thalaivan

thalaivan

திங்கள், 29 அக்டோபர், 2012

தமிழீழ தேசிய தலைவரை தொடர்வோம்.

நாம் கடந்து வந்த பாதைகளை திரும்பிப் பார்க்கிறோம். எத்தனை அடக்குமுறைகளை நாம் உடைத்தெறிந்திருக்கிறோம். எவ்வளவு துரோகங்களை நமது பயணப்பாதையில் நாம் சந்தித்திருக்கிறோம். நமக்கு ஏற்பட்ட இழப்பு இயல்பாக ஒரு தேசிய விடுதலை போராட்டத்திற்கு கூடுதலான விலை தான். அடக்குமுறைக்கெதிராக நம்மை நாம் அர்ப்பணித்தோம்.
விடுதலை வேண்டும் என்பதற்காக எமது வாழ்வு, வளம் அனைத்தையும் அர்ப்பணித்தோம். எந்த அடக்குமுறையும் நம்மை ஆட்கொள்ள முடியவில்லை. அடக்குமுறையிலிருந்து தான் விடுதலை உணர்வு தோன்றுகிறது.

நமது அடக்குமுறை நிலைகளில் நாம் அடைந்த இழப்புகள் எம்மை விடுதலையை நோக்கி பயணிக்க உந்தித்தள்ளியது. யாராலும் இந்த நிலையிலிருந்து மீண்டு வரவே நினைப்பது இயற்கை. காரணம், எப்போதெல்லாம் வாழ்வில் ஒடுக்குதல் ஏற்படுகிறதோ, அந்த ஒடுக்குதலுக்கு எதிராக சமர் புரிவதென்பது மானம் உள்ள மாந்த கடமையாக உள்ளது. ஆயிரம் காலம் அடங்கிக் கிடப்பதை விட, சில மணிநேரம் உரிமைக்காக போராடி மடிந்து போவதுதான் மாந்த வாழ்வின் உன்னதம் என்பதை நாம் கற்றுத் தந்தோம். நமது தேசிய தலைவர் உயிரை நேசித்த ஒரு உத்தமர். மாந்த உயிரை அவர் மிக மாண்புடன் தரிசித்தார். மாந்த உயிருக்கு அவருக்கு நிகராய் மதிப்பளித்தவர்கள் இந்த நூற்றாண்டில் போராளிக் குழு தலைவர்களில் யாரும் முன்னிலை வகிக்க முடியாது. ஆனால் அவர் சொல்கிறார், எமக்கு எந்த அளவிற்கு உயிர் உன்னதமானது என்று உணர்கிறோமோ, அதைவிட மேலாக எமது உரிமையும், விடுதலையும் தேவை என்பதை வலியுறுத்துகிறது. தந்தை பெரியார் அவர்கள் மிக சிறப்பாக இரண்டே வார்த்தைகளில் மாந்த வாழ்வை அடையாளப்படுத்துகிறார்.

மாந்த வாழ்வின் அழகு என்ன என்று கேட்கும்போது, மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று சொல்கிறார். மானமுள்ள மனிதர்கள் தமது அறிவாயுதத்தை ஏந்தி நிற்கிறார்கள். மாந்தத்தின் அடிப்படையே மானத்தில்தான் அடங்கி இருக்கிறது. ஆக, நாம் அடக்கப்பட்ட காலத்தில் தமிழர்களின் மானம் காக்கப்பட வேண்டும் என்பதை தமது தலையாய கடமையாக நமது தேசிய தலைவர் உணர்ந்தார். ஆகவே தான் அவர் தமது அறிவை பயன்படுத்தி நமது மானத்தை காப்பதற்கான களம் அமைத்தார். தேசிய தலைவரின் அறிவு, அவரின் தொலைநோக்குத் திறன், பிரச்சனையை கையாளும் நேர்த்தி, போராளிகளின் மேல் அவர் கொண்ட அளவில்லா அன்பு, மண்ணையும் தமது மக்களையும் உயிரை விட மேலாய் நேசித்த பக்குவம், இவைகளே அவரை வாழும் தமிழ் உலகிற்கு மட்டுமல்ல, தொடர்ந்து வாழப்போகும் தமிழ் உலகிற்கும் ஒரு அங்கீகாரம் பெற்ற படைத்தளபதியாக தமிழர்களின் வாழ்வின் அரணாக, தமிழ் இனத்தின் அடையாளமாக அவரை முன்னிலைப்படுத்தியது.

அவர் தமது போராட்டத்தை முன்னெடுக்கும் காலத்தில் உலகே ஒன்றிணைந்து அவரை உயர்த்தி, வாழ்த்தி பேசும் என்று நினைத்திருக்க மாட்டாது. அவர் தமது கடமையைச் செய்தார். இந்த தமிழ் சமுதாயத்தில் யாருக்குமே வராத மானம், எதற்கும் அடங்கிப்போகாத மனம் அவரிடம் உயர்ந்தோங்கி இருந்தது. தமிழனுக்கான அடையாளத்தை காக்க வேண்டுமென்றால், தமிழனை மானமுள்ளவனாக மாற்ற வேண்டும் என்பதற்காக அவர் ஒவ்வொரு வினாடியும் சிந்தித்தார். சிந்தனையை செயல்படுத்தும்போது அதிலே ஒரு சிறு கீறல்கூட விழாமல் திட்டம் வகுத்தார். ஆகவேதான் கடந்த 30 ஆண்டுகால கருவி ஏந்தும் போராட்டத்தில் அசைக்க முடியாத, தோற்கடிக்க முடியாத தன்னிகரில்லா தனிபெரும் படையாக தமிழீழ தேசிய புலிகள் களம் கண்டார்கள். நமது தேசிய தலைவரின் அளப்பரியா வீரம், அவரின் மனத்திடம், தூயஆன்மா இதுவே ஆயிரக்கணக்கான இளைஞர்களை, இவரின் கட்டளையால் தம்மை எரித்துக் கொள்ளும் அளவிற்கு துணிவை தந்தது.

தாம் தன்னலமற்று களத்தில் இருந்ததை உற்றுநோக்கிய வீரர்கள், அவரைப்போல் வாழ்வதற்காகவே தம்மை அர்ப்பணித்தார்கள். பேரினவாத சிங்கள அரசுகள், பயரங்கரவாதிகள் சிறார்களை சமரில் ஈடுபடுத்தும் வன்முறையாளர்கள் என்றெல்லாம் வரிசையாக அவர்மீது குற்றம் சாட்டியபோது, நமது தேசிய தலைவருக்கு எதிராக விரல் நீட்டியபோது, அவர் எந்த நிலையிலும் தமது மனதை இடம் மாற்றிக் கொள்ளவில்லை. காரணம், அவரின் களம் என்பது அவருக்கான களம் அல்ல. ஒருவேளை எமது தேசிய தலைவர் நினைத்திருந்தால், தெற்காசிய நாடுகளிலே வளம் கொழிக்கும் வாழ்வை வாழ்ந்திருக்க முடியும். ஆனால் அவர் தம் சொந்த நலனை தவிர்த்து, தமது இன நலனுக்காக வாழ்ந்த ஈடு இணையில்லா தலைவராக இருந்தார். எந்த தமிழ் தலைவருக்கும் இல்லாத மானம், நமது தேசிய தலைவருக்குள் எரிமலையாக வெடித்து சிதறியது.

