thalaivan

thalaivan

திங்கள், 31 அக்டோபர், 2011

டோறா பீரங்கிப் படகு மூழ்கடிப்பில் வீரகாவியமான கடற்கரும்புலிகளின் நினைவு நாள்

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் 01-11-2008 அன்று சிறீலங்கா கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையோ ஏற்பட்ட கடற்சமரின் போது . காலை 5.45 மணியளவில் நடைபெற்ற சமரின்போது கூகர் படகு ஒன்றும் டோறாப்படகு ஒன்றும் கடற்புலிகளின் துணையோடு கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் நீரூந்து விசைப்படகு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதோடு ,இருபது கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் ‘ 

வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் 01-11-2008 சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகள் அணியை சிறிலங்கா கடற்படையின் கூகர்-நீருந்து விசைப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் வழிமறித்து தாக்குதலை நடத்தின.

சுமார் 15 நிமிட நேரம் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றது.

கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர்.

இதன் பின்னர், 01-11-2008 அதிகாலை 5:20 நிமிடமளவில் கடற்புலிகளின் படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறா பீரங்கிப் படகுகள், நீருந்து விசைப்படகுகள், கடற்படையின் கொமாண்டோக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கூகர் படகு உள்ளிட்ட 20 படகுகளுடன் கடற்புலிகளினதும் கடற் கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்து காத்திருந்தனர்.

இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனர்.

இதில் டோறா பீரங்கிப்படகு ஒன்றும் கூகர் கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டன.

அத்துடன் கரையோர நீருந்து விசைப்படகு ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டது. ஏனைய பல படகுகள் சேதங்களுக்குள்ளாகின.

அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் வெடிகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினர்.

கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினர்.

இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்திய இம்மோதலில் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்துள்ளனர்.

கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன்

கடற்கரும்புலி கப்டன் கொள்கைக்கோன்

கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி

கடற்கரும்புலி கப்டன் அகச்சேரன்

கடற்கரும்புலி மேஜர் கலைமதி

கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன்

கடற்கரும்புலி மேஜர் செந்தூரன்
ஆகிய கரும்புலிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்தி வீரவரலாறாகினர்.


இதே நாள் 01.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நெடுங்கீரன் (நவம்) அவர்களின்  வீரவணக்க நாள் இன்றாகும்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

Image Hosted by ImageShack.us

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-12

அத்தியாயம்-12


கிட்டுவுக்கு இதில் உள்ள தொடர்பு அநேகருக்கு தெரியாது!

ராஜிவ் காந்தி கொலை புலனாய்வில் சி.பி.ஐ. குழு சென்னையில் தடயங்களைத் தேடிக்கொண்டிருக்க, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்  பிரசுரிக்கப்படும்  ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

தொலைபேசியில் பேசிய நபர்,  ராஜிவ் காந்தி கொலை குறித்து தமக்கு முக்கியமான விபரம் ஒன்று தெரியும் என்றார்.

“என்ன விஷயம்?” என்று அந்தப் பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் கேட்டபோது, எதிர்பாராத பதில் ஒன்று வந்தது. “ராஜிவ் காந்தியைக் கொலை செய்தது எமது அமைப்புதான். நாங்கள் அந்தக் கொலைக்கு உரிமை கோரவுள்ளோம். உங்களுடைய பத்திரிகைக்குதான் இதை முதலில் தெரிவிக்கின்றோம்”

“உங்கள் அமைப்பு என்பது எது? அதற்கு என்ன பெயர்?”

“தமிழீழ விடுதலைப் புலிகள்” என்று கூறிவிட்டு எதிர்முனை நபர் போனை கட் பண்ணி விட்டார்.

‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகையைச் சேர்ந்தவர்கள் கிறுகிறுத்துப் போனார்கள். ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் குறித்து தமது பத்திரிகைக்கு எதற்காக அறிவிக்க வேண்டும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ரமென்டோ நகரில் இருந்து வெளியாகும் சிறிய பத்திரிகை அது. சக்ரமென்டோ நகரில் அந்த நாட்களில் வசித்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருந்தது.

