thalaivan

thalaivan

ஞாயிறு, 13 நவம்பர், 2011

மாவீரர் துயிலும் இல்லம்.


களமாடிக் காவியமானவர்கள்
கண்ணுறங்கும் இடம் இது

விடுதலை வேட்கை நெஞ்சிற் சுமந்து
வித்தாகியவர்கள் விதைக்கப்பட்ட புண்ணிய பூமி இது
தன்மானத்தைக் காக்க
தம்மையே அர்ப்பணித்வர்கள் கூடிய தேசம் இது

இரவு பகல் பாராது போராடி
இன்னுயிரை ஈந்த இதயத் தெய்வங்களின் இருப்பிடம் இது

காவலரணில் கண் விழித்துக் காத்தவர்கள்.
கண் மூடித் தூங்கும் இடம் இது

இனவெறிச் சிங்களவரை எதிர்த்து நின்று
இரத்தம் சிந்தியவர்கள்  இருக்கும் இடம் இது

தமிழீழத் தாகமுடையவர்கள்
தம்மை மறந்து துயிலும் இல்லம் இது
இவை கல்லறைகள் அல்ல
ஈழ விடுதலைத் தெய்வங்கள் நிறைந்த கோயில்கள்
ஈனச் சிங்களவர் இவற்றை அழித்தாலும்- எம்
மனச் சிறகுகளில் உறைந்திருக்கும் சுவடுகள் – இவை

கண்ணில்லா உலக நாடுகளே
காவல் தெய்வங்கள் உறங்கும் கோயிலை அழிக்கலாமா?
சிங்களரின் வெறியாட்டத்தைப் பார்த்து
சிந்திக்காமல் இருக்கும் நாடுகளே இது நியாயமா?

தர்மம் வெல்லும் ஓர் நாள் – அன்று
தமிழீழம் மலரும் -அவ்வேளை

கொடிய சிங்களவரின்
கொலை வெறித் தாண்டவம் அகலும்

மாவீர் கனவுகள் நனவாகும் – வீர
மறவர்கள் மறு உயிர் கொள்வார்…

Image Hosted by ImageShack.us

க. தமிழவன்

1 கருத்து :

  1. மாவீரர் தினம் .....
    மாவீரர்களே !....
    துயிலுங்கள்- உங்கள்
    துயிலறைகள் தான் எங்களுக்கு
    கருவறைகள் !!....
    நம் ஈழத்தின்
    நினைவு சின்னமே -உங்கள்
    துயிலறைகள் தான் - இதுதான்
    நம் வீரத்தின் சான்று !!..
    நாங்கள்
    சுதந்திர காற்றை
    சுவாசிக்க - நீங்கள்
    கல்லறைக்குள்
    விம்மிக்கொண்டிருக்கீறிர்கள்....
    உங்கள் துயிலறையில்
    புல்லை போட்டு பூனையை
    வளர்த்தாலும் - அது
    புலிக்குட்டியாக மாறும் மண்ணுக்கு
    சொந்தமானவர்கள் நீங்கள் ...
    வீரம் என்பது இறப்பதொடல்ல
    இறந்தும் இருக்கவேண்டும்
    விதையாய்- என்பதை
    சர்வ தேசியத்திற்கு
    உணர்த்தியவர்கள் நீங்கள் ...
    உங்களின் நீட்சியே
    எண்களின் மீட்சி ....
    சர்வ தேசியத்திற்கு
    வீரமும் , விவேகமும்
    படைத்த நீங்கள்
    தேசியமயமாக்களின்
    மனசாட்சியாக
    நீமிர்ந்து நிற்கீறிர்கள்...
    வயிற்றுக்காக வாழாமல்
    மானத்திற்காக மாட்சிமையை ஏந்தி .....
    விவேகத்தை மூளையிலேந்தி .....
    வீரத்தை நெஞ்சிலேந்தி .....
    இரகசியத்தை கலுத்திலேந்தி .....
    உடலில் ஆயதமேந்தி .....
    உயிரில் சுதந்திரமேந்திய
    உங்கள் வரலாற்றை
    சொல்லும் உலக வரலாறு !!!!!!.
    - ஏகலைவன்-

    பதிலளிநீக்கு

Get this widget