ஆகவேதான் நமக்கான மொழி இருக்கிறது, நமக்கான பண்பாடு இருக்கிறது, நமக்கான கலை இலக்கியங்கள் இருக்கிறது, நமது இனம் என்று சொல்லிக் கொள்வதற்கு ஆயிரக்கணக்கான இலக்கிய தளங்கள் இருக்கிறது. ஆனால் இதையெல்லாம் போற்றி பாதுகாக்க, நமக்கென்று ஒரு மண் இல்லையே என்று சிந்தித்தார். தமது மண்ணை இறுத்திக் கொள்வதற்காக, தமது மண்ணின் அடையாளத்தை அதன் தொன்மையை பாரெங்கும் பறைசாற்றுவதற்காக, இந்த நொடிவரை அவர் உழைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தமிழினம், தமிழ் மொழி இவைகளைக் கொண்டு தமது வாழ்வை வளப்படுத்திக் கொண்ட தலைவரிகளின் வரிசை நீண்டதாக இருக்கிறது. தமிழ் என்று கூறியே தமிழரின் வாழ்வை புதைக்குள் தள்ளிய கேவலம் நிறைந்த வாழ்வை தமது மேல் சட்டையாக அணிந்துக் கொண்டிருக்கும் மேதாவிகளின் படையணி நீண்டிருக்கிறது.

ஆனால், தமது மக்களின் வாழ்வுக்காக, தமது மக்களின் துயர் நீக்குவதற்காக, தமது மக்களின் வாழ்வு நீடித்த அமைதியும், சமாதானமும், நம்பிக்கையும், வளமும் கொண்டதாக இருக்க வேண்டும் என்பதற்காக தம்மையே அர்ப்பணித்த ஒரு வீரத் திருமகனை நாம் தலைவனாக பெற்றிருப்பது நமக்கு நாம் வாழும் காலத்திலேயே அவரோடு இணைந்து நாம் வாழ்வது மிக மிக பெருமைக்குரியதும், மிக போற்றுதலுக்குரியதும், நம்மையே நாம் உயர்த்திக் கொள்ள தக்கதுமான ஒரு உயரிய நிலை. இதுவே எமக்கு முழு நிறைவை தந்திருக்கிறது. நமது தேசிய தலைவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம். இது ஒன்றே போதும், இந்த தேசிய அடையாளத்தில் நமது பங்கு இருக்கிறது என்பதை அறிவிக்க. நாம் தேசிய தலைவரின் நலனுக்காக வாழவில்லை, ஆனால் தேசிய தலைவரின் ஆணைக்காக வாழ்கிறோம். காரணம், அவர் பிறப்பிக்கும் ஆணை எந்த நிலையிலும் இந்த மண்ணின் மாண்புக்காகத்தான் இருக்கும். தமது மக்களின் மகிழ்வுக்காகத்தான் இருக்கும்.

அவர் குறிப்பறிந்து செயல்படும் சிறப்பு வாய்ந்தவராக பல நேரங்களில் வெளிப்பட்டிருக்கிறார். இப்போது ராஜபக்சே சகோதரர்களின் விசுவாச நாயாக செயல்படும் கருணா, ஒருமுறை பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டார். நாங்கள் உறங்கிக் கொண்டிருப்போம். திடீரென விடியற்காலை மூன்று மணிக்கு எமது தலைவர் வருவார். இந்த போர் திட்டத்தில் மாற்றங்கள் இருக்கிறது. நீங்கள் இந்த பகுதிக்கு செல்லுங்கள். அவர்கள் அந்தப் பகுதிலிருந்து வருவார்கள் என்று சொல்லிவிட்டு புறப்படுவார். நாங்களெல்லாம் வியந்து பார்த்துக் கொண்டிருப்போம். இந்த மனிதர் உறங்குவாரா, உறங்க மாட்டாரா, இரவெல்லாம் விழித்திருந்து இதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாரா, இப்படிப்பட்ட ஒப்பற்ற மனிதனை நாங்கள் தலைவனாக பெற்றிருக்கிறோமோ என்று எங்களையே நாங்கள் பாராட்டிக் கொள்வதுண்டு.

ஆக, எதிரிகூட எமது தேசிய தலைவரை விரல்நீட்டி, அவரின் நேர்மையை, அவரின் மாந்த நேய பற்றை, நமது இனத்தின் மீட்புக்காக அவர் களமாடிய வீரத்தை வியந்துதான் இருக்கிறார்களே தவிர, இதுவரை யாரும் சுட்டிக்காட்டி அவரின் தவறை சொன்னது கிடையாது. இந்த வரலாற்று நாயகன், தமது வாழ்வில் ஒவ்வொரு துளி நேரத்தையும் தமது மக்களின் விடுதலைக்காகவும், தமது மக்களின் உரிமைகளுக்காகவும், தமது மக்களின் வாழ்வுக்காகவும் அர்ப்பணித்தார். தமக்கான நேரம் என்று அவர் ஏதாவது ஒதுக்கிக் கொள்வாரா என்று பல்வேறு தருணங்களில் போராளிகள் பேசிக் கொள்வார்களாம். காரணம், எந்த நேரத்தில், எந்த இடத்தில் அவர் எப்படி தோன்றி, அவர்களுக்கு திட்டங்களை வகுத்துக் கொடுப்பார் என்பதை யாருமே அறியாதவாறு காலமெல்லாம் தமது மக்களின் விடுதலை ஒன்றிற்காகவே அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். ஆகவேதான், நாம் இந்த நொடி வரை உறுதியாக நம்புகிறோம், உலகில் தமிழினத்திற்கான ஒரு அரசு அமையப்போவதை எந்த ஒரு ஆற்றலாலும் தடுத்து நிறுத்த முடியாது.

