thalaivan

thalaivan

வியாழன், 30 ஜனவரி, 2014

கப்டன் அற்புதனின் வீர வரலாற்று நினைவுகள்.

பல மாவீரர்களை தாயக விடுதலைக்காக தந்த பருத்தித்துறை மண்ணில் இருந்து 1991 இல் தாயகப் போருக்காக தன்னையும் இயக்கத்தில் இணைத்துக் கொண்டான் ஜெயரூபன்.மூன்று அண்ணன்களுக்கு தம்பியாகவும் தங்கைக்கு அண்ணாவாகவும் ஜெயராசா தம்பதிகளுக்கு மகனாக10.08.1975 அன்று பிறந்தான் ஜெயரூபன்.


போராளியாக இணைந்தவனை படையணியின் சரத்பாபு 02 பயிற்சி முகாம் உரமூட்டி வளர்த்தது. ஜெயரூபன் அற்புதனாகி வெளிவந்தான். பயிற்சியை முடித்து வெளி வந்தவனின் முதல் களம் ஆகாய.கடல் .வெளி சமர் வரவேற்றது. ஆவன் வீரத்தை வெளிப்படுத்த அக்களமே வழிவகுத்தது . மீண்டும் தளம் திரும்பியவனை படையணி தளபதியாக இருந்த பிரிகேடியர் சொர்ணம் அவர்களால் விமான எதிர்ப்பு அணிக்குத் தெரிவு செய்யப்பட்டான்.

சிறப்பாகத் தனது பயிற்சியைச் செய்து கொண்டிருந்தவனை  மீண்டும் களம் அழைத்தது. காட்டைக்காடு மினி முகாம் தகர்ப்பு. இம்ரான் பாண்டியன் படையணி பெயர் சூட்டப்பட்ட தாக்குதல் பலவேய 02 சமர்களில் பங்கு கொண்டு தனது வீரத்தை வெளிக்காட்டினான். மீண்டும் விமான எதிர்ப்பு அணியில் பணியாற்றினான்.

இவனின் கடமை உணர்வை அறிந்த தளபதி சொர்ணம் அவர்கள் தலைவருக்கான வெளி பாதுகாப்புப் பணிக்குத் தெரிவு செய்தார். அங்கு தனது திறமையையும் கடமை உணர்வையும் சிறப்பாகவே வெளிக்கட்டினான். இதனால் வெளி பாதுகாப்பு அணியில் சில பகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான்.

வெளிப்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட பொழுது மக்களின் மதிப்பையும் பெற்ற சிறந்த போராளியாக விளங்கினான்.

1995 ஆம் ஆண்டு இறுதியில் விசேட இராணுவப் பயிற்சிக்குத் தெரிவு செய்யப்பட்டான். கடுமையான பயிற்சிகளையெல்லாம் மிகவும் இலகுவாகச் செய்து முடிப்பான். இதனால் ஆசிரியர்களால் முன்னுதாரணமாக எப்போதுமே காட்டப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றவன். இவன் இருக்குமிடம் என்றும் கலகலப்புக்கு குறைவே இருக்காது.

அற்புதன் தனது தலை முடியில் மிகவும் கவனம் கூடியவன். பெண்கள் தோற்றுப் போகும் அளவுக்கு நீண்ட நேரம் கண்ணாடி முன் நின்று தலையை இழுப்பான். அவனது அழகின் பெருமையே அவனது தலைமுடிதான். எப்போதும் தலைமுடியை அழகாகவே வைத்திருப்பான்.

யாழ் இடப்பெயர்வுக்குப் பின் வன்னி மண்ணில் சில காலம் பணியாற்றியவன். சண்டைக்கு போகப்போகிறேன் என அடம்பிடித்து ஆனையிறவு , பரந்தன் ஊடறுப்புச் சமரில் 7பேர் கொண்ட அணிக்கு பொறுப்பாளராக சென்றான்.

உப்பளப் முகாம் மீட்புக்கான சமரில் சமராடிய அற்புதன் 09.01.1997 அன்று உப்பளக் காற்றுடன் சங்கமமாகி மாவீரனாகினான். எங்களின் தோழன் கப்டன் அற்புதனை நாங்கள் இழந்து போனோம் உப்பளத்தில்.
கரும்புலியாகப் போக விரும்பி தலைவருக்குக் கடிதம் அனுப்பியிருந்ததான். ஆனால் அவன் விரும்பிய கரும்புலிக்கான பதில் வர முன் அவன் மாவீரன் ஆகிவிட்டான். எங்கள் தோழன் அற்புதன்.

எங்கள் தோழன் எங்களைப் பிரிந்து பல ஆண்டுகள் இன்றோடு நிறைகிறது. அவன் விட்டுச் சென்ற கனவுகள் தொடர்ந்து கொண்டேயிருக்க அவன் நினைவுகளை நாங்கள் சுமந்து கொண்டு செல்கிறோம்.

தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவுக்காகவும் எதிரியுடன் களமாடி வீழ்ந்த கப்டன் அற்புதன் அண்ணாவிற்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம். மற்றும் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும்  வரை உங்களை நிச்சயம் தொடர்வோம். 

|| புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||

- நினைவுப்பகிர்வு – எழிலகன் (09.01.2014)

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 29 ஜனவரி, 2014

நாட்டுப்பற்றாளர் மா.கனகரெத்தினம் அவர்களின் வரலாற்று நினைவுகள்.

நாட்டுப்பற்றாளர் 
மாசிலாமணி கனகரெத்தினம் 
தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டம் 
வீரப்பிறப்பு : 25-01-1950
வீரச்சாவு : 13-05-1980

தொண்டனாக வாழ்ந்து மறைந்த நாட்டுப்பற்றாளர் மா. கனகரெத்தினம்!

அமரர் மா.கனகரெத்தினம் அதிபர், தான் வாழ்ந்த 38 வயதுக்குள் தன் மேலதிகாரிகள், தன்னோடொத்தவர்கள், தன்னிலும் இளையோர் ஆகிய முத்திறத்தாரையும் ஒரு சேரக் கவர்ந்துள்ள தனிச்சிறப்புப் பெற்றவர். தன் நல்லெண்ணத்தாலும், ஆளுமையினாலும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் அவர் விரும்பப்பட்டார்.

இப்படியான சிறப்புக்கள் பொருந்திய மட்டக்களப்பு மண்ணுக்கும், தமிழ் பேசும் நல்லுலகத்துக்கும் பெருமை சேர்த்த மா.கனகரெத்தினம் ஐயாவின் நினைவு தினம் இன்றாகும்.

எந்தவொரு காரியத்தைப் பொறுப்பெடுத்தாலும் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பது இவரது மாற்றுரு திறமை. சிறிய உதவிகளாக இருந்தாலும் சரி, பலரை தொடர்பு கொண்டு முடிக்க வேண்டிய பெரிய வேலைகளாக இருந்தாலும் சரி எப்படியும் அதை முடித்தே தீருவார். முடியவில்லை என்று சாக்குப் போக்கு சொல்வது இவர் அகராதியிலேயே இல்லை.

எந்நேரமும் எவருக்காவது உதவி செய்ய தயாராகவிருப்பது இவரது மற்றொரு பண்பு. தனக்குரிய பல வேலைக் கஷ்டங்களுக்கு மத்தியிலும் ‘உதவி’ என்று கோரிவந்த ஒருவரையும் தட்டிக் கழிக்கமாட்டார்.

மட்டக்களப்பு பிரஜைகள்குழு செயலாளராகவும், ஆரையம்பதி சமாதானக் குழு அமைப்பாளராகவும், நெருக்கடியான கட்டங்களில் எல்லாம், இவர் உயிரைத் துச்சமென மதித்து பணியாற்றியமை இங்கு நினைவு கூரத்தக்கது.

ஆரம்பகாலத்தில் விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவரும், விடுதலைப் போராளிகளினால் அன்பாக மாஸ்டர் என்று அழைக்கப்பட்டவருமான நாட்டுப்பற்றாளர் கனகரெத்தினம் அவர்கள் ஊருக்காகவும், சமூகத்திற்காகவும் ஆற்றிய பணிகள் பல. தளபதி அருணா, பொட்டு அம்மான், குமரப்பா, ரமணன், தளபதி றீகன் ஆகியோரின் பெரு மதிப்பைப் பெற்றவரும், அவர்களுடன் இணைந்து செயற்பட்டவருமான மா. கனகரெத்தினம், காத்தான்குடி, ஆரையம்பதி கிராமங்களைச் சேர்ந்த தமிழ் – முஸ்லீம் இனக்கலவரம் உச்சக்கட்டம் அடைந்திருந்த வேளையில் இரு சமூகங்களிடையேயும் இவர் சென்ற சமாதானத் தூதின் மூலம் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தங்களை தவிர்ப்பதற்காக செயற்பட்ட மாபெரும் மனிதர்.

இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு அகதிகளாக வந்தவர்களுக்குத் தனிப்பட்ட முறையிலும், மேற்படி அமைப்புகள் மூலமும் இவர் பெரிதும் உதவினார்.

தமிழ், முஸ்லீம் இனங்களுக்கு அவர் செய்த அந்த உன்னத பணியை இன்றுவரை அந்த மக்கள் நினைவுகூருவதோடு இன்னும் நன்றியுடையவர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

தற்பொழுதைய கிழக்கின் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் மிகவும் கேவலமாக தங்களின் அரசியல் இலாபத்திற்காகவும், விடுதலைப்புலிகள் கட்டிக்காத்த தேசிய ஒற்றுமையை அழிக்கும் நோக்கிற்காகவும் அந்த மாமனிதன் செய்த மாபெரும் தேசியப் பணியை ஒரு நொடியில் அழித்து விட்டிருக்கிறார்கள். எனவே மக்கள் இப்படியான இனத்துரோகிகளைக் இனம்கண்டு அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.


"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

- ஆரையம்பதியில் இருந்து தமிழின் தோழன்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

சனி, 25 ஜனவரி, 2014

ஈழப்பெண்ணை கற்பழித்த ஹிந்தியன். இந்தியன் என்று சொல்லும் ஒவ்வொருவனும் வெட்கப்பட வேண்டும்.

தமிழீழத்தில் ஒரு குடும்பம் மீது இந்திய மிருக போர் நாய்கள் செய்த உண்மையான சம்பவம்...

இந்திய அமைதிப்படை என்ற பெயரில் மிருக போர்வையில்  ஈழத்தில் வந்து இறங்கிய ஹிந்திய அரக்கர் கூட்டம்  எம் மக்களுக்கு அங்கே செய்த பல ஆயிரம் கொடுமைகளில் ஒன்று.

இளம் பெண் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட இந்திய போர் நாய்கள்.

அவளுக்கு 22 வயது.  மாணவி. அவளுடைய தந்தை பாதி கண் தெரியாதவர். குடும்பம் முழுவதும் சிலாபத்தில் கடை வைத்திருக்கும் அவளது அண்ணனிலேயே தங்கியிருந்தது.

அவளது தாய் 24.01.1988 முதல் கோயில் பிரார்த்தனை ஒன்றில் ஈடுபட்டிருந்ததால் தினமும் அவள் தாய்க்கு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

கோயில் அவர்கள் குடியிருந்த வீட்டிற்கு மிகவும் அருகிலேயே அமைந்திருந்தது. விரதம் முடிப்பதற்காக நள்ளிரவே அவ்வாறு உணவு கொண்டு சென்று கொடுப்பது வழக்கம்.

சம்பவ தினம், அதாவது 29ம் திகதி அந்த மாணவி தனது தந்தையுடன் கோயிலுக்கு உணவு எடுத்துச் சென்று கொண்டிருந்தாள். வழியில் நான்கு இந்திய இராணுவத்தினர் தந்தையிடமும், மகளிடமும் அடையாள அட்டையை கேட்டார்கள். அவளை நீண்ட நேரமாகச் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தினார்கள்.

தற்பொழுது நேரம் என்ன? எதற்காகத் தனியே சென்றுகொண்டிருக்கின்றீர்கள்? என்றெல்லாம் கேட்டபடி சோதனை செய்திருக்கின்றார்கள்.

தகப்பனை அங்கு உட்காரச் சொன்ன அவர்கள் அந்தப் பெண்ணை மாத்திரம் கோயிலுக்கு எதிரே இருந்த ஒழுங்கையை நோக்கி நடக்கும்படி உத்தரவிட்டார்கள்.

ஆபத்தான நிலையைப் புரிந்துகொண்ட அவள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் தனியாக மேலும் நடக்கும்படி துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டாள்.

ஒரு இராணுவ வீரன் துப்பாக்கியை நீட்டியபடி அவளது தந்தையின் அருகில் சென்று நின்றுகொண்டான். மற்றைய மூவரும் அவளை அந்த ஒழுங்கை வழியாக அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

தான் ஏதாவது முரண்டு பிடித்தால் தனது தந்தையையும், தன்னையும் சுட்டுத் தெருவில் போட்டுவிட்டு, தங்கள் இருவரையும் மறுநாள் புலிகள் என்று அடையாளப்படுத்த அந்தப் பாதகர்கள் தயங்கமாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும்.

ஒருவருமில்லாத ஒரு குடிசையை அண்மித்ததும், அருகிலிருந்த ஒரு புதருக்குள் அவளை இழுத்துச் சென்று அவளைக் கீழே கிடத்தினார்கள். ஒருவன் காவலுக்கு நிற்க மற்றைய இருவரும் அவளைக் குதறினார்கள். பின்னர் அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் சென்று விட்டார்கள்.

மறுநாள் இயலாத தனது தந்தையையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த இந்தியப்படை இராணுவ முகாமிற்குப் போய் தனக்கு இடம்பெற்ற அநீதி பற்றி முறையிட்டாள். பெரிய முகாமிற்குப் போய் முறையிடும்படி அங்கு கூறப்பட்டது.

பெரிய முகாமிற்குச் சென்று முறையிட்டார்கள். அடையாள அணிவகுப்பு நடாத்தி சம்பந்தப்பட்ட நான்கு படை வீரர்களும் அடையாளம் காண்பிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தண்டனை வழங்கும் முகமாக, அவளை ஒரு மருத்துவமனையில் பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி கோரப்பட்டது. இந்த இழுபறியில் களைப்படைந்த அவர்கள் அத்துடன் அந்த விடயத்தை விட்டுவிட்டார்கள்.

அனேகமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பற்றி பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுவது குறைவு. ஒருவேளை அவர்கள் உயரதிகாரிகளிடம் முறையிடும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் கூட, அவர்களை முறையீடுசெய்தவர்களை அலைக்கழித்து களைப்படைய வைத்துவிடுவார்கள்.

இந்தியர்களே உங்கள் வீட்டில் இருக்கும் அம்மா அல்லது அண்ணி, அக்கா அல்லது தங்கை இவர்களை உங்கள் முன் நிர்வாணப்படுத்தி கற்பழித்த பின்பு அவர்களின் பிறப்புறுப்பினுள் துப்பாக்கியை செலுத்தி வெடிக்க வைத்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்.

இந்தியன் என்று சொல்லுபவர்கள் நீங்கள் மனிதர்கள் என்றால் இது உங்களுக்கு நடந்தது போல் எண்ணி பாருங்கள். நீங்கள் சாதாரண நிலையில் இருந்து எப்படி மாறுவீர்கள் என்று புரியும்.

இப்படி கொடுமைகள் நடந்த நாடுகளில் மக்கள் இன்று விடுதலை அடைந்து சந்தோசத்துடன் வாழ்கிறார்கள் ஆனால் தமிழர்களின் இன்றைய நிலைக்கு காரணம் இந்த மானங்கெட்ட இந்தியர்களே.

தமிழீழத்தில் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த மிருகங்களால் கொலை செய்யப்பட்டவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்கள்.

விடுதலைப்புலிகளுடன் நேருக்கு நேர் மோத தெரியாத இந்திய இராணுவ கோழைகள் மக்கள் தஞ்சம் புகுந்திருந்த இடங்களான கோவில்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் மீது சரமாரியான தாக்குதல்களை மேற்கொண்டு பல ஆயிரம் மக்கள் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்தார்கள்.

அப்போது இந்தியபடையை மிருகங்கள் போல் வழி நடத்திய பெரிய பெரிய மிருகங்களும் அதாவது இராணுவ தளபதிகள் இப்போது ஒய்வு பெற்று வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் மீதும் இலங்கை மோட்டு சிங்கள இராணுவ தளபதிகள் மீதும் ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான நாடு ஒன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

மோட்டு சிங்களவர்கள் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தார்கள் அதே போல் இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த மிருகங்களும் பல ஆயிரம் தமிழர்களை படுகொலை செய்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழீழத்தில் மக்களை படுகொலை செய்ய வந்த இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்த ஓநாய்களின் கூட்டம் தான் தேசிய இராணுவம் என்றால் அந்த கூட்டங்களை வேட்டையாடி முடித்த விடுதலைப்புலிகள் இந்த உலகத்திற்கு பயங்கரவாதிகளாகவே இருக்கட்டும். ஏன் என்றால் முதலில் சேகுவேராவையும், நெல்சன் மண்டேலாவையும் இந்த உலகம் நா கூசாமல் தீவீரவாதிகளின் போராட்டம் என்றே கூறியது. தமிழின விடுதலை போராளிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

தமிழீழம் எங்கள் உயிர்! 
அவ்வுயிரே எங்கள்தேசிய தலைவர்! 
தமிழரின் தாகம்! 
தமிழீழ தாயகம்!

தமிழன் டா  
சசிதரன் 

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வெள்ளி, 24 ஜனவரி, 2014

தமிழீழ விடுதலை புலிகளிடம் போராடி தோற்ற இந்திய படைகள் பாகம் 08

தமிழரின் இரத்தத்தை குடிக்க தயாரான ஹிந்திய அரக்க இராணுவத்திற்க்கு உத்தரவிட்ட இரத்த வெறி பிடித்த காட்டேரி ராஜீவ்  காந்தி கொலையை பற்றி கதைக்கிறவர்களை நடுத்தெருவில ஓட விட்டு கல்லால் அடிக்கணும்.

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கென்று இந்தியப் படையினர் மேற்கொண்ட ஒப்பரேஷன் பவான் இராணுவ நடவடிக்கை (Operation Pavan) 45 நாட்கள் வரை தொடர்ந்தது.

பலாலி காங்கேசன்துறை பண்டத்தரிப்பு யாழ். கோட்டை போன்ற இடங்களில் இருந்தும் மற்றும் விமானத் தரையிறக்கம் கடல் மூலமான தரையிறக்கம் என்று பல முனைகளில் இருந்தும் யாழ் குடாவைக் கைப்பற்றும் அந்த நடவடிக்கை மிகவும் மூர்க்கமாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.


நான்கு நாட்களில் நிறைவு பெற்று விடும் என்று எதிர்பார்த்து ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை புலிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக 45 நாட்கள் வரை நீடித்தது.

இலங்கையின் சரித்திரத்திலேயே அதுவரை இடம்பெற்றிராதவாறு 35 நாட்கள் தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து விட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த 35 நாட்டகளும் மக்கள் வெளியே நடமாடுவதற்கு இந்தியப் படையினர் அனுமதிக்கவில்லை. தமது வீடுகளை விட்டு வெளியே வந்த அனைத்துப் பொது மக்களும் போராளிகளாகவே இந்தியப் படையினரின் கண்களுக்குத் தென்பட்டார்கள்.

அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் சரி மூதாட்டியாக இருந்தாலும் சிறு குழந்தையாக இருந்தாலும் சரி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்களே என்ற எண்ணத்தில்தான் இந்தியப் படையினர் செயற்பட்டார்கள்.

கண்களில் பட்டவர்களையெல்லாம் அவர்கள் சுட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியப் படையினக்கு ஏற்பட்ட ஆரம்பகட்ட இழப்புக்களும் புலிகளின் தொடர்ச்சியான வெற்றிகளும் இப்படியான ஒரு மனநிலையை இந்தியப் படையினரிடம் ஏற்படுத்தியிருந்தாலும் வெளியில் நடமாடுபவர்கள் சட்டத்தை மீறியவர்கள் என்ற ஒரு எண்ணமும் இந்தியப் படையினரது மனங்களில் விதைக்கப்பட்டிருந்தது.

வெளியில் நடமாடுபவர்கள் சுடப்பட வேண்டியவர்கள் என்றே இந்தியப் படையினர் நினைத்தார்கள். அவ்வாறு வெளியில் நடமாடுபவர்களைக் கொலை செய்யலாம் என்ற உத்தரவும் மேலதிகாரிகளினால் சாதாரண இந்தியப் படையினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

தொடர்ச்சியான 35 நாள் ஊரடங்குச் சட்டத்தை அப்பாவிப் பொதுமக்கள் எவ்வாறு தாங்கிக்கொள்வது என்றோ அவர்கள் உணவிற்கு எங்கே போவார்கள் என்றோ வருத்தம் வாதை ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றோ இந்தியப் படையினர் சற்றும்  சிந்திக்கவேயில்லை.

அவர்கள் சிந்திக்கும் நிலையிலும் விடப்படவில்லை.

உத்தரவுகளை கண்களை மூடிக்கொண்டு கடைப்பிடிக்கும் வகையில்தான் இந்தியப் படையினர் பயிற்றப்பட்டிருந்தார்கள். இந்தியப் படையினரின் பயிற்சிகளின் போது மேலதிகாரிகளின் உத்தரவுகளை இயந்திரத்தனமாக பின்பற்றும் பயிற்சிகளையே இந்தியப் படையினர் அடிப்படையில் பெற்றிருந்தார்கள். அதனால் அந்த உத்தரவுகளுக்கு அமைய தமிழ் மக்கள் விடயத்தில் இந்தியப் படையினர் மிகவும் கொடுரமாகவே நடந்துகொள்ளத் தலைப்பட்டார்கள்.

இந்தியப் படையினரின் பயிற்சிகள்:

நான் இந்தியாவில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது நான் தங்கியிருந்த வீட்டின் முன்பாக இந்திய இராணுவத்தின் ஒரு பயிற்சி மையம் இருந்தது. இந்தியப் படையினர் இலங்கைக்கு வருவதற்கு முந்திய காலம் அது. கடைசியில் இந்தியப் படையினரே இலங்கைக்கு வந்து ஈழத்தை மீட்டுத் தருவார்கள் என்று அனேகமான ஈழத் தமிழர்களைப் போன்று நானும் நினைத்துக் கொண்டிருந்த காலம். அதனால் இந்தியப் படையினர் அந்த பயிற்சி மையத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவர்கள் சிரிப்புக்கள் அவர்களது விளையாட்டுக்கள் அனைத்துமே எங்களுக்கு புளகாங்கிதத்தை ஏற்படுத்துவனவாகவே இருந்தன.

அங்கு இடம்பெறுகின்ற பயிற்சி நடவடிக்கைகளை நானும் என்னுடன் தங்கியிருந்த ஈழத் தமிழ்மானவர்கள் சிலரும் ஆவலுடன் அவதானித்து வருவது வழக்கம். பயிற்சியில் ஈடுபடும் இந்திய இராணுவத்தினர் ஒரு நிலத்தை பண்படுத்தி அழகான பூக்கன்றுகளை நட்டு சிறிது காலம் பராமரிப்பார்கள்.

திடீரென்று ஒரு நாள் அந்தப் பூக்கன்றுகளை முற்றாக அகற்றிவிட்டு அந்த இடத்தை இறுக்கமான தரையாக மாற்றி தார் ஊற்றி ஒரு தளமாக மாற்றுவர்கள். இரண்டு மூன்று நாட்களின் பின்னர் மறுபடியும் அந்த தளத்தை உடைத்து பதப்படுத்தி மீண்டும் பூக்கன்றுகளை நடுவார்கள். இவ்வாறு மாறிமாறி ஒரே இடத்தை வெவ்வேறு நிலைகளுக்கு கொண்டு செல்வார்கள். அதுவும் ஒரே குழுவினரே இந்தக் காரியங்களைத் தொடர்ந்து மேற்கொள்வார்கள்.

இந்திய இராணுவ வீரர்களின் இந்தச் செயல் எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை தருவதாகவே இருக்கும். தாரிலும் சீமேந்திலும் தளம் அமைப்பதானால் பின்னர் எதற்காகப் பூக்கன்றுகளை நடவேண்டும்?. பூக்கன்றுகளை நடுவதானால் எதற்காக தரையை கெட்டியாக்கவேண்டும்? இதுபோன்ற பல கேள்விகள் எங்களிடையே உலாவந்தவண்ணமே இருக்கும்.

இந்தச் சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் சந்தர்ப்பமும் எங்களுக்கு ஒரு நாள் கிடைத்தது. இந்தியப்படை வீரர்களைப் பயிற்றுவிக்கும் அந்த அதிகாரியுடன் கதைக்கும் சந்தர்ப்பம் திடீரென்று எங்களுக்குக் கிடைத்தபோது அந்த பயிற்சியின் காரணம் பற்றி நாம் கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த அந்த அதிகாரி "இது ஒரு முக்கியமான இராணுவப் பயிற்சி முறை. சாதாரண இராணுவ வீரர்கள் விழைவுகள் பற்றி எதுவுமே யோசிக்காது அவர்களுக்கு வழங்கப்படுகின்ற கட்டளைகளை மட்டுமே கடைப்பிடிக்கும் நிலைக்குத் தங்களை மாற்றிக்கொள்வதற்கான உளவியல் முறைப்பயிற்சியே அது.

இராணுவ வீரர்கள் தமது மேலதிகாரிகளினால் வழங்கப்படும் எந்த ஒரு உத்தரவிற்கும் எதற்கும் யோசிக்காது கீழ்ப்படியும் ஒரு கட்டுப்பாட்டை பயிற்றுவிப்பதற்கே இதுபோன்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்திய இராணுவத்தினர் அவர்களது சப்பாத்துக்களின் அடிப்பாகங்களைக்கூட பாலிஸ் செய்து மினுக்கி வைக்கவேண்டும். இது உத்தரவு. அப்படிப் பாலிஸ் செய்யப்பட்ட சம்பாத்துக்களை அணிந்து ஒரு அடி வைத்தாலேயே அதன் அடிப்பாகத்தில் பூசப்பட்டிருக்கும் பாலிஸ் முற்றாக அழிந்துவிடும்.

ஆனால் அதுபற்றி அந்த இராணுவ வீரன் சிந்திக்கக்கூடாது. கட்டளைகள் எப்படியானதாக இருந்தாலும் அவன் கீழ்ப்படிந்தேயாகவேண்டும்" என்று அங்கு மேற்கொள்ளப்பட்ட பயிற்சி முறைகளுக்கு அந்த உயரதிகாரி விளக்கம் அளித்தார்.

இந்திய சீன யுத்தத்தின் போது மேலிடத்தில் இருந்து சண்டை செய்யவேண்டாம் என்று கிடைத்த ஒரு தவறான உத்தரவிற்கு கீழ்ப்படிந்து நூற்றுக்கணக்கான இந்தியப்படை வீரர்கள் தங்கள் உயிர்களை மாய்த்துக்கொண்ட நிகழ்வையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.


ஆக இந்தியப் படைவீரர்கள் தமக்கு கிடைக்கும் கட்டளைகளின் அடிப்படையிலேயே எந்தக்காரியங்களையும் செய்யும் ஒரு தரப்பினர் என்பதில் சந்தேகம் இல்லை.

யாருடைய உத்தரவு?

அப்படியானால் 35 நாள் ஊரடங்குச் சட்ட காலத்தில் கண்களில் பட்ட பொதுமக்களையெல்லாம் சுட்டுத்தள்ளும்படியான நடவடிக்கையும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற உத்தரவுகளுக்கு அமையவே நடைபெற்றிருக்கின்றன என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

ஈழ மண்ணில் இந்தியப் படையினர் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் நேரடியாக நெறிப்படுத்திக்கொண்டிருந்தவர் என்ற வகையில் இந்தியாவின் பிரதமர் காலம் சென்ற ராஜீவ் காந்தி அவர்களே ஈழத் தமிழர்கள் மீது இந்திய ஜவான்கள் மேற்கொண்ட அனைத்துக் கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும்.


ஏனெனில் இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல் ரீதியாக கிடைக்கப்பபெற்ற உத்தரவுகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாக லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி நெறிப்படுத்திய இராணுவ நடவடிக்கைகள்:

இந்தியப் படைனரது நடவடிக்கைகள் அனைத்தும் எவ்வாறு நெறிப்படுத்தப்பட்டன என்பது பற்றி இந்தியப் படைகளின் அதிகாரி லெப்டினட் ஜெனரல் திபீந்தர் சிங் அவர்கள் The IPKF in Sri Lanka என்ற தனது புத்தகத்தில் தெரிவித்திருந்தார்.

களமுனையில் சண்டையிட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு பிரிகேட் படையணியும் டிவிசன் தலைமையகத்தினால் நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன. அந்த டிவிசன் தலைமையகங்கள் சென்னையிருந்த HQ OFC, IPKF என்ற அமைதிப்படைத் தலைமையகம் பூனேயில் இருந்த தென்பிராந்திய இராணுவத் தலைமையகம் (GQ Southern Command) மற்றும் டில்லியிலிருந்த இந்திய இராணுவத் தலைமையகம் (Army HQ) என்பனவற்றில் இருந்து உத்தரவுகளை பெற்றுச் செயற்பட்டன.

புதுடில்லியில் இருந்த அரசியல் வட்டாரங்களும் இராணுவத் தலைமையகத்துடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருந்தது.

உள் விவகார அமைச்சர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அமைச்சரவை செயலாளர் முப்படைத் தளபதிகளின் உதவியாளர்கள் RAW, NIB போன்றனவற்றின் பொறுப்பாளர்கள் தகவல் அதிகாரிகள் போன்றவர்களுடன் முக்கியமாக பிரதம மந்திரியின் அலுவலகம் எமது நடவடிக்கைகள் தொடர்பான நெறிப்படுத்தல்களில் நேரடி அங்கம் வகித்தன.

தினமும் காலை மாலை இரண்டு தடவைகள் இவர்கள் கூடி ஆராய்ந்து இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள். இராணுவத்தினர் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பணிப்புரைகளையும் வழங்குவார்கள்.

எமது நடவடிக்கைகள் தொடர்பான பத்திரிகையாளர் மாநாடுகளை வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் திரு பார்த்தசாரதி நடாத்தி வந்தார். அவரது இந்த நடவடிக்கைகள் எமக்கு மிகவும் உறு துணையாக இருந்தன.|| இவ்வாறு திபீந்தர் சிங் இந்தியப் படை தொடர்பாக எழுதியிருந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கள முனையில் நடைபெற்ற அனைத்து விபரங்களும் உயர்மட்டம் வரை உடனடியாகவே அனுப்பப்பட்டு வந்தன. அந்த உயர் மட்டம் என்பது பிரதமர் ராஜீவ் காந்தியின் நேரடி நெறிப்படுத்தலில் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவாகும்.

ஆக மொத்தத்தில் ஈழ மண்ணில் இந்தியப் படையினரின் நடவடிக்கைகள் அனைத்துமே இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினாலேயே நேரடியாக நெறிப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தன.

ராஜீவின் மனநிலை:

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு பாடம் படிப்பித்தேயாக வேண்டும் என்ற வெறி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியிடம் இருந்ததாக அப்பொழுது அவருடன் நெருங்கிப் பழகிய பலர் பின்னர் தெரிவித்திருந்தார்கள்.

இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை புதிதாக ஏற்றிருந்த ராஜீவ் காந்தி ஒரு கௌரவம் மிக்க புரட்சித் தலைவராக உலகில் வலம் வர ஆரம்பித்திருந்த அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் அடி வாங்குவது அவருக்கு பாரிய ஒரு கௌரவப் பிரச்சினையாகவே இருந்தது. அவர் சிறிலங்கா அரசுடன் செய்து கொண்டிருந்த சர்வதேசப் புகழ் வாய்ந்த ஒப்பந்தத்தை புலிகள் ஏற்கவில்லை என்பது அவரால் ஜீரனித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருந்தது. இலங்கையில் அமைதி திரும்பப் பாடுபட்ட ராஜீவின் பெயர் அமைதிக்கான அடுத்த நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்படவேண்டும் என்று இந்தியப் பத்திரிகைகள் கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டுவருகையில் புலிகள் அவருக்கு ஒத்துழைக்காதது ராஜீவை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றிருந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக ராஜீவ் ஆட்சிக்கட்டில் அமர்ந்தவுடன் சுவீடனில் உள்ள போர்போஸ் ஆயுதக்கம்பணி போன்ற பாரிய ஆயுதக்கம்பனிகளிடம் இருந்து நவீன ஆயுதங்களைக் கொள்வனவு செய்து இந்தியாவை ஒரு வல்லரது ரேஞ்சுக்கு கொண்டு செல்லுவதாக பம்மாத்துக் காண்பித்துக்கொண்டிருந்த போது இலங்கையில் ஒரு சிறு போராளிக் குழுக்களிடம் இந்தியப் படை மரண அடி வாங்கிக்கொண்டிருப்பது ராஜீவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. அதுவும் பாக்கிஸ்தான் சீனா போன்ற எதிரி நாடுகளை தனது இராணுவ பலத்தைக் கொண்டு இனிமேல் மிரட்ட முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டது பற்றியும் அவருக்கு கவலையாக இருந்தது. இவை அனைத்திற்கும் காரணமான புலிகளை பழிதீர்க்கவேண்டும் என்ற வெறியில் இந்தியப் படை என்ன செய்தாவது புலிகளை ஒழித்துவிடவேண்டும் என்ற உத்தரவை இந்திய இராணுவத்திற்கு வழங்கியிருந்தார்.

பிரபாகரணை கொல்லுங்கள்:

அதுமாத்திரமல்ல இந்தியப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சண்டைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொல்லவேண்டும் என்ற உத்தரவை தன்னிடம் ரஜீவ்காந்தி பிறப்பித்திருந்ததாக மேஜர் ஜெனரல் ஹரிக்கிரத்சிங் பின்நாட்களில் தெரிவித்திருந்தார். 1987 செப்டெம்பர் நடுப்பகுதியில் இந்தியப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவென பலாலித் தளம் வரவிருந்த பிரபாகரனை சுட்டுக் கொல்லும்படியான உத்தரவை பிரதமர் ரஜீவ்காந்தி பிறப்பித்ததாகவும் தான் அந்த உத்தரவை ஏற்க மறுத்ததாகவும் பின்நாட்களில் அவர் எழுதிய சுயசரிதையில் ஹரிக்கிரத் சிங் தெரிவித்திருந்தார்.

(In September 1987, a political dialogue between the LLTE and an Indian delegation took place at Palaly and a peaceful solution seemed to be in sight. The creation of the [Interim Administration Council] was to be thrashed out. The date set for the meeting to be held at my headquarters at Palaly and chaired by Dixit, was 16-17 September 1987.”

“On the night of 14/15 September 1987, I received a telephone call from Dixit, directing me to arrest or shoot Pirabakaran when he came for the meeting. Telling Dixit that I would get back to him I placed a call to the [Overall Forces Commander]. Lt. Gen. Depinder Singh.”

“Lt. Gen. Depinder Singh directed me to tell Dixit that we, as an orthodox Army, did not shoot people in the back when they were coming for a meeting under the white flag. I then spoke to Dixit in Colombo and conveyed the message emphasizing that I would not obey his directive.”

“I pointed out that the LTTE supremo had been invited by the IPKF in order to find a solution to the problems in the implementation of the Accord. Dixit replied, ‘He Rajiv Gandhi has given these instructions to me and the Army should not drag its feet, and you as the GOC, IPKF will be responsible for it.’” )

ராஜீவ் காந்தியே பொறுப்பு:

புலிகளிடம் தமக்கு ஏற்பட்டிருந்த ஆரம்ப தோல்விகளுக்கு பொதுமக்களின் உயிரிழப்புக்கள் பற்றி இந்தியப் படைகள் அதிகம் அக்கறைப்பட்டதே காரணம் என்று இந்தியப் படை அதிகாரிகள் பின்நாட்களின் சப்பைக்கட்டு கட்டியிருந்தார்கள்.

அதேவேளை என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை. பொதுமக்கள் இழப்பு ஏற்பட்டாலும் பறவாயில்லை. புலிகளை வெற்றி கொண்டு விடவேண்டும்: அதுவும் உடனடியாக அதைச் செய்யவேண்டும் என்று ராஜீவ் உத்தரவு பிறப்பித்திருந்ததையும் பின்நாட்களில் அவர்கள் ஊடகங்களுக்கு ஒப்புகொண்டிருந்தார்கள

ஈழத்தமிழர்களைக் கொல்வதற்கு ராஜீவ் காந்தி உத்தரவு பிறப்பித்தார்.

அதனை இத்திய இராணுவத்தினர் கடைப்பிடித்தார்கள்.

எனவே ஈழத் தமிழர்கள் மீதான இந்தியப் படைகளின் படுகொலைகளுக்கு இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி பொறுப்பேற்றேயாகவேண்டும்.

உரும்பிராயில் ஓடிய இரத்த ஆறு

சரி. இனி கள முனைக்குச் செல்வேம்.

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினூடாக இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது.

ஈழத் தமிழர்களின் படுகொலைகளின் அத்தியாயம் ஒன்றை இரத்தத்தால் எழுதுவதற்காக இந்திய ஜவான்கள் விரைந்துகொண்டிருந்தார்கள்.


தொடரும்...


பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வியாழன், 23 ஜனவரி, 2014

ஒரு போராளியின் குருதியில் இருந்து… (உண்மைச் சம்பவம்)

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுத பாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும்.


அந்த மண்ணிலே மடிந்து போன பல போராளிகளோடு அவர்கள் அனுபவித்த வலிகளும், துயரங்களும், உண்மைகளும் அவர்களோடே மறைந்து கிடக்கின்றன..! அவர்களோடு, அவர்களின் வலிகளோடு இறுதி நேரத்திலிருந்து தப்பி வந்த சில போராளிகளின் மனதில்தான் அந்தத் துயரமான வலி நிறைந்த என்றுமே அழியாத காட்சிகள் பதிவாகி இருக்கின்றன… அப்படியான பதிவுகளில் எல்லோர் மனங்களிலும் மிகுந்த வலிகளை உருவாக்கி, இதயத்தினை உருக்கி கண்ணீர் வரவழைக்கும் பதிவுகளில் இந்தப் படத்தினில் இருக்கும் போராளியின் படமும் ஒன்று!

இந்தப் புலிவீரன் துன்புறுத்திக் கொல்லப்படும் போது அருகினில் இருந்து காப்பாற்ற முடியாத வலிகளோடு துடித்துக் கொண்டிருந்த மற்றுமொரு பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு உன்னதமான போராளியின் வலிகள் நிறைந்த வாக்கு மூலமே வார்த்தைகளாக கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.

“எனது தமிழ் உறவுகள் அனைவருக்கும்… என் மனதில் என்றும் அழியாத ரணங்களாக இருக்கும் பல உண்மைகளில் சிலவற்றை நீங்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே சிறை மீண்டு முகமும், முகவரியும் இன்றி கண்ணீருடன் இங்கே கூறுகின்றேன்.

இந்தப் படத்திலே இருக்கும் என் தோழனை சிங்களக் காடையர்கள் கொடுமைப்படுத்திக் கொலை செய்ததை நேரில் பார்த்தவன் நான்!,

இவன், முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தின் சுற்றிவளைப்பில் என்னோடு அகப்பட்டு, இந்த வீரனை மட்டும் மூன்று நாட்களாக தென்னை மரத்திலே கட்டி வைத்து சாப்பாடு தண்ணீர் கூட கொடுக்காமல் தினமும் சித்திரவதை செய்து பட்டினி போட்டான் சிங்களக் காடையன்.

இவன் துன்புறுத்தப்பட்டு வந்த மூன்று நாட்களும் இவனின் வாயிலிருந்து “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகள் வந்ததனாலே, இந்த வீரன் மிகவும் துன்புறுத்தப்பட்டான்.

எவ்வளவு வலிகள் கொடுக்கப்பட்ட போதும், இவன் மண்டியிடவேயில்லை..! இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்களக் காடையர்கள், அங்கம் அங்கமாக கூரிய கத்தியினால் கீறி இவனை துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார்கள்.

ஒவ்வொரு கீறல் விழும் போதெல்லாம் “அண்ணன் வாழ்க, தமிழீழம் மலர்க” என்றே கூறிக் கொண்டிருந்தான். இறுதியில் இந்த வீரனின் வீரத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிங்களக் காட்டுமிராண்டித் தளபதி கொன்று விடும்படி சைகை காட்டவே… இவனின் கழுத்திலே அந்தக் கூரிய கத்தியினை வைத்து சடார் என இழுத்து விட்டான் ஒரு காட்டுமிராண்டிச் சிங்களவன். தொண்டைக்குழி அறுபட்டு இரத்தம் சீறி அவனின் உயிர் அவனை விட்டுப் பிரிவதை மிகுந்த வலிகளோடு பார்த்துக் கொண்டிருந்ததைத் தவிர கைகள் கட்டப்பட்டிருந்த எம்மைப் போன்ற போராளிகளால் எதுவுமே செய்ய முடியாமல் நாதியாற்றுப் போனோம். கொலை செய்த பின் இவனின் உள்ளாடைக்குள் எமக்கே தெரியாமல் இவன் மறைத்து வைத்திருந்த புலிக்கொடியினை எடுத்து இவனின் மேல் போர்த்தி விட்டனர் சிங்களக் காட்டுமிராண்டிகள்..!

எங்கள் அனைவரினதும் தாக்குதல்களுக்குரிய பொறுப்பினை ஏற்று நடத்திய தளபதிதான் இந்த மாவீரன்!

இந்த மாவீரன், சிறு வயதிலேயே விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களங்களைக் கண்ட சிறந்த வேவுப்புலி வீரனாவான்!

2008 முதல் 2009 வரையிலான காலப்பகுதியிலே முக்கியமான ஒரு தளபதியின் மெய்பாதுகாப்பாளனாக இருந்து செயற்பட்டவன். சிறு வயதினிலேயே போராட்டத்தில் இணைந்ததனால் தலைவர் மீதும், தாய்மண்ணின் மீதும் மிகுந்த பற்றுடையவன்.

இவ்வீரனை கொடுமைகள் செய்து கொலை செய்வதை எங்களால் பார்க்க மட்டும்தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் செய்ய முடியாத கைகள் கட்டப்பட்ட நிலையில் நாம் இருந்தோம். இந்த மாவீரனின் உயிர் பிரியும் நேரத்தில் கூட இவனின் உதடுகளிலிருந்து “அண்ணன் வாழ்க”, “தமிழீழம் மலர்க”, “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வீர வார்த்தைகளுடனேயே இவனின் உயிரும் அடங்கிப் போனது!

இந்த மாவீரனின் குடும்பநலன் கருதி இந்த வீரனின் பெயர், முகவரிகளைக் கூற நான் விரும்பவில்லை, அதற்கு உகந்த நேரம் இதுவல்ல..!

இந்த வீரனின் உயிர் பிரியும் நேரங்களை நான் மட்டும் பார்க்கவில்லை. அந்த இடத்தில் நான் உட்பட பதிமூன்று போராளிகள் இருந்தோம். அதில் ஐந்து பெண் போராளிகள். அவர்களை எங்களிடம் இருந்து பிரித்துச் சென்று விட்டார்கள். அந்தச் சகோதரிகளின் நிலை இதுவரை என்னவென்று தெரியாது!

இந்தப் படத்தினைப் பார்க்கும் போதெல்லாம் என் உயிர் வலிக்கின்றது. என் ஆயுள் வரை மாறாத வலிகளை இந்தப்படமும், இதற்குரிய சம்பவங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருக்கின்றது”!

(கண்கள் கலங்கியபடி)

“என் உயிர்த்தோழனே! எங்கள் அண்ணன் வளர்த்த புலிக்குட்டி நீ! உனக்கு நிகழ்ந்த கொடுமைகளை நினைத்து என் இதயம் கொதிக்கிறது. நீயும் நானும் ஒரே தட்டில் சாப்பிட்டு, ஒன்றாக உறங்கிய காலங்களும்… பகைவனைக் கொன்றொழித்த அந்த வீரச்சமர் புரிந்த காலங்கள் அனைத்தையும் நினைக்கும் போது என் இதயம் அழுது வெடிக்கின்றது தோழனே!!!
என் தோழனே! நீ இறுதியாக உரைத்த வார்த்தைகள் நிச்சயம் நிறைவேறும்!”




“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

என என் இதயத்தை கனக்க வைத்தார், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த உன்னதமான விடுதலைப் போராளி!

- வல்வை அகலினியன்.

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

கப்டன் அறிவின் வீர வரலாற்று நினைவுகள்.

தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.

எதிரி விளக்கு வைத்தகுளம் வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக் கிராமம். வவுனியாவிலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்து முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப்படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கிக் தடுத்துத் தேவையான போது நகர விட்டு, மீண்டும் தாக்கி, புளியங்குளத்தில் அமைக்கப்பட்ட „ கொலைப் பொறி “ வரை கவர்வதற்காகத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

06.06.1997, விளக்கு வைத்தகுளம் முன்னரங்க நிலைகளில் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் நின்றார்கள். அதிகாலை முதல் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சத்தம் மெல்ல மெல்ல அவர்களை நோக்கி நகர்வதாக தெரிந்தது

„ மச்சான், டாங்கி சத்தம் போல கிடக்குது “ அவர்களில் ஒருவன் காவலரன் ஒன்றின் மேல் ஏறி நின்று அவதானித்து விட்டுச் சொன்னான். „ இண்டைக்குத் திருவிழாப் போல இருக்குது “

அவர்கள் தங்களுக்குள் கதைத்துக் கொண்டார்கள். “ டேய் வந்தா வரட்டும். எங்கட பொசிசனைக் கடந்து போறதை ஒருக்காப் பாப்போம்! “ இப்படித்தான் எப்பவுமே அவர்கள் கதைத்துக் கொள்வார்கள். இன்றும் அதே போலவே கதைத்தவாறு காலைக் காவலுக்கான ஒழுங்குகளில் ஈடுபடத் தொடங்கினர்.

அவர்கள் எதிர்பார்த்த „ திருவிழா “ விரைவிலேயே தொடங்கி விட்டது. எதிரி ஏவிய பீரங்கிக் குண்டுகள் அவர்களின் முன்னரங்க நிலைகளைச் சுற்றி வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. இதுவரை தூரத்தே கேட்ட இயந்திரங்களின் உறுமல் ஓசை அவர்களிருந்த திசையில் நெருங்கத் தொடங்கியது. முறிந்து விழுந்த காட்டு மரங்களினூடக வெடித்துச் சிதறிய எறிகணைகளின் கந்தகப்புகை பரவிக் கொண்டிருந்தது.

அறிவு அவன்தான் காவலரண் துவாரத்தினூடாகத் தூரத்தே தெரிந்த கரிய உருவத்தை முதலில் அவதானித்தான். டாங்கி! அவனுடைய நிலையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

சண்டையின் தீவிரம் சற்றுக் கடுமையாவது தெரிந்தது. தோழர்கள் தமது துப்பாக்கிகளினால் எதிரி மீது சுடத் தொடங்கினர். சண்டை உக்கிரமானது. கனரக ஆயுதங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை. டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும் இல்லை. இலகு இயந்திரத் துப்பாக்கிகளாற் சுடப்பட்ட ரவைகள் வெறுமென டாங்களியில் பட்டுத் தெறித்து விழுந்தன.

முன்னரங்கில் இருந்த எமது நிலைகள் ஒவ்வொன்றாய் எதிரியாற் சிதைக்கப்பட்டன. வீரர்கள் வீழ்ந்து கொண்டிருந்தனர். டாங்கி ஏவிய ஓர் எறிகணை அறிவினுடைய தோழர்களை வீழ்த்தியது. சிதைந்த நிலைகளிலிருந்து சென்று கொண்டிருந்த இறுதி எதிர்ப்புகளும் குறைந்து கொண்டிருந்தன. எதிரி உற்சாகமடைந்தான். வேகமாக டாங்கியை நகர்த்தினான்.

அறிவினுடைய சிதைந்த காவலரணில் வீரச்சாவடைந்திருந்த தோழர்களின் வித்துடல்களும் ரவை முடிந்துவிட்ட துப்பாக்கிகளும் மட்டுமே இப்போது இருந்தன.

அந்தக் காவலரண் வரிசையில் அவன் மட்டுமே தனித்திருந்தான். எதிரியின் நகர்வைத் தடுத்தேயாக வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. முறியடிப்பு அணிகள் அங்கே வரும் வரை இராணுவத்தின் குறைந்த பட்சம் தாமதப்படுத்த வேண்டிய நிலையை அவன் உணர்ந்தான்.

கைவசம் இருந்த குண்டுகள் இரண்டுடன் சிதைந்த நிலையை விட்டு வெளியே வந்தான். அவனது நிலையை நோக்கி வந்த டாங்கி இப்போது மிகவும் நெருங்கி விட்டது. அறிவு எறிந்த முதலாவது குண்டு டாங்கியின் முன்னால் வெடித்துச் சிதறியது. டாங்கி அதிர்ந்து நின்றது. ஆனால் விரைவிலேயே அதன் சக்கரங்கள் மீண்டும் உருளத் தொடங்கின.

இறுதியாக அவனிடம் இருந்ததோ ஒரேயொரு கைக்குண்டு.

அவனுக்கிருந்த கடைசித் தெரிவு டாங்கியை மிக நெருங்கிக் குண்டை எறிவது, அல்லது சொற்ப கணத்தில் இடித்துச் சிதைக்கப்பட்ட இருந்த நிலையின் அருகிலிருந்து பின்வாங்கிச் செல்வது.

இறுதி முயற்சி எமது மரபுக்கேயுரிய தெரிவு. டாங்கி அவனது காவலரணை முட்டி மோத இருந்த கடைசிக் கணத்தில் தன்னிடமிருந்த கையெறிக் குண்டை வெடிக்க வைத்தான்.

தனது சாவிற்கான முடிவு அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. எனினும் அவன் கோழையாகிப் போக விரும்பவில்லை.

டாங்கியின் சக்கரங்களாற் சிதைக்கப்பட்ட அவனது வித்துடல் அவன் நேசித்த மண் மீது கிடந்தது. இறுதிவரை அவனிடம் இருந்த துணிவு வரலாற்றில் அவனை உயர்த்தி நிற்கின்றது.



வீர மறவனுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாள் வீரச்சாவடைந்த ஏனைய வீர மறவர்களுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.

Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

திங்கள், 20 ஜனவரி, 2014

2ம் லெப் மாலதி படையணி.

கைமாறிய கனவுகளோடு களங்காணும்  2ம் லெப் மாலதி படையணி.

வல்வெட்டித்துறை – தீருவில் வெளியில் பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும், எரியக்காத்திருக்கும் சிதையின் மேல் அடுக்கப்பட்டன.

” இந்தியா எமது மக்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் கீழே வைத்த ஆயுதங்களை இப்போது மறுபடி மேலே உயர்த்துகிறோம் ”

என்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது.
சுடுகலன்கள் மேலே உயர்த்தப்பட்டன.
வானத்தைக் கிழித்தபடி மரியாதை வேட்டுக்கள் செந்நிறமாகப் பயணித்தன.

இந்திய – ஈழப்போர் தொடங்கிவிட்டது.

நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில ; பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை. ஏனையவர்கள் ரவைகளைத் துணி முடிச்சில் கட்டியபடி, குண்டுகளுடன்.

2ஆம் லெப் மாலதி, 2ஆம் லெப் கஸ்தூரி, வீரவேங்கைகள் விஜி, ஜெனா, தயா, ரஞ்சி தம்மிடம் உள்ளவற்றுடன் தயார் நிலையில்.

முன்னேறிவந்த இந்தியப் படைகளுக்கும், இவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கடும் சண்டை. ரவை முடிய முடிய நிரப்பி நிரப்பிச் சண்டை. பெரும் பலத்துடன் பெருந்தொகையில் வந்து நின்ற உலகின் அன்றைய நான்காம் வல்லரசுப் படைகளோடு நின்று சண்டையிட முடியாத களநிலைமை எம்மவர்களைக் கோப்பாய் சந்திநோக்கி, சண்டையிட்டவாறு பின்னநகர்த்தத் தொடங்கியது.

மாலதிக்குத் தொண்டையில் பெருங்காயம். நடக்க முடியவில்லை.
இராணுவமோ நெருங்கிக்கொண்டிருந்தது. மாலதியை இழுத்துச் செல்ல விஜி முயற்சித்துக்கொண்டிருந்தார். முடியவில்லை. வல்லரசுப் படைகளுடனான போரில் தன்னால் இழப்பு வரக்கூடாது என்று முடிவெடுத்த மாலதி சயனைட்டை அருந்தினார்.

” என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு ”

என்றபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரானார்.



கருவி கைமாறியது கனவுகள் கைமாறின.

மாலதி,
தாய் நிலம் விடியும்
எனும் கனவோடு
மண்ணிலே நீ விழுந்தாய்.
உன் பெயர் சொல்லி
எம் படையணி தன்னை
அண்ணன் வளர்த்தெடுத்தான்.
(நன்றி – கவிதை அம்புலி)

சூரியக் கதிர் – 01 எதிர் நடவடிக்கையின் முடிவில், விடுதலைப்புலிகள் மகளிர் படையணி, தன்னை 2ஆம் லெப்.மாலதி படையணியாக உருமாற்றியிருந்தது.

சூரியக் கதிர் – 02 நடவடிக்கைக்கு சிங்களப் படைத்தலைமை தயாரானது. 2ஆம் லெப்.மாலதி படையணி வடமராட்சியின் வாதரவத்தை, கப்புதூ, மண்டான், வல்வை வெளி, தொண்டமனாற்றுச்சந்திப் பகுதிகளில் நிலைகொண்டது.

சிங்களப் படையினரின் நடவடிக்கையில் தெரிந்த வேறுபாடு, அவர்களின் வரவு வாதரவத்தைப் பக்கமாக இருக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியது. எமது வேவு நடவடிக்கை தொடங்கியது.

வாதரவத்தையின் வெளிப்புறக் காப்பரண்களைக் கடந்து எம்மவர்கள் உள்நுழைய, இரவைப் பகலாக்கும் மின் விளக்குகள் ஒப்பவில்லை. கப்டன் கோபியின் அணி மறுபடி மறுபடி முயன்றது. காப்பரண்களுக்கு முன்னால் நாட்டப்பட்டுள்ள கம்பங்களில் சில மின்விளக்குகள் எமது புறமாகவும், சில படையினரைப் பார்த்தபடியும் கட்டப்பட்டிருந்தன. எமக்கு எதிர்த்திசையில் கட்டப்பட்ட மின் விளக்கு ஒளிரும்போது எம் திசையிலிருக்கும் கம்பம் சிறுகோடாக நிழலை விழுத்தும். அந்த நிழலைப் பயன்படுத்திக்கூட பகையரணை நெருங்க பலமுறை முயன்றும் ……

படையினர் நடவடிக்கையைத் தொடங்கப்போகின்றனர் என்று உள்ளுணர்வு சொன்னது. இன்று நான்காவது நாள் எப்படியாவது போயாக வேண்டும்.

இப்போது முன்னிலவு. பின்னிருட்டு நள்ளிரவில் மின் பிறப்பாக்கி ஓய்வெடுக்கும் 10 – 15 நிமிட இடைவெளியைப் பயன்படுத்தி உள்நுழைந்து, நிலைமையை அவதானித்து திரும்பிவரும் முடிவை கோபி எடுத்தார்.

இது சரிவருமா, இல்லையா என்று யோசித்துக்கொண்டிருக்க
நேரமுமில்லை. இதை விட்டால் படைத் தளத்தினுட்புக வேறு வழியுமில்லை.

1996 ஏப்பிரல் 02 கோபியின் அணி நகர்ந்தது. முன்னணி அவதானிப்பு
நிலையை அடைந்தது. சற்று நிதானித்து, மேலும் முன்னகர்ந்து
தடைக் கம்பியை நெருங்க முன்பே வழியில் இராணுவம் எதிர்ப்பட்டது.

முயற்சியைக் கைவிடமுடியாது. போகத்தான் வேண்டும். மெல்லப்
பக்கவாட்டாக விலகி, மீண்டும் முன்னேற, மறுபடியும் இராணுவம் எதிர்ப்பட்டது. மீண்டும் பக்கவாட்டாக விலகி, முன்னோக்கி நகர முயல, மின்பிறப்பாக்கி ஓய்ந்தது.

இனித் தாமதிக்க முடியாது. பத்து நிமிடங்களுள் உள்நுழைந்து வெளித்திரும்ப வேண்டும் ஓட்டத்தில் போய் முதலாவது தடைக் கம்பியை உள்நுழைவதற்காக உயர்த்திப் பிடிக்க, ஒருவர் உள்நுழைய முயல, தடைக் கம்பியிலிருந்து ஐந்து மீற்றர் முன்னே இராணுவம் நிற்பதைக் கண்ட கோபி, சைகை காட்டி, நகர்வை நிறுத்தினார்.

அதற்குள் மின் விளக்குகள் உயிர் பெற்றன.

இனி ஒரு கணம் அங்கே நிற்பதும் தற்கொலைக்கு ஒப்பானது. இவர்கள்
விலகத்தொடங்க சிறிலங்கா இராணுவம்

சுடத்தொடங்க, இவர்களும் கைக்குண்டுகளை வீசியபடி சுட்டுச் சுட்டுப் பின்னகர, அந்த வெட்டை வெளிச்சண்டையில் கப்டன் கோபி 2ம் லெப்.மாலதி படையணியின் முதல் மாவீரராகி, இப்போது பத்தாண்டுகள்.

2ம் லெப்.மாலதியின் பெயரைச் சுமக்கும் படையணி, முதல் மாவீரர் கப்டன் கோபியைப் போலவே முடியாதென்று எதையும் விடாது, எங்கும் எப்போதும் முயன்றபடி.

2ம் லெப் மாலதி படையணி



உண்மை வெற்றி – 01 எதிர் நடவடிக்கையின் ஆரம்ப நாட்களிலேயே கொம்பனிக்குரிய வேவு அணியில் ஒருவராக லெப்.தமிழ்பிரியா பயிற்றுவிக்கப்பட்டார். நிதானமும் அமைதியுமான இயல்பைக்கொண்ட அவருக்கு வேவு மிகவும் பொருத்தமான பணிதான்.

தாக்குதலணிகளின் காப்பரண்களைக் கடந்து முன்புறம் போய் இரவெல்லாம் சிங்களப் படைக்கு மிக அருகேயும், பகலில் சற்றுப் பின்னே வந்து உயரமான மரங்களில் ஏறி நின்று படையினரைக் கண்காணிப்பதுமான கடின வேவுப்பணியில் தமிழ்பிரியா ஈடுபட்டார்.

உருத்திரபுரம் புனித பற்றிமா கல்லூரியில் நிலைகொண்டிருந்த சிங்களப் படையினரை 1996.09.26 அன்று நாம் உட்புகுந்து தாக்கியழித்த நடவடிக்கையில் காயமடைந்த போராளிகளுக்கு வழிகாட்டிப் பின்னே நகர்த்திவிட்டு, மறுபடி முன்னேவந்து காயக்காரர்களைப் பின்னே கூட்டிப்போய் என்று, நடவடிக்கை முடியும் வரை இடைவிடாத நடைதான்.

மாபெரும் படை நகர்வொன்று சிங்களப் படைகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது. எப்படி, எப்போது எங்கே என்பது தெரியவில்லை. 2ம் லெப்.மாலதி படையணியின் கொம்பனி ஒன்று உடங்காவில் நிலைகொண்டிருந்தது. பரந்துபட்ட நிலப்பரப்பைக் கண்காணிப்பில் வைத்திருக்கப் போதிய ஆளணியில்லாததால் 2ஆம் லெப் மாலதி படையணியின் வேவு அணிகள் சம்பளங்குளம், ஒதியமலை, உடங்கா, தண்ணீர் முறிப்புப் பகுதிகளில் உலாவிக்கொண்டிருந்தன.

உடங்காப் பகுதியில் இரு தடவைகள் சிறிலங்காப் படையினரின் வேவு அணிகளைச் சந்தித்து, எமது அணிகள் தாக்கியிருந்தன. இந்தா, அந்தா என்றிருந்தது சண்டை தொடங்கும் நாள்.

1997.05.13 அன்று தொடங்கியது ” வெற்றி நிச்சயம் ” என்று பெயர் சூட்டப்பட்ட, சிங்களத்தின் தோல்வி நடவடிக்கை. உடங்கா வெட்டையில் நின்ற 2ஆம் லெப்.மாலதி படையணியின் வேவு அணியையே வெற்றி நிச்சயம் நடவடிக்கைப் படைகள் முதலில் சந்தித்தன.

வெற்றி நிச்சயம் எதிர் நடவடிக்கையின் முதல் மாவீரராக லெப்.தமிழ்பிரியா வரலாற்றில் பொறிக்கப்பட்டார்.

” புளியங்குளச் சந்திப் பகுதியை வேறு படையணிகள் பாதுகாக்கும். சந்திக்கருகே இராணுவம் வந்து நிலைகொண்டு சண்டை பிடிக்குமானால், தளத்தைத் தக்கவைப்பது கடினம். நீண்டகாலம் புளியங்குளச் சந்தியை எமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால் நீங்கள் அவர்களுக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்து நின்று, சண்டையிட்டு எதிரிக்குச் சேதத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். அதை நீங்கள் போய் செய்யுங்கள் ”

என்றார் தமிழீழத் தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள். வீரர்களின் வாழ்வில் முடியாது என்று ஒன்று இருக்கின்றதா? புறப்பட்டது 2ஆம் லெப்.மாலதி படையணி. நெடுங்கேணியிலிருந்து புளியங்குளத்துக்குக் கால் நடையாகவே வந்து சேர்ந்தது.

தலைவர் சொன்னபடி தளத்துக்கு வெளிப்புறமாகத் தடுப்பரண்களை அமைத்தது. வவுனியா – கிளிநொச்சி நெடுஞ்சாலையின் இருபுறமும் சிறகுகள் வடிவில் விரிந்து நின்று, புளியங்குளத் தளத்துக்குக் காப்பு வழங்கியது. தனக்கு முன்னே படையணியின் வேவு அணியினரை உலாவவிட்டது.

1997.06.23 அன்று அதிகாலை பெருமெடுப்பில் ராங்கிகள் இரைய, குண்டுவீச்சு விமானங்கள் கூவ, எறிகணைகளை மழையாக வீசியபடி முன்னேறி வந்த படையினரோடு முதலில் மோதியது மேஜர் அரசியின் தலைமையிலான ஐந்து வேவுப் போராளிகளே.

பழைய காயங்கள், நோய் காரணமாக களமுனை மருத்துவ வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர்களை முன்னரங்குக்கு நகர்த்தி, முன்னரங்கில் நின்றவர்கள் தம்மைத் தயார்ப்படுத்தும் வரை வேவு அணி சண்டையிட, எல்லோரும் தயாரானதும் அவர்கள் பின்னகர, முன்னரங்கப் போராகளிகள் சண்டையிட்டனர்.

எறிகணைகளால் தூக்கி விசிறப்பட்டு மண்குவியல்களான காப்பரண்களைக் கைகளால் விறாண்டி விட்டுப் படுத்திருந்து அடித்தவர்களும், இயங்கு நிலைத்தடையேற்பட்ட கனரக ஆயுதங்களை சீர் செய்து, சீர் செய்து அடித்தவர்களும், காயங்களைக் கட்டிவிட்டுத் தொடர்ந்து நின்று சண்டையிட்டவர்களும் வெற்றியை எமக்கே உரித்தாக்கியிருந்தனர்.

காலை 5.00 மணியளவிலிருந்து மாலை 5.00 மணியளவு வரை தொடர்ந்த அந்தப் பெருஞ்சண்டையில் படையணி 2ம் லெப்.மாலதியின் பெயரையும் கப்டன் கோபியின் பெயரையும் நிலைநிறுத்தியிருந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை உலுப்பிய இரு பெரும் சமர்களான இந்திய இராணுவப் போரையும், வெற்றி நிச்சயம் நடவடிக்கையையும் எதிர்கொண்டு, முதல் மாவீரர்களை ஈகம் செய்த நிமிர்வில், இனிவரும் சமர்களையும் வெற்றிகொள்ளும் துணிவில், களமெங்கும் காத்திருக்கின்றது படையணி.


“ஆயிரத்து நூற்று இருபத்தைந்து மாவீரர்களை மண்ணுக்கு ஈர்ந்து பெருமையோடு நிமிர்ந்துகொள்கின்றது படையணி”

- மலைமகள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இதழ் (மாசி – பங்குனி 2006)

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

வராமல் வந்த வரமாக வந்துதித்தவன் பாலச்சந்திரன்.


வராமல் வந்த வரமாக '
வந்தவன் எங்கள் கரிகாலன்.
அவன் வாழ்வின் திவ்விய பயனாக
வந்துதித்தான் பாலச்சந்திரன் !

இனம் தமிழர் வாழ்விலே ;
ஒளியேற்றி வைத்தான் அப்பன்;
அவன் இதயம் நொறுங்க
வாழ்வை முடித்தான் - எங்கள்
மனதில் வாழும் சந்திரன்.

பச்சை பசுந்தளிரென - பாராமல்
பாய்ந்து குதறிய சிங்களமே !
பச்சை இரத்தத் தாகத்துடன்
மீண்டும் வருவோம் விரைவினிலே !

காலம் வருகிறது எங்களுக்கும் "
காத்திருக்கிறோம் எதிரிகளே !
சிங்கத்தை காட்டினிலே
வேட்டையாட !
புலிப்படை கொண்டு வருவான் சீக்கிரமே !

தினம் தினம் இதைத்தான்
எதிர்பார்த்து
நாங்கள் திமிறியெழுகிறோம் ;
தமிழ்நாட்டில்.
மீண்டும் வருவோம் !
மீண்டும் வருவோம் !

பாலச்சந்திரன் சாந்தியடைய
சிங்களத்திற்கு
பாடையொன்றை உருவாக்கி
வருவோம் !






நாங்கள் திமிறியெழுகிறோம் ;
தமிழ்நாட்டில்.
மீண்டும் வருவோம் !
மீண்டும் வருவோம் !

பாலச்சந்திரன் சாந்தியடைய
சிங்களத்திற்கு
பாடையொன்றை உருவாக்கி
வருவோம் !

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

ஞாயிறு, 19 ஜனவரி, 2014

வான் புலிகளின் விமானத்தாக்குதல்கள் - புதிய பரிமாணத்தில்.

வான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர்

விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலை நகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.


கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி 2007 அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் யாழ் குடாநாட்டில் அமைந்துள்ள பலாலி கூட்டுத்தளம் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார்கள். தற்போது வான்புலிகளின் இரண்டு ஸ்குவார்டன்கள் கடந்த ஏப்ரல் 29ம் திகதி அதிகாலை கொழும்பு நகரின் மையப்பகுதிக்கு வான் வழியாக ஊடுருவி கொலன்னாவ எண்ணெய் குதங்கள் மீதும் கேரவலப்பிட்டிய, வத்தளை பகுதியில் அமைந்துள்ள முத்துராயவெல எரிவாயு நிலையங்கள் மீதும் வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு தமது தளங்களுக்கு பாதுகாப்பாக திரும்பியுள்ளன.

இதற்கிடையில் கடந்த 2007 ஏப்ரல் 26ம் திகதி இரவு 10.00-11.00 மணியளவில இரண்டு புலிகளின் விமானங்கள் கட்டுநாயக்கா மற்றும் வவுனியா இராணுவ முகாம்களை நோக்கி பறப்பதாகக் கிடைத்த செய்திகளைத் தொடந்து சிறிலங்கா படையினர் விமான எதிர்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்புக்களை இயக்கினார்கள். பயப்பீதியும் அச்சமும் அடைந்த சிறிலங்காவின் முப்படையினரும் விமான எதிர்ப்பு ஆயுதங்களாலும் சாதாரண துப்பாக்கிகளாலும் வானத்தை நோக்கிப் பல்வேறு திசைகளில் சுட்டுத்தள்ளியதால் கட்டுநாயக்கா விமான நிலையத்திலும் ஏனைய பகுதிகளிலும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், விமானநிலையப் பணியாட்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பயப்பீதியால் அங்கும் இங்கும் ஓடித்திரிந்தனர். இதைவிட மோசம் என்னவென்றால், இச்சமயத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வந்துகொண்டிருந்த எமிரேட்ஸ் மற்றும் சிங்கப்பூர் விமானங்கள் மீதும் கீழிருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதுதான். இதன் காரணமாக எமிரேட்ஸ், சிங்கப்பூர், கதே பசுபிக் விமானங்களின் கட்டுநாயக்கா விமானத்தளத்திற்கான உள்வருகை திசைதிருப்பப்பட்டு தென்னிந்தியா விமானநிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போன்று கடந்த 2007 ஏப்ரல் 29ம் திகதி வான்புலிகளின் கொழும்பு நகரத் தாக்குதலுக்குப் பிறகு சம்பவங்கள் நடந்தேறின. கொழும்பு நகரில் வாழும் 10 இலட்சம் மக்களில் பெரும்பான்மையோர் வீடுகளிலும் பொதுஇடங்களிலும் இரவு முழுவதும் நித்திரை கொள்ளாது சிறிலங்கா – அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான உலககிண்ணப் போட்டியினை பார்த்துக்கொண்டிருந்த வேளை திடீரென வாண வேடிக்கை
போன்று வெடிச்சத்தங்கள்  கேட்கத்தொடங்கின. 

முதலில் மக்கள் உலகக் கிண்ண கிரிக்கெற் போட்டியினை கொண்டாடுவதற்கான வெடிச்சத்தங்கள் கேட்பதாக நினைத்தார்கள். எனினும் உடனடியாக மின்சாரம் கொழும்பு நகர மற்றும் புறநகர்ப்பகுதிகளில் நிறுத்தப்பட்டதுடன் குண்டுச்சத்தங்களும் வெடிச்சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்கத்தொடங்கியதும் ஏதோ விபரீதம் இடம்பெற்றுள்ளது என்பதை உணர்ந்து கொண்டார்கள். வீடுகளிலும் கட்டடங்களிலும் இருந்து மக்கள் வெளியே சென்று பார்த்த போது கட்டுநாயக்காவில் இருந்து இரத்மலானை வரையும் இராணுவ முகாம்கள், சோதனை நிலையங்கள். காவலரண்கள் ஆகியனவற்றில் கடமையிலிருந்த பயப்பீதியடைந்திருந்த சிறிலங்காவின் முப்படைகளைச் சேர்ந்தவர்களும் தமது துப்பாக்கிகளினால் வானத்தை நோக்கி ரம்போ படங்களில் இடம்பெறுவது போன்று நீள் வளைய வடிவத்தில் சுட்டுத்தள்ளினார்கள். இவர்கள் பயன்படுத்திய ரேசர் ரவைகள் இரவு நேர வானத்திலே மத்தாப்புக்கள் வெடித்ததுபோன்று அனைத்துக்கட்டடங்களிலும் இருந்து வான்நோக்கிச் சென்று வர்ணக் கோலங்களை வரைந்தது.

இவ்வாறான சம்பவங்களினால் அச்சமும் திகிலும் அடைந்திருந்த கொழும்பு நகர விடுதிகளில் தங்கியிருந்த உல்லாசப் பிரயாணிகள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் உடனடியாக தமது அறைகளை விட்டு வெளியேறி தரைப்பகுதியில் இருக்கின்ற வரவேற்பு பகுதிக்கு கீழே இறங்கி வருமாறு பணிக்கப்பட்டார்கள். மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் பல்லடுக்கு மாடிகளைக் கொண்ட உல்லாச விடுதிக் கட்டடங்களில் இருந்து மாடிப் படிகள் ஊடாக இறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பயப்பீதியும் கோபமும் அடைந்திருந்த பல உல்லாசப்பிரயாணிகள் இதுதான் சிறிலங்காவிற்கான தமது கடைசிப் பயணம் எனத் தெரிவித்தார்கள்.

இத்தாக்குதல்களின் மூலோபாய, அரசியல் மற்றும் பொருளாதாரத் தாக்கங்களையும் விளைவுகளையும் சிங்கள தேசம் உடனடியாகவே அனுபவிக்கத் தொடங்கிவிட்டது. கொங்கொங்கினைத் தளமாகக் கொண்டியங்கும் கதே பசுபிக் விமான நிறுவனம், டுபாயினை தலைமையகமாகக் கொண்டியங்கும் எமிரேட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தமது கொழும்பிற்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தன. இவை தவிர, சிங்கப்பூர் விமான நிறுவனம் தனது சிறிலங்காவிற்கான பறப்புக்களை பகல் வேளைகளில் மட்டும் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. அத்தோடு ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் அவுஸ்ரேலியாவும் தமது மக்களுக்கு சிறிலங்காவிற்குப் பயணிப்பதால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடிகள் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மேலும் சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு காரணங்களுக்காக மே 10ம் திகதியில் இருந்து இரவு 10.30 தொடக்கம் அதிகாலை 4.30 வரை சர்வதேச விமானநிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்களின் விளைவுகள் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தென்னாசியாவில் விமானம் மற்றும் கப்பல்களின் போக்குவரத்து மையமாக விளங்கும் சிறிலங்காவிற்குப் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தவல்லது.

சாதாரணமாகக் கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 70 வரையிலான விமானங்கள் இறங்கி ஏறுவது வழக்கம். விமானநிலையத்தினை இரவு வேளை மூடுவதால் அண்ணளவாக 40வீதமான விமானங்களின் வருகைகள் தடைப்படப்போகின்றது. அத்துடன் சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் 43.6 வீதப் பங்கினை எமிரேட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதுடன் நிர்வாக முகாமைத்துவம் முழுவதும் எமிரேட்ஸ் நிறுவனவத்தினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. எனவே எதிர்காலத்தில் எமிரேட்ஸ் நிறுவனமானது தனது தென் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பறப்புக்களுக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பினை தவிர்த்து மாலைதீவு, தென் இந்தியா, சிங்கப்பூர் போன்ற விமானநிலையங்களைப் பயன்படுத்த முற்பட்டால் ஏற்கனவே பொருளாதார மற்றும் நிர்வாக நெருக்கடிகளுக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா ஏயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு விரைவில் மூடுவிழா வைக்கவேண்டிய நிலையும் உருவாகும். உல்லாசப் பிரயாணத்துறையானது சிறிலங்காவின் பொருளாதாரத்தில் வருமானம் ஈட்டுவது தொடர்பாக முக்கிய பங்கினை வகிக்கின்றது. 

வருடத்திற்கு ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான உல்லாசப் பிரயாணிகள் சிறிலங்காவிற்கு விடுமுறையைக் கழிப்பதற்காக வருகை தருவதினால் 410 மில்லியன் டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகின்றது. இத்துறை சிறிலங்காவின் மூன்றாவது பெரிய வருமானத்தை ஈட்டும் அமைப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் போர் நடவடிக்கைகள் காரணமாக 36வீதத்தினால் ஆட்களின் வருகை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் புலிகளின் வான்தாக்குதல்களும் அதனைத் தொடர்ந்து விமானநிலைய மற்றும் உல்லாச விடுதி அதிகாரிகளின் நெருக்கடிகளை கையாளத்தெரியாத, முட்டாள்த்தனமான அணுகுமுறையும் (கடந்த 2007 ஏப்ரல் 26ம் திகதி நூறு வரையிலான பெல்ஜிய நாட்டு உல்லாசப்பிரயாணிகள் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் புலிகளின் வான்தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தின் காரணமாக நிலத்தில் குப்புற படுக்கும்படி விமானநிலைய பணியாட்களால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.) இணைந்து மேலும் உல்லாசப்பிரயாணத் துறையை சீரழிக்கப்போவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்காவின் பொருளாதாரமானது ஏற்கனவே 17வீத பணவீக்கத்தினால் மற்றும் வரவுசெலவு பற்றாக்குறை மொத்த தேசிய உற்பத்தியில் 8.4வீதமாகக் காணப்படுவதாலும் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் வான்புலிகளின் புதிய சவால்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு மிகவும் விலை கூடிய வான் கண்காணிப்புக் கருவிகள், வானூர்திகளை இரவில் கண்டுபிடிப்பதற்கான உபகரணங்கள் மற்றும் வான் பலத்தினை அதிகரிப்பதற்கு புதிய விமானங்கள் கொள்வனவு போன்ற நடவடிக்கைகளுக்காக 2007ம் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவீனமானது 139 பில்லியன் ரூபாய்களில் இருந்து 200 பில்லியன் ரூபாய்களாக (20,000 கோடி ரூபா) அதிகரிக்கப்படவுள்ளதாக முன்னாள் விமானப்படைத் தளபதி ஏயார் மாசல் ‘ரி குணதிலக்கா கூறியுள்ளார். இவ் பாதுகாப்பு செலவதிகரிப்பானது ஏற்கனவே வரவுசெலவு பற்றாக்குறையால் திண்டாடும் சிங்கள அரசிற்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தப்போகின்றது.

மூலோபாய போரியலில் கேணல் வார்டனின் ‘ஐந்து வளையக் கோட்பாடு’ !

அமெரிக்க விமானப்படையின் கேணலாக கடமையாற்றிய ஜோன் வார்டன், ஒரு எதிரி அரசின் போரிடும் ஆற்றல்களைப் பௌதீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அழிப்பதற்கு அல்லது முடக்குவதற்கு இந்த ஐந்து வளையக் கோட்பாட்டினை ஒரு எளிய வடிவமாக முன்வைக்கின்றார். இக்கோட்பாட்டினை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு எதிரியின் பிரதான தலைமைப்பீடம் மற்றும் கட்டளை மையங்களை குறிப்பாக அடையாளப்படுத்தி அதன் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமானது என்று வலியுறுத்துகின்றார் வார்டன்.

அத்துடன் மூலோபாயப் போரியலில் இந்த ஐந்து வளையங்கள் மீதும் இயலுமானளவு பரவலாகவும் சமாந்தரமாகவும் தாக்குதல்களை போரில் ஈடுபடுகின்ற தரப்பு மேற்கொள்வதன் மூலம் போரினை வெல்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அத்தரப்பிற்கு மிகவும் பிரகாசமானதாகக் காணப்படும் என்று மேலும் கூறுகின்றார்.

அதாவது எதிரியின் போரிடும் உளவுரன் மிகவும் பாதிக்கப்பட்டு எதிரி தனது போர் முயற்சிகளை இதன் காரணமாக கைவிடப் பண்ணுவதே இத் தந்திரோபாயத்தின் இலக்காகும்.

இவ்வளையங்களிலே மிகவும் பிரதானமானதும் உள்வளையத்தில் காணப்படுவது அரசின் தலைமைச் செயலகம் மற்றும் கட்டளை பீடங்களாகும். இதற்கு அடுத்ததாக முப்படைத்தளபதிகளின் கட்டளைப்பணிமனைகள், கூட்டுப்படைத் தலைமையகங்கள், தொடர்பாடல் நிலையங்கள் என்பன போன்ற போரினை செயல்படுத்தும் கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன.

இரண்டாவது வளையத்தில் போரினை தொடர்ச்சியாக நடத்துவதற்குத் தேவையான சக்திமூலங்கள் காணப்படுகின்றன. ஒரு அரசின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே போரினை நீண்ட காலத்திற்கு அந்த அரசினால் நடத்த முடியும். அதாவது நிதி, மின்சாரம், எரி பொருள் போன்ற சக்திமூலங்கள் ஒரே சீராகவும் தடையின்றியும் பெறக்கூடியதாக இருந்தால் மாத்திரமே ஒரு அரசினால் தனது தலைமையகத்தையும் போர் இயந்திரத்தையும் சிறப்பாக இயக்க முடியும். சிறிலங்கா போன்ற சிறிய நாட்டின் தலைநகரான கொழும்பு நகரில் மேலே கூறப்பட்ட கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நேரடியாக அரச தலைமைப் பீடத்தினையும் அதனது போர் இயந்திரத்தினையும் பலமாகப் பாதிக்கும்.

அதாவது இரண்டாவது வளையத்தின் மீதான தாக்குதல்கள்,

* அரசு தனது போரினையோ அல்லது அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலையோ தொடர்ச்சியாக மேற்கொள்வதை சாத்தியமற்றதாக்கும்.

* பொருளாதார ரீதியிலான பல்வேறு மோசமான தாக்கங்களையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்துவதோடு அவ்வரசின் உள்ளக அரசியல் முரண்பாடுகளைக் கூர்மையடையப் பண்ணும்.

* இவற்றின் காரணமாக அரச இயந்திரம் முற்றாகச் செயலிழக்கும் அல்லது ஆகக்குறைந்தது முடக்கமடையும் நிலைக்குத் தள்ளப்படும்.

மூன்றாவது வளையத்தில் விமான நிலையங்கள், துறைமுகங்கள், பிரதான போக்குவரத்துச் சாலைகள், புகையிரதப் பாதைகள், பாலங்கள், நீர்த்தேக்கங்கள் போன்ற உட்கட்டுமானங்கள் காணப்படுகின்றன. இவ்வளையத்தின் மீதான தாக்குதல்கள் எதிரிகளின் போர்நடவடிக்கைகளுக்கான விநியோகங்கள் மீது பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

நான்காவது வளையத்தில் பொது மக்கள் காணப்படுகின்றார்கள். இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜேர்மனியர்கள் லண்டன் மாநகரின் மீது தொடர்ச்சியாக வான் தாக்குதல்களை மாதக்கணக்கில் நடத்தியமை மற்றும் நேச நாடுகள் ஜேர்மன் நகரங்களின் மீது வான்வழியாக குண்டுமழை பொழிந்தமை போன்ற நடவடிக்கைகள் மக்கள் மீது உயிரிழப்புக்களையும் அவலங்களையும் ஏற்படுத்துவதன் மூலம் ஒரு உளவியல் போரை நடத்தி மக்களை போரில் இருந்து அந்நியப்படுத்தும் முயற்சியே இதுவாகும்.

ஐந்தாவது வளையத்தில் கள முனைகளில் நிலைப்படுத்தப்பட்டுள்ள படையினர் காணப்படுகின்றனர். போர் நடவடிக்கைகளில் களமுனைப்படையினர் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றனர். எனினும் இவர்களின் பிரதான நோக்கம் ஏனைய வளையங்களில் காணப்படுகின்ற தலைமைப் பீடங்களையும் கட்டுமானங்களையும் சக்திமூலங்களையும் எதிரிகளின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதே.

இப்போது வார்டனின் ஐந்து வளையக் கோட்பாட்டின் பிரதானமான இலக்கான எதிரி அரசின் தலைமைப் பீடத்தின் அனைத்து போர் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற கட்டளைமையத்தை (Center of Gravity) அடையாளம் கண்டு அதனை தாக்கியழிப்பது அல்லது செயலிழக்கப் பண்ணுவது என்பது போரில் வெற்றி கொள்வதற்கு மிகவும் இன்றியமையாதது. இம் மையமானது ஒரு அரசின் அதிகாரம், பாதுகாப்பு, உள மற்றும் பௌதீக வலிமை, போரிடும் வல்லமை போன்றனவற்றின் ஆதாரமாக விளங்குகின்றது. இது தொடர்பாக குளோஸ்விச் கூறுவதாவது “ஒரு அரசானது போரினை நடத்திக் கொண்டிருக்கும் போது இயல்பாகவே அதனது அதிகாரம் மற்றும் செயற்பாடு போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான மையம் ஒன்று வளர்ச்சிபெற்று உருவாகும். இம் மையத்தை தாக்கியழிப்பதற்கே எமது அனைத்து சக்திகளும் கவனங்களும் மூல வளங்களும் பிரயோகிக்கப்பட வேண்டும்.”

நான்காவது ஈழப்போரிலே வான் புலிகளின் மரபுவழிப் போர் நடவடிக்கையானது ஒரு புதிய பரிமாணத்தை திறந்துவிட்டிருக்கின்றது. கடந்த காலங்களிலே தேசியத் தலைவர் அவர்களினால் தரையிலும் கடலிலும் மரபுவழி போர்த் தகைமைகள் கொண்ட படைகளை உருவாக்கியதைப் போன்று தற்போது வான் பரப்பின் ஊடாகவும் மரபு வழிப் போரினை சிறப்பாக திட்டமிட்டுத் துல்லியமாக நிறைவேற்றக்கூடிய வான்புலிகளை எந்தவொரு நாட்டின் உதவியுமின்றி தமது சொந்த முயற்சியிலேயே உருவாக்கிவிட்ட அவரது நவீனத்துவமான படைப்புத்திறன் சிந்தனையை பல வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஊடகவியலாளரும் வியந்து பாராட்டுகின்றனர்.

வான் புலிகளின் மரபுவழிப் போர் என்ற இப்புதிய பரிமாணமானது தரை மற்றும் கடல் போன்றல்லாது எல்லைகள் அற்ற ஒரு புதிய தளத்தினை புலிகளுக்கு திறந்துவிட்டுள்ளது. அதாவது சிங்கள தேசத்தின் அனைத்துக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகளையும், அதாவது வார்டனின் ஐந்து வளையங்களையும் இலங்கைத்தீவின் எப்பகுதியிலும் சென்று அழிக்கக்கூடிய வல்லமையைப் புலிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஒரு மாதகாலப்பகுதிக்குள் மூன்று வெற்றிகரமான மரபுவழி வான் தாக்குதல்களை வான் புலிகள் நடத்தியதன் மூலம் சிறிலங்கா அரசு தனது வான் ஆதிக்கத்தை புலிகளிடம் பறி கொடுத்துவிட்டது என்று சிங்கள ஆய்வாளர்கள் ஏற்கனவே புலம்பத் தொடங்கிவிட்டார்கள்.

சிங்கள அரசியல் தலைவர்களோ அல்லது சிங்களப் படைத்தளபதிகளோ கள யதார்த்தங்களையோ அல்லது விடுதலைப் புலிகளின் நவீன முறையிலான போரியல் சிந்தனைகள் மற்றும் செயற்றிறன்களையோ அறிவதற்கோ அல்லது அதனை ஏற்றுக் கொள்வதற்கோ தயாரில்லை என்பதே சிங்கள மக்களின் மிகவும் துன்பியல் நிறைந்த சோகம் என சிங்கள பத்தி எழுத்தாளரான ரிசராணி குணசேகரா தெரிவிக்கின்றார். இதைவிட துன்பம் என்னவென்றால் நாட்டின் பொருளாதாரமும் அரச கட்டுமானங்களும் சீரழிந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்த ராஜபக்சவிற்கும் கோதபாய ராஜபக்சவிற்கும் கொழும்பு நகரின் மூலை முடுக்கு எங்கும் கட் அவுட் வைப்பதும் அவர்களைப் புகழ்ந்து விளம்பரங்கள் ஒட்டுவதும் தான் மிக மோசமான செயற்பாடு என்று மேலும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்கள் தமிழீழ விடுதலைப் போரியல் வரலாற்றிலேயே புதிய புதிய பரிமாணங்கள்கொண்ட, தேச விடுதலையை விரைவுபடுத்துகின்ற தீர்க்கமான சமர்கள் இடம்பெறப் போவதையே தற்போதைய நிகழ்வுகள் சுட்டிநிற்கின்றன.

பெரும் எடுப்பிலான மரபுவழிப் போர்த் தகைமைகள் கொண்ட புலிப்படையணிகளை உருவாக்கி தரை, கடல் மற்றும் வான் என்ற முப்பரிமாணத் தளங்களிலே போர்களை சம காலத்தில் சமாந்தரமாக இனிவரும் காலங்களில் நடத்தவிருக்கின்ற எமது தேசியத் தலைவரின் மதிநுட்பம் மிக்க சிறந்த இராணுவத் திட்டமிடல்களை செயற்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தரைப்படை, கடற்படை என்பனவற்றோடு வான் படையும் தயாராக இருக்கின்றது.

- சி.புலித்தேவன்.
 விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி – சித்திரை 2007)








பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

Get this widget