனத்தது.   “  சுபேசன் வீரச்சாவடைந்துவிட்டான் ” என்று எப்படி அவன் தங்கையிடம் போய்ச்சொல்வது. அதை அவள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்….?

” சுபேசன் தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தான். என்ன மாதிரி எல்லாம் நேசித்தான். சின்ன வயதில் இருந்து ஒருவர்மேல் ஒருவர் அளவில்லாத பாசம் வைத்து வளர்ந்தவர்கள். தாய் – தந்தையிலோ , மற்ற சகோதரர்களிலோ வைத்த பாசத்தை விட சுபேசன் மீது அதிக பாசம் வைத்திருந்தாள் அவள்.

நாங்கள் சீனன்குடாத் தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளை….

சுபேசனின் தங்கையை யாரோ ஒருவன் கடத்திச் சென்றான். சுபேசன் துடித்துப்போய் ஓடிச்சென்று தங்கையைக் காப்பாற்றுகின்றான். இருந்தாலும் தலையில் பலமாக அடிபட்டு மயங்க்கிவிடுகிறாள். மயங்கிய தங்கையை கைகளில் சுமந்து , பின் ஓரிடத்தில் தண்ணீர் தெளிக்கவே அவள் மயக்கம் தெளிந்தாள். ”

இப்படி ஒரு கனவினைக் கண்டுவிட்டு அவன் நிஜமாகவே துடித்துப்போய் விட்டான். நித்திரையில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை. தங்கையின் நினைவுகளே சுற்றி சுற்றி அவன் கண்களுக்குள் நுழைந்தன.

விடிந்ததும் தங்கையிடம் சென்று அவளைப் பார்த்து தான் கண்ட கனவினை அவளோடு கதைத்த பின்னர்தான் அவனின் மனம் ஆறுதலானது. இரவு கனவு கண்டுவிட்டு எழுந்து போராளிகளிடம் கூறும்போது எவ்வளது துடித்தான்.  கனவிலேயே தங்கை படும் கஸ்ரத்தைக் கண்டுவிட்டு தங்கைக்கு என்னவோ – ஏதுவோ என ஏங்கிய அவனது உணர்வுகள் தங்கையை இறுதியாய் பிரிகின்றவேளை எப்படி இருந்திருக்கும் , அவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்….!

ஆனையிறவுப் படைத்தளமே எமது இலக்கிற்கான இடம். எமது முகாமில் இருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இறுதி நேரம்…..

நாங்கள் எல்லோரும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். இன்னும் சில வினாடிகளில் வாகனம் புறப்பட்டுவிடும். இறுதியாய்ப் பிரிகின்ற அந்தக்கணம் – எல்லோரும் மாறி மாறி விடைகொடுத்துக்கொள்கின்றோம். இந்த இருதியான் விடைகொடுப்பு யார் யாருக்கு நிரந்தரமாய் போகும் சர்ந்தப்பம் கிடைக்குமோ தெரியாது. என்றுமே , எப்பவுமே இனிக்கான முடியாத அந்தப் பிரிவு நிகழ்ந்த வேளை……

சுபேசனை விட்டு பிரிந்திருக்க முடியாது இயக்கத்திற்கு வந்த அவனது பாசத்தங்க்கையும் அங்கே நிற்கின்றாள். இன்னும் ஒன்றோ – இரண்டோ வினாடிகளில் அவன் புறப்படப்போகின்றான். அந்த ஒரு சில வினாடிகளைக் கூட தங்கையுடனேயே பேசிக்கழித்தான்.

இரண்டு பெருநதிகள் ஓடிவந்து கலக்குமே ஓர் இடம்… அங்கு எழுகின்ற ஆர்பரிப்பினைப் போன்று இரண்டுபேர் மனதிற்குள்ளும் எத்தனையோ மனக்குமுறல்கள் , என்னால் சொல்ல முடியவில்லை.

போராளிகளுடன் சிறிதுகாலம் பழகிப் பிரியும்போது கூட தாங்கிக்கொள்ள முடியாத சுபேசன் , நினைவு வந்த நாளில் இருந்து உயிராய் நேசித்த தங்கையின் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப்போகின்றான்.