தமிழர்களுக்கான அரசு இந்த புவிப்பந்தின் சிறப்பு வாய்ந்த அரசாக நீடித்து நிற்கும். நாளைய உலக சமூகம் தமிழர்களின் வாழ்வியல்களிலிருந்து தான் தங்கள் வாழ்க்கையை கற்றுக் கொள்ள முடியும். அறிவியல், புவியியல், வேதியியல், உயிரியியல், கடலியல், வானியல், தொலை தொடர்பியல், மாந்தவியல் என எதை எடுத்துக் கொண்டாலும் அது தமிழீழத்திலிருந்து, தமிழர்களின் மூளையிலிருந்து எடுக்கப்படும் செய்தியாகத்தான் அல்லது தமிழர்களின் சிந்தனையிலிருந்து புறப்படும் ஆற்றலாகத்தான் இருக்கும், இருக்க வேண்டும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த நிகழ்விலிருந்து எவ்வித மாற்றமும் நிகழப்போவது கிடையாது. காரணம், நமது அரசானது தேசிய தலைவரின் மூளையிலிருந்து உதித்த அரசு. நமது தேசிய தலைவர் தமது மூளையை மக்களின் வாழ்விலிருந்து சிந்திக்கிறார்.

தமது மக்களின் வளர்ச்சியிலிருந்து வாசித்தறிகிறார். தமது மக்களின் வளத்திற்காக திட்டமிடுகிறார். தமது மக்களின் மகிழ்வுக்காக உழைக்கிறார். தமது மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்பதற்காக சிந்திக்கிறார். தமது மக்கள் நேர்மையோடும், உண்மையோடும் இருக்க வேண்டும் என்பதை தாமே வாழ்ந்து அவர்களுக்கு கற்பிக்கிறார். அவரின் ஒவ்வொரு அசைவும் நமது விடுதலையைக் குறித்தும், நமது வாழ்வை குறித்தும் தான் தெரிவிக்கிறது. உறங்கும் நேரம்கூட எமது விடுதலைதான் அவரின் கனவில் வந்து செல்கிறது. ஆகவே, இப்படிப்பட்ட ஒரு தலைவரை நமது விடுதலைக்காக நமக்கு இயற்கை அளித்திருப்பது உள்ளபடியே நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.

இந்த ஒப்பற்ற தலைவரை நாம் தொடர்வோம். அவரின் தலைமையில் அமையப்போகும் தமிழர்களுக்கான அரசு இந்த உலக வரலாற்றை திசை திருப்பும்.
Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 25 அக்டோபர், 2012

லெப்.கேணல் அமுதசுரபியின் வீரவணக்க நாளும் வீர வரலாறும்.

லெப். கேணல் அமுதசுரபி
சின்னப்பு நந்தினி
தமிழீழம் (யாழ் மாவட்டம்)
தாய் மடியில் : 23.07.1972
தாயக மடியில்:26.10.2001

யாழ்ப்பாணம், செம்பியன்பற்று தெற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவள் ஆளுமை மிக்கதொரு பெண் போராளியாக இருந்தவள். பெண்களுக்கென விதிக்கப்பட்ட சில வரை முறைகளிலிருந்து வெளிவரத் தயங்கிய பெண்களுக்குத் தைரியமூட்டி அவர்களையும் கடலில் இறக்கிப் பயிற்சிகள் கொடுத்து திறமை மிக்க போராளிகளாக வளர்த்தெடுத்தவள்.

கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று.

"இந்த வாறன். இந்தா வாறன்" உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, "விடாமல் அடியுங்கோ" என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது.

சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான்.

தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் "பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது" எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை.

சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டு போய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும் வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமைமிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், "அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்" என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள்.

"அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்." கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது.

இந்தக் காலம் எமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம்.

முல்லைத் தீவியிற்கு உயரே  எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன.

முறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு.

இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு:

"அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவளுக்கு  எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவாள்." அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது.

முல்லைத்தீவிற்கு உயரே நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள்.

அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்கு உயரே  'பிறைற் ஓவ் சவுத்' என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள்.

அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள்.

நாள் நேரம் எதற்கு  எத்தனை படகுகள் வழிமறித்து 'பிறைற் ஒவ் சவுத்' என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள்.

சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள்.

'பிறைற் ஒவ் சவுத்' மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுத்த சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள்.

கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், "அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவளால்  செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவாள். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வாள்."

எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது.

வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை...

கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு.

பொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்... பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை.

எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களது படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது.

மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை.

ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது.

அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். "படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ...? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ...?" இது தான் அல்பாவின் இறுதிக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது.

மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம்.

அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருக்க நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய்...

" அமுதசுரபி " பெயர் தாங்கிய ஒரு சண்டைப் படகு தமிழீழ கடற்புலிகள் அணியில்  பல வரலாற்றுச் கடற்சமரில் பங்கு பற்றி பல வெற்றிக்கு வழி வகுத்தன பல வீரரின் தியாகத்துடன்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும்  கடலில் களமாடி தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீர தமிழச்சிக்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

தாயுமான எமது தேசிய தலைவன்.

சோதனைக்காலங்களில் எடுக்கும் முடிவுகளே சாதனைகளாகிறது என மார்டின் லூத்தர் சொல்வார். நமக்கான போராட்ட வடிவம் கூட, இப்போது நாம் எடுக்கும் முடிவுகளில் தீர்மானிக்கப்பட இருக்கிறது. அசைக்க முடியாத மனநிலையோடு, நாம் நமக்கான நாட்டை கட்டி அமைப்போம் என உறுதி எடுக்கும் காலத்தில்,
அந்த கட்டாயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கான அரசு, நமக்கான ஆட்சி, நம்மை நாமே ஆள்வது என்கின்ற அடிப்படை மாந்த உரிமை தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நாம் இயன்றவரை முயற்சிப்போம் என்று சொல்லாமல், அது நடக்கும்வரை செயல்படுவோம் என்று நம்மை நாம் ஒருவருக்கொருவர் சந்திக்கும்போது உறுதி எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்காகத்தான் நமது மேதகு தமிழ் தேசியத் தலைவர் தமது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவர் வாழ்க்கையில் யாரையும் இப்படி வாழுங்கள் என்று வலியுறுத்தியது கிடையாது. எப்படி அவர்கள் வாழ வேண்டும் என்பதை இவர் வாழ்ந்து காட்டினார்.