இது நிஜமான ஒரு உரிமை கோரலாக இருப்பதற்கு சந்தர்ப்பம் குறைவு.

ஆனால், இதிலுள்ள ஆச்சரியமான விஷயத்தைக் கவனியுங்கள். இந்த தொலைபேசி அழைப்பு வந்த சில நாட்களின் பின்னரே, ராஜிவ் கொலைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுப் பிரிவு அறிவித்தது.

புலிகளுடன் தொடர்பு இருக்கின்றது என்பதை புலனாய்வுப் குழு எஸ்டாபிளிஷ் பண்ணும் முன்னரே, பல்லாயிரம் கி.மீ. தொலைவில் அமெரிக்காவில் உள்ள,  ஈழத்தமிழர் அதிகம் வசிக்காத பகுதியிலுள்ள, அதிகம் பிரபலமற்ற பத்திரிகை ஒன்றுக்க, கொலைக்கான உரிமை கோரல் செல்கின்றது!

மிகவும் ஆச்சரியமான சம்பவம் இது அல்லவா?

அதேபோல, மற்றொன்றையும் பாருங்கள்.

ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பு, மே 21ம் திகதி மாலை 4 மணி அளவில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கேட்ட கேள்வி, “ராஜிவ் காந்தி உயிருடன் இருக்கிறாரா?” என்பது!

ராஜிவ் காந்தி கொல்லப்படுவதற்கு முன்னரே வந்த அழைப்பு என்பதால், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி, அதை ‘முட்டாள்தனமாக யாரோ உளறுகிறார்கள்’ என்று நினைத்து ஒதுக்கி விட்டார்.

ஒருவேளை கொழும்பு தூதரக அதிகாரி இந்தத் தகவலை வெளியுறவு அமைச்சின் ஊடாக மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தால், ஒருவேளை ராஜிவ் காந்திக்கான பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டிருக்கும்.

இதுவும் ஆச்சரியமான ஒரு சம்பவம் அல்லவா?

மற்றொன்றையும் பாருங்கள். ராஜிவ் காந்தி கொலை நடந்த மறுநாள் காலையே,  ஸ்ரீலங்காவில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கிலப் பத்திரிகை, “கொலையின் பின்னணியில் இருப்பது விடுதலைப் புலிகள் இயக்கம்தான்” என்று அடித்துக் கூறியது.

விசாரணையே தொடங்குமுன் இந்தப் பத்திரிகைக்கு எப்படித் தெரியும்?

பின்னாட்களில் குறிப்பிட்ட பத்திரிகையை அதுபற்றி விசாரித்த போது, ராஜிவ் காந்தி கொலையிலும், தற்கொலைத் தாக்குதல் (மனித வெடிகுண்டு) நடந்துள்ளதால், இக்கொலையின் பின்னணியில் புலிகள் இருக்கக் கூடும் என்ற ஊக அடிப்படையில் செய்தி வெளியிட்டதாகக் கூறிவிட்டார்கள்.

ஆனால், செய்தி எழுதப்பட்ட விதம், ஊக அடிப்படையில் இருக்கவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட தன்மையிலேயே இருந்தது! மற்றொரு விஷயம், குறிப்பிட்ட கொழும்பு ஆங்கிலப் பத்திரிகை, எந்தவொரு காலத்திலும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பத்திரிகையாக இருக்கவில்லை.

இதுவும் ஆச்சரியமான சம்பவம் தான், இல்லையா?

இத்துடன் தொடர்பான வேறு ஒரு விஷயத்தையும் இங்கே கூறலாம். இது தனி ட்ராக்கில் ஓடிய விவகாரம் என்பதால், தொடரில் இருந்து சற்றே விலகிச் சென்றுவிட்டு மீண்டும் வரலாம், வாருங்கள்.

