thalaivan

thalaivan

ஞாயிறு, 22 மே, 2011

தமிழீழ விடுதலை போராட்டத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.

உலகத்தமிழ் மக்களே இன்றைய சூழ் நிலையில் எங்கள் போராட்டத்தை ஆழமாக கவனித்து செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் மத்தியில் புலம்பெயர் தமிழர்கள் ஆகிய நாங்கள் இன்று காணப்படுகின்றோம்.

எங்கள் நாட்டில் இயேசு பிறப்பதற்கு முன்பு இருந்தே தமிழர்களின் போராட்டம் நடைப்பெற்று வந்து இருக்கின்றது. 21  நூற்றாண்டில் எம் தலைவனின் வழியில் நடந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் மாவீரர்கள் வீரச்சாவடைந்த நிலையில் முள்ளிவாய்க்களில் முற்று பெற்ற நிலையில் தமிழர்கள் ஆகிய நாங்கள் காணப்படுகின்றோம்.

உலகில் 12 கோடி தமிழர்களுக்கும் முகவரி தந்து மறத்தமிழர்களினது  மனங்களில் எல்லாம் துயில் கொள்கின்ற எங்கள் மாவீர செல்வங்களுக்கு வீரவணக்கம்.

எதிரியானவன் எங்கள் தலைவன் ஆரம்பித்து வைத்த தமிழர்களின்  போராட்டத்தை ஒவ்வொரு முறையும் சிங்கள நாட்டுக்கு வரும் தலைவர்கள் எங்கள் தலைவனின் போராட்டத்தை உலகிற்கு தெரியாமல் நசுக்குவதற்கு பல நாட்டு உதவிகளுடன் சண்டையை ஆரம்பித்தார்கள் ஆனாலும் எங்கள் தலைவனின் போராட்ட அறிவுத்திறமையால் சிங்கள தலைவர்கள் தொடுத்த போராட்டாத்திற்கு தக்க பதிலடி கொடுத்து தமிழனின் வீரத்தையும் விடுதலை போராட்டத்தையும் உலகுக்கு எடுத்து காட்டியது எம் தலைவனையே சாரும். 

30 வருட விடுதலை போராட்ட காலத்தில் இறுதி 3 வருட போராட்டம் ஆனது உலகில் வாழும் அனைத்து தமிழர்களால் மறக்க முடியாத போராட்டமாக இருக்கின்றது. 

அந்த 3 வருட விடுதலை நெருப்பில் எதிரியானவன் பல நாட்டு படை உதவிகளுடன் எங்கள் போராளிகள் மீது போரிட்டான்.ஆனாலும் போராளிகள் வைத்திருந்த ஆயுதங்களை விட எதிரி சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொண்டே போரிட்டான் எங்கள் தளபதிகளின் போர் தந்திரத்தால் முன்னேறும் எதிரியின் படைகளை விரட்டி அடித்து எதிரிக்கு பல உயிரழப்புகளை ஏற்படுத்தினார்கள்.


தமிழீழத்தில் சண்டைகள் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது 05.04.2009 அன்று தமிழீழ தளபதிகள் போராளிகளுடன் சேர்ந்து ஒரு போர் திட்டத்தை வகித்து கொண்டிருந்தார்கள் அப்பொழுது எதிரியும் தமிழீன துரோகிகளும் தங்கள் கோழைத்தனத்தை காட்டினார்கள்.

எதிரியின் முற்றுகைக்குள் அகப்பட்ட தளபதிகளும் போராளிகளும் முற்றுகையை உடைத்து வெளியில் சென்று கொண்டிருக்கும் பொழுது உலகிலே தடை செய்யப்பட்ட குண்டுகளை வீசி எம் மக்களையும் எம் மண்ணையும் ஆழமாக நேசித்த தளபதிகளும் போராளிகளும் வீரச்சாவடைந்தார்கள். அடுத்து 
ஒரு சில நாட்களில் விடுதலைப்போராட்டம் முள்ளிவாய்க்கால் எனும் பிரதேசத்தில் முற்றுப்பெற்றது. இவ் வீர வரலாற்று சமர்களில் வீரகாவியமான மாவீரர்களுக்கு எங்கள் வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.

தமிழீழம் கிடைக்கும் வரை உங்களை நிச்சயம் தொடர்வோம்....

Image Hosted by ImageShack.us











0 கருத்துகள் :

கருத்துரையிடுக

Get this widget