தங்கைக்கு தெரியும் அண்ணன் கருபுலி என்று. இப்பவும் கரும்புலித் தாக்குதல் ஒன்றிற்குத்தான் போகின்றான்…. போனான்….

சீனன்குடாவில் இலக்குகளை அழித்துவிட்டு வந்தமாதிரி இந்தச்சண்டையிலும் இலக்கு அழித்துவிட்டு அன்னான் திரும்பி வரமாட்டானா…?….!  அவளது மனம் பிராத்தித்தது.

உயிரோடு ஒட்டிய உறவல்லோ. சுபேசனிற்க்கும் வேதனையாகத்தான் இருந்தது. தங்கையின் கண்ணீரத்துடைத்து  ” அழக்கூடாது ” தலைவர் இருக்கிறார்.  கவலைபடக்கூடாது “  தங்கையிற்கு அறிவுரை சொல்லி , ஆறுதல் வார்த்தைகள் கூறி எவ்வளவோ மனப்போராட்டத்தின் மத்தியில் பிரிக்க முடியாத பின்னிப்போன உறவைப் பிரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறான்.

அவன் அண்ணனுக்கு கையசைத்தாள். அவனும் கையசைத்தான். வினாடியாகளிக் காலம் மிக வேகமாக விழுங்கிக்கொண்டது.  தங்கையின் விசும்பல் காதில் கேட்கிறது.  தங்கையின் சிறு கலக்கத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சுபேசனிற்கு எப்படி இருந்ததோ.

வாகனம் மெல்ல மெல்ல நகரத்தொடங்குகின்றது.  மீண்டும் ஒரு தடவை தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென ரோச்சடித்துத் தங்கையைப் பார்க்கிறான். தங்கையின் முகம் தெரிகின்றது.  அவளின் வாட்டத்தைக் கண்டது , அவளிற்கு ஆறுதல் சொல்லவேண்டும் போல துடித்தது அவன் மனம். வாகனம் மெல்ல மெல்ல வேகம் கூடியது. பிரிவைத் தாங்க முடியாத சுபேசன் தலை கவிழ்ந்து கொள்கிறான்.

இந்த இறுதி நேரம் அவன் உணர்வுகள் எத்தனை தடவை சிலிர்த்திருக்கும் இவ்வளவு பாசமான் உறவினைவிட இந்தத் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எவ்வளவு உன்னதமான பற்று வைத்திருக்கின்றான். அவனது இலட்சியம் எவ்வளவு புனிதமானது.  அவன் தன் தேசத்தில் எல்லோரையும் ஆழமாக நேசித்தான். அதனால்த்தான் அவர்களின் துயரத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் கரும்புலியானான்.  அடுத்தவர் துயரத்திற்கு தோள்கொடுக்கவும் , மற்றவர்களின் வேதனைக்காக கண்ணீர் சிந்தவும் பழகிய இதயம் அவனது இதயம்.  தலைவர் ஒரு போராளியை எப்படியெல்லாம் எதிர்பார்த்த்தாரோ அத்தனியும் பிரதிபலிப்பதாகத் திகழ்ந்தான்.

1993ம் ஆண்டு தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொண்டவன் சுபேசன்.  இன்றுவரை எத்தனை ஆண்டுகள் மனம் சலிக்காது கொள்கை ஒன்றையே நெஞ்சில் சுமந்து எவ்வளவு கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுத்திருப்பான். இறுதி மூச்சிலே பகை எரிக்க அந்த இலக்கு கிடைக்கும்வரை இத்தனை வருடங்கள் காத்திருந்தானே….!  அவனது இலட்சியம் எத்தனை பெரியது.