ராஜிவ் காந்தி கொலை நடைபெற்ற தினத்துக்கு மறுநாள், லண்டனில் இருந்த விடுதலைப் புலிகள் சர்வதேசச் செயலகத் தலைவர் சதாசிவம் கிருஷ்ணகுமார் (கிட்டு), ”இதில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை” என்று அறிவித்தார்.

கிட்டு கூறிய தகவல் ஊடகங்களில் வெளியாகும் முன்னர், இந்திய உளவுத்துறை றோவுக்கு, கிட்டுவால் நேரில் கூறப்பட்டிருந்தது. அதை றோவும் நம்பியது. கிட்டுவின் கூற்றை றோ நம்புவதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.

அதுதான், வில்லங்கமானது!

இந்த இடத்தில் மற்றொரு உண்மையையும் கூறிவிடலாம்.  இந்திய உளவுத்துறைக்கு ஏற்பட்ட மகத்தான சறுக்கல் என்பதால், நாம் கூறப்போகும் விஷயம் பல வருடங்களாகவே அடக்கி வாசிக்கப்பட்டது.

ராஜிவ் கொல்லப்படுவதற்கு முன்பே, விடுதலைப் புலிகள் அமைப்பில் யாழ்ப்பாணத்தில் மிகப் பிரபலமாக இருந்த தளபதி கிட்டு. அவரது பிரபல்யம் உச்சத்தில் இருந்தபோது, அவர்மீது, யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டுவீச்சு ஒன்று நடைபெற்றது. (ராணுவமோ, வெளி ஆட்களோ செய்யவில்லை. புலிகள் இயக்கத்தின் உள் விவகாரம் அது. அதைப்பற்றி இங்கே வேண்டாம்)

அதில் காயமடைந்த கிட்டு தனது ஒரு காலை இழக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பின் மருத்துவச் சிகிச்சைக்காக அவர் சென்ற இடம், தமிழகம்! தமிழகத்தில் கிட்டு தங்கியிருந்த காலத்தில், அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டது இந்திய உளவு அமைப்பு றோ.

ஒரு கட்டத்தில், கிட்டுவை தமது ஆளாகவே நினைத்துக் கொண்டது றோ. இதில்தான் ஏற்பட்டது இந்திய உளவுத்துறையின் மகத்தான சறுக்கல். கிட்டுவை தமது நிரந்தர இன்போர்மராக வேலையில் சேர்த்துக் கொண்ட றோ, அவருக்கு மாதா மாதம் சம்பளமும் வழங்கியது.

கிட்டுவை லண்டனுக்கு அனுப்புவதற்கு விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்தபோது, றோவுக்கும் அதில் சந்தோஷமே. புலிகளின் வெளிநாட்டு டீலிங்குகள் பற்றிய முழு விபரங்களும் கிட்டு மூலமாகத் தமக்கு தெரியவரும் என்று நினைத்துக் கொண்டது இந்திய உளவுத்துறை.

கிட்டு லண்டனில் இருந்தபோதும், றோவினால் மாதாமாதம் வழங்கப்பட்ட சம்பளம் அவருக்கு போய்க் கொண்டு இருந்தது.

இப்படியான நிலையில்தான், ராஜீவ் காந்தி கொலை நடைபெற்றது!

இந்திய உளவுத்துறை றோ உடனடியாகவே, தமது இன்போர்மர் கிட்டுவைத் தொடர்பு கொண்டது. ராஜிவ் காந்தி கொலையில் புலிகள் தொடர்பு இருக்கிறதா என்று கேட்டார் றோவில் கிட்டுவுக்கான ஹான்டிலர். தான் தகவல் அறிந்து சொல்வதாக கூறிய கிட்டு, அடுத்த சில மணி நேரத்தின் பின், றோவின் அதிகாரியை போனில் தொடர்பு கொண்டார்.

“நான் விசாரித்து விட்டேன். இதில் புலிகளுக்கு எந்த தொடர்பும் கிடையாது” என்றார் கிட்டு.