கிறித்துவ மறைநூலான விவிலியத்தில் இயேசு கிறிஸ்து தமது சீடர்களை அமர வைத்து, அவர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். அதற்கு முன்னர் அவர் தமது மேலங்கியை கழற்றி வைத்துவிட்டு, இடுப்பிலே ஒரு துண்டை கட்டிக் கொண்டு இந்தப் பணியை செய்கிறார். இது அக்கால யூத நடைமுறைக்கு மிகவும் ஏற்கத்தக்க செயலாகும். யூத இனம் தம்மை கடவுள் படைத்த இனமாக கொண்டாடிக் கொண்டதோடு, யூதர்களே இந்த உலகில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு திரிந்த காலக்கட்டம். அப்படிப்பட்ட நிலையில் தான் யூதராகிய இயேசு கிறிஸ்து தமது இடுப்பில் துண்டை கட்டிக் கொண்டு, சீடர்களின் பாதங்களை கழுவி துடைக்கிறார். தாம் எப்படி எளிமையோடு வாழ வேண்டும் என்பதை அவர் தமது செயலின் மூலமே கற்பித்தார்.

கட்டளையிடுவதற்குப் பதிலாக வாழ்ந்து காட்டுவது என்பதுதான் தலைமைத்துவத்தின் அடிப்படையாகும். இந்த நேர்மை, உண்மை, ஏற்றுக் கொள்ளுதல், அணைத்துக் கொள்ளுதல், தாங்கிக் கொள்ளுதல், தம்மையே அர்ப்பணித்தல் என்கின்ற அளப்பறியா பண்பு ஒரு தலைவனின் உடன் பிறந்த குணமாக இருக்கும். எமது தேசிய தலைவரின் வாழ்வியலும் இதைத்தான் நமக்கு போதிக்கின்றன. கிறித்துவ மதம் மிகக் குறைந்த காலக்கட்டத்தில் உலகெங்கும் இன்று அசைக்க முடியாத நிலைக்கு உயர்ந்தோங்கி இருக்க காரணம் என்ன? என்று இன்றுவரை மறைநூல் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆய்வுகளின் முடிவில் அவர்கள் கண்டறிந்த ஒரு உண்மை என்னதென்றால், கிறித்துவ மதத்தில் இழையோடிப் போயிருக்கும் அதன் எளிமை என்பதுதான்.

இன்று உலகெங்கும் கிறித்துவ மதம் பரந்து விரிந்திருக்கக் காரணம், அந்த மதத்தில் உள்ள எளிமை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் தேசிய விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பும் இப்படி எளிமையோடு கட்டி அமைக்கப்பட்டதால், இன்று உலகெங்கும் அதன் அமைப்பின் அடிப்படைகள், கொள்கைகள், லட்சிய நிலைகள் மிக உயர்ந்தோங்கி நிற்கிறது. அமைப்பில் மட்டுமல்ல, அந்த அமைப்பை கட்டிய எமது தேசியத் தலைவர் எளிமையாக இருந்தார். அவர் எவ்வாறு எளிமையாக இருந்தாரோ அதேப் போன்றே அவர் இயக்கத்தையும் எளிமையாக வழிநடத்தினார். தாய்மைக்குரிய பண்பு அவருக்குள் அழுத்தமாக அமர்ந்திருந்தது. அவர் தமது போராளிகளை இழந்த போது, கண்ணீர் விட்டு அழுதார்.

அவர் என்ன உண்கிறாரோ அதுதான் தமது போராளிகளுக்கும் உண்ண வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தார். ஒரு தலைவன் ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்ற நிலையிலிருந்து மாறி, ஒரு தாய் போன்று தமது போராளிகளை தோள்மேல் சுமந்தார். ஒரு தாயின் இடுப்பிலிருக்கும் குழந்தை எப்போதும் சிரித்த முகத்தோடு, எந்த அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் இருக்குமே, அதற்குக் காரணம், அந்த தாய் எந்த நிலையிலும் தன்னை கைவிட மாட்டாள். அந்த தாய் கீழே கற்கள், முற்கள் இருந்தாலும்கூட, தமது பாதத்திலே தாங்கிக் கொண்டு தம்மை சுமந்து கொண்டு செல்வாள் என்கின்ற மனப்போக்குத்தான்.

இதே மனப்போக்குத்தான் நமது போராளிகளுக்கு இருந்தது. அந்த மாவீரர்கள் எமது தேசியத் தலைவரை, தலைவராக அல்ல, தாயாக ரசித்தார்கள், தாயாக உணர்ந்தார்கள், தாயாக போற்றினார்கள். அவரை தாயாக ஏற்றுக் கொண்டார்கள். எமது தலைவர் தலைவராக இல்லை. தாயாக இருந்தார். ஆகவே தான் அவர் அந்த மண்ணை, அந்த மண்ணின் மக்களை உளமாற நேசித்தார். தமது மண்ணுக்கும் தமது மக்களுக்கும் எந்த இடையுறும், எந்த அச்சுறுத்தலும் நிகழக்கூடாது என்பதிலே உறுதியாக இருந்தார். வானத்திலிருந்து கழுகு வட்டமிட்டு வந்து குஞ்சுகளை வேட்டையாட நினைக்கும்போது, பறந்து சென்று தாக்கும் கோழியைப் போன்று அவர் தமது மக்களை பழிவாங்க வரும் பகைவர்களை எதிர்த்து போராடினார்.

தாம் மட்டும் போராடினால் போதாது என, தமது குஞ்சுகளுக்கு அவர் போராட்டத்தை கற்றுக் கொடுத்தார். போராட்ட வடிவத்தை தாம் உள்வாங்கிக் கொண்டபோது, அதை வெளியரங்கமாய் தமது பிள்ளைகளுக்கும் சேர்த்து வளர்த்தெடுக்க பயிற்றுவித்தார். இந்த பயிற்சியிலே தேறிய பிள்ளைகள், மாவீரர்களாய், சொந்த மண்ணுக்காக குருதி சிந்த அல்ல, உயிர் கொடுக்கவும் உறுதியாக இருந்தார்கள். ஆகவேதான் கடந்த 30 ஆண்டு காலமாக எந்தவித ஆசைக்கும், எந்தவித அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் அசராமல் தாம் கொண்ட லட்சியத்திலே, உறுதியாக தமது செயல்பாட்டை தொடர்ந்து இயக்கிக் கொண்டிருந்தார். தாம் இயங்கினார். தம்மோடு சேர்த்து தமது பிள்ளைகளையும் இயக்கச் செய்தார்.