அவனிற்கு உடம்பில் ஏராளமான காயங்கள். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவுப்படைத்தளம் மீதான் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்வதற்கான இறுதி வேவிற்கு சுபேசன் சென்றிருந்தான்.  அன்று எதிரியுடன் மோத நேர்ந்தது.  சுபேசனிற்கு கையில் பெரிய காயம். அன்று ஏற்ப்பட்ட காயத்தினால் இன்றும் பெரிய வேலைகள் செய்தால் கைமூட்டுக்கள் கழன்றுவிடும்.  பின் அவன் தானே கைமூட்டைக்கொழுவி தன் பணிகளை செய்துகொள்வான்.   எல்லா ஆயுதங்களையும் சிறப்புற இயக்கம் தேர்ச்சி பெற்றதோடு சிறந்த சூட்டு வல்லமையும் கொண்டவன். எந்த ஒரு இருக்கானாம சூழ்நிலையிலும் நன்கு திட்டமிட்டு அணிகளை சிறந்தமுறையில் வழிநடத்தக் கூடியவன். சீனன்குடாவில் எதிரி வானூர்திகளையும் , கனரக ஆயுதங்களையும் அழித்த கரும்புலி அணிகளுக்கு சுபேசனே தலைமையேற்றுச் சென்றிருந்தான்.

அன்றொருநாள் ஆகாயக் கடல்வெளித் தாக்குதலை முறியடிப்பதற்காக வெற்றிலைக்கேணியிலிருந்து ஆனையிறவுக்கு சிங்கள இராணுவம் பெரிய நகர்வு ஒன்றினை மேற்கொண்டது. அதற்க்கு ஊடறுப்புத்தாக்குதல் மேற்கொள்ள நின்ற எமது அணிகளுடன் ஒன்றாக சுபேசனும் 05 பேர் கொண்ட வேவு அணியுடன் நின்றான். முதல் நாள் சுபேசனும் சென்று வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான். அடுத்தநாள் ஊடறுப்புத் தாக்குதலுக்குத் திட்டமிடும் வேலை இருந்தமையால் சுபேசன் வேவுக்குச் செல்லாது முகாமில் தங்கிக்கொள்கிறான். சண்டைச் சூழ்நிலை காரணமாக உணவு விநியோகம் பெரிது சீர்குலைந்திருந்தது. எப்போதாவது வரும் சாப்பாட்டை சாப்பிடுவது , சாப்பாடு வராவிட்டால் சாப்பாட்டை எதிர்பார்க்காது தத்தமது கடமைகளை செய்யவேண்டிய ஒரு சூழ்நிலையே இருந்தது.  அன்று சாப்பாடு வந்திருந்தது ஆனால் , அங்கே நின்ற ஆட்களை விட வந்திருந்த சாப்பாடுப் பொட்டலங்கள் குறைவானதாக இருந்தது.  05 பேர் கொண்ட சுபேசனின் அணிக்கு இரண்டு சாப்பாட்டு பொட்டலங்கள் கிடைத்தன.

தனது தோழர்கள் வேவு பார்த்துவிட்டு களைத்துப்போய் வருவார்களே அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம் என எண்ணியவன் அந்த உணவுப்பொட்டலங்களை துணி ஒன்றினால் சுற்றி கவனமாக வைத்துவிட்டு படுத்துவிடுகின்றான்.. அவன் முதல்நாள் சாப்பிட்ட சாப்பாடுதான்….. அன்று மதியம் கழிந்துகொண்டிருந்தது. இந்தளவு நேர இடையிற்க்குள் ஒன்றோ இரண்டு இளநீர் குடித்துவிட்டான். படுத்திருந்த சுபேசனிற்கு வேவு பார்க்கச் சென்ற தோழர்கள் வருகின்றார்கள் என்ற செய்தி காதில் எட்ட , நித்திரை விட்டு எழுகின்றான். எழுந்திருந்தவன் உடனே தான் எடுத்து வைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பார்க்கின்றான். பொட்டலங்களைக் காணவில்லை….  யாரோ அந்தச் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள் பொங்கி வந்த அழுகையினை சுபேசனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. உணவு இருக்கும் என்ற நம்பிக்கையோடு வருவார்களே தன் தோழர்கள் அவர்களுக்கு என்னவேன்று சாப்பாடு இல்லைஎனச்சொல்வது ….. அவன் துடித்துப் போனான்.