“இது மிகவும் முக்கியமான விஷயம். மீண்டும் ஒருமுறை உங்கள் தொடர்புகளிடம் நன்றாக விசாரியுங்கள். ராஜிவ் கொலையை, இந்தியாவில் தங்கியுள்ள  புலிகளின் உறுப்பினர்கள் யாராவது செய்திருப்பார்களா என்று கேட்டுப் பாருங்கள்” என்று  வற்புறுத்தினார் றோ அதிகாரி.

அதற்கு கிட்டு கூறிய பதில்தான் கிளாசிக்!

“நான் விசாரித்ததே புலிகளின் தலைமையிடம்தான் (பிரபாகரன்) அவரது அனுமதி இல்லாமல் இப்படியான பெரிய காரியம் ஏதும் புலிகள் இயக்கத்தில் நடக்க முடியாது. இதில் புலிகளின் தொடர்பு இல்லை என்று அவர் அடித்துக் கூறுகின்றார் தலைவர். உண்மையைச் சொல்லப் போனால், ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட விஷயம் கேள்விப்பட்டு அவரே அதிர்ந்து போய் இருக்கிறார்” என்பதே கிட்டு கூறிய பதில்!

கிட்டுவின் பதிலுடன், ராஜிவ் கொலையை புலிகள் செய்யவில்லை என்று  கன்வின்ஸ் ஆகியது றோ.

சி.பி.ஐ.யின் விசேட புலனாய்வுக்குழு விசாரணையைத் தொடங்கியபோது, இந்தியாவின் வெளிநாட்டு விவகாரங்களைக் கவனிக்கும் உளவுத்துறை என்ற வகையில் றோவிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு றோ கூறிய பதில், “இந்தக் கொலையை புலிகள் செய்யவில்லை” என்பதே!

இந்த விவகாரத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ளலாம். எமது தொடருக்கு அவ்வளவுதான் தேவை. ஆனால், கிட்டு விவகாரம் இத்துடன் முடிவடையவில்லை.   மிகுதியையும் ஓரிரு வரிகளில் கூறிவிடுகிறோம்.

தமது ‘இன்போர்மர்’ கிட்டுவின் சேவையில் முழு திருப்தியடைந்த றோவின் கண்கள் எப்போது திறந்தன என்றால், ராஜிவ் கொலை வழக்கில் புலனாய்வு விரிவடைந்து செல்ல, அதில் சிவராசனின் (குர்தா-பைஜாமா நபர்) பங்கு தெரியவந்த போதுதான்! (சிவராசனுக்கும், கிட்டுவுக்கும் உள்ள தொடர்பு பற்றி, இந்த தொடரின் பின் பகுதியில் விளக்கமாக கூறுவோம்)

அப்போதுதான் றோவுக்குப் புரிந்தது, கிட்டு தம்மை நன்றாக ஏமாற்றியிருக்கிறார் என்ற விஷயம். கிட்டு நிஜமாகவே தமது விசுவாச இன்போர்மராக இருக்கவில்லை, அப்படி இருப்பதுபோல நடித்தார் என்று புரிந்து கொண்ட றோ, கிட்டுவுடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்டது.

இந்த இடத்தில் நிறுத்தி விடுவோமா? வேண்டாம், இன்னமும் ஒரேயொரு வாக்கியம்.

கிட்டு தம்மை ஏமாற்றிய வடுவை நீண்ட காலம் மனதில் வைத்திருந்த றோ, பின்னாட்களில் என்ன செய்தது? கிட்டு கப்பல் மூலம் வன்னி செல்கையில் இந்து சமுத்திரத்தில் வைத்து இந்திய கடற்படையால் தடுக்கப்பட்டார். நடுக்கடலில் நடைபெற்ற சில பேச்சுவார்த்தைகளின்பின்,  கிட்டு சக்தி வாய்ந்த குண்டை வெடிக்க வைத்து, கப்பலையும் அழித்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், றோவும் முக்கிய பங்கு வகித்தது.

சரி. இனி மீண்டும் சரியான ட்ராக்குக்கு வருவோம்.

