thalaivan

thalaivan

சனி, 1 அக்டோபர், 2011

நாம் அணிவகுத்துள்ளோம் - விடுதலை பேரொளி தலைவர் பிரபாகரன்.


அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க.
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்....
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட வலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எமது தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.

(தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன்
அவர்களால் 1981-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை)

போர் உலகில் புலித்தலைவர் புகழ் ஒன்றே நிலைக்கும் சிறு பிள்ளைகளும் பிரபாகரன் பெயர் எழுதி படிக்கும்.....


Image Hosted by ImageShack.us

1 கருத்து :

  1. தமிழன் என்ன கயிற்றில் தொங்கும்
    மணல் மூட்டையா?
    கண்டவன் எல்லாம் ஒரு குத்துவிட்டுச் செல்ல?
    """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
    ஒருகேள்வி ஒப்புக்கு அல்லா
    ... உள்ளதை உள்ள படி சொல்லுங்கள்

    தலை நிமிர்ந்து வாழ்ந்த இனம்
    தத்தளிக்கிறது விதி எனும் சதியில்
    தர்மங்கள் நியாயங்கள்
    தரணியில் பரப்பியவர்கள் '

    தலைகள் தெரியாமல் ஆடுகிறார்
    தன்னலமில்ல தலைமைகளை தேடுகிறேன்
    தனியனாய் வந்த தானை தலைவனை
    தொடர்ந்து பின் செல்ல தவறியவர்கள் "

    தரித்திரமாய் இன்று இங்கே
    சரித்திரம் போதிக்கின்றோம்
    ஆரியன் காலடி கழுவி
    ஆத்திரம் ஆவேசம் எங்கள் சொத்தென
    ஆர்ப்பரிகிறோம் தினமும் பகலில் "

    அனாலும் குட்ட குட்ட குனிகிறோம்
    உதய் பட்டா பந்தாய் அங்கும் இங்கும்
    அல்லல் பட்டாலும் அறிய விரும்பவில்லை
    எம் தமிழன் வரலாறு '?

    வந்தவர் போனவர் இருந்தவர் கூட
    குத்தியே செல்லுகிறார்
    தமிழன் என்ன மணல் மூட்டையா
    யாவரும் குத்தி செல்ல "!?மேலும் பார்க்க

    பதிலளிநீக்கு

Get this widget