முதல் நாள் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டுடன் சென்று களைத்துப்போய் வருகிறார்களே எப்படி பசியைத் தாங்கிக்கொள்ளப் போகிறார்கள்.  அவர்களிற்கு ஒருவேளை உணவு கூட கொடுக்கமுடியவில்லையே  என கலங்கினான்.  அவனது மனவேதனை கண்களால் வெளியேறிக்கொண்டிருந்தது. பெற்ற பிள்ளைகள் பசியில் துடிப்பதைப் பார்த்து ஒரு தாய் அழுவாளே அதே மாதிரி அழுதான் எங்கள் சுபேசன். அவன் தோழர்கள் எவ்வளவு சமாதானப் படுத்தியும் சுபேசனின் அழுகை தீருவதாக இல்லை. நின்ற வேறு தோழர்கள் அங்கு தேடி , இளநீர்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து சுபேசனிற்கு கொடுத்தபோதும் அவன் குடிப்பதாக இல்லை.

“  என்ற பெடியள் சரியான பசியாய் இருப்பாங்கள் அவர்களுக்கு கொடுங்கோ எனக்கு வேண்டாம் ” அவன் மறுத்தே விட்டான். இப்படித்தான் என்றும் தன்னைவிட பிறரை நேசிக்கும் மனம் அவனிற்கு….

நான் கடைசியாகச் சிரித்து அவனோடு பேசிய அந்த இறுதியான அந்த நேரமே இவனது உணர்வுகள் எவ்வளவு புனிதமாக இருந்தது.

ஆனையிறவு படைத்தளத்திற்குள் ஊடுருவி முதலாவது தடை தாண்டியாகிவிட்டது. தாக்குதல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில மணித்தியாலங்கள் இருந்தது.  இறுதியாக நாங்கள் பழரின்களையும் , உளர் உணவுகளையும் சிரித்து கலகலப்பாகச் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்.  சுபேசன் மட்டும் ஒவ்வொரு போராளியின்  மனத்தையும் பாசமாய்ப் பார்த்தான். அவனது முகத்தில் லேசாக சோகம் படர்ந்திருந்தது. இன்னும் ஒரு சில மணித்தியாலத்திற்குள் வெடிக்கப்போகும் அந்த சுபேசன் என்ன சொன்னான் தெரியுமா……?

” பார் மச்சான் எவ்வளவு சிரிப்பு கலகலப்பாக இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில்…..   …. ” அவனால் அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை.  தீயிர்க்குள் இருந்து நீர் வடியும் உணர்வு அவனுக்கு.  அவன் தனியாக இலக்கை அழிக்க சென்றிருந்தால் கவலைப்படட்டிருக்க மாட்டான். தன்னுடன் சேர்ந்து கூடிக் கும்மாளம் போட்டுப்பழகிய இந்த வீரர்கள் இன்னும் சில மணி நேரத்தில் காவியங்களாகப் போகின்றார்களே…! என்ற ஏக்கம்தான் அவனுக்கு.  தன்னை அழிக்கத் துணிந்த அந்த வீரன் இறுதி நேரத்தில் இப்படி ஏங்கினான் என்றால் , அவன் மற்றவர்களின் வாழ்வை , மற்றவர்களை எப்படி உன்னதமாக நேசிக்கின்றான். இப்படி எல்லோரிலும் பாசம் வைக்கும் சுபேசன் இயக்கத்திற்கு வந்ததும் , அண்ணனைப் பிரிந்து வாழமுடியாது என்று அண்ணனுடன் கூட இருப்பதற்காக இயக்கத்திற்கு வந்தாலே அவன் தங்கை. அவள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான்.

தன் தங்கை மீதும் , எம் தேசம் மீதும் ஒவ்வொரு மக்கள் மீதும் , எங்கள் தலைவன் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதுதான் அவனை ஒரு உன்னத கரும்புலி வீரனாக்கியது.

சண்டைகளின் சீறல் இன்னும் அடங்கியதாய் இல்லை. தொடர்ந்து வெடிமுழக்கம்.

” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” சுபேசன் அழுத்தமாக உரைத்தது வானில் எதிரொலித்தது. எப்போதுமே மற்றவர்களிற்க்காக சுவாசித்துப் பழகிப்போன அவனது மூச்சு நிட்சயம் எம் தேசத்தை வாழவைக்கும்.


கரும்புலியாய் இணைந்து கொள்ள முன் பங்குபற்றிய தாக்குதல்கள்…

* ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர்.


* மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சண்டை, கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல்.


* சின்னமண்டலாய்ப் பகுதியில் மேற்கொண்ட காவலரண் அழிப்புச்சண்டை.


* கட்டுப்பத்தை இராணுவ முகாம் தாக்குதல்


உயிராயுதம் பாகம் : 07 ல் இவ் தேசத்தின்புயல்களின் உயிரோட்டம் 05:52 – 15:59 வரை…


இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் - தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

                       Image Hosted by ImageShack.us

விடுதலைபுலிகள் இதழ் ( சித்திரை – வைகாசி : 1999 )
இணைய தட்டச்சு உரிமம் தேசக்காற்று.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.


திங்கள், 3 மார்ச், 2014

லெப்.கேணல் நீலனின் வீர வரலாற்று நினைவுகள்.


மருத்துவப் பிரிவு 
லெப்.கேணல் நீலன் 
சிவலிங்கம் சுபாஸ்கரன் 
தமிழீழம் திருகோணமலை மாவட்டம் 
தாய் மடியில்:08-02-1972
தாயக மடியில்:08-02-1999 

வெற்றிகளின் பின்னால்…

” உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல ‘ என்பதற்கு எங்களிடம் உதாரணமாக  அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். எனினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூறுவதினூடாக இவனை வெளிக்காட்ட முயற்சிக்கிறோம்.

அப்பொழுது இவன் சிறு பராயத்தினன். சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்குள்ளான கிழக்கு மாகாணக் கிராமம் ஒன்றில் பிறந்தவன். பேரினவாதக் கோரங்கள் இவன் அயலினையும் தாக்கின. பல கிராமங்கள் காணாமல் போயின. ஆங்கில மருத்துவம் ஆரம்பப் படிகளையே கண்டிராத பிரதேசம் அவனது. ஒருநாள் இவனின் வலக்கை மோதிரவிரலை அரவம் தீண்டிவிட்டது. அவசர அவசரமாக சில ஊர்கள் கடந்து ஊர்ப்பரியாரி ஒருவரின் வீட்டை வந்தடைகிறார்கள். தமிழர்கள் தமிழர்களிடையிலேயே தம்மை அடையாளம் காட்டப் பயந்த சூழல், ஒருவாறு இவர்கள் நிலைமையை விளங்கவைத்தனர்.

உடனடியாக ஊர்மருத்துவம் தொடங்கியது. பாம்புக் கடிக்குள்ளான அவனது விரல் சவர அழகினால் கீறிக் கிழிக்கப்பட்டு, இரத்தம் வெளியேற்றப்பட்டு, மரபுவழி மருத்துவம் கொடுக்கப்பட்டது. விவதங்களிற்கு அப்பால் இவன் உயிர் தப்பினான் என்பது உண்மையானது.

தொடர்ந்த காலங்கள் இவனை ஒரு போராளியாக மாற்றியது. களங்கள் பலவற்றில் கால் பதித்தவனின் களச்செயற்ப்பாடுகள் பதிவற்றும் போனவற்றுள்  அடக்கம். பின்னர் நிதித்துறையில் கணக்காய்வாளனாக கடமையேற்றான். அதனைத் தொடர்ந்து மருத்துவப்பிரிவுப் போராளியாக மாறினான்.  இடைக்காலத்தில் இவன் உள்வாங்கியிருந்த வியாபார உலக அறிவும், பின்னர் பெற்றுக்கொண்ட மருத்துவ அறிவும் கைகொடுக்க போர் மருத்துவத்தை வளர்க்க பல திட்டங்களை தீட்டிச் செயற்பட்டான்.  பனி, மழை, வெயிலென இவன் பார்ப்பதுமில்லை,  ‘ அஸ்மா’ இவனை விட்டதுமில்லை. இவனை சேகுவராவுடன் ஒப்பிடுவதா இல்லை மூத்த உறுப்பினர் கப்டன் பண்டிதருடன் ஒப்பிடுவதா என எங்களிடையே ஒரு விவாதமே நடக்கும்.

தமிழீழப் போர் வரலாறு அதீக நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறது. வன்னியில் தமிழர் போர்வீரம் அடைகாக்கப்படுகிறது. எதிரி எமது தந்திரோபாயப் பின் வாங்கல்களை எங்களின் நிரந்தரத் தோல்வியாக்க முயற்சிக்கிறான். அயல் அரசோ பழிவாங்கும் படலத்தை இறுக்கமாகவே கடைபிடிக்கிறது. நாங்கள் மூச்சு விடுவதற்காக மூச்சு பிடித்து அடித்த அடியில் முல்லைத்தீவு முகாம் வீழ்ந்துவிட்டது. முந்நூறு போராளிகள் வீரச்சாவடைய, ஆயிரத்திற்கு மேற்ப்பட்டவர்கள் காயமடைய எங்களின் மருத்துவ வளங்கள் வற்றிவிட்டன. எதிரி கிளிநொச்சி நோக்கி படைநகர்வை தொடங்கி விட்டான்.  ‘ நீலன் நீ வந்தால் சண்டை வெல்லும், வராவிட்டால் சண்டை தோற்கும் ‘ துறைப் பொறுப்பாளரின் கூற்று ரீங்காரமிட தமிழீழத்தின் தொப்பிழ் கொடியூடு பயணத்தைத் தொடர்கிறான்.

முன்பின் அறிமுகமிலாத அயல்தேசம், மொழி உச்சரிப்பு வித்தியாசமே ஏற்ற கடமைக்கு உலை வைத்துவிடும். கூட்டிச் சென்றவர்களுக்கும், இவன் கூட்டுச்சேர இருந்தவர்களும் கைதிகளாயினர், அல்லது காணாமல் போயினர். இவனது நிலையோ பரசூட்டில் சகாரா பாலைவனத்தில் குதித்தவன் போலாகி விட்டது. தாய்மொழி பேசுபவர்களிடையே கூட வாய்திறக்க முடியாமல் செயற்கை ஊமையாக்கினான். இங்கு காயமடைந்த சிலநூறு போராளிகளினதும், களத்தில் நிற்கும் சிலவாயிரம் போராளிகளினதும் நன்நிலையும், உயிரும் இவனது செயற்ப்பாட்டில் தங்கியுள்ளது. இவனின் நிலையோ..?

ஊர்க்கோவில் ஒன்றின் முன்றலில் தாடிவளர்த்து, கந்தல் உடை உடுத்து, பதினைந்து நாட்களினுள் வயது அதிகரித்தவனாக, பிச்சைக்காரனாக, பசிவயிற்றைக் கிள்ள காத்திருக்கின்றான்.

‘ படைத்தவன் படியளப்பான் ‘ எங்கோ கேட்டது இவனுள் எதிரொலிக்கிறது. இவனுடன் போட்டிக்கு இன்னும் சில எழைசிறுவர்கள். பக்தனொருவன் உடைத்த தேங்காய்ச் சிதறல்களில் ஒன்றை அவர்களுடன் மல்லுக்கட்டி எடுக்கிறான். ஒட்டிய மண்ணை கையினால் தட்டிவிட்டு உண்கின்றான். தேசத்திற்காய் தேவனிடம் பிச்சை எடுக்கிறான்.

ஈழத்தமிழ் கதைத்தால் உடன் கைதாவான். சரளமாகத் தாய்மொழியும், சாதாரமாக ஆங்கிலமும் கதைக்கத் தெரிந்திருக்கும் ஊமையாகவே நடக்கின்றான், நடிக்கிறான். மூட்டை சுமந்து சிறு கூலி பெறுகின்றான். சோற்றை மட்டும் கடையில் வாங்குகிறான். ‘ ஏன் தம்பி கரி வேண்டாமா ? ‘ கடைக்காரனின் கேள்விக்கு பதில் கூறாமலே சற்றுத் தள்ளிச்சென்று தண்ணீர் தெளித்து உண்கின்றான்.

பிச்சை எடுப்பது, கூலி வேலைகள் செய்வது, பிரதேசங்களை படிப்பதென நாட்களைக் கடத்தியவன் ஒருவாறாக கடற்கரையை வந்தடைகின்றான். எப்படியோ ஈழப்போராட்ட அனுதாபியோருவரின் வள்ளத்தை அடையாளம் காண்கிறான். அவனுடன் தொடர்பு கொண்டு தன்னை இக்கரை சேர்க்கும்படி மன்றாடுகின்றான். நம்பிக்கையினத்துடன் இறங்கியவன் இவனை இக்கரையில் இறக்கி விடுகின்றான். மருந்து சேர்க்கச் சென்ற போராளி பல நாட்கள் பட்டினி கிடந்தது பரதேசியாக உருமாறி மீண்டும் சொந்தமண்ணில் கால் பதிக்கின்றான்.

தேசத்தின் தேவை மீண்டும் இவனை அக்கரை அனுப்புகின்றது. ‘ நீலன் உன்னை நம்பித்தான் இருக்கிறம். நீ சாமான் ‘ அனுப்பிறியோ, இல்லையோ சண்டை நடக்கும், மருந்துகள் வந்தால் பலர் தப்புவர். இல்லை இறப்பர்’. பொறுப்பாளரின் வாசகத்தை இதயத்தில் வாங்கியவன் மீண்டும் பயணத்தை தொடர்கின்றான்.

மீண்டும் பிரதேசங்களைப் படிக்கின்றான். நண்பர்களையும், முகாம்களையும் உருவாக்குகின்றான். பலநூறு மைல்கல் பயணம் சென்று சிறுசிறு அளவுகளில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் பொருட்களை கொள்வனவு செய்கிறான். பாரிய அளவில் ஒரு இடத்தில் வேண்டினால் பகைவனின் உளவுப்பிரிவிடம் சிக்கவேண்டிவரும் என்பதால், கணணிவலையினுள் புகுந்து வெவ்வேறு தேசங்களிலிருந்தும் தேவையானவற்றைத் தருவிக்கின்றான். தனியொருவனாக சில உள்ளூர் நண்பர்களுடன் மறைப்புக் கதைகளைக் கூறி மருத்துவப் பொருட்களை உரிய கடற்கரைக் கிராமங்களுக்கு கொண்டுவந்து என்பது விபரிப்பிற்கு அப்பாற்பட்ட கடினங்களையும், திட்டமிடல்களையும் கொண்டது. எது எப்படியோ ஆங்காங்கே பல தொன்போருட்கள் கரை சேர்க்கப்பட்டுவிட்டது.

பல லட்சம் பெறுமதியான பொருட்களைச் சேர்ப்பதற்கு பன்மடங்கு செலவு. இவற்றை நீர் புகாவண்ணம் பொலித்தின் பைகளில் போட்டு வாயினால் காற்றை உறிஞ்சி வெளியேற்றி பொதிகளாக்க வேண்டும். சிலரே இதனைச் செய்வார்கள். சுவாசத்தை தொய்வுடையவர்களுக்கு இவ்வாறு செய்யும் பொது நெஞ்சு விம்மி வெடிப்பது போன்றிருக்கும். நீலன் இதனை அளட்சியன் செய்தே செயற்பட்டான். மீண்டும் அப்பொருட்களை கடல், மணல்தாண்டி தொடையளவு கடல்நீர் தாண்டி தூக்கிவந்து சிறு சிறு வள்ளங்களில் ஏற்றவேண்டும். கடல் ஈரலிப்பும், உப்புக்காற்றும் இவனது ‘ அஸ்மா ‘ நோயை உலுப்பிவிட அதற்குரிய ‘ பம்மை ‘ எடுத்து அடித்துவிட்டு மீண்டும் மீண்டும், மூச்சிரைக்க மூச்சிரைக்க, தோள்புண் எரிவெடுத்து  இரத்தம் கசியக்கசிய அவற்றை ஏற்றிவிடுவான். உரிய அளவு வந்தவுடன் வள்ளங்கள் புறப்பட்டுவிடும். மிகுதிப் பொருட்களை மறைவிடம் சேர்ப்பதென்பது….. ஏற்றியவை தமிழீழத்தை நோக்கி கொண்டுவரப்படும் சிலசமயங்களில் இடைவெளியில் கடற்படையினால் தாக்கப்பட்டு மருந்துப் பொருட்களும் மாவீரர் உடல்களும் கரையொதுங்கும். இதனைப் பத்திரிகைகளில் பார்த்து அறிந்து கொள்வார்கள். அப்பொழுதெல்லாம் அவன் நினைப்பான் இன்றில்லாவிட்டால் என்றோவொரு நாள் தனக்கு இப்படி நடக்குமென்று.

மீண்டும் தாயகம் திரும்புகின்றான். இப்பொழுது பரதேசியாக அல்ல. பரந்துபட்ட அறிவுடனும் செயல்புரியும் திறனுடனும் பிரதம மருத்துவர்களுடனும் துறைப் பொறுப்பாளர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொள்கிறான். திரும்பவும் களம் ஏறுகிறான். தேவையானவற்றை தேவையான நேரத்தில் தேவையான அளவில் அனுப்பி வைக்கின்றான்.

அந்நாட்டு உளவு ஸ்தாபனங்களிற்கு தண்ணி காட்டிவிட்டு பிறமொழி நகரங்கள் எல்லாம் சென்று வருகிறான். செலவைப் பார்க்காமல் பொருட்கள் வேண்டி காலம் போய் இப்பொழுது லாபமும் தரமும் பார்த்து தேவைகுரியவற்றை கொள்வனவு செய்து அனுப்புகிறான். தனியொருவனின் விடுதலைப்போரின் மருத்துவச் செயற்ப்பாடு தங்கியிருப்பது என்பது பாரிய ஆபத்துக்களில் குறிப்பிடத்தக்கது என்பது வெளிப்படையானதே. தனக்குத் தெரிந்த தகவல்களையும், அனுபவங்களையும் இன்னும் சில போராளிகளுக்கு பகிர்ந்தளித்துப் பயிற்றுவிக்கிறான். இப்பொழுது நீலன் தனக்குப் பதிலாகச் செயறப்படக்கூடிய சிலரை உருவாக்கிவிட்டான். இவன் பற்றிய தகவல்களும் அந்நாட்டு உளவுத்துறைக்கு தேவையான அளவு கிடைத்துவிடாது. அவர்களும் இவனை நெருங்கத் தொடங்கிவிட்டனர்.

‘” ஜெயசிக்குறு “‘ தனது இருதிமூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது. ‘ நீலன் தாயகம் வா ‘  சந்தேக பாசையில் தகவல் அவனைச் சென்றடைகின்றது. பலகோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் உயிர்களைக் கொடுத்துப் பெற்ற அறிய அனுபவங்களுடன் தாய்ப்பசுவைக் கண்ணுற்ற கண்றென தாயகம் திரும்பிய நீலனை காலன் கடலில் வென்றுவிட்டான். அவன் சேர்த்துவந்த பொருட்களுடன், அவனினதும் அவனுடைய தோழர்களினதும் புகழுடல்கள் அக்கரையில் அலையில் மோதுவதாக பத்திரிகைகள் மீண்டும் செய்தி வெளியிட்டன. இங்கு இவன் மருத்துவப்பிரிவின் முதலாவது லெப். கேணலாக படமாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றான். அடிப்படை மருத்துவ வசதிகளைக்கூட கண்டிராத கிராமத்தில் பிறந்தவன், உருவாகும் ஒரு தேசத்தின் மருத்துவக் கட்டுமானத்தை தாங்கியவனாக மாறியதும், இறுதி மூச்சுக்கு அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்த மருத்துவப்பிரிவின் செயற்ப்பாட்டிற்க்கு மூச்சுக்காற்றை வழங்கியதும் ஓர் அதிசயமான உண்மையாகவே எங்களால் நோக்கப்படுகிறது.

- தூயவன்.
  விடுதலைப்புலிகள் இதழ் ( பங்குனி – சித்திரை 2003 )
  இணைய  தட்டச்சு உரிமம் தேசக்காற்று.


“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 1 மார்ச், 2014

லெப் கேணல் கதிரவன் மற்றும் மேஜர் சக்திவேல் வீரவணக்க நாள்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் களமாடி உயிர் நீத்த லெப் கேணல் கதிரவன் மற்றும் மேஜர் சக்திவேல் உட்பட இருமாவீரர்களின் ஐந்தாம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.
01-03-2009 அன்றைய தினத்தில் வீரச்சாவை தழுவிய அனைத்து மாவீரர்களிற்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவிக்கின்றோம்.




தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

"தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்"


Get this widget