ராஜிவ் கொலையில் தமக்கு சம்மந்தம் இல்லை என்று, விடுதலைப் புலிகள் அமைப்பு கிட்டு மூலம் தெரிவித்திருந்தது.  ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.எல்.எப்.) தலைவர் அமானுல்லாகான், ராவல்பிண்டியிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் தங்கள் இயக்கத்துக்குத் தொடர்பு இல்லை என மறுத்தார். இதேபோல, சீக்கிய தீவிரவாதத் தலைவர் ஜகஜித்சிங் சௌகான், இந்தக் கொலை தமது அமைப்பின் வேலை அல்ல என்று, லண்டனிலிருந்து அறிக்கை விடுத்தார்.

இந்தக் கட்டத்தில், எல்லோருக்கும் குழப்பம். ராஜிவ் காந்தியை யார்தான் கொலை செய்தது?

இப்படி குழப்பமான இடத்தில் மீண்டும் காட்சிக்குள் வருகின்றது ‘தி ஹிந்து’ பத்திரிகை. ராஜிவ்காந்தி கொல்லப்படுவதற்கு முன், அவரை ரகசியமாகச் சந்தித்த ஒருவரைப் பற்றி செய்தி வெளியிட்டு, மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, ஸ்கூப் அடித்தது தி ஹிந்து...

(13ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)



நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

சனி, 29 அக்டோபர், 2011

துன்கிந்த கப்பல் மூழ்கடிப்பில் வீர காவியமான கடற் கரும்புலிகளின் வீரவணக்க நாள்

30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின்  வீரவணக்க நாள் இன்றாகும்.
தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.






தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

வெள்ளி, 28 அக்டோபர், 2011

அளவெட்டியில் வரலாறாகிய 11 கரும்புலிகள் உட்பட 14 மாவீரர்களின் நினைவு நாள்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.














இதே நாள் 29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.




11.10.2006 அன்று சிங்களப் படைகளுக்கு எதிராக வீரியத்துடன் முகமாலைப் பகுதியில் கடும் சமர் புரிந்து சிங்களப் படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் சமரின் போது விழுப்புண்ணடைந்து 29.10.2010 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட வீர வேங்கை தாமரைச்செல்வி அவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.

இந்த வீர தமிழிச்சிக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

வியாழன், 27 அக்டோபர், 2011

ராஜிவ் காந்தி கொலை – புலிகள் சிக்கியது எப்படி? விறு விறுப்பு தொடர் அத்தியாயம்-11

அத்தியாயம்-11


சென்னை பத்திரிகையாளர், சுபா சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு, குர்தா-பைஜாமா நபரைப் பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. 

சென்னை பத்திரிகையாளர், சுபா சுந்தரத்தைத் தொடர்பு கொண்டு, குர்தா-பைஜாமா நபரைப் பற்றி விசாரித்த போது, ஆரம்பத்தில் அவருக்கு எந்த சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் சுபா சுந்தரமோ, “குர்தா- பைஜாமா நபர்  எனது பார்ட்னர் அல்ல. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது” என்று கூறியபோதுதான், பத்திரிகையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதில் ஏதோ மர்மம் இருப்பதாக அவருக்குத் தோன்றியது.  அதையடுத்தே சிறப்புப் புலனாய்வுப் பிரிவினரை அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

அந்த நாட்களில் பத்திரிகையாளர் மத்தியில் சுபா சுந்தரம் பிரபலமானவர். பத்திரிகை உலபோடும், சினிமா உலகோடும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தவர்.  அத்துடன் விடுதலைப் புலிகள் அமைப்புடனும், அவருக்கு இருந்த நெருக்கமான தொடர்புகள், பத்திரிகையாளர்களுக்கு தெரியும்.

சில பத்திரிகைகள்,  விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் யாருடைய பேட்டி தேவையென்றாலும்,  சுபா சுந்தரத்தை நாடும் அளவுக்கு அவர் புலிகளுடன் நெருக்கமாக இருந்தவர்.

இங்குள்ள மற்றொரு விஷயம்,  1990ன் ஆரம்பத்தில் சுபா சுந்தரம் யாழ்ப்பாணம் சென்று திரும்பியிருந்தார்.  அவரை அங்கே அழைத்துச் சென்றவர்கள் விடுதலைப் புலிகள்.  அங்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனையும் சந்தித்திருக்கிறார்.

இந்த விஷயங்கள் பல பத்திரிகையாளர்களுக்கு தெரிந்திருந்தது. இந்தத் தொடரில் குறிப்பிடப்படும் சென்னை பத்திரிகையாளருக்கும் தெரிந்திருந்தது.  அத்துடன், சுபா சுந்தரத்தின் ஆள்தான் ஹரிபாபு என்பது அந்தப் பத்திரிகையாளருக்குத் தெரியும்.

சென்னை பத்திரிகையாளர் தெரிவித்த தகவல்கள் புலனாய்வுக் குழுவுக்கு புதிய கதவு ஒன்றைத் திறந்து விட்டன.

புலிகளுடன் நெருக்கமான சுபா சுந்தரத்தின் ஆள்தான் ஹரிபாபு.  அந்த ஹரிபாபு, தனது நண்பராகவும், சுபா சுந்தரத்தின் பார்ட்னராகவும் அறிமுகப்படுத்திய குர்தா- பைஜாமா நபரை யாரென்றே தெரியாது என்கிறார் சுபா சுந்தரம்.  குர்தா- பைஜாமா நபர், ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின் மாயமாக மறைந்து விட்டார்.

இந்தத் தரவுகள் எல்லாமே,  சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளன.

குண்டுவெடிப்பில் இறந்த (கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும்) சல்வார் கமீஸ் பெண்,  இறந்த புகைப்படக்காரர் ஹரிபாபு,  காணாமல்போன குர்தா- பைஜாமா நபர் ஆகிய மூவருக்கும்இடையே இருந்த தொடர்பு என்ன? அதைக் கண்டுபிடித்தாலே, கொலைக்கான காரணம் தெரியவந்துவிடும் என்று நம்பியது சிறப்புப் புலனாய்வுப் பிரிவு.

ஆனால், அது சுலபமாக இல்லை.

சல்வார் கமீஸ் பெண்,  குர்தா- பைஜாமா நபர் ஆகிய இருவரது பெயர்கள்கூட தெரியாது. அடையாளம் தெரிந்த ஒரே நபரான ஹரிபாபு இறந்துவிட்டார்.  சுபா சுந்தரத்துக்கு ஓரளவுக்கு விஷயங்கள் தெரிந்திருக்கலாம்.  ஆனால், அவரை உடனடியான அணுக விரும்பவில்லை புலனாய்வுப் பிரிவு.

காரணம், சுபா சுந்தரம் மிக இலகுவில் இந்த விவகாரத்துக்கும் தனக்கும் சம்மந்தமில்லை என்று கூறிவிடலாம். “ஹரிபாபுவை மாத்திரம்தான் தெரியும், மற்றைய இருவரையும் தெரியாது. அவர்கள் ஹரிபாபுவின் நண்பர்களாக இருக்கலாம்” என்று கூறிவிட்டால்,  எதுவும் செய்ய முடியாது.

இதனால், சுபா சுந்தரத்தை உடனடியாக அணுகுவதில்லை என்றும்,  அவரைக் கண்காணிப்பது என்றும் முடிவாகியது.

கேஸில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் இல்லாத நிலையில், சென்னைக்கு வந்த  சி.பி.ஐ. இயக்குநர் விஜய் கரன், புலனாய்வுக்கான சில நெறிமுறைகளை அளித்தார்.  அவற்றை வைத்து, சிறப்பு புலனாய்வுப் பிரிவு ஒரு செக்-லிஸ்ட்டை தயாரித்தது.

1. ராஜிவ் காந்தி கொலைக்கு நிச்சயமாக ஒரு நோக்கம் இருக்க வேண்டும். விடுதலைப் புலிகள், அல்லது சீக்கிய விடுதலை அமைப்புகள், அல்லது பிற தீவிரவாத அமைப்புகளுக்கு இதில் தொடர்பு உண்டா?

2. புலனாய்வாளர்களைவிட, சில பத்திரிகையாளர்களுக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருக்கிறது.  புலனாய்வுப் பிரிவிடம் போட்டோ போகும் முன்னரே, ஹிந்து பத்திரிகையில் வெளியாகிறது.  ஹரிபாபு, சுபா சுந்தரம் என்று பத்திரிகைத் துறையுடன் சம்மந்தப்பட்ட ஆட்களின் பெயர்கள் இதில் தொடர்பு படுகின்றன. அதற்கு காரணம் என்ன?

3. சென்னை, டில்லியிலிருந்து வரும் அனைத்துப் பத்திரிகைகளிலும் ராஜிவ் தொடர்பாக வரும் செய்திகளை படித்து ஆராய்ந்து,  முக்கிய பகுதிகளைச் சேகரிக்க வேண்டும். தொடர் அம்சங்களுக்குரிய செய்திகளைத் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

4. ராஜிவ் கொலை நடந்த இடத்தில், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மற்றும் தனியார் எடுத்த புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் ஏதாவது உள்ளனவா?  இருந்தால் அவற்றைச் சேகரித்து, வழக்கு தொடர்பான தடயங்கள் உள்ளனவா என்று பார்க்க வேண்டும்.

5. குண்டுவெடித்த இடத்தில் சேகரிக்கப்பட்ட தடயங்களை, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி குற்றவாளிகளை  அடையாளம் காணக்கூடிய  ஏதாவது  தடயம் உண்டா எனப் பார்க்க வேண்டும்.

6. கொலை நடந்த இடத்தில், சம்பவத்திற்கு முன்பும், சம்பவத்தின்போதும், சம்பவத்திற்குப் பின்னரும் இருந்த அனைத்து நபர்களையும் அடையாளம் கண்டறிந்து, அவர்கள் அங்கே இருந்ததற்கான காரணங்களை விசாரித்து அறிய வேண்டும்.

7. சம்பவத்துக்குச் சற்று முன்பும், பின்பும், சென்னையிலிருந்து பேசப்பட்ட சர்வதேச தொலைபேசி அழைப்புகள் மற்றும் சென்னைக்கு வந்த சர்வதேசத் தொலைபேசி அழைப்புகள் விவரத்தைக் கண்டறிந்து, இந்த அழைப்புகளுக்கும், ராஜிவ் காந்தி கொலைக்கும் தொடர்பு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

இவைதான் அவர்கள் தயாரித்த செக்-லிஸ்டின் முக்கிய பகுதிகள்.

இவற்றின் அடிப்படையில், புலனாய்வு நடாத்துவதற்காக 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒரு குழு,  ஹரிபாபுவால் எடுக்கப்பட்ட போட்டோ சகிதம்,  ஆட்களைச் சந்திக்க அனுப்பப்பட்டனர். ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களில் எத்தனை பேரிடம் விசாரிக்க முடியுமோ அத்தனை பேரிடம், குறிப்பாக காயமடைந்தவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்பது இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணி.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் அன்று இருந்த சிலரிடம் சொல்வதற்கு விவரம் இருந்தும், அவற்றை வெளியிட அஞ்சினர்.  குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களின் நிலை அதற்குத் தலைகீழாக இருந்தது. அவர்களை பத்திரிகையாளர்கள் மொய்த்தவண்ணம் இருந்தனர்.

‘குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் வழங்கிய பேட்டி’ என்ற தலைப்பில் தினம் ஒரு பேட்டியாவது பத்திரிகைகளில் வெளியாகிக் கொண்டிருந்தது.  இந்தப் பேட்டிகளில் சில நேரங்களில் மனம்போனபடி கட்டுக்கதைகள்கூட இருந்தன.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் ராஜிவ் காந்தி படுகொலைச் சம்பவம் பற்றிய செய்திகள்தான், பிரதானமாக இருந்தன. ‘இந்த நூற்றாண்டின் முக்கியத்துவம் வாய்ந்த படுகொலை’ என சிலர் வர்ணித்தனர்.

இந்தக் கொலையை யார் செய்திருக்கலாம் என்ற ஊகங்கள், கிட்டத்தட்ட அனைத்துப் பத்திரிகைகளாலும் செய்யப்பட்டிருந்தன.

இதில் ஆச்சரியமான ஒரு விஷயம் என்னவென்றால், வெளிநாட்டுப் பத்திரிகைகளில் வெளியான ஆரம்பகால ஊகங்கள் எதுவுமே, விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றி சீரியசாக குறிப்பிடவில்லை.  ராஜிவ் காந்தி மீது சீக்கியர்களுக்கும் இருந்த வெறுப்பைப் பற்றியே அநேக வெளிநாட்டுப் பத்திரிகைகள் குறிப்பிட்டன.

சில பிரிட்டிஷ் பத்திரிகைகள்,  ஹிந்துத்துவ தீவிரவாதிகளையும் தங்கள் ஊகங்களில் குறிப்பிடத் தவறவில்லை.  ‘பரம்பரையின் மரணம்’ என்ற தலைப்பில் ‘இண்டிபென்டெண்ட்’ பத்திரிகை ஒரு தலையங்கம் தீட்டியிருந்தது.

மொத்தத்தில், மிகக் குழப்பமான காலப்பகுதியாக அது அமைந்திருந்தது. பல்வேறு ஊகங்கள் நிலவின. சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காயமடைந்தவர்களின் பேட்டிகள் தினந்தோறும் பத்திரிகைகளில் வெளியாகின. ஒவ்வொருவரும் இந்த வழக்கை வெவ்வேறு திசைகளுக்குத் திருப்பும் வகையில் கருத்துகளைக்கூறிக் கொண்டிருந்தனர்.

கொலைக்குப் பின்னணியில் இருந்தது யார் என்பது எமக்குத் தெரியும் என்று கூறி அமெரிக்காவில் இருந்துகூட மர்மத் தொலைபேசி அழைப்புகள் வந்தன.

இந்தச் சமயத்தில்தான்,  அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில்  பிரசுரிக்கப்படும்  ‘இந்தியா வெஸ்ட்’ பத்திரிகைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.  தொலைபேசியில் பேசிய நபர்,  ராஜிவ் காந்தி கொலை குறித்துதமக்கு முக்கியமான விபரம் ஒன்று தெரியும் என்றார்.

புலனாய்வுக் குழுவினரைப் பொறுத்தவரை,  அந்தத் தகவல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகதான் இருந்தது.  அந்தத் தகவலோடு புலனாய்வின் தன்மையையே திசை திருப்பியது.  அதை அடுத்த வாரம் பார்க்கலாமா?   
(12ம் அத்தியாயம் தொடரும்… அடுத்த வாரம்)



நன்றி.
விறுவிறுப்பு.கொம் 

புதன், 26 அக்டோபர், 2011

லெப்.கேணல் நாதன்,கப்டன் கஜன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். (26.10.2010)

26.10.1996 அன்று சிங்கள அரசின் கைக்கூலிகளால் பிரான்ஸ் பாரிஸில்  உள்ள லாச்சப்பல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பொது வீரச்சாவடைந்திருந்த லெப்.கேணல் நாதன்,கப்டன் கஜன் அவர்களின் 15ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.


23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற மோதலின்போது விழுப்புண்ணடைந்து 26.10.2001 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியின் 10ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

செவ்வாய், 25 அக்டோபர், 2011

மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகிய மாவீரர்களின் வீர வணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் 25.10.1995 அன்று திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்த மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் ஆகிய வீர மறவர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.



தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

திங்கள், 24 அக்டோபர், 2011

கரும்புலிகள் சோபிதன், வர்மன், சந்திரபாபு ஆகிய வீர மறவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

ஓயாத அலைகள் – 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின்  வீரவணக்க நாள் இன்றாகும். 
தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.





தமிழீழ தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் மற்றும் இதே நாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

Get this widget