உலக வரலாற்றில் எமது தேசியத் தலைவரைப் போல தாய்மை கொண்ட தலைவரை நம்மால் பார்ப்பது கடினம்தான். கடுமையான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எமது மண்ணை காக்க வேண்டும். எமது தலைமுறை பெற்றுத்தரும் விடுதலையை அடுத்த தலைமுறை உரிமையோடு கொண்டாடட்டும் என்ற உணர்வோடு கடும் சமரை எதிர்க்கொள்ள, அவர் தமது மக்களிடம் ஒவ்வொருவரும் ஒரு பிள்ளையை போர்க்களத்திற்கு அனுப்புங்கள் என்று அழைப்பு விடுக்கிறார். முகம் மாறாமல், அகம் குளிர்ந்து தமிழ் தாய்கள், தமது பிள்ளைகளை வேறொரு தாயோடு போராட அனுப்பி வைத்தார்கள். அவர்கள் தம்மைவிட, தமது தாய்மையைவிட, மேலான தாய்மை தமது தேசிய தலைவருக்கு உண்டென்று நம்பினார்கள். ஊருக்கு உபதேசம் செய்து தாம் மட்டும் காத்துக் கொள்ளும் கேடு நிலைக் கொண்ட தலைவனல்ல எமது தேசியத் தலைவன்.

தமது மக்களினம் எல்லாம் வீட்டிற்கு ஒரு பிள்ளையை அனுப்புங்கள் என்று கூறிவிட்டு, தமது வீட்டு பிள்ளையை எங்கோ வெளிநாட்டில் பதுக்கி வைத்து, பாரிய சமர் புரிய ஊரார் வீட்டுப் பிள்ளைகளை அனுப்பி வைக்கவில்லை. மாறாக, அந்த சமர் களத்திலே தமது பிள்ளையையும் உயிர் கொடையாக வார்த்துக் கொடுத்தார்.தமது மக்கள் விடுதலை ஒன்றே எமது தேசியத் தலைவனின் லட்சியமாக இருந்தது. தமது மக்களின் உரிமை வாழ்வு ஒன்றே எமது தேசிய தலைவனுக்கான கனவாக இருந்தது. அந்த கனவை மீட்டெடுக்கும் போராட்டத்திற்காக தமது வாழ்நாளை அர்ப்பணித்ததோடு, தமது மக்களை அந்த அர்ப்பணிப்பிற்கு உந்தித் தள்ளினார். தமது நாட்டு விடுதலைக்காக, தமது மண்ணின் மீட்புக்காக, உயிர் கொடை தரும் உன்னத வாழ்வு அவரிடம் குடி கொண்டிருந்ததால், அந்த குறியீடாய் மாவீரர்கள் மாறிப்போனார்கள்.

அவர்களின் வாழ்வு தலைவனின் கட்டளை என்பதைவிட, ஒரு தாயின் கட்டளையாக அவர்களுக்கு தெரிந்தது. கருத்தரித்தது தாயாக இருந்தாலும், காத்து வழிநடத்தியது எமது தலைவன் தான். மாபெரும் அன்பு சுரங்கமாக ஊற்றெடுக்கும் தாய்மையின் குணத்தை கொண்டவனாய், களத்திலே எமது தலைவன் இருந்த காரணத்தினால்தான், அணி அணியாய் தம்மை அர்ப்பணிக்க தொடர்ந்து மாவீரர்கள் அணிவகுத்தார்கள். அவர்களின் வாழ்வு, தமது தாயின் கட்டளைக்காய் காத்திருந்தது. ஒவ்வொரு முறையும் மாவீரர்களின் சடலங்களை, அந்த வீரமறவர்களின் வித்துடல்களை கண்டபோது, கதறினார். ஒரு தாய்க்கே உரிய பாங்கை நம்மால் அங்கே காண முடிந்தது.

அழுது துடித்தாலும், அடுத்து வரும் தலைமுறைக்கான விடுதலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பதிலே அவர் உறுதியாக இருந்தார். இந்த உறுதியின் காரணத்தினால்தான், நாற்பத்து ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரமறவர்கள் தமது மண்ணின் விடுதலைக்காய் தமது உடலை வித்துக்களாக்கினார்கள். கடந்த 30 ஆண்டுகால சமரில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், தமது இன்னுயிரை ஈந்தார்கள். உலகெங்கும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் உறவுகள் ஏதிலிகளாய் புலம் பெயர்ந்து வாழும் அவலத்திற்கு தள்ளப்பட்டார்கள். ஆக, நாம் இந்த காரணங்களை சரியாக புரிந்து கொண்டு, நமது விடுதலைக்கான வேட்கை தணியாமல் காக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். தாயுமான எமது தலைவன், தமது தலைமையில் தமிழீழ அரசை அமைக்காமல் ஓய்வு பெறமாட்டான் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். நமக்கான அரசு என்பதிலே மாறுபட்ட எண்ணமோ, அவநம்பிக்கையோ ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது.

நமது விடுதலை ஒன்றே லட்சியமாகக் கொண்டு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற நமது தேசியத் தலைவரின் வழிக்காட்டுதல் இன்னும் சில காலங்களில் நமக்கு கிடைக்கத் தொடங்கிவிடும். நாம், நமது விடுதலைக்கான போராட்டத்தை இன்னும் இன்னுமாய் அழுத்தமாக நடத்திச் செல்வதற்கான மன உறுதியையும், செயல்பாட்டையும் வகுத்துக் கொள்ளும் காலத்திலே இருந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, மனம் தளராமல் யார் என்ன தவறான பரப்புரைகளை மேற்கொண்டாலும், கலங்காமல், தயங்காமல், தாயுமான எமது தலைவன் எம்மோடு இருக்கிறான், எந்த நிலையிலும் நான் கலங்க மாட்டேன், எமக்கான இலட்சியத்தை அடையும்வரை எமது வழித்தடங்களிலிருந்து மாற்றுப் பாதையை தேட மாட்டேன் என்கின்ற உறுதியை உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகள் உள்வாங்கிக் கொண்டு எமது களப்பணிக்காய் எமது வாழ்க்கையை அர்ப்பணிக்க எந்த நேரத்திலும் தயாராக இருப்பேன்.


தாயுமான எமது தலைவனுக்கு இதை உறுதியாகச் சொல்கிறேன் என்ற மனப்போக்கோடு வாழ உறுதியெடுப்போம். தமிழீழம் மலரும். இதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

தமிழர்களின் காவலன் மேதகு வே.பிரபாகரன்



பறவைகளின்
சிறகுகளும் ஏவுகணையை
களத்தில் சுமந்தது !

நெல் சுமக்கும்
மண்ணும் நிலவெடியை
சுமந்தது !

உன் வேர்வை
சிந்தல்கள் கூட
தோட்டாவை
தந்தது !

ஈழத்தில் விளைந்த
பனை மரங்கள் கூட
உனக்கு உளவு செய்தி
தந்தது !

உன்னை போல
போராளியை உலகம்
எந்த இனத்தில்
கண்டது !

சூரியனே உன்னை
சுமப்பதால்
வானம் பெருமை
கொண்டது...



பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 13 அக்டோபர், 2012

விடுதலைப் புலிகளின் எம்.ஜி.ஆருடனான கடைசி சந்திப்பு.

உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.


பொறுமை இழந்த நிலையில் பிரபாகரன், "அப்படியென்றால் நீங்கள் இந்தப் பாதுகாவலை நீண்டநாள்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்; ஆண்டுகள் கூட ஆகலாம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க இயலாது - அதுவும் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது' என்று ஆத்திரத்துடன் கூறினார்.


"நீங்கள் ஆயுதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்வோம். எங்கள் ராணுவத்தினை ஈடுபடுத்தி அதைச் செய்வோம். எங்கள் ராணுவத்தின் முன் நீங்கள் ஒரு தூசு. எனது பைப்பில் உள்ள புகையிலைத் தூளைப் புகைத்து முடிப்பதற்குள் - ராணுவம் அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்' என்று அவர் குரலை உயர்த்தினார்.

பிரபாகரன், "உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். எங்களுக்கு எது நடைபெற்றாலும் சரி' என்றார்.

தீட்சித் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, "பிரபாகரன் - இதுவரை நான்கு தடவை இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்' என்றார்.

"அப்படியா, நல்லது. எங்கள் மக்களுக்கு நான்கு தடவை நல்லது செய்திருக்கிறேன் என்று அதற்குப் பொருள்.'

உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த உயர் அதிகாரியான தீட்சித், அந்த அறையில் இருந்து வெளியேறினார்.

கடுமையான முறை பயன்தராததைக் கண்ட அதிகார அமைப்பு, இலகுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைக் கையாளும் எண்ணத்துடன் மீண்டும் பிரபாகரனிடம் வந்தனர். இம்முறை அதிகாரிகள் குழுவில் இந்திய உளவு அமைப்பு இயக்குநர் எம்.கே.நாராயணன் (தற்போது பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசகர்), வெளிநாட்டு உறவு இணைச் செயலாளர் சகாதேவ், வெளிவிவகார அமைச்சகத்தைச் சேர்ந்த நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாகத் தனித்தனி சந்திப்புகளை மேற்கொண்டு, சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனாலும் பிரபாகரனும் மற்றவர்களும் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இதே நேரம், பழ.நெடுமாறன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் "பிரபாகரனுக்கு ராஜீவ் திடீர் அழைப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, அதன் விவரத்தையும் பிரசுரித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தைப் படித்ததும், நெடுமாறன், சென்னையிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணியைத் தொடர்பு கொண்டார்.

""ஆமாம், பிரபாகரனை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒப்பந்தத்தை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகிறார் என்று தெரிய வருகிறது'' என்றார் வீரமணி. "பிரபாகரன் எங்கிருக்கிறார்' என்று பழ.நெடுமாறன் கேட்கவும், அசோகா ஓட்டலில் இருப்பதாக கி.வீரமணி தெரிவித்தார். நெடுமாறன் அசோகா ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து, பிரபாகரனுக்கு போன் என்றதும், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அறியாத டெலிபோன் ஆபரேட்டர், பிரபாகரன் அறைக்கு இணைப்பை அளித்தார். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:

""நான் போன் போட்டதும், மறுமுனையில் தம்பி பிரபாகரனே எடுத்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தம்பி - நான் கேள்விப்படுகிற செய்தி உண்மையா?'' என்றேன். அவர், "ஆமாம் அண்ணா! எங்களைச் சிறைவைப்பது போன்று அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வை.கோபால்சாமி உள்ளே வந்தபோது அவரையும் சந்திக்கவிடவில்லை. உடன்பாட்டை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். தீட்சித் மிரட்டுகிறார். இந்திய ராணுவத்தின் மூலம் ஆயுதங்களை எங்களிடமிருந்து பறிப்போம் என்கிறார். நான் எல்லாவற்றுக்கும் மறுத்து வருகிறேன்' என்றார்.

தம்பி கூறியதைக் கேட்டதும் எனக்குப் பதைபதைப்பு அதிகமானது. ""அப்படியானால் எனது சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு உடனடியாகத் திரும்புகிறேன்'' என்றேன். அவர் ""ஆமாம் அண்ணா! உடனடியாகத் திரும்பினால் நல்லது'' என்றார். எனது பயண ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் செய்த சோமசுந்தரமும் தம்பியுடன் அப்போது பேசினார். உடனடியாகத் தாயகம் திரும்பினேன். (நேர்காணல் - பழ.நெடுமாறன் - 29-8-2009)

இதனிடையே பிற இயக்கங்கள் அனைத்தின் பிரதிநிதிகளும் தில்லிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்து தங்கிச் சென்றனர்.

"விடுதலைப்புலிகள் விஷயம் என்னவாயிற்று' என்று ராஜீவ் கேட்டதும் "பிரபாகரன் ஏற்க மறுக்கிறார்' என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக முதலமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு விமானம் மூலம், அவர் தில்லி வரவழைக்கப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் தில்லி வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அன்றைய இரவே, அசோகா ஹோட்டலில் இருந்த பிரபாகரன் குழுவினரைத் தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான விவரங்களை அன்டன் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதி வருமாறு:

""தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.''

""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்றார் இந்தியத் தூதுவர்.

""இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?'' என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.

""சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?'' என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை'' என்றார் யோகி.

""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?'' என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை'' என்றார் யோகி.

வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்'' என்றார் தீட்சித்.

இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்'' என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.

தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.

எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர - புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை.

முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?'' என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்'' என்றார். ""அப்படியே செய்வோம்'' என்று கூறிவிட்டுச் சென்றோம்.

முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான விடுதலைப் புலிகளின் கடைசிச் சந்திப்பு அதுதான்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 10 அக்டோபர், 2012

லெப்.கேணல் துருபதனின் நினைவு நாள் இன்றாகும்.

11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி - முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட்ட மாவீரர்களின்  நினைவு நாள் இன்றாகும்.



பலத்த எறிகணைச் சூட்டாதரவுடனும், குண்டு வீச்சு வானூர்திகளின் துணையுடனும் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி விடுதலைப் புலிகளின் போரணிகளால் சில மணிநேரத்தில் முறியடிக்கப்பட்டது. இதன்போது 150 வரையான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டதுடன் பல கவச ஊர்திகளும் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டிருந்தன. சிறிலங்கா படையாள் ஒருவர் விடுதலைப் புலிகளால் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் கொல்லப்பட்ட படையினரில் 75 வரையானோரின் உடலங்களும் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிகர முறிடிப்புச் சமரில் லெப்.கேணல் துருபதன் உட்பட 20 வரையான போராளிகளும் துணைப்படை வீரர்களும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 9 அக்டோபர், 2012

தியாகி திலீபனை பற்றிய ஆவணப்படம் - நிதர்சனம் வெளியிடு.

இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ் மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபனைப்பற்றிய ஆவணப்படம்.





தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் வல்லாதிக்க அரசை எதிர்த்து அகிம்சை போர் செய்து தனது இலட்சியம் நிறைவேறாமல் போனதையிட்டு தன்னுயிரை தமிழீழத்திற்க்காக அர்ப்பணித்த தியாகி லெப்.கேணல் திலீபன் அண்ணாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை  உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 7 அக்டோபர், 2012

லெப்.கேணல் நிரோஜன், அக்பர், கபிலன், அண்ணாமறவன் ஆகிய மாவீரர்களின் நினைவு நாள்

07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் நிரோஜன் உட்பட்ட கடற்புலிகளின் பல மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.



மற்றும் இதே நாள் வடபோர் முனையில் 07.10.2006 அன்று சிறிலங்கா படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் அக்பர் அவர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.

மற்றும் இதே நாள் இந்து மாகடலில் 07.10.2007 அன்று சிறலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கபிலன், லெப்.கேணல் அண்ணாமறவன் உட்பட்ட பல கடற்புலி மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.



தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 6 அக்டோபர், 2012

முதற் பெண் தரைக் கரும்புலி மேஜர் யாழினியின் வீர வணக்க நாள் (காணொளி இணைப்பு)

கரும்புலி 
மேயர் யாழினி 
சிவசுப்பிரமணியம் ராகினி 
தமிழீழம் (யாழ் மாவட்டம்) 
தாய் மடியில் :02.05.1975
தாயக மடியில்:06.10.1997


06.10.1997 அன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் அமைந்திருந்த "ஜெயசிக்குறு" நடவடிக்கை படைகளின் விநியோக மையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவை தழுவி கொண்டார்.




தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் பல களங்களில் களமாடி மீண்டும் எதிரிக்கு பாரியதொரு தாக்குதலை தொடுத்து அந்த சமரில் கரும்புலியாக வெடித்து காற்றோடு கலந்த எங்கள் யாழினி அக்காக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 5 அக்டோபர், 2012

லெப்.கேணல் டயஸ், சாந்தகுமாரி, புனிதா ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட பல மாவீரர்களின் வீர வணக்க  நினைவு நாள் இன்றாகும்.



மற்றும் இதே நாள் 06.10.2000 அன்று ஓயாத அலைகள் – 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட பல மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.

மற்றும் இதே நாள் 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட பல மாவீரர்களின் நினைவு நாளும் இன்றாகும்.


தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 3 அக்டோபர், 2012

இஸ்ரேலிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்: [பாகம் 11]

இஸ்ரேலியர்கள் என்றால் யார்? அந்த இனக் குழுமத்திற்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? ஏன் அவர்கள் யூதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்? அவர்களது வரலாறு என்ன?


இஸ்ரேலியர்கள் எவ்வாறு ஒரு விடுதலை பெற்றார்கள் என்று பார்ப்பதானால் முதலில் இஸ்ரேலியர்களுடைய பூர்வீகம் பற்றி நாம் நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும்.

இஸ்ரவேல் என்கின்ற இனத்தின் வரலாறு ஆபிரகாம் என்கின்ற மனிதனுடைய வாழ்க்கையில்தான் ஆரம்பமானது என்று கடந்த வாரம் பார்த்திருந்தோம்.

இஸ்ரேலியர்களுடைய மாத்திரமல்ல கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்களுடைய உருவாக்கமும் கூட இந்த ஆபிரகாம் என்ற தனி மனிதனுடைய வாழ்க்கையில்தான் ஆரம்பமாகின்றது.

இந்த ஆபிரகாம் ஒரு கற்பனைக் கதாபாத்திரமோ அல்லது மதநம்பிக்கையின் ஒரு வெளிப்பாடு அல்ல. ஆபிரகாம் என்ற மனிதன் உண்மையாகவே வாழ்ந்ததற்கான சான்றுகளை உலக சரித்திரவியலாளர்களும், புவியிலாளர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். இன்றைக்கு சுமார் 4000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஆபிரகாமின் கல்லறை இன்றைக்கும் யூதர்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

சரி இனி ஆபிரகாமின் கதைக்கு வருவோம்.

இன்றைய ஈராக்கின் ஒரு பகுதியில் வசித்துவந்த ஆபிரகாம் என்ற மனிதருடன் பேசிய கடவுள் நெடுந்தொலைவில் உள்ள காணான் தேசத்தை அவரது சந்ததிக்குத் தருவதாகக் கூறியதாக கிறிஸ்தவர்களின் வேதாகமம், இஸ்லாமியர்களின் திருக்குரான், யூதர்களின் தோரா போன்ற மத நூல்கள் கூறுகின்றன. கடவுளின் கட்டளைப்படி தனது தேசம், சொந்த பந்தங்களை விட்டுப் புறப்பட்ட ஆபிரகாம், பல நூறு மைல் தொலைவு பிரயாணம் செய்து காணான் தேசம் வந்து சேர்ந்தார்.

தற்போதைய இஸ்ரேல் தேசம்தான் அன்றைய அந்தக் காணான் தேசம்.

(படம்:ஈசாக்கின் கல்லறை)

ஆபிரகாமின் சந்ததியை பூமியில் உள்ள மணல்களைப்போல் பெருக்கி ஆசீர்வதிப்பதாக கடவுள் ஆபிரகாமிடம் கூறிவிட்டார். ஆனால் ஆபிரகாமுக்கோ பிள்ளைகள் கிடையாது. அவருக்கு அந்த நேத்தில் 85 வயது. மனைவி சாராளும் ஒரு 75 வயது மூதாட்டி. பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பமில்லை. இனி எங்கிருந்து அவருக்கு சந்ததி உருவாகி, அந்தச் சந்ததி விருத்தியாகி, ஆசீர்வதிக்கப்படுவது?

சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து, அதாவது ஆபிரகாமுக்கு 100 வயதும் மனைவி சாராளுக்கு 90 வயதும் ஆக இருந்த போது, கடவுள் கொடுத்த வாக்கின்படி ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது.

அந்தப் பிள்ளைக்குப் பெயர் ஈசாக்.

ஈசாக்கும் தகப்பனைப் போலவே மிகுந்த கடவுள் பக்தி மிக்கவன். கடவுள் ஆபிரகாமுக்கு வழங்கிய வாக்குறுதியை ஈசாக்குக்கும் வழங்கினார்.

'இந்தத் தேசத்தில் வாசம்பண்ணு. நான் உன்னோடே கூட இருந்து உன்னை ஆசீர்வதிப்பேன். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்த தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். நான் உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போல பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்த தேசங்கள் யாவையும் தருவேன். உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்."

ஈசாக்குக்கு இரண்டு மகன்கள்.

மூத்தவன் பெயர் ஏசா. இரண்டாமவனின் பெயர் யாக்கோபு (ஆங்கிலத்தில் ஜேக்கப்)

இந்த யாக்கோப்பு ஒரு ஏமாற்றுக்காரன். தகப்பனையும் தனது மூத்த சகோதரனையும் ஏமாற்றி தனது வம்ச ஆசீர்வாதத்தை தகப்பனிடமிருந்து பெற்றுவிடுகின்றார். சகோதரரை ஏமாற்றி வஞ்சித்துவிட்டு வீட்டைவிட்டே ஓடிவிடுகின்றான்.

பல இடங்கள் சுற்றித் திரிந்துவிட்டு, ஒரு சந்தர்ப்பத்தில் மனமாற்றம் அடைந்து மீண்டும் காணான் தேசம் திரும்புகின்றான்.

கடவுள் ஏற்கனவே இவனது பாட்டனான ஆபிரகாமுக்கும், தகப்பனாகிய ஈசாக்குக்கும் வாக்குத்தத்தம் கொடுத்தது போலவே, இந்த யாக்கோபுக்கும் வாக்குத்தத்தம் கொடுக்கிறார்.

'நான் உனது தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்.  நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். உன் சந்ததி பூமியின் தூளைப் போலிருக்கும். நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய். உனக்குள்ளும், உனது சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்."

இவ்வாறு யாக்கோபுக்கு வாக்குத்தத்தம் கொடுத்த கடவுள் யாக்கோபுக்கு ஒரு புதிய பெயரைச் சூட்டினார்.

யாக்கோபு என்ற பெயருக்கு ஏமாற்றுக்காரன் என்று அர்த்தமாகி விட்டிருந்த நிலையில், அவனுக்கு ஒரு புதிய பெயரை கடவுள் வைத்தார்.

அவனது புதிய பெயர் இஸ்ரவேல்.

யாக்கோபாக இருந்து பின்னர் இஸ்ரேலாக பெயர் மாற்றப்பட்ட அந்த மனிதனின் வம்சத்தோன்றல்கள்தான் இன்றைய இந்த இஸ்ரேலியர்கள்.

அந்தக் காலத்தில் காணான் தேசமாக இருந்த தேசத்தில் இந்த இஸ்ரேலிய வம்சத்தார் சென்று குடியேறியதைத் தொடர்ந்து அந்த தேசம் இஸ்ரேல் தேசமாக மாறியது.

இதுதான் இஸ்ரேல் என்ற பெயர் உருவாக்கத்தின் கதை.

கதை என்று நினைப்பவர்களுக்கு இது கதை. உண்மை என்று நினைப்பவர்களுக்கு இது உண்மை.

ஆனால் இதனை வாழ்கை என்று நினைத்து வாழ்ந்துவரும் இஸ்ரேலியர்களுக்கு இது ஒரு விடுதலை.

மேலே கூறப்பட்ட கதையுடன் ஒன்றியதாக மற்றொரு விடயத்தையும் நாம் இச்சந்தர்பத்தில் பார்த்துவிடுவது நல்லது.

அதாவது இஸ்ரேலிய மக்கள் என்று அழைக்கப்படும் சமூகக் கூட்டத்திற்கும் யூதர்கள் என்கின்ற சமூகக் கூட்டத்திற்கும் இடையில் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கின்றது. இஸ்ரேலியர்கள் என்ற பெயர் அடையாளத்தில் அழைக்கப்படுகின்ற அனைவருமே யூதர்கள் கிடையாது. அதில் சிறிய வேறுபாடு இருக்கத்தான் செய்கின்றது.

இந்த வேறுபாடும் நாம் மேலே பார்த்த கதையில்தான் வருகின்றது.

அத்தோடு இந்தக் கதையில்தான் இஸ்லாமியர்களின் உருவாக்கமும் வருகின்றது.

இந்த இரண்டு விடயங்கள் பற்றியும் அடுத்த வாரம் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, இஸ்ரேலியர்களுடைய சரித்திரம், அந்தச் சரித்திரத்தின் இடைநடுவே அவர்கள் பெற்ற விடுதலை, அந்த விடுதலையை அவர்கள் தொலைத்த விதம், அதன் பின்னரான அவர்களது அகதி வாழ்க்கை, நீண்ட அகதி வாழ்க்கையின் பின்னர் அவர்கள் பெற்ற சுதந்திரம் என்பன பற்றி விரிவாக ஆராய்வோம்.

எமது இந்த ஆழமான பார்வைகளின் பெழுது, ஒரு விடுதலை வேண்டிப் போராடுகின்ற ஈழத் தமிழினம் எப்படியான பாடங்களை இஸ்ரேலிய விடுதலைப் போராட்டத்தில் இருந்து கற்றுக்கொள்ள முடியும் என்றும் பார்ப்போம்.



அடுத்த அத்தியாயத்தை அடுத்த வாரம் பார்ப்போம்.

தொடரும்…


நிராஜ் டேவிட்
nirajdavid@bluewin.ch
Image Hosted by ImageShack.us


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

செவ்வாய், 2 அக்டோபர், 2012

லெப்.கேணல் ஜீவன், லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட பல மாவீரர்களின் நினைவு நாள் இன்று.

சூரியக்கதிர் நடவடிக்கைக்கு முன்னேற்பாட்டு நடவடிக்கையாக சிறிலங்கா படையினரால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இடிமுழக்கம் நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் ஜீவன்(அசிம்) உட்பட்ட 170 வரையான மாவீரர்களின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.




மற்றும் இதே நாள் 03.10.1998 அன்று முல்லைத்தீவு மாவட்டம் ஒலுமடு பகுதியில் ஸ்ரீலங்கா படையினர் நடத்திய எறிகணை தாக்குதலின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் பிரதீபராஜ் அவர்களின் வீர வணக்க நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 1 அக்டோபர், 2012

லெப்.கேணல் இளநிலா, லெப்.கேணல் தில்லை ஆகிய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.

02.10.1995 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிக் கலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் இளநிலாவின் வீர வணக்க நினைவு நாள் இன்றாகும்.



மற்றும் இதே நாள் ஓயாத அலைகள் 4 நடவடிக்கையில் 02.10.2000 அன்று எழுதுமட்டுவாழ் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தில்லையழகன்(தில்லை) உட்பட்ட பல மாவீரர்களின் வணக்க நினைவு நாளும் இன்றாகும்.

தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எங்கள் வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எங்கள் வீரவணக்கங்கள்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget