thalaivan

thalaivan

வியாழன், 28 ஜூலை, 2011

மாவீரன் பண்டாரக வன்னியனின் வரலாற்று குறிப்பு.

மாவீரன் பண்டாரக வன்னியனின் 208 ஆவது நினைவு நாள் 2011ம் இவ் வருடம் ஐப்பசி மாதம் வருகின்றது...


 ஒல்லாந்தா் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியிலும் ஆங்கிலேயா் ஆட்சிகாலத்தின் முற்பகுதியிலும். வன்னிராச்சியத்தை ஆண்ட மன்னன் குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியன்.

வெள்ளையரிற்கு அடிபயணியாது வன்னிராச்சியத்தை ஆண்டு வந்ததான். முல்லைத்தீவு கோட்டையில் வெள்ளையா்களிடம் இருந்து மீட்டு பிரங்கிகளை கைப்பற்றிய முதல் மன்னன் கற்பூரபுல் வெளியில் ஒரே வாழ் வீச்சில் 60 பேரை கொன்ற வரலாற்று நாயகன்தான் பண்டாரவன்னியன்.

வன்னிராச்சியத்தில் தோற்கடிக்கப்படாத மன்னாக திகழ்ந்த பண்டாரவன்னியன் காக்கவன்னியனின் காட்டிக்கொடுப்பினால் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்கினால் தோற்கடிக்கப்பட்டதன் நினைவுநாள் இன்றாகும்.

வன்னியில் ஒட்டிசுட்டானில் உள்ள கைச்சிலைமடு என்னும் இடத்தில் வைத்து பண்டாரவன்னியன் வெள்ளையா்களினால் தோற்கடிக்கப்பட்டான். இதன் நினைவாக கற்சிலைமடுப்பகுதியில் பண்டாரவன்னியனிற்கு நினைவுச் சிலை  அமைக்கப்பட்டது. பின்னா் அது ஸ்ரீலங்காப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவன்னியனின் 208ம் ஆண்டு நினைவு நாளுக்கு  நாட்கள் மிக இருந்தாலும் என்றுமே அவ் மகாவீரனுக்கு நாம் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்வோம் .

வெள்ளையர்களை எதிர்த்து 'பாயும் புலி' பண்டாரவன்னியன் வீரப்போர்.

இலங்கையில், வெள்ளையர்களை எதிர்த்து வீரப் போர் புரிந்து உயிர்த் தியாகம் செய்தவன், பண்டாரவன்னியன்.

தமிழ்நாட்டில், வெள்ளையர்களை எதிர்த்து இறுதிமூச்சு உள்ளவரை போராடியவன்
வீரபாண்டிய கட்டபொம்மன். அவனைப்போல, இலங்கையில் வெள்ளையரை எதிர்த்தவன்
 'பாயும் புலி' பண்டாரவன்னியன். முழுப்பெயர் குலசேகர வைரமுத்து பண்டாரவன்னியன்.

தமிழர் ஆட்சி.

யாழ்ப்பாணத்தை ஒட்டிய வன்னிப்பிரதேசத்தை பண்டாரவன்னியன் ஆண்டு வந்தான்.

வடக்கே யாழ்ப்பாணம் பரவைக்கடலையும், தெற்கே அருவிஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே திரிகோணமலையையும் எல்லையாகக் கொண்டது வன்னி ராஜ்ஜியம்.

பண்டாரவன்னியனும், கண்டி தமிழ் மன்னன் விக்கிரம ராசசிங்கனும் நெருங்கிய நண்பர்கள்.

டச்சுக்காரர்களை விரட்டிவிட்டு, இலங்கையில் பல இடங்களை கைப்பற்றிக்கொண்ட வெள்ளையர்கள், பண்டாரவன்னியனிடம் கப்பம் (வரிப்பணம்) கேட்டனர்.

தமிழ்நாட்டில், வெள்ளையருக்கு வரி கொடுக்க வீரபாண்டிய கட்டபொம்மன் மறுத்தது போல், பண்டாரவன்னியனும் கப்பம் கட்ட மறுத்தான். கப்பம் கேட்டு வந்த வெள்ளையனை விரட்டி அடித்தான்.

வெள்ளையர்கள் விடவில்லை. 1797 -ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி எல்லிஸ் டொய்லி என்ற தளபதியை பண்டாரவன்னியனிடம் அனுப்பி, கிஸ்தியை வசூலித்து வருமாறு கூறினார்கள்.

வெட்டி வீழ்த்தினான்.

வெள்ளையர்கள் மீண்டும் மீண்டும் ஆட்களை அனுப்பி கப்பம் கேட்டதால், பண்டாரவன்னியன் வெகுண்டான். எல்லிஸ் டொய்லி என்ற அந்த வெள்ளைக்கார தளபதியை வாளால் வெட்டி வீழ்த்தினான்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும், வெள்ளையர்கள் கடும் கோபம் கொண்டனர். படைகளை திரட்டிக் கொண்டு, பண்டாரவன்னியன் மீது போர் தொடுத்தனர்.

கற்பூரப்புல் என்ற இடத்தில் இருதரப்பு படைகளும் மோதின. பண்டாரவன்னியன் ஆவேசத்துடன் வீரப்போர் புரிந்து, பல வெள்ளைக்கார வீரர்களை வீழ்த்தினான்.

தமிழ் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல், வெள்ளையர் படை புறமுதுகிட்டு ஓடியது.

மீண்டும் போர் ஆரம்பமாகியது. 

ஆங்கிலேயர்கள், எப்படியாவது பண்டாரவன்னியனை தோற்கடித்து விடவேண்டும் என்று பெரும் படை திரட்டினர். இதைத் தெரிந்து கொண்ட பண்டாரவன்னியன், ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு கோட்டையை, 1803-ம் ஆண்டில் தாக்கினான். 

கப்டன் ரிபேக் தலைமையில் இருந்த வெள்ளையர் படைகளுக்கும், பண்டாரவன்னியன் படைகளுக்கும் கடும் போர் நடந்தது. பண்டாரவன்னியன் வெற்றி பெற்றான். வெள்ளையர் படை பின்வாங்கி ஓடியது.

மும்முனைத் தாக்குதல்.

வெள்ளையர் பண்டாரவன்னியனை எதிர்க்க புதிய வியூகம் வகுத்தனர். யாழ்பாணம், மன்னார், திரிகோணமலை என்ற மூன்று இடங்களில் இருந்தும் வெள்ளையர்கள் ஒரே நேரத்தில் படையெடுத்துச் சென்று, பண்டாரவன்னியனை தாக்கினர்.

வெள்ளையர்களின் படைகளுடன் ஒப்பிடும் போது, பண்டாரவன்னியனின் படை மிகச் சிறியது. இருப்பினும், அஞ்சாமல் வீரப்போர் புரிந்தான்.

போரில் பண்டாரவன்னியன் படுகாயம் அடைந்தான். அவனுடைய வீரர்கள், பனங்காமம் என்ற இடத்துக்கு பண்டாரவன்னியனை தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளித்து குணப்படுத்த எவ்வளவோ முயன்றும் பலன் இல்லை.

1803-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி பண்டாரவன்னியனின் உயிர் பிரிந்தது.

பண்டாரவன்னியன் மாண்ட இடத்தில் ஒரு நடு கல் உள்ளது. அதில், "இந்த இடத்தில் பண்டாரவன்னியனை கேப்டன் வான் டெரிபெர்க் தோற்கடித்தான்" என்று குறிப்பிட்டுள்ளது.


பல ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தை ஆண்ட தமிழ் வீர மன்னன் பண்டாரகவன்னியன் வெள்ளையர்களை எதிர்த்து போராடி வீரச்சாவை அனைத்துக் கொண்ட இவ் வீரனுக்கு எங்கள் வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் 


வெள்ளையர்கள் எழுதிய வரலாற்றில், பண்டாரகவன்னியனை ஒரு 'கொள்ளைக்காரன்' என்றே குறிப்பிடுகின்றனர்.


Image Hosted by ImageShack.us

புதன், 27 ஜூலை, 2011

நிமிர்ந்து நில்லடா தமிழா!!!


உயர்ந்து கொள்ளடா தமிழா!
உரிமை காத்திட அணியில் சேர்ந்திடு
உழைக்க வேண்டும் நாம் தமிழா - ஈழம்
மீட்க வேண்டும் புறப்படடா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)


நிமிர்ந்து நில்லடா தமிழா - நிலை
உயர்ந்து கொள்ளடா தமிழா!
உரிமை காக்கவும் உண்மை பேணவும்
ஒன்று சேரடா தமிழா - உறவுகள்
காக்க வேண்டும் புறப்படடா!  --(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

முள்ளி வாய்க்காலில் முடிந்து போன கதை
தொடர வேண்டுமா தமிழா - அதை
முடிக்க வேண்டாமா தமிழா!
கொன்று குவித்தவரும் கொலைகள் செய்தவரும்
நின்று வாழ்வதில்லை தமிழா - நீதி
செத்துப் போவதில்லை தமிழா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

கடவுள் வந்தாலும் கருணை தந்தாலும்
எழும்பி வருவரா தமிழா - சென்ற
உயிரும் திரும்புமா தமிழா!
புத்தன் வழிவந்த போலிக் கும்பல்கள்
கொட்டம் அடக்கணும் தமிழா- அவர்களைக்
கூண்டில் ஏத்தணும் தமிழா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

மடிந்து போனகதை முடிந்து போனவதை
மறக்க வேண்டுமே தமிழா - மனம்
தெளிய வைத்திடு தமிழா!
விடியல் நோக்கியே விளக்கை ஏந்தியே
வாழ்ந்து காட்டுவோம் தமிழா- நாளை
வென்று காட்டுவோம் தமிழா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

நாடு கடந்த ஒரு அமைப்பு இருக்கு தின்று
தேடி வந்து ஒன்று சேரு - ஓர்
அணியில் நின்று நீ பாரு
கேடு கேட்டவரின் நேர்மை யற்ற செயல்
உலக அரங்கிலே கூறு - தமிழா!
நீதி கேட்டு அங்கு கூடு!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)

நிமிர்ந்து நில்லடா தமிழா - நிலை
உயர்ந்து கொள்ளடா தமிழா!
உரிமை காத்திட அணியில் சேர்ந்திடு
உழைக்க வேண்டும் நாம் தமிழா - ஈழம்
மீட்க வேண்டும் புறப்படடா!  -(நிமிர்ந்து நில்லடா தமிழா ....)



வீழ்வது தோல்வி அல்ல!!! 
வீழ்ந்து கிடப்பதே தோல்வி!!! 

Image Hosted by ImageShack.us

சனி, 23 ஜூலை, 2011

மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மானின் வீர வணக்க நாளும் வரலாற்று நினைவுகளும்.

லெப்.செல்லக்கிளி அம்மான்
சதாசிவம் செல்வநாயகம் 
தமிழீழம்(யாழ் மாவட்டம்)
தாய் மடியில் 15.06.1953
மண் மடியில் 23.07.1983


தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்ற திருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்க வளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர்.

1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள்.

நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்கு தான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.


முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.

எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.

விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.


தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.

செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.

வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ''அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ"" என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.

"அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்" என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.

நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.


மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் பற்றி தேசியத்தலைவர் காணொளியில்.






சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை பற்றி ' எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.

ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.

ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.

தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது.

ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.

சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.

ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.

ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.

இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.

அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.

விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து '"பசீர் காக்கா"" றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். 'சுடு" என்ற அப்பையா அண்ணை உடனே 'கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு" என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.

இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ''தம்பியிடம் ஓடு" என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.

ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.

சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.

மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ''யாரது"" என்று முன்னே வந்தனர்.

''அது நான்ராப்பா"" என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ''அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை"" என்றார் ரஞ்சன்.

''இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்"" என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.

மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.

இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. 'எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்" எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ''அண்ணா அவன் அனுங்குகிறான்." மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.

இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.

''கரையால் வாருங்கள்"" என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.

இத் தாக்குதல் இரவு நேரடி மோதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ''யாரது'' என்று வினவ அம்மான் ''அது நான் தம்பி" என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.

பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ''அம்மானைக் காணவில்லை"" என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ''டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது" என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.

வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது.

லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.

வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

அன்புடன் கிட்டு

இவ் வீரத்தளபதிக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம் இதே நாளில் வீரச்சாவை தழுவிக்கொண்ட ஏனைய போராளிகளுக்கும் எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்.


Image Hosted by ImageShack.us

பேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.

புதன், 13 ஜூலை, 2011

முதலாவது தாக்குதல் தளபதி சாள்ஸ் அன்ரனியின் வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

லெப்.சீலன் 
லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி
தமிழீழம் திருகோணமலை)
வீரப்பிறப்பு 11-12-1960
வீரச்சாவு 15-07-1983


ஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில் முதன்மை வாய்ந்த கெரில்லா வீரன் லெப். சீலனின் அனுபவ மொழியாகும். லூக்காஸ் சாள்ஸ் அன்ரனி என்ற சொந்தப் பெயரைக் கொண்ட சீலன் திருமலையின் வீரமண்ணில் விளைந்த நன்முத்து. சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நேரடியான ஒடுக்கு முறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகோணமலையின் நடைமுறை அனுபவங்களைக் கண்கூடாகக் கண்டவர்.

சிறீலங்காவின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்கு முறைகளும் இராணுவம், பொலீஸ் ஆகியோரின் அரவணைப்புடன் சிங்களக் காடையர்கள் தமிழ் மக்கள் மீது புரிந்த கொடுமைகள் இவற்றுக்கு முடிவுகட்ட ஆயுதப் போராட்டமே ஒரேவழி என்பது சீலனின் ஒரே நம்பிக்கையாக இருந்தது. இதுவே சீலனை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைத்தது.

தமிழீழத்தை நோக்கிய அவரது சிந்தனைகளும், செயற்பாடுகளும் திட்டவட்டமானவை. தலைவர் பிரபாகரனின் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில் சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். தலைவரின் நேர்மையிலும், தூய்மையிலும், திறமையிலும் அவர் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தார். இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ கைநிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை. ஆனால் இவரை நம்பி அன்றாடம் உணவுக்கே கடினப் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. ஆனால் கல்லூரி நாட்களிலேயே இனவெறி பிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்திற்கெதிரான போராட்ட உணர்வு கொண்டவராக சீலன் திகழ்ந்தார்.

லெப்.சீலன் பற்றி தமிழீழ தேசிய தலைவர் காணொளியில்.









1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டு வரப்பட்ட சிறீலங்கா சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சனாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினை தமிழீழ மண்ணில் கொண்டாட சிங்கள ஆட்சியாளர் எண்ணினர். இந்த வைபவத்தினையொட்டி திருமலை இந்துக் கல்லூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. சீலன் தனக்கே உரித்தான நுட்பமான அறிவினைப் பயன்படுத்தி பொஸ்பரஸ் என்னும் இரசாயனத்தை அக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தார். தேசியக் கொடியை ஏற்றும் போது அது எரிந்து சாம்பலாகியது. சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப் பட்டார். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை.

அவர் தனது ஆயுதப் போராட்ட வரலாற்றில் சாதித்தவை மகத்தானவை. 1981 அக்டோபர் மாதம் பிரிகேடியர் வீரதுங்கா சிறீலங்கா அரசாங்கத்தால் பதவி உயர்த்தப்பட்டு யாழ் இராணுவ அதிகாரியாக நியமிக்கப் பட்டபோது தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதற் தடவையாக சிறீலங்காக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வெற்றிகரமாக நடாத்தி இரண்டு சிங்கள இராணுவத்தைச் சுட்டு வீழ்த்தியவர் சீலன்.

1982இல் சனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பயணம் செய்ததையொட்டி காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படையினரின் இரக் வண்டியினைச் சிதைக்கும் தாக்குதல் நடவடிக்கை சீலன் தலைமையிலேயே நடைபெற்றது. இத்தாக்குதலில் இருந்து சிறீலங்காப் படையினர் தப்பிக் கொண்ட போதிலும் இத்தாக்குதல் சிறீலங்கா அரசுக்கு அச்சமூட்டுவதாக அமைந்தது.

1982 அக்டோபர் 27ஆம் நாள் சாவகச்சேரிப் பொலீஸ் நிலையம் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்குதலில் வலது காலில் காயமடைந்த சீலன் காலைக் கெந்திக் கெந்தி இழுத்தவாறே தனது துப்பாக்கியுடன் எதிரிகளின் துப்பாக்கியையும் நண்பர்களின் கைகளில் கொடுத்துவிட்டு மயங்கிச் சாய்ந்தார். இத் தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன் பயிற்சியின் போது நெஞ்சில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று ஓரளவு உடல்நிலை தேறியிருந்த சீலனுக்கு இது இரண்டாவது தடவையாக காயம்பட்டது. ஆனால் அவர் ஓய்வில்லை. சிங்கள இனவெறியரான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஐ.தே.க வின் உறுப்பினர்களாக இருந்த மூவர் மீது 1983 ஏப்ரல் 29ஆம் நாள் இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கை சீலனின் தலைமையிலேயே இடம்பெற்றது.


1983 மே மாதம் 18ஆம் திகதி நடந்த உள்ளுராட்சித் தேர்தலை தமிழ்மக்கள் பகிஸ்கரித்த போது தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பிற்கு யாழ் குடாநாடு முழுவதும் ஆயுதப் படையினர் குவிக்கப் பட்டிருந்தனர். இவ்வாறு கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் அமைக்கப் பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு மூன்று சைக்கிள்களில் சீலனின் தலைமையின் கீழ் சென்ற போராளிகள் அங்கு நின்ற இராணுவத்தினர் மீது துணிகரத் தாக்குதலை நடாத்தினர்.

1983 யூலை 5ஆம் திகதி வாகனம் ஒன்றில் சென்ற சீலனின் தலைமையிலான குழு காங்கேசன் துறை சீமெந்துத் தொழிற்சாலையில் நுழைந்து நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் தேவையான சாதனங்களையும் எடுத்துக் கொண்டது. இக்கருவிகள் பின்னர் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பெரிதும் உதவின. ஆனால் இக்கருவிகளைப் பெற்று பத்து நாட்களின் பின்னர் சீலன் வீரச்சாவடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

1983 ஆம் ஆண்டு யூலை மாதம் 15ஆம் நாள் மூன்று மணிக்கு தேசத்துரோகி ஒருவனின் காட்டிக்கொடுப்பால் சீலன், ஆனந் உட்பட நான்கு போராளிகள் தங்கியிருந்த மீசாலைப் பகுதியை சிங்கள இராணுவம் சுற்றி வளைத்தது. ஒரு மினிபஸ், இரண்டு ஜீப் , ஒரு ட்ரக் வண்டிகளில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிரடிப் படையினர் சுற்றி வளைத்தனர்.

இதனை உணர்ந்து கொண்ட போராளிகள் நால்வரும் தங்கள் துப்பாக்கிகளை இயக்கியவாறு முற்றுகையை உடைத்து வெளியேற முயன்றனர். இவர்கள் வெட்ட வெளியில் நிற்க இராணுவமோ பனை வடலிக்குள் நிலை எடுத்திருந்தது. இடைவிடாது போராட்டம் தொடர்ந்தது. இந் நிலையில் சிங்கள இராணுவத்தின் துப்பாக்கிச் சன்னம் ஒன்று சீலனின் மார்பில் பாய்ந்திருந்தது. ஆனால் அவர் உயிர் போகவில்லை. உயிருடன் எதிரி கையில் அகப்படக் கூடாது என்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரபுக்கு ஏற்ப “ என்னைச் சுட்டுவிட்டு ஆயுதங்களுடன் பின்வாங்குங்கள் ” என ஏனைய போராளிகளுக்கு சீலன் கட்டளை இடுகின்றார்.

திகைத்துப் போன அந்தப் போராளிகள் நிலைமையை உணர்ந்து கட்டளையை நிறைவேற்றுகின்றனர். அதேபோல இம் மோதலில் ஆனந் என்ற போராளியும் காயமடைந்து வீழ்கிறார். அவரும் “ என்னையும் சுட்டு விடுங்கள் ” எனக் கோரிக்கை விடுகிறார். இவரையும் சுடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட மற்றைய இருபோராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளியேறினர்.

லெப்.சீலன் போராட்டத்தின் போது எவ்வாறு ஒரு தனித்துவமான போராளியாக விளங்கினாரோ அவ்வாறே அவரது வீரச்சாவும் வித்தியாசமாக அமைந்தது. இவ்வாறான மாவீரர்களின் தியாகங்களின் பலத்திலேயே தமிழீழ விடுதலைப் போராட்டம் வீறுநடை போட்டுச் செல்கின்றது.


இவ்விரு வேங்கைகளின் 28 வது ஆண்டின் நினைவின் இன்றைய தினத்திலே லெப். சீலன் மற்றும் வீரவேங்கை ஆனந்த் இருவருக்கும் எமது அகவணக்கத்தை செலுத்தி

அவர்கள் விட்டுச் சென்ற வழியிலே ஒன்றிணைந்த தமிழினத்தின் பலமாக எமது விடியலின் கதவினைத் திறக்க அயராது பாடுபடுவோம்..

விடுதலையடைவோம்!!!

Image Hosted by ImageShack.us

செவ்வாய், 12 ஜூலை, 2011

கண்ணகி மண்ணிலிருந்து இருந்து ஒரு கருஞ்சாபம்! - கவிஞர் தாமரை

ஏ மிலேச்ச நாடே!
எத்தனை கொடுமைகள்
செய்து விட்டாய்
எங்கள் தமிழினத்திற்கு...


எத்தனையோ வழிகளில்
கெஞ்சியும் கூத்தாடியும்
காலில் விழுந்தும் கதறியும்
கொளுத்திக் கொண்டு செத்தும்
தீர்த்தாயிற்று...
எதுவுமே காதில் விழாத உங்களுக்கு
இன்னும் தராத ஒன்று
மிச்சம் உண்டு என்னிடம்...

பட்டினியால் சுருண்டு மடிந்த
பிஞ்சுக் குழந்தைகளின் படத்தைப் பார்த்து
அழுது வீங்கிய கண்களோடும்
அரற்றிய துக்கத்தோடும்
கலைந்த கூந்தலோடும்
வயிறெரிந்து இதோ விடுக்கிறேன்...
கண்ணகி மண்ணிலிருந்து
ஒரு கருஞ்சாபம்!

குறள்நெறியில் வளர்ந்து
அறநெறியில் வாழ்ந்தவள்
அறம் பாடுகிறேன்!
தாயே என்றழைத்த வாயால்
பேயே என்றழைக்க வைத்து விட்டாய்!
இனி நீ வேறு, நான் வேறு!

ஏ மிச்ச நாடே!
ஆயுதம் கொடுத்து, வேவுவிமானம் அனுப்பி
குண்டுகளைக் குறிபார்த்துத்
தலையில் போட வைத்த உன்
தலை சுக்கு நூறாகச் சிதறட்டும்!

ஒரு சொட்டுத் தண்ணீருக்காக விக்கி மடிந்த
எங்கள் குழந்தைகளின் ஆத்மா சாந்தியடைய
இனி ஒரு நூற்றாண்டுக்கு
உன் ஆறுகள் எல்லாம் வற்றிப் போகட்டும்!

மழை மேகங்கள் மாற்றுப்பாதை கண்டு
மளமளவென்று கலையட்டும்!
ஒருபிடிச் சோற்றுக்கு எங்களை ஓடவைத்தாய்...
இனி உன் காடு கழனிகளெல்லாம்
கருகிப் போகட்டும்!

தானியங்களெல்லாம் தவிட்டுக் குப்பைகளாக
அறுவடையாகட்டும்!
மந்தைகளைப் போல் எம்மக்களைத் துரத்தினீர்கள்
உங்கள் மலைகளெல்லாம்
எரிமலைக் குழம்புகளைக் கக்கி
சாம்பல் மேடாகட்டும்!

இரக்கமின்றி ரசாயனக் குண்டுகள்
வீசிய அரக்கர்களே...
உங்கள் இரத்தமெல்லாம் சுண்டட்டும்!
உங்கள் சுவாசம் பட்டு சுற்றமெல்லாம் கருகட்டும்!
எதிரிகள் சூழ்ந்து எந்நேரமும்
உங்கள் தூக்கத்தைப் பறிக்கட்டும்!

தெருக்களெல்லாம் குண்டு வெடித்து
சிதறிய உடம்புகளோடு
சுடுகாட்டு மேடாகட்டும்!
போர்நிறுத்தம் கோரியிருக்கிறோம் என்று
கூசாமல் பொய் சொன்ன வாய்களில்
புற்று வைக்கட்டும்!

வாய்திறந்தாலே இரத்தவாந்தி கொட்டட்டும்!
எங்கள் எலும்புக் கூடுகளின் மீது
ஏறி அமர்ந்து அரசாட்சி செய்தவர்களே...
உங்கள் வீட்டு ஆண்கள் ஆண்மையிழக்கட்டும்
பெண்களின் கருப்பைகள் கிழியட்டும்!

நிர்வாணமாக எங்களை நடக்கவிட்டவர்களே...
உங்கள் தாய்தந்தையர் பைத்தியம் பிடித்து
ஆடை கிழித்துத் தெருக்களில் அலையட்டும்!
எங்கள் இளைஞர்களை மின்சாரம் செலுத்தி
சித்திரவதையில் சாகடித்தீர்களே...
உங்கள் தலையில்
பெருமின்னல், பேரிடி இறங்கட்டும்!

எங்கள் சகோதரிகளைக் கதறக்கதற சீரழித்த
சிங்களவன் மாளிகையில்
விருந்துக் கும்மாளமிட்டவர்களே...
உங்கள் வீட்டு உணவெல்லாம் நஞ்சாகட்டும்!
உங்கள் பெண்களெல்லாம்
படுக்கையைப் பக்கத்து வீட்டில் போடட்டும்!

நரமாமிசம் புசித்தவர்களே...
உங்கள் நாடிநரம்பெல்லாம்
நசுங்கி வெளிவரட்டும்!
இன்னும் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு
புல்பூண்டு முளைக்காது போகட்டும்...

அலைபேரலையாய் பொங்கியெழுந்து அத்தனையும்
கடல் கொண்டு போகட்டும்!
நீ இருந்த இடமே இல்லாமல் போகட்டும்!
நாசமாகப் போகட்டும்! நாசமாகப் போகட்டும்!
நிர்மூலமாகப் போகட்டும்! நிரந்தரமாகப் போகட்டும்.

நன்றி -கவிஞ்ர் தாமரை-

Image Hosted by ImageShack.us

திங்கள், 4 ஜூலை, 2011

ஜூலை 05 முதலாவது கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது.

"கரும்புலிகள்" என்பது தற்கொடைப்பிரிவைச் சேர்ந்தவர்களை குறிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் கொள்ளப்படுகிறது. இயக்கத்தில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் எல்லோருக்குமே தன்னுடைய அரிய உயிரை இலட்சியத்திற்காக துறப்பதற்க்கு எப்பொழுதுமே தயாராய் இருக்கின்றனர். இயக்க உறுப்பினர்கள் அனைவருமே சைனைட் குப்பிகனை கழுத்தில் அணிந்து கொண்டு இருப்பார்கள். மிக இக்கட்டான சூழ்நிலையில் எதிரிகளிடம் பிடிபடாமலும் இயக்கத்தை பாதிப்படையவிடாமலும் செய்ய உயிர் துறந்தவர்கள் எத்தனையோ பேர்.
ஆனாலும் கரும்புலிப்பிரிவைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவே தமது உயிரைப் பணயம் வைத்து, அதைவிட தமது உயிரை கொடுத்து சில நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். மிக அரிதாக அவர்கள் தப்பி திரும்பி வரும் சந்தர்பங்களும் உண்டு. எப்படியிருந்தபோதிலும் அவர்கள் நடவடிக்கையில் இறங்கும்போது தம்முடைய உயிரை அந்த நடவடிக்கைக்காக தியாகம் செய்யத் தயாராகவே இருப்பர். இப்படியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தற்கொடைத் தாக்குதலில் முதலில் வீரச்சாவடைந்த கப்டன் மில்லரால் நடாத்தி முடிக்கப்பட்ட தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என்பதை பற்றி சற்றுப் பார்போம்.

"மில்லர் வடமராட்சியின் துன்னாலைப் பகுதியைப் பிறப்பிடமாக கொண்டவன். அவனுடைய தந்தை இலங்தை வங்கி ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றி வந்தார். தன்னுடைய தாயகத்தை மீட்க அவன் எப்போதும் சித்தமாக இருந்தான். மில்லர் எமது இயக்கத்தில் சேர்ந்து பல தடவைகள் இராணுவத்துடன் மோதியிருக்கிறான். ஒவ்வொரு மோதலிலும் மீல்லர் தன்னுடைய பணியை தனக்கே உரித்தான அபாரத் துணிச்சலுடன் செய்து பலருடைய மதிப்பை பெற்றவன்.

வடமராட்சிப் பகுதியை சிறிலங்கா இராணுவத்தினர் முற்றிகையிட்ட போது பிரபாவின் அணியின்ரோடு சேர்ந்து பதில் தாக்குதலில் ஈடுபட்டான். வடமராட்சி யுத்தம் பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பலத்த சேதத்திற்க்கு பின் வடமராட்சியை இராணுவத்தினர் ஆக்கிரமித்துக் கொண்டனர். வடமராட்சி பகுதியை திரும்ப மீட்க வேண்டுமென்பதில் மில்லர் துடியாய் துடித்தான். பிரபாவும், (பிரபா முன்னர் மன்னார் பிராந்தியத்தில் விக்ரருடன் பணியாற்றியவன்;) மில்லரும் சேர்ந்து நெல்லியடி இராணுவ முகாமுக்குள் வெடிமருந்து வாகனங்களை விடுவதற்க்கு தலைவரிடம் அனுமதி கேட்டு, வெடி மருந்தையும் பெற்று கொண்டனர்.

கப்டன் மில்லர் 
ஒன்றன் பின் ஒன்றாக இரு வண்டிகள் விடுவதற்கு திட்டமிட்டனர். முதலாவது வண்டியை மில்லரும் அதன் பின் இரண்டாவது வண்டியை ராசிக்கும் ஓட்டிச் செல்ல முன்வந்தனர். திட்டம் உருவானது. இரவு இரவாக நெல்லியடி இராணுவ முகாமிக்குள் வண்டிகளை விடுவது என்றும் ஏனென்றால் இராணுவத்தினர் இரவு பத்து மணிக்குப் பின்னர் முகாம்களை விட்டு வெளியே வந்து சுற்றாடலில் இருந்த மக்கள் வெளியேறிய வீடுகளில் தங்கிவிடுவார்கள் என்பதால் அதற்கு முன்னர் வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனங்கள் உள்ளே விடப்பட வேண்டும். வாகனங்கள் முகாமை நெருங்கிச் செல்லும் பாதைகளில் பல தடைகள் போடப்பட்டு இருந்தன. எனவே வாகனங்கள் புறப்பட்டு முகாமை அடைவதற்கு அத்தடைகள் அகற்றப்படுதல் முக்கியமானதாகும். அந்த வேலையை கமல்ட பொறுப்பெடுத்துக் கொண்டான்.

பகல் வேளையே வாகனங்கள் தயார் செய்யப்பட்டு முகாமுக்கு அருகில் கொண்டு வரப்பட்டு இருக்கும். சரியான நேரம் நெருங்கியதும் எம் தோழர்கள் முகாமைத் தம்முடைய துப்பாக்கிகளாலும், ரொக்கட்டுகளாலும் தாக்கத் தொடங்குவார்கள். அந்தச் சந்தர்பத்தில் கமலும் அவனுடைய சகாக்களும் தெருவில் உள்ள தடைகளை அகற்றுவார்கள். கமல் தடைகளை முற்றாக அகற்றிய பின் பிரபாவுக்கு அறிவிக்க வெடிமருந்து நிரப்பிய வாகனங்கள் முகாமை சென்றடையும். இதுதான் திட்டம்

கமல் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்டவன். இவரது தந்தை துரைரத்தினம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர். தந்தையது பாதை எமது தாயகத்தை மீட்டு எடுக்க சரியான தீர்வாகது என்பதை உணர்ந்த கமல், எமது இயக்கத்திலே தன்னை இணைத்து கொண்டு போரடத் தொடங்கினான். பயிற்சியை முடித்து விட்டு மட்டக்கிளப்புக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றிந்தான். கிழக்கில் எமது இயக்க வளர்ச்சியில் கமலின் பங்கு மிகவும் குறிப்பிடக்கூடியது. மட்டக்கிளப்பில் மிகவும் சிக்கலான சூழ்நிலைகளிலும் தன் தனித்திறமையினால் எத்தனையோ அரும் பெரும் காரியங்களை ஆற்றியிருக்கின்றான்.

அவன் அங்கு பணியாற்றிய காலத்தில் ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அப் பெண்ணுடைய வீட்டுக்கு கமல் செல்வது வழக்கம். ஆரம்ப காலங்களில் நாட்டின் விடுதலைக்காக கமல் தன் உயிரை வைத்து பணியாற்றியது கமலின் பால் அந்தப் பெண்ணின் கவனத்தை ஈர்த்தது. கமல் வீட்டிக்குப் போகும் சமயங்களில் எல்லாம் அன்பாக உபசரித்து கமலுக்கு ஆதரவழித்து, அன்பு செலுத்தினாள். நாட்கள் நகர நகர இருவரும் அன்பால் இறுகப் பிணைக்கப்பட்டனர். ஒருவரை ஒருவர் மனமார நேசித்தனர். உலக வழக்கப்படி கூறினால் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டு இருந்தனர். அப் பெண் கமலின் உயிர் வாழ்வுக்காக எப்பொதும் கடவுளைப் பிரார்த்தித்து வந்தாள். ஆனால் ஒருபோதும் கமலின் தீவிரமான போராட்டத்திற்கு தடையாக இருந்ததில்லை.

மட்டக்களப்பில் இருந்து யாழ்பாணம் வந்திருந்த வேளையிலே நெல்லியடி முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்ற முன்வந்தான். முதல் நாள் கமலும் லெப் கேனல் திலீபனும் ஒன்றாக இருந்த வேளையிலே லெப் கேனல் திலீபனிடம் ஓர் வேண்டுதல் விடுத்தான். கமல் நான் சிலவேளை இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தால் என்னை நேசிப்பவளுக்கு அதை உடனடியாக தெரிவித்து விடு என்பதாகும். என்ன சத்தியமான வார்த்தைகள் ஏதோ தன் இறப்பை தான் அறிந்து வைத்திருந்தது போல் கூறியிருக்கிறான்.

தாக்குதல் நடவடிக்கைகள் தீவிரமாக நடை பெற்றுக் கொண்டிருந்தன. மில்லர் மிகவும் கடுமையாக உழைத்தான். இராணுவத்தினர் ஆக்கிரமிப்புகுள் இருந்த நெல்லியடிப் பகுதிக்கு வெடிமருந்துகளையும், வாகனங்களையும் மிகுந்த சிரமப்பட்டு இரவோடு இரவாக கொண்டுவந்து சேர்த்தான். அவ்வேளைகளில் கூட நான் அடுத்த நாள் இறக்க போகிறேன் என்ற விடயம் தெரிந்த மனிதனைப் போல் நடந்து கொள்ளவில்லை. கவலையோ, திகைப்போ, பயமோ அல்லது தயக்கமோ அவனிடம் காண முடியவில்லை. வெடிமருந்துகளை ட்றக் வாகனங்களில் ஏற்றி அவற்றுக்கு இணைப்புகளை கொடுத்து தன்னுடைய சவப் பெட்டிகளை தானே தயாரித்து கொண்டு இருந்தான்.

அன்று பகல் முழுவதும் வெடிமருந்துகளுடன் இரு வாகனங்கள் தயார் செய்யப்பட்டன. குழுக்கள் யாவும் உசார் நிலைக்கு கொண்டு வரப்பட்டன. நேரம் இரவாகிய போது குழுக்கள் யாவும் முகாமை நோக்கி நகரத் தொடங்கின. மில்லர் தன்னுடைய வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். கமலுடைய குழு, வாகனம் முகாமை நோக்கி செல்லத் வேண்டிய பாதையில் போடப்பட்டு இருந்த தடைகள் உள்ள பகுதியை சென்றடைந்தனர். எனைய குழுக்களும் முகாமை நெருங்கி தத்தமது இடங்களில் தயார் நிலையில் நின்றனர்.

பொறுபாளரிடமிருந்து தாக்குதல் ஆரம்பிக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டது. எல்லோரும் முகாமை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தார்கள். மில்லர் ஏறி அமர்ந்து இருந்து ட்றக் வண்டியை ஸ்ராட் செய்து எஞ்சினை உறுமி விட்டு அமைதிப் படுத்தினான். பின் தன் வண்டி செல்வதற்கான உத்தரவுக்காக காத்திருந்தான். அப்போது கூட பக்கத்தில் இருந்த பிரபுவோடு ஏதோ யோக் அடித்து கொண்டு சிரித்து கொண்டு இருந்தான். முகாமை நோக்கி எமது தோழர்கள் துப்பாக்கி பிரயோகம் செய்து கொண்டிருக்கையிலேயே கமல் குறுக்கே பாய்ந்து தடைகளை அகற்ற முயன்றான். பெரிய மரக்கட்டைகள் புதைக்கப்பட்டு இருந்தன. தான் கொண்டுவந்த வெடிமருந்துப் பெட்டியை கட்டைகளின் பின் வைத்து விட்டு விலகி மறைவில் படுத்து கொண்டான். வெடி மருந்து வெடித்தது. அத்தோடு கட்டைகள் தூக்கி எறியப் பட்டு பாதை சீராகியது. அதே நேரம் பாதைக்கு நேரே அமைக்கப்பட்டிருந்த காவல் அரணில் இருந்து இராணுவத்தினரின் மெசின்கன்கள் வெடிக்க தொடங்கியது. கமல் தன்னுடைய வாக்கிடோக்கியில் அறிவித்தான். 'தடைகள் அகற்றப்டட்டு விட்டது" ஆனால் புதிய சிக்கல்; பாதைக்கு நேரேயுள்ள காப்பரணில்; இருந்து துப்பாக்கிச் சூடு வருகிறது. சற்றுப் பொறு.

மில்லருக்குப் பக்கத்தில் நின்ற பிரபாவின் வாக்கியிலும் அறிவிப்பு தெளிவாக கேட்டது. அதைக் கேட்ட மில்லர்

'பிரபா பரவாயில்லை, வாகனத்தின் முற்பகுதியில் குண்டுகள் துளைக்காத படி தகடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. அதனால் நான் கொண்டு போய் சேர்த்து விடுவேன்." என்றான். மில்லர் சற்று பொறுத்துக் கொள் அந்தப் பங்கர் உடைக்கப்பட்டதும் நீ போகலாம். மிக விரைவாக வண்டியை செலுத்தி விட்டு விட்டு, நீ இறங்கி ஓடி வந்து விடு;. என்றான் பிரபா. மில்லர் ஒரு முறை சற்று சிரித்து கொண்டான். ஏனேன்று புரியவில்லை. அருகில் இருந்த பிரபாவிற்கு கேட்க மனம் துணிய வில்லை. 'பிரபா முன்பு ஒரு முறை யாழ்பாணத்தில் விடப்பட்ட வாகனம் சரியாக செல்லவில்லை. எனவே இம்முறை நான் நிதானமாகவே வாகனத்தைச் செலுத்துவேன்.

எப்படியும் கட்டிடத்துக்கு மிக அண்மையில் வாகனத்தை கொண்டு செல்வேன் என்று மில்லர் கூறினான். கமல் தன்னுடைய வோக்கியில் ரொக்கட் லோஞ்சர் வைத்திருப்பவனை அந்த காப்பரணை உடைக்குமாறு கூற ரொக்கட் லோஞ்சரில் இருந்து மிகச் சரியாக ஏவப்பட்ட ரொக்கட் பங்கரை தாக்கியது. மணல் முட்டைகள் சிதைந்தன. பங்கர் இருந்த இடத்தில் ஒரே புழுதியும் புகையும். கமல் தகவலை தெரிவித்தான். பொறுபாளரிடமிருந்து மில்லரை புறப்படுமாறு பிரபாவிற்க்கு உத்தரவு வந்தது. மில்லர் வண்டியை ஸ்ராட் செய்து மெதுவாக செலுத்தினான். பிரபா வண்டியின் பின்னால் ஏறிக்கொண்டான்.

வண்டி நெல்லியடிச் சந்தியை வந்தடைந்தது. மில்லர் வண்டியை நிறுத்தி பிரபாவை அழைத்தான். பிரபா மில்லருக்கு கையை அசைத்துவிட்டு வெடி மருந்து வெடிப்பதற்கான கருவியை இயக்கினான் கருவி இயங்கத் தொடங்கியது. மில்லர் வண்டியை மெதுவாக ஒடவிட்டான் பிரபா வண்டியில் இருந்து குதித்து வண்டியோடு சேர்ந்த ஓடி மில்லரின் பக்கத்தில் வந்து 'மில்லர் எப்படியும் திரும்பி வந்து விடு" மில்லர் அதை புரிந்து கொண்டது போல் வண்டி வேகம் பிடித்தது. பிரபா அப்படியே தெருவில் நின்று வேகமாகச் செல்லும் வண்டியைப் பார்த்துக் கொண்டிருக்க மில்லரையும் வெடிகுண்டையும் சுமந்து கொண்டு வண்டி சென்று கொண்டிருந்தது..

வண்டி முகாமை நோக்கி வருவதை அறிந்து தோழர்கள் முகாமைவிட்டு 100 யார் பின்னுக்கு வந்தனர். கமல் நின்ற இடத்தை தாண்டி வண்டி சென்றதும் கமல் மில்லரை நோக்கி கையசைத்து பின்னுக்கு செல்ல, சில நிமிடத்தில் நிலத்தை அதிரவைத்துக் கொண்டு பெரிய ஓசை எழுந்தது. தோழர்கள் மீண்டும் முகாமை; நோக்கி முன்னேறினார்கள். இராணுத்தினர் தங்கியிருந்த சற்று முன்னர் கூட இராணுத்தினர் நின்று துப்பாக்கி பிரியோகம் செய்த மிகப் பெரிய மாடிக்கட்டிடம் தரைமட்டமாகிக் கிடந்தது. அதில் இருந்த இராணுவத்தினர் கட்டிடத்தின் உள்ளேயே இறந்து போனார்கள். மில்லரின் தாக்குதலை தொடர்ந்து நடந்த அத்தாக்குதலில் கமலும் வீரச்சாவடைந்தான். நெஞ்சிலே காயமடைந்த கமலின் உடல் எடுத்து வரப்பட்டது. ஆனால் மில்லர் திரும்பவே இல்லை. மில்லர் வெடிமருந்தின் சங்கமாகி அதிர்வலைகளோடு சேர்ந்து தன் பணியை செவ்வனே முடித்தான்.

"கரும்புலி கப்டன் மில்லர் குறித்து அவரது தாயார் பின்வருமாறு கூறுகிறார்"

'என்ர மகன் எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்கிறது என்ர நம்பிக்கை தம்பி. அதனால நான் அவன்ர போக்குகளைப் பற்றி பெரிசா யோசிக்கிறதில்லை." மில்லரின் அம்மா தன் பிள்ளையைப் பற்றிப் பெருமையோடு கூறிக் கொண்டு இருந்தாள். அவன் ஒரு துடியாட்டமான பொடியன். ஒரு இடத்தில் ஆறுதால இருக்கிறதைக் காணவே ஏலாது. ஏதாவது ஒண்டு செய்து கொண்டுதான் இருப்பான். மண்ணைக் கிண்டுவான். பற்றறியைபும் வயரையும் வைச்சு முடிஞ்சு கொண்டிருப்பான். அல்லது அப்பாவின்ரை கார் பெனட்டை திறந்து போட்டு அதற்குள்ள ஏதாவது கழட்டிப் பூட்டி கொண்டிருப்பான்......." அம்மா தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள்.

";மற்ற ஆட்களுக்கு உதவி செய்யிற பழக்கம் அவனிட்ட சின்னனில் இருந்தே இருந்தது. யார் என்ன உதவி கேட்டாலும் உடனே போய் செய்து கொடுப்பான்... முயற்சியும் இரக்கமும் அவன் பிறக்கும் போதே அவனோட கூடப் பிறந்ததுகள் தம்பி" மில்லர் சிறுவனாக இருந்த நாட்களில் அப்பா கார் ஒட்டும் போது அருகில் இருந்து அவதானித்து கொண்டிருப்பவன், அப்பா இல்லாத நேரங்களில் அதையே திரும்ப செய்து பார்க்கத் துவங்கினான். அடிக்கடி நின்ற இடத்திலேயே இயங்கிய கார் பின்பு மெல்ல உருளத் துவங்கியது. நாட்கள் செல்லச் செல்ல அகலமான வீட்டு முற்றத்தில் முன்னுக்கும் பின்னுக்கும் போய் வந்தது. ஒரு நாள் அம்மா சமையல் அறையில் வேலையாக இருந்த போது, கார் வீதியிலே ஏறி விக்கி விக்கி ஓடத் துவங்கி விட்டது. அம்மாவைப் பயம் பற்றிக் கொள்ள வீதியிலே ஒடிவந்து பார்த்தாள்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் எரிபொருள் தீர்ந்து போனதால் வீட்டுக்கு முன்னால் நின்று திண்டாடிக் கொண்டிருந்தார்கள். எங்கோ இருந்து வீட்டுக்குத் திரும்பக் கொண்டிருந்த மில்லர், அவர்களிடம் விடயத்தைக் கேட்டறிந்தான். வீட்டுக்குள் வந்தவன், மெதுவாக ஒளித்து ஒளித்து பின்னால் போய், கார் "ராங்கிற்குள்" குழாயைச் செலுத்தி, வாயால் இழுத்துப் பெற்றோல் எடுத்து அவர்களிடம் கொடுத்து அனுப்பிவிட்டு ஒரு அசல் அப்பாவியைப் போல அம்மாவுக்கு முன்னால் வந்து நின்றான். நடந்ததைக் கண்ட போதும் அம்மா அவனிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவுக்கும் அது பிழை மாதிரித் தெரியவில்லை.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காகவே செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அதனால் அவனது செய்கைகளைப் பற்றி அம்மா கவலைப் படுவதில்லை. காலச்சக்கரம் தன்பாட்டில் உருண்டு சென்றது. இப்போது 1984 இன் ஆரம்பம். எங்கள் தேசத்தில் அடிக்கடி வெடியோசை கேட்கத் தொடங்கியது. எங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை மாறிய பொழுது, அது மில்லர் வீட்டிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. மில்லரின் போக்கும் மாறிவிட்டது. முன்பு போல், பழைய நண்பர்களுடன், மாந்தோப்பில் விளையாடுவது நின்று போனது. இப்போது புதிய நண்பர்களுடன் வெளியில் திரியத் தொடங்கினான். ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து அவசர அவசரமாக ஓடி வந்த தம்பி சொன்னான். 'அம்மா அம்மா அண்ணா சந்தியடியில் நோட்டிசு கொடுத்து கொண்டு நிக்கிறான்."

அம்மாவுக்கு உள்ரப் பயம்தான். ஆனாலும் அம்மா அவனைப் புரிந்து கொண்டாள். அவனின் புதிய நண்பர்கள் அவனைத் தேடி வீட்டுக்கு வருவார்கள். மில்லர் அவர்களோடு புறப்பட்டு போவான். இப்படி செல்கிறவன் சில நேரங்களில் ஒரு சில இரவுகள் கழித்தும் வருவான். அம்மா எல்லோருக்கும் சாப்பாடு தருவாள். எல்லோரும் சிரித்து கதைத்து சந்தோரமாக சாப்பிடுவதைப் பார்த்து சந்தோசப்படுவாள். இது வழமையாகிப் போனது.

"இப்படித்தான் ஒருநாள் அந்த நண்பர்களோடு புறப்பட்டுப் போனவன் திரும்பி வரவில்லை. 'பயிற்சி முகாமில் நிக்கின்றான்" என நண்பன் ஒருவன் வந்து சொன்னான். வீட்டில் எல்லோரும் அழுதார்கள். அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளும் அழுதாள். இருந்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

தன் பிள்ளை எது செய்தாலும் நன்மைக்காத்தான் செய்வான் என்பது அம்மாவின் நம்பிக்கை. அந்தத் தாய் இறுதி நாளை நினைத்துப் பார்க்கிறாள். 'அது ஒபறேசன் லிபறேசன் காலம்| அந்த நேரம் இங்க எல்லா இடத்திலையும் ஆமி, அதனால இரவில நாங்கள் நேரத்தோடையே படுத்திடுவம். அண்டைக்கும் நாங்கள் படுத்திட்டம்...." 'திடிரென வீடேல்லாம் அதிர பெரும் குண்டுச் சத்தம் எங்களைத் திடுக்கிட்டு எழுப்பிச்சுது. கொஞ்ச நேரம் சண்டை நடக்கிறதைப் போல சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பிறகெல்லாம் அமைதியாகிவிட்டது. பொடியள் நெல்லியடிப்பக்கம் ஆமிக்கு நல்லா அடி குடுத்திருக்கிறாங்கள் போல கிடக்கு என்று எங்களுக்கை கதைச்சுப் போட்டு நாங்கள் படுத்திட்டம்.

அடுத்த நாள் காலையில் நெல்லியடிப் பக்கம் இருந்து வந்த ஒருதர் சொல்லி உருக்குள்ள சொல்லி அந்தக் கதை மெல்ல மெல்ல என்ர காதுக்க வந்த போதுதான் தெரியும்....முதல் நாள் உலுக்கி என்ர நித்திரையால் திடுக்கிட வைத்த அந்தக் குண்டு சத்தம்.... என்ர பிள்ளையும்.....அப்ப அழவும் ஏலாது. எல்லாப் பக்கத்திiயும் ஆமி... அறைக்குள்ள போயிருத்து எனக்குள்ள மட்டும் குமுறிக் குமுறி அழுதன். றோட்டால ஆமி வாகனங்கள் வாற சத்தம் உறுமிக் கொண்டு கேட்கும்.. மெதுவாக பின்பக்கத்தால் வீட்டை வந்த சனங்கள் கலைஞ்சு போய்விடுவினம்...... பிறகு வருவினம்.." ம்.....ம்..... என்ர மகன் செத்திட்டான் என்கிறது எனக்கு கவலைதான். ஆனால் அவன் நாட்டுக்காத்தானே செத்தவன்....... 'அதை நினைக்க பெருமையாத்தான் இருக்கு"

என்றாள் எங்கள் வீரத் தமிழ் மகனை பெற்றெடுத்த வீரத்தாய்


கப்படன் மில்லரின் அம்மாவுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.




Image Hosted by ImageShack.us

